PDA

View Full Version : எழுத்தாளர் சுந்தர ராமசாமி மரணம்



рокро┐ро░ро┐ропройрпН
15-10-2005, 10:09 AM
பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி இன்று அதிகாலை அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 74.

தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக மதிக்கப்படும் சுந்தர ராமசாமி இன்று அதிகாலை 1 மணிக்கு அமெரிக்காவில் காலமானார். 1931 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர ராமசாமி, நாகர்கோவிலில் வசித்து வந்தார். Сகாலச்சுவடுС என்ற இலக்கிய பத்திரிக்கையை நடத்தி வந்த அவர் Сஒரு புளிய மரத்தின் கதைС, Сஜே.ஜே: சில குறிப்புகள்С, Сகுழந்தைகள், பெண்கள், ஆண்கள்С ஆகிய மூன்று நாவல்களையும், 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நவீன தமிழ் எழுத்துக்கு முன்னோடியாகக் கருதப்படும் சுந்தர ராமசாமி, பல இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு கமலா என்ற மனைவியும், நான்கு மகன், மகள்களும் உள்ளனர். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சுந்தர ராமசாமி அங்கேயே காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக நாகர்கோவிலுக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது.

நன்றி- விகடன்.காம்

рокро┐ро░ро┐ропройрпН
15-10-2005, 10:11 AM
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். தமிழக கவிதை உலகில் பசுவய்யா என அறியப்பட்டவர் இவர்.

рокро░роЮрпНроЪрпЛродро┐
15-10-2005, 11:07 AM
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் மறைவுக்கு என் இரங்கல். அன்னாரின் மறைவு தமிழ் இலக்கியத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

родроЮрпНроЪрпИ родрооро┐ро┤ройрпН
15-10-2005, 02:45 PM
இன்றுதான் மன்றம் வந்தேன்,
பரம்ஸின் செய்தியை படித்து பெரிதும் துயரடைந்தேன்,
அவரது புளிய மரத்தின் கதையை பலமுறை படித்து விய்ந்திருக்கிறேன்.
அந்த எளிமையான நடை, கதையை நம்முன்னே நடப்பது போல எழுதிய விதம் என பல விஷயங்களில்.
தமிழ் படிக்கும் நண்பர்களுக்கு அதிர்ச்சியான செய்தி

рокро╛ро░родро┐
15-10-2005, 03:20 PM
எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மறைவுச்செய்தி படித்து மிக்க வருத்தம் அடைந்தேன். அவரது உறவினர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

роЗро│роЪрпБ
15-10-2005, 10:09 PM
என் அருமை நண்பர் மௌரியன் மூலம், சுந்தரராமசமி அவர்களின் படைப்புகளோடு பல ஆண்டு பரிச்சயம் எனக்கு. பல தற்கால படைப்பாளிகளுக்கு இவரே முன்னோடி..மானசீக வழிகாட்டி.
இவரின் புளியமரத்துக்கதையும், ஜேஜே சில குறிப்புகளும் - மிகப்பெரும் இலக்கியங்களாக பலரால் போற்றப்படுகின்றன.
தக்ழி எழுதிய செம்மீன் நாவலை இவர் மொழிபெயர்க்க, அதன் விமர்சனம் பழைய திஸ்கி மன்றத்தில் பதித்திருக்கிறேன்.
அவரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் படைப்புகளைத் தேடிப்படித்து, அவரின் நினைவைப் போற்றுவோம்.

рооройрпНроородройрпН
16-10-2005, 05:39 AM
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் மறைவிற்கு எனது இரங்கல்......

gragavan
16-10-2005, 07:58 AM
தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மறைவிற்கு எனது இரங்கல்கள்.

Nanban
16-10-2005, 04:09 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவருடைய எழுத்துகளுடன் எந்த பரிச்சயமும் இல்லை என்றாலும் அவரைப் பற்றி அனைவரையும் போல அறிந்திருக்கிறேன்.

jsriram
17-10-2005, 01:32 PM
வருத்தம் தர்ற விசயம். பெரிய எழுத்தாளர்.

роЕро▒ро┐роЮро░рпН
17-10-2005, 02:47 PM
எனக்கு பரிச்சயம் இல்லாதவர்... அவருடைய படைப்புக்கள் இணைய தளத்தில் கிடைத்தால் நாம் பரிமாறிக்கொள்ளலாமே

роЙродропро╛
18-10-2005, 09:56 AM
ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

kay
30-10-2005, 06:49 PM
http://i17.photobucket.com/albums/b53/kayxyz/1.jpg

சுந்தர ராமசாமி அவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.அவர் எழுதிய புளிய மரத்தின் கதை இந்தியாவையும் நடப்புகளையும் உருவகப்படுத்தியது! ஜே.ஜே சில குறிப்புகள் மலையாள எழுத்தாளனின் கதையாக அமைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகின் விமர்சனமாகவே கருதப் படுகிறது! அமரர் கல்கியின் எழுத்தையும் வாங்கு வாங்கென்று சுந்தர ராமசாமி அந்த நூலில் வாங்குகிறார். வாசகர்கள் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களை படித்து ஆழ்ந்து சிந்திப்பது அவர்கள் தங்களுக்குச் செய்து கொள்ளும் கௌரவமாகும்! காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவிலிலிருந்து அவர் நூல்கள் அனைத்தையும் மறு பதிப்பு செய்து வெளியிடுகிறது! சுந்தர ராமசாமி அவர்களுக்கும் அவர் வாழும் போது சாகித்ய அகாடமியின் விருதோ ஞானபீட விருதோ கொடுக்கப்படவில்லை! இப்போது விருதுகளைக் கடந்து அவர் சென்று விட்டார்!

роЗро│роЪрпБ
30-10-2005, 08:29 PM
எனக்கு பரிச்சயம் இல்லாதவர்... அவருடைய படைப்புக்கள் இணைய தளத்தில் கிடைத்தால் நாம் பரிமாறிக்கொள்ளலாமே


இங்கே சில சுரா படைப்புகள் படிக்க கிடைக்கின்றன.

பிள்ளை கெடுத்தாள் விளை என்ற கதையின் உத்தி, நடை - மிக அசாதரணம்..

http://tamil.sify.com/fullstory.php?id=13964321

рокро┐ро░ро┐ропройрпН
31-10-2005, 02:39 AM
இங்கே சில சுரா படைப்புகள் படிக்க கிடைக்கின்றன.

பிள்ளை கெடுத்தாள் விளை என்ற கதையின் உத்தி, நடை - மிக அசாதரணம்..

http://tamil.sify.com/fullstory.php?id=13964321...

ஆமாம். ஆனால் அந்தக்கதையின் கரு மிக சூழ்ச்சியானது. தலித் மக்களை மிக லாவ்கமாக கீழ்த்த்ரமாக சித்தரித்து இருப்பார்..