PDA

View Full Version : என் மனைவி



thirukanaga
14-10-2005, 12:03 PM
என் மனைவி

என் மனைவி ஒரு சேவல் போல
என் பிள்ளைகளை காலையில் எழுப்பும் போது
என் மனைவி ஒரு காகம் போல
பிள்ளைகளைக் கூப்பிட்டு உணவு கொடுக்கும் போது
என் மனைவி ஒரு கிளி போல
நான் இருட்டினில் பார்க்கும்போது
என் மனைவி ஒரு குயில் போல
என்னை இரவில் பேச நான் உறங்கும் போது
என் மனைவி ஒரு மயில் போல
என்னுடன் விசேடங்களுக்கு வரும்போது
என் மனைவி ஒரு நாய் போல
நான் உண்ட எச்சில் உணவை உண்ணும் போது
என் மனைவி ஒரு பூனை போல
என் உடலில் அவள் உறங்கும் போது
என் மனைவி ஒரு மாடு போல
என் வட்டத்தைச் சுற்றி வரும் போது
என் மனைவி ஒரு ஆடு போல
சின்ன சின்ன உணவுகளை கொறிக்கும் போது
என் மனைவி ஒரு புலி போல
என்னுடன் சண்டை வரும் போது
என் மனைவி ஒரு குதிரை போல
என்னை தன்னுடன் இழுக்கும் போது
என் மனைவி ஒரு சிங்கம் போல
என்னை குறை சொன்னவர் மீது பாயும்போது
என் மனைவி ஒரு நரி போல
என் தொலைபேசியை வேவு பார்க்கும் போது
என் மனைவி ஒரு பெண்ணைப் போல
நான் அவளை அடைந்த போது

பிரியன்
14-10-2005, 01:59 PM
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டிருக்கிறது.

pradeepkt
14-10-2005, 09:19 PM
திருகனகா, உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் கொடுங்களேன்

இளசு
15-10-2005, 12:08 AM
நல்ல வகை உவமைகளை மட்டும் வெட்டி அவரவர் மனைவியிடம் காட்டலாம்.
முழுதாய்க் கொடுத்தால்..
மனைவி பாதி அனலாயும் மீதிப் புனலாயும்
மாறி மாறி காய/பாய வாய்ப்புண்டு.

உங்கள் முதல் படைப்புக்கு ஊக்கமும் பாராட்டும் நண்பர் திருகனகா அவர்களே..
அறிமுகத்தில் ஆரம்பித்து பல பகுதிகளிலும் கருத்து, படைப்புகள் தந்து கலக்குங்கள்..

அறிஞர்
15-10-2005, 05:13 AM
வாழ்த்துகள் கங்கா..... அருமையாய் எழுதுகிறீர்கள்..
-----
மனைவியை பறவையாய், விலங்காய் உருவகப்படுத்தி கலக்குகிறீர்கள்

இளசு சொல்வது போல்.... சில வரிகளை எடுத்து.... மனைவியிடம் காட்டி..... பரவசப்படுத்தலாம்.... (அடி வாங்க தைரியம் உள்ளவர்கள் மொத்தத்தையும் காட்டலாம்)

kavithai_malar
15-10-2005, 06:09 AM
நல்ல கவிதை. ஆனால் முடிக்காமல் விட்டு விட்டீர்களோ?

என் மனைவி ஒரு தாயை போல
நான் பாசத்தில் ஏங்கும் போது

சரியா?

அறிஞர்
15-10-2005, 06:15 AM
நல்ல கவிதை. ஆனால் முடிக்காமல் விட்டு விட்டீர்களோ?

என் மனைவி ஒரு தாயை போல
நான் பாசத்தில் ஏங்கும் போது

சரியா?இன்னும் நீங்கள் தொடரலாம் அன்பரே

சுவேதா
15-10-2005, 02:01 PM
மிகவும் நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்!

பரஞ்சோதி
15-10-2005, 03:14 PM
மனைவி ஒரு கடவுள் போல
வேண்டியும் வரம் கொடுக்காமல் இருப்பதால்


(வீட்டிலே பூரிக்கட்டையை ஒளித்து வைத்த தைரியம்)

அறிஞர்
15-10-2005, 03:48 PM
(வீட்டிலே பூரிக்கட்டையை ஒளித்து வைத்த தைரியம்) தைரியம் :D :) :p :D :D :D :) :) :) :) :D :D :D

Nanban
15-10-2005, 06:36 PM
கவிதை நன்று.

ஒரு பெண்ணை இத்தனை வகையில் புகழ்ந்தால் அப்புறம் இல்லறம் இனிக்கத் தான் செய்யும்.

ஆனால் - இவையெல்லாம் அந்தப் பெண்ணிற்குப் பிடித்தமானது தானா?

ஏதோ ஒன்றை விட்டு விட்டீர்களே

யோசியுங்கள்...

thirukanaga
15-10-2005, 08:36 PM
நான் சமைத்துக்கொண்டிருக்கும் போது தான் இந்த கவிதை வந்தது.இது ஒரு முயற்சி மட்டுமே

Nanban
15-10-2005, 08:43 PM
உங்களுக்கு சமையல் கூட வருமா? அப்புறமென்ன!! நிச்சயம் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் தான்....!!!

நான் உங்களை யோசிக்கச் சொன்னது - இத்தனை சொல்லும் நீங்கள் - உங்கள் மனைவியின் உரிமைகளைப் பற்றி கொஞ்சமாவது யோசித்தீர்களா என்பது பற்றித் தான்....

thirukanaga
15-10-2005, 09:56 PM
பசுவின் பாலைக் கறந்துவிட்டு பசு பால் த்ரும் என்போம்.அது நம் தோட்டத்தை மேய்ந்தால் அதனைப் போட்டடிப்போம்

Nanban
16-10-2005, 02:49 PM
ஆஹா!!! எத்தனை உன்னதமான எண்ணங்கள்??? வாழ்க வளர்க....!!!