PDA

View Full Version : அணித் தலைவர் ராகுல்இளையவன்
13-10-2005, 02:24 PM
இந்தியா வரும் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர்களுக்கு ராகுல் திராவிட் அணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று மாலை கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழு, இந்திய ஒரு நாள் அணியின் தலைவராக ராகுல் திராவிடை தேர்வு செய்துள்ளதாக சற்று முன் அறிவித்தது.

இலங்கைக்கு எதிரான 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு மட்டுமின்றி, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கும் ராகுல் திராவிடே தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால் இந்திய ஒரு நாள் அணியின் தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ராகுல் திராவிடிற்கே அளிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

தற்பொழுது வலது கை முட்டியில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக ஓய்வில் உள்ள சௌரவ் கங்கூலி, கிழக்கு மண்டல அணி பங்கேற்கும் துலிப் கோப்பை போட்டியில் விளையாடி நிரூபித்த பின்னரே அணிக்குத் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்.

aren
13-10-2005, 02:26 PM
இது சரியான முடிவாகத்தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில் இந்த பதவியை சேஷவாகிற்கு கொடுத்திருக்கலாம். தைரியமாக முடிவு எடுப்பத்தில் கங்குலிக்குபிறகு இந்திய அணியில் சேஷவாக்தான் என்பது என்னுடைய கருத்து.

aren
13-10-2005, 02:26 PM
எனக்குத்தெரிந்த வகையில் இந்திய குழு இப்படித்தான் இருக்கும்:

1. திராவிட்
2. சேஷவாக்
3. டெண்டுல்கர்
4. கைஃப்
5. யுவராஜ்
6. வேணுகோபால்
7. லஷ்மன்
8. தோனி
9. பதான்
10. ஜாஹீர்
11. முரளி கார்திக்
12. ஹர்பஜன்
13. ஜேய் பி. யாதவ்
14. ருத்ரா பிரதாப்சிங்
15. சுரேஷ் ரைய்னா

இதில் 14 மற்றும் 15-ம் மாறுவதற்கு சந்தர்பம் உள்ளது.

Narathar
13-10-2005, 02:34 PM
இது எனது தனிப்பட்ட கருத்து...................
எனக்கு பிடித்த இந்திய கிரிக்கட் வீரர்களில் மூதலிடத்தில் உள்ளவர் ட்ராவிட்.
அவரது அடக்கம், பணிவு என்னை மிகவும் கவர்ந்தது.

அத்துடன் பதட்டமில்லாமல் cool ஆக அவரால் தான் அணியை நடத்தி செல்ல முடியும் என்பது என் கருத்து.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்- இலங்கை அணிக்கும் !!!! நாராயணா

இளையவன்
13-10-2005, 03:00 PM
இதுவரை 17 ஒரு நாள் போட்டிகளுக்கு ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 7 போட்டிகளில் மட்டுமே அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். ஒன்பது போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்துள் ளது மற்றும் ஒரு போட்டி கைவிடப்பட்டது.

பரஞ்சோதி
13-10-2005, 08:19 PM
இராகுல் டிராவிட் அப்பா ஆன நேரம் பார்த்து திறமைக்கு கிடைத்த பரிசு.

அணியில் இடம் பெறும் அனைவரும் தங்கள் திறமைகளை காட்டி வெல்ல வேண்டும், இராகுலுக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும், இதுவே இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது.

அறிஞர்
13-10-2005, 10:24 PM
கங்குலிக்கு கல்தா என்பதே நல்ல செய்திதான்.......

பாலாஜிக்கு வாய்ப்புகள் மங்குகிறது......

pradeepkt
14-10-2005, 05:04 AM
கேப்டனுக்கு வாழ்த்துகள்.
இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கட்டும்.

aren
14-10-2005, 07:33 AM
லஷ்மனுக்கு இந்த முறையும் சந்தர்பம் தரவில்லை. அநியாயமாக ஒரு நல்ல ஆட்டக்காரரை அழிக்கிறார்கள்.

அதுபோல் ஜாஹீருக்கும் கல்தா கொடுத்துவிட்டார்கள்.

ஸ்ரீசந்த் என்ற ஒரு கேரள ஆட்டக்காரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். வரவேற்கவேண்டிய விஷயம்.

கவுதம் காம்பீருக்கு எதற்கு இங்கே இடம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பரஞ்சோதி
14-10-2005, 07:46 AM
லஷ்மனனை நீக்கியது மிகப் பெரிய முட்டாள்தனம்.

இந்திய மைதானங்களில் நன்றாகவே விளையாடுவார்.

பின்ன ஏன் அவரை சாலஞ்சர் டிராபியில் கேப்டனாக்கி, அவரும் இரண்டு போட்டிகளில் 110, 48 ரன்கள் எடுக்க வாய்ப்பு கொடுத்தார்கள், தற்போது ஏன் அணியில் சேர்க்கவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறதே.

ஸ்ரீசந்த் அவர்கள் சாலஞ்சரின் தன் வேகப்பந்து திறமையால் 7 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் பட்டத்தை வென்ற இளம் வீரர்.

கவுதம் காம்பீருக்கு பதில் உத்தப்பாவை தேர்வு செய்திருக்கலாம்.

இளையவன்
14-10-2005, 08:21 AM
கைப்பும் இல்லைப்போல் தெரிகிறது.

aren
14-10-2005, 08:25 AM
கைப்பும் இல்லைப்போல் தெரிகிறது.

கைப்பும் அடிபட்டுவிட்டது. ஆகையால் அவரால் இன்னும் இரண்டுவாரங்களுக்கு விளையாட முடியாது. அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இளையவன்
15-10-2005, 02:35 AM
ராவிட் சூப்பர் சீரிஸில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளார்.

உதயா
15-10-2005, 07:01 AM
ஸ்ரீசந்த் என்ற ஒரு கேரள ஆட்டக்காரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். வரவேற்கவேண்டிய விஷயம்.

இவரின் பந்து வீச்சு நல்லமுறையில் இருந்தது, அவர் ஒரு பந்தை நம் கார்த்திக்கு போடும் போது அது பவுஸ் ஆகி மார்ப்புக்கு மேலே சென்றது, அந்த பந்தை வீசிய பின் இவர் நம்ம கார்த்திக்கை பார்த்து கெட்ட வார்த்தையில் அர்ச்சணை செய்தார். இவர் உள்ளே தாக்குப்பிடிக்க நம் நாட்டுக்காரர்கள் அவசியம் முக்கியம் என்று பையனுக்கு தெறியவில்லை போலும்.

ஷேவாக் இப்போதெல்லாம் சரியாக ஆடுவதே இல்லை. இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மாற்றி நிருத்தினால் தான் சரியாக வரும்.

கைப்.. இவரை கேப்டனாக நியமிக்கலாம். (இப்போது வரும் போட்டியில் இவர் கலந்துகொள்ளவில்லை.)

rajasi13
15-10-2005, 07:46 AM
லஷ்மனனை நீக்கியது மிகப் பெரிய முட்டாள்தனம்.
இந்திய மைதானங்களில் நன்றாகவே விளையாடுவார்.

பின்ன ஏன் அவரை சாலஞ்சர் டிராபியில் கேப்டனாக்கி, அவரும் இரண்டு போட்டிகளில் 110, 48 ரன்கள் எடுக்க வாய்ப்பு கொடுத்தார்கள், தற்போது ஏன் அணியில் சேர்க்கவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறதே.

ஸ்ரீசந்த் அவர்கள் சாலஞ்சரின் தன் வேகப்பந்து திறமையால் 7 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் பட்டத்தை வென்ற இளம் வீரர்.

கவுதம் காம்பீருக்கு பதில் உத்தப்பாவை தேர்வு செய்திருக்கலாம்.
அணி அடுத்த உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது
போர்டு ரகசியம் வெளியில் சொல்ல்க்கூடாது
சரியான முடிவு, சேப்பலின் பிடிவாதம்
அரசியல் விளையாட்டு தெரியவில்லை

இந்திய அணி சார்பாக
ராஜா-எதிர்கால தலைவர்
BCCI

அடிக்க வராதீங்க, விகடன் பாணியில் முயற்சி பண்ணினேன்