PDA

View Full Version : பிருந்தனின் கிறுக்கல்



Birundan
16-10-2005, 07:45 AM
இயற்கை

இறைவன் படைப்பில்
எத்தனை புதுமை!
அத்தனையிலும்
வைத்தான் இளமை!
நீலவானத்தில்
ஓடித்திரியும் நிலவு!
அதற்கு தோழியர்
எத்தனபேர் முகில்களாக!
வாணத்து தேவதைக்குக்கூட
நடக்குது வலைவீச்சு!
எத்தனை நட்சத்திர இளைஞர்
கண்சிமிட்டும் போட்டி!
அவள் உடுத்திக்கொள்ள
ஏழுவர்ணத்தில் சேலை!
அச்சேலைக்குக்கூட
எத்தனை அலங்கரிப்புவேலை!
பன்னீர் தூவும் பனித்துளிகள்
அவள் குளிப்பதற்கு மழைத்துளிகள்!
இளம்காலைப்பொழுதில்
வந்துவிட்டான் அவளது காதலன்!
அவன்வருகையை பறைசாற்ற
எத்தனை உயிர்களின் ஆர்பரிப்பு!
காதலனை கண்ட அவளோ
வெட்கத்தில் ஒளிந்து கொள்ள!
அவளைக்காணாத கோபத்தில்
அவனோ எம்மை சுட்டெரிக்கிறான்.

பரஞ்சோதி
16-10-2005, 08:13 AM
வாங்க வாங்க பிருந்தன்.

உங்க வலைப்பூவின் மணம் நுகர்ந்தவன்.

உங்கள் கவிதைகள் தமிழ் மன்றத்திலும் பூத்து குலுங்க வாழ்த்துகள்

இளசு
16-10-2005, 11:14 AM
கிறுக்கலா?
விலாவாரியாய் இயற்கையை நேசித்து உபாசிப்பவனின்
ஆராதனை வர்ணனை இது..
பாராட்டுகள் பிருந்தன்.
உங்கள் வலைப்பூவிற்கு வாழ்த்துகள்..
மன்றத்திலும் எல்லா வகைப் பதிவுகளும் தாருங்கள்...

இங்கே பாரதியின் இயற்கை கவித்தொகுப்பு நம் கவிதைப் பக்கத்தில் உண்டு...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5651

Nanban
16-10-2005, 02:38 PM
வாழ்த்துகள் பிருந்தன்.

தொடர்ந்து இயற்கையை நேசியுங்கள்.

இயற்கையே வாழ்வின் பிரதானம்., அதை விரிவாக கவனித்து எழுதியுள்ளது மிக்க நன்று.

Birundan
16-10-2005, 04:25 PM
என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்கட்கும் நன்றிகள்.

அறிஞர்
17-10-2005, 04:19 AM
நல்ல ரசனை..... அன்பரே.. இன்னும் ரசியுங்கள்... இங்கு கிறுக்குங்கள்......

பாரதி சிறிது சிறிதாய் எழுதினார்.... நீங்கள் நீண்ட வரிகளால் கலக்குகிறீர்கள்

பென்ஸ்
17-10-2005, 06:38 AM
மனம் மீறிய காதலும், வெறுப்பும் மட்டுமே கவிதையாக வேளிபடும், இயர்கையின் மீது இத்தனை காதலா !!!, தொடரட்டும் நண்பரே

kavitha
17-10-2005, 08:37 AM
இயற்கை ..
ஆசைகளின் ஊற்று.
யாவர்க்கும் படிப்பினை
அன்பின் சரணாலயம்
அமைதியின் உறைவிடம்
ஆர்ப்பரிப்பின் பகிரங்கம்
எல்லாம் எல்லாம்
அங்கே தான் ஆரம்பம்
அங்கே தான் ஐக்கியம்
அங்கே தான் சங்கமம்

</br>இயற்கையை நேசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. தொடர்ந்து எழுதுங்கள் பிருந்தன். வாழ்த்துகள்.

பெஞ்சமின், இரண்டே வார்த்தைகளில் கவிதைக்கு விளக்கமா!
</br>

பென்ஸ்
18-10-2005, 06:39 AM
நான் காதலிபவனாக இருந்தால் கவிதையாக சொல்லி இருப்பேன், நான் வெறுக்க பழகி கொண்டிருக்கிறேன், ஆதலால் வெறும் வார்தைகள்.;)

Birundan
20-10-2005, 06:13 PM
காத்திருப்பு

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்
நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!
தூரத்தில் உனது உருவம் கண்டால்
என் உடல் குளிர்ந்திருக்கும்!
உன் தரிசனம் கிடைத்துவிட
தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!
நீ அருகில் நெருங்க நெருங்க
எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!
உன்னை அருகில் கண்டவுடன்
எனது இரத்தம் உறைந்துவிடும்!
உனது தலை எனது பக்கம் திரும்ப
எனது விழிகள் படபடத்து மூடும்!
உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்
என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!
உன்னுடன் பேச நினைக்கையிலே
நா உலர்ந்து பேச மறுக்கும்!
உனது நடை வேகம் குறைய
எனது கைகள் பிசைந்திருக்கும்!
என்னை தாண்டி நீ செல்கையில்
மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!
முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்
எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.

இளசு
20-10-2005, 11:06 PM
பிருந்தன்
அட்ரீனலின், டோபமின் என்ற வேதிகளின் விளையாட்டோ
இல்லை -Hஆர்மோன்களின் ஆர்மோனிய வாசிப்போ..
காதல் ஒரு இனிய அவஸ்தை..
இசையான இரைச்சல்..
'அனுபவம் பேசுகிறது'?
தத்ரூபம்.. பாராட்டுகள்..

தஞ்சை தமிழன்
21-10-2005, 12:08 PM
நண்பர் பிருந்தனுக்கு வணக்கம்,

உங்கள் இயற்கை கவிதை,

அழகாக , இளம்காலை விடியலை போல

இளமையுடன் இருக்கிறது.

மேலும் உங்கள் படைப்புகளை காண ஆவலுடன் இருக்கின்றேன்.

அன்புடன்

Birundan
22-11-2005, 01:26 AM
இயந்திர மனிதன்

குளிர்ந்த காலைவேளையில்
பனித்துளிகள் மூடி நிற்கும்!
பனித்துளியின் பாரம் தாங்காது
இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்!
அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு
புறப்பட்டான் இளம் சூரியன்!
அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய
வெள்ளி போன்று கரைந்தோடியது பனி!
கதிரவனின் வருகையினால்தான்
எத்தனை ஆர்ப்பாட்டம்!
அவனை வரவேற்க
ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின!
குஞ்சுகள் கூட தமது
சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன!
மொட்டுக்கள் அவிழ்ந்தன
பூ மணம் பரப்பின!
விலங்கினங்கள் கூட
கண் விழித்தன!
மனிதன் மட்டும்
போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!
அவனை எழுப்ப வேண்டும்
கடிகார சத்தம்!
இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

பென்ஸ்
22-11-2005, 01:52 AM
அருமையான கவிதை பிருந்தன்... சுறுசுறுப்பான உலகின் சோம்பேறிகள் நாம் மட்டும் தானோ?????

என்ன இருந்தாலும் அலாரத்தை அணைத்து விட்டு, தலை மேல் போர்வையை இழுத்து மீண்டும் ஒரு பத்து நிமிட தூக்க எத்தனை சுகம் தெரியுமா???? அதனால் தான் என்னவோ நீங்கள் கவனித்த இந்த இயர்க்கையை நான் கவணிக்காமல் விட்டுவிட்டேன்...:D :D

இளசு
25-11-2005, 05:21 AM
இயந்திர மனிதன்

இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

பிருந்தன்,

இன்றைய வாழ்க்கையை
இந்த இரண்டுவரிகளில்
எத்தனை அழகாய்ச் சொல்லிட்டீங்க..

பாராட்டுகள்.


( இதேபோல் வைரமுத்துவின் கவிதை
சுசீலாவின் தேன்குரலில்
உயர்ந்த உள்ளம் படப்பாடலில்..

''காலைத்தென்றல் பாடிவரும்''..


கேளுங்கள்...

இசை-கவி மழையில் குளித்த புத்துணர்வு கிடைக்கும்..)