PDA

View Full Version : மூணாங்கிளாஸ்....rambal
20-04-2003, 01:20 PM
பூப்பறிக்கப் போய்
வண்டு கடித்த
அனுபவங்களும் உண்டு..

தட்டானை நூலில்
கட்டி பறக்க விட்டுப்
பார்த்ததும் உண்டு..

தேங்கிய குட்டையில்
கல் எறிந்து
தவக்களை விட்டதும் உண்டு..

கிட்டிப் புல் விளையாண்டு
கிழவி மண்டையை
உடைத்ததும் உண்டு...

சைக்கிள் டயரை
குச்சியால் தட்டி ஓட்டி
பந்தயம் நடத்தியதும் உண்டு..

கயிற்றைக் கொண்டு
பேருந்துக் கழகமும்
நடத்தியதுண்டு..

கவட்டை சகிதம்
பறவைகளை
கலங்கடித்ததும் உண்டு..

இப்படியான பல
சுவையான
அனுபவங்கள் இருந்தாலும்..

அந்த மூணாங்கிளாஸ்
காட்டன் சேலை டீச்சர் பாடம் சொல்லித்தந்த
அழகுக்கே இன்னொரு முறை
மூணாங்கிளாஸ் படிக்கணும்..

poo
20-04-2003, 03:14 PM
இது இனக்கவர்ச்சியா?!!!

இளசு
20-04-2003, 11:41 PM
இது இனக்கவர்ச்சியா?!!!
பூவுக்கு,
இல்லை தம்பி... இனம்புரியா பிரேமை.
? Infatuation.....


ராமுக்கு,
சொன்னால் நம்ப மாட்டாய்....இன்று காலை பயணத்தின்போது
கிட்டிப்புல், சைக்கிள் டயர் வண்டி, கோலி ஆட்டம் பற்றி விலாவாரியாக
யோசித்தபடியே.......
இரவு வந்து பார்த்தால் உன் கவிதை!!! பாராட்டுகள்.
ஆனால், கடைசி (காட்டன் புடவை டீச்சர்)அனுபவம் எனக்கு இல்லை.....
மாறாக,பேபி கிளாசில் (இப்போதைய யுகேஜி?) கூடப்படித்த ஒரு
பெண்ணுக்கு அன்போடு காக்காகடி கடித்து "கசாகசா" மிட்டாய்
அடிக்கடி கொடுத்தது இன்னும் துல்லியமாய் நினைவில்...அந்தப்பெண்
பெயர் உள்பட!!!!
அது என்ன..கன்னுக்குட்டி பாசம்..? (Calf-Love?)

Hayath
21-04-2003, 06:07 AM
இனம்புரியா பிரேமை..?. Infatuation.....
..கன்னுக்குட்டி பாசம்..?


ராமின் கவிதை அருமை அதற்கு இளவலின் "காக்கா கடி" அருமையிலும் அருமை.பாராட்டுக்கள் இருவருக்கும்.

Narathar
21-04-2003, 12:18 PM
நாராயனா!!
இந்தக்காலத்து பிள்ளைகள் மூன்றாம் கிளாசிலேயே அரம்பிச்சுடுறாங்களே................!!!
கவிதையாய் ஒரு கவிதை.....
கடைசிப்பந்தியைத்தவிர........

poo
21-04-2003, 05:03 PM
கடைசிப்பந்தியைத்தவிர........

என்ன சாமி கடைசிப்பந்தியில பாயாசம் கிடைக்கலயா?!!!

rambal
07-04-2004, 04:47 PM
நான் ரசித்து எழுதிய இந்தக் கவிதை எப்போதும்
என்னுடைய சிறந்தவை லிஸ்ட்டில் உண்டு..
சமீபத்திஉல் வந்த ஆட்டோகிராபில் இடம்பெற்ற
"நியாபகம் வருதே" என்ற பாடலை நினைவுபடுத்தும் கவிதை இது..

இக்பால்
07-04-2004, 05:02 PM
அழகிய நினைவுகள். தொடருட்டும்.

இவர் அந்த காட்சிக்கு ஒரு கவிதை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

Nanban
07-04-2004, 07:58 PM
அருமையான நினைவுகள்.... எல்லோரும் பெற்ற அனுபவம் என்றாலும், அதை கவிதை வடிக்கத் தோன்றிய மனதில் தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது.....

ஜோஸ்
07-04-2004, 10:30 PM
அருமையான நினைவுகள்.... எல்லோரும் பெற்ற அனுபவம் என்றாலும், அதை கவிதை வடிக்கத் தோன்றிய மனதில் தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது.....

உண்மையான வார்த்தைகள்... வாழ்த்துக்கள்...

அனுராகவன்
02-05-2008, 11:14 AM
மூனாங்கிளாஸ்...
ஆகா முத்தான வரிகள்!!
என்றும் இனிமை..

பூமகள்
02-05-2008, 02:16 PM
பட்டாம் பூச்சி தேடி
ஒரு பொழுது முழுக்க
அலைந்ததும் உண்டு..

சின்ன சின்ன
வெட்டுக் கிளி
பிடித்து
சிறைவைத்ததும் உண்டு..

அஞ்சாங்கிளாசினுள்
பாட்டிலில் வளர்த்தக்
கூட்டுப் புழு
பட்டாம் பூச்சியாகும் வரை
தினம்தினம் வகுப்புக்கு
பச்சிலை உணவுடன்
ஓடி வந்த
பள்ளி நாட்களும் உண்டு..

அறிவியல் ஆசிரியை
தாவரவியலினை
விளக்க..
வகுப்பறையில்
தேங்காய்த் தொட்டியில்
பச்சைப் பயிறிட்டு
முளைவிட்ட முதல்நாள்
சிலிர்த்துப் பார்த்த
பெருமிதமும் உண்டு..!!

தோற்றம் மாறிய (பள்ளி)முகப்பு
தாண்டிப் பயணப்படும்
நொடியெல்லாம்..
ஏற்றி வைத்த தீபமாக
ஒளிவீசிடும்
பள்ளி நாட்கள்..!!

-------------------------
உங்கள் கவிதையின் அந்தக் கடைசி பத்தி தவிர... பெரும்பான்மையானவை எமது அனுபவமே..!!

இளசு அண்ணா,
அந்த காக்கா கடி போலவே.. எனக்கும் சில முகங்கள் மறக்காமல் இன்னும் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறது..!! ;)

பாராட்டுகள் ராம்பால் அண்ணா. :)

அறிஞர்
02-05-2008, 02:32 PM
ஒரு பக்கம் ராம்பாலில் மூன்றாங்கிளாஸ்.....
அதற்கு அருமையான இளசுவின் பின்னூட்டம்.

இப்ப பூமகளின் அஞ்சாங்கிளாஸ் கதை...

திரும்ப பள்ளி திரும்பிவிடலாமா... என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் மலரும் நினைவுகள்....

அருமை...

அமரன்
02-05-2008, 07:58 PM
திரும்ப பள்ளி திரும்பிவிடலாமா... என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் மலரும் நினைவுகள்....

அருமை...
எனக்குந்தான் அறிஞரே..
அப்படியாச்சும் வாத்தியாரிடம் அடிவாங்காமல் படிக்கலாமே..
இப்போ நான் புத்திசாலின்னு அர்த்தமில்லை.. வாத்தியார் அடிக்கப் பயப்படுவாரில்ல..