PDA

View Full Version : சுனாமி



thirukanaga
14-10-2005, 12:07 PM
சுனாமி

விடிவெள்ளி கண்டேன் வானத்திலே
விடியாமல் இருக்கின்ற நேரத்திலே
மக்களின் மனங்களின் காயத்திலே
வந்ததோ விடிவெள்ளி வானத்திலே

இயற்கை தந்த அனர்த்தத்திலே
இறைவனும் மறந்த போதினிலே
கடல் கொண்ட சீற்றத்தின் முடிவினிலே
மிதந்தது ஊரெங்கும் நீரினிலே

யாருக்கும் முன்னர் தெரியவில்லை
அனுபவம் கூட கொண்டதில்லை
நீதியும் மக்களை காக்கவில்லை
சாதியும் அந்நேரம் காணவில்லை

உணர்ந்தனர் மக்கள் தம் கடமை
கொடுத்தனர் அவற்கு பொது உடமை
கொண்டனர் மக்கள் மனத் திடமை
கண்டனர் வாழ்வினில் முன்னைய நடமை

கொடுத்தவர் இன்னும் காத்திருப்பார்
கொடுத்ததை மீண்டும் சேர்த்திருப்பார்
இழந்தவர் அங்கே என்ன செய்வார்
இவர்க்கு யார்தான் கொண்டு சேர்ப்பார்

தனக்கு தனக்கென போட்டிகொண்டு
ராஜாங்கம் செய்ய ஆட்களுண்டு
கஷ்டம் கொண்டவர் பிரிவைக்கண்டு
கவனமாய் செய்வாரோ நல்ல தொண்டு

வாழ்க்கையில் எல்லாம் நடப்பதென்று
வாழ்வது என்றும் மிக்க நன்று
சொல்லாமல் செய்வார் பெரியார் அன்று
சொல்லியும் செய்யார் சிறியார் இன்று

இளசு
15-10-2005, 12:16 AM
சந்தம், வரி அளவுகள் முதன்மையாக..
கருத்துகள் பின்னால் வர..
மரபு வழிப் பாடல்..
உங்கள் படைப்புக்கு பாராட்டுகள்..திருகனகா..
பலவகை கவிதை வடிவங்கள் நம் மன்றத்திலேயும் உண்டு. ஆழ்ந்து படியுங்கள்.. தொடர்ந்து படையுங்கள்.
எங்கள் ஊக்கமும் ஆக்கபூர்வ விமர்சனங்களும் என்றும் உண்டு..

அறிஞர்
15-10-2005, 05:08 AM
வாழ்க்கையில் எல்லாம் நடப்பதென்று
வாழ்வது என்றும் மிக்க நன்று
சொல்லாமல் செய்வார் பெரியார் அன்று
சொல்லியும் செய்யார் சிறியார் இன்று
சாட்டையடி வரிகளை கொடுத்து கலக்குகிறீர்கள்

இன்னும் தொடருங்கள்...

(தமிழ் எழுத பழகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்)