PDA

View Full Version : ஒரேநாள் மழையில் சென்னை மிதந்தது



Narathar
13-10-2005, 01:34 PM
ஒரேநாள் மழையில் சென்னை மிதந்தது

http://www.dailythanthi.com/images/news/20051013/first.jpg

சென்னை, அக்.13-

ஒரே நாள் பெய்த பலத்த மழையில் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது.

விடாத மழை

சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரு கிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டுக்கு குறிப்பாக சென் னைக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது.

சென்னை நகரில் நேற்று முழு வதும் மழை பெய்தது. காலை யில் பெரிய தூறல் விழுந்தது. இடையில் சிறிது நேரம் மழை விட்டது. மாலை 3 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 5.30 மணி யில் இருந்து இரவு 7.30 மணி வரை 2 மணி நேரம் இடி, மின்ன லுடன் பலத்த மழை பெய்தது.

தண்ணீர் புகுந்தது

இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக தண்ணீர் ஓடியது.
வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், சாந்தோம், பெசன்ட்நகர், மைலாப்பூர், வேளச்சேரி, கிண்டி, மடுவன்கரை போன்ற இடங் களில் தாழ்வான பகுதியில் உள்ள குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந் தது. இதனால் அங்கு வசிப்ப வர்கள் வெளியேற்றப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்
அடையாறு கூவம் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ரிசர்வ் வங்கி, நுங்கம்பாக்கம், தியாகராயநகர், ஆதம்பாக்கம், தில்லைகங்காநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதை களில் தண்ணீர் புகுந்து நிரம்பி விட்டது. அதனால் அந்த வழி யாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

சென்னை பாரிமுனையில் இருந்து தலைமை செயலகம் செல்லும் வழியில் ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதை யில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் நின்றது.

பஸ்கள் ஊர்ந்து சென்றன

சென்னை பாரி முனையில் 4 அடி உயரத்துக்கு மழைநீர் ரோட்டில் ஆறு போல ஓடியது. இதனால் கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் செல்ல முடியாமல் தத்தளித்தன. பஸ்கள் மட்டும் ஆமை போல ஊர்ந்து சென்றன.

ஒரு மணிநேரத்துக்கு பாரி முனையில் இருந்து பஸ்கள் இயங்கவில்லை. காரணம் பஸ் நிலையத்தை சுற்றி எந்த ரோட்டை பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சியளித் தது. சிறு சிறு பழ வியாபாரிகள் வியாபாரத்தை மூடிவிட்டனர்.

பொருட்கள் மிதந்தன

பிராட்வே பகுதியில் உள்ள தெருக்களில் பிளாட்பாரங்களில் வசித்தவர்களின் சமையல் பாத் திரங்கள், சூட்கேஸ்கள், துணிகள், குடங்கள் உள்ளிட்ட தட்டு முட்டு சாமான்கள் வெள்ளத் தில் மிதந்தன.
ரெயில் நிலையங்கள்
சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களின் முன் பகுதியில் வெள்ளம்போல் மழை தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீர் ரெயில் நிலையங் களுக்கு முன்பு தேங்கி நின்றதால் பயணிகள் பெரும் அவதிப் பட்டனர்.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை பேசின்பிரிட்ஜ் ரெயில்வே யார்டிலும் மழை வெள்ளம் சூழ்ந்துக் கொண்டது. இதனால் மூர்மார்க்கெட் வாளா கத்துக்கு அருகில் உள்ள புறநகர் மின்சார ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்கள் சுமார் 45 நிமிடம் நிறுத்தப்பட்டன.

இரவு 7.45 மணியளவில் மழையின் அளவு சற்று குறைய தொடங்கியது. அதன் பின்னர் ரெயில்கள் வழக்கம் போல ஓட தொடங்கின.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வெளிர் களுக்கு செல்லும் சில எக்ஸ் பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. அதேபோல சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட
வில்லை.சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் ரோட்டில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இதனால் அந்த நீர் ரெயில் நிலையத்திலும் புகுந்தது.

இதே போல சென்னை அடையாறு, கிண்டி, சென்டிரல் ரெயில் நிலையம், ஆகிய இடங் களில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை வெள்ளம் குளம்போல தேங்கி நின்றது. அயனாவரம், வில்லிவாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், எழும்பூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் ஆறுபோல ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொது மருத்துவமனை

சென்னை பொது மருத்துவ மனையில் புறக்காவல் நிலையம் அருகே மழை நீர் இடுப்பளவுக்கு தேங்கி நின்றது.
இதனால் நோயாளிகளின் உறவினர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அங்கு நின்ற ஒரு மரம் வேருடன் விழுந்தது.
வேப்பேரி கால்நடை மருத்துவ மனையில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது. வேப்பேரி மெயின் ரோட்டிலும், பள்ளி வாசல் தெருவிலும் ரோடு எது, தெரு எது என்று தெரியாத அளவுக்கு மழைநீர் ஓடியது.

ஆட்டோக்கள் ஓடவில்லை

எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக காட்சி அளித்ததால் ஆட்டோக்கள் செல்ல சிரமப் பட்டன. இதனால் பெரும் பாலான ஆட்டோக்கள் 7 மணிக்கு பிறகு ஓடவில்லை.

இதனால் வழக்கமாக ஆட்டோக்களில் செல்லக்கூடிய வர்கள், ஷேர் ஆட்டோக்களில் செல்லக்கூடியவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பஸ் நிறுத்தங்களில் கூட்டமாக கூடி நின்றனர்.

பஸ்களும் மழையின் காரண மாக பல இடங்களில் ஊர்ந்தே சென்றன. இதனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மின்தடை

பலத்த மழை காரணமாக மின்சார கம்பிகள் ஆங்காங்கே அறுந்து விழுந்தன. சில இடங் களில் மரங்கள் சாய்ந்து விழுந்த தால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன.

நன்றி- தினத்தந்தி

suma
29-10-2005, 01:52 AM
மணியா,சேரன் மற்றும் கவி சென்னை நிலவரம் என்ன?

aren
29-10-2005, 05:10 AM
சென்னையில் நிறைய இடங்களில் கரண்டு கிடையாது. ஆகையால் நம் மன்ற உறுப்பினர்கள் பலர் கணிணியை திறக்க முடியவில்லை. இன்று கொஞ்சம் நிலமை சீராகி நம் மக்கள் மன்றம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.

இளசு
29-10-2005, 10:04 PM
செய்திக்கு நன்றி நாரதரே.
சென்னை நண்பர்கள் நலமா?
மணியா , இனிய சேரன், கவீ - நலமா?

aren
30-10-2005, 02:27 AM
சென்னை பழைய நிலைமைக்கு திரும்புவதாக என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார். நம் மக்கள் எல்லாம் ஒரு வாரம் விடுப்பு எடுத்துள்ளார்கள் போலிருக்கிறது. ஆளே காணவில்லையே.

எல்லோரும் நலமா?

இளசு
07-11-2005, 06:55 AM
ஏரியை ஆக்கிரமித்து
'நகர்' ஆக்கினர்;
மழை மீண்டும் ஆக்கிரமித்து
ஏரியாக்கியது.

பரஞ்சோதி
07-11-2005, 07:01 AM
மீண்டும் அடை மழை பெய்கிறதே. பிரச்சனை மேலும் கூடுகிறது.

gragavan
07-11-2005, 08:07 AM
மறுபடியும் மழை பெய்கிறது என்கின்றார்கள். பழைய மாமல்லபுரத்து ரோடுகளில் வெள்ளம் என்று கேள்வி.

pradeepkt
07-11-2005, 03:25 PM
நேற்றுப் பெய்த பெருமழையில் சென்னை நகரம் ஸ்தம்பித்திருந்ததைப் பார்த்தேன், வருந்தினேன்.
பெரும்பாலான ரயில்கள் பாதை மாற்றி விடப் பட்டன. ஆந்திரா ஒன்றும் சுபிட்சமில்லை. இன்றைய ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் கடந்து வந்து சேர்ந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ந்தனர்.

அறிஞர்
08-11-2005, 05:31 AM
இன்னும் பல ஏரிகள் உடைகின்றனவாம்....

சென்னையில் சரியான ட்ரைனேஜ் இல்லை.... எப்போதுதான் இந்த நிலை மாறுமோ...

ஐ.டி. நகரம் என தேர்ந்தெடுத்துள்ள தென்கிழக்கு சென்னை (வேள்ச்சேரி, கிழக்கு தாம்பரம்) எவ்வாறு உள்ளது? விவரம் தெரிந்தவர்கள் கூறவும்

gragavan
08-11-2005, 05:51 AM
வேளச்சேரி தண்ணீரில் பள்ளி கொண்டுள்ளதாக அங்கிருக்கும் பரந்தாமர்கள் சொல்கிறார்கள். அரவணைகள் வீட்டிற்குள் வருவதால் படுக்கைக்குப் பஞ்சமில்லை என்றும் தெரிகின்றது.

இளசு
08-11-2005, 05:52 AM
வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம் நகர் -- எல்லாம் மிதக்கின்றன அறிஞரே.

கீழ்த்தளத்தில் பாம்பு, பூரான்களுக்கும்
மேல்தளம் (இருந்தால்) - மனிதர்களுக்குமாய் இன்றைய நிலைமை!

பரஞ்சோதி
08-11-2005, 05:56 AM
எத்தனை முறை இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தாலும் மக்கள் மாக்களாகவே இருக்கிறார்கள், அரசாங்கமோ சொல்லவே தேவையில்லை.

இனிமேலாவது அனைவரும் கூடி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

(கொசுறு செய்தி: என்னுடைய திருமணத்தின் போதும் சென்னை மழையில் மிதந்தது, 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை, அதனால் முக்கிய நண்பர்களுக்கு மடல் கொடுக்க முடியாமல் அவஸ்தைப் பட்டேன், ஆமாம் இப்போ யாருக்குங்கோ கல்யாணம், இப்படி மழை பெய்யுது)

gragavan
08-11-2005, 06:45 AM
(கொசுறு செய்தி: என்னுடைய திருமணத்தின் போதும் சென்னை மழையில் மிதந்தது, 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை, அதனால் முக்கிய நண்பர்களுக்கு மடல் கொடுக்க முடியாமல் அவஸ்தைப் பட்டேன், ஆமாம் இப்போ யாருக்குங்கோ கல்யாணம், இப்படி மழை பெய்யுது)பரஞ்சோதி நீ சொல்ல வர்ரது எனக்குப் புரியுது. இப்படி ஆச்சே உன்னோட நெலமை. சரி. எல்லாம் அவ்வளவுதான். நம்ம கைல என்ன இருக்கு!

நாங்க மதுரைல இருந்தப்ப. ரொம்பச் சின்னப் பிள்ளை. விதின்னு ஒரு படம் வந்தது. அந்தப் படம் ஷாங்குற தேட்டர்ல ஓடிச்சி. அதப் பாக்கப் போயி வெள்ளத்துல மாட்டிக்கிட்டோம்.

pradeepkt
08-11-2005, 06:52 AM
அடடேஏஏஏஏஏஏஏஏஏஏ... நானும் அந்தப் படத்தைப் பாக்கப் போயி வெள்ளத்தில மாட்டினேன். அந்தத் தியேட்டர் காம்பிளக்ஸே (ஷா-ஹாஜிரா) வைகையாத்துப் பக்கத்து ரோட்டுலதான் கட்டீருப்பாக.
ஒரு வேளை ராகவன் எனக்குப் பக்கத்து சீட்டோ?

gragavan
08-11-2005, 09:51 AM
அடடேஏஏஏஏஏஏஏஏஏஏ... நானும் அந்தப் படத்தைப் பாக்கப் போயி வெள்ளத்தில மாட்டினேன். அந்தத் தியேட்டர் காம்பிளக்ஸே (ஷா-ஹாஜிரா) வைகையாத்துப் பக்கத்து ரோட்டுலதான் கட்டீருப்பாக.
ஒரு வேளை ராகவன் எனக்குப் பக்கத்து சீட்டோ?இருக்காது பிரதீப்பு. ஒருவேள எனக்கு முன்னாடி உக்காந்திருக்கலாம். ஏன்னா எனக்கு எடது பக்கம் எங்கம்மா உக்காந்திருந்தாங்க. வலப்பக்கம் நடக்க எடவெளி. பின்னாடி சொவரு. அதனால நீங்க முன்னால இருந்திருக்கனும்.

ஆமா நீங்க ஜெயரஜு, விஜயலச்சுமி, செண்ட்ரல், சிந்தாமணி, தங்கம் எல்லாம் போயிருக்கீங்களா? அப்புறம் சக்தி, சிவம். சுக,சினி,மினிப் பிரியாக்கள். இங்கெல்லாம் நான் போயிருக்கேன். அப்பெல்லாம் நீங்களும் வந்தாலும் வந்திருப்பீக.