PDA

View Full Version : திறந்த வெளி ஜெயில்..........



Narathar
12-10-2005, 12:02 PM
திறந்த வெளி ஜெயில்..........

போபால்: நன்னடத்தை ஆயுள் தண்டனை கைதிகளுக்கு, சமூகத்தில் மீண்டும் நல்ல குடிமகனாக வாழ வழி செய்யும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் படுவித்தியாசமான "திறந்தவெளி ஜெயில்' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பகலில் எல்லாம் நன்னடத்தை கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். இரவில், "மாமியார் வீட்டுக்கு' திரும்பிவிட வேண்டும். இதற்காக, நன்னடத்தை கைதிகளுக்காக, சிறை வளாகத்தில் தனி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாபுலால் கவுர் தலைமையில், பாரதிய ஜனதா அரசு உள்ளது. பழுத்த அரசியல் தலைவரான அவர், பல துறைகளிலும் புரட்சிகரமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களை அதிக அளவில் பல துறைகளில் உயர் பதவியில் அமர்த்தி வருகிறார். சர்ச்சை எழுந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் மனதில் பட்டதை செயல்படுத்தி வருகிறார்.

இப்படித்தான் சிறைக்கைதிகளை, மீண்டும் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் அளவுக்கு மாற்ற, புது திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். அது தான் "திறந்தவெளி சிறை' திட்டம்.
இந்த திட்டத்தின் படி, ஆயுள் சிறை தண்டனை பெற்ற கைதிகள், பல தண்டனைகள் பெற்று ஆயுள் முழுக்க சிறையில் இருக்கும் கைதிகள் ஆகியோரில் நன்னடத்தை பெற்ற கைதிகளில் சிலரை, அவ்வப்போது தேர்ந்தெடுத்து, சிறை வளாகத்தில், தனியாக கட்டப்படும் குடியிருப்பில் அவரவர் குடும்பத்துடன் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவர். பகல் முழுக்க அவர்கள், தங்கள் குடும்பத்துடன் தங்கிக் கொள்ளலாம். உறவினர், நண்பர் வீட்டுக்கு, போலீஸ் அனுமதியுடன் போகலாம். ஆனால், இரவானால், கண்டிப்பாக சிறைக்கு திரும்பி விட வேண்டும்.
இப்படி அவர்களின் தண்டனைக்காலம் முடியும் வரை, குடியிருப்பு வாசம் அனுபவிக்கலாம். தண்டனைக்காலம் முடிந்தபின்னர், கைதிகள் விடுவிக்கப்பட்டு, சமூகத்தில் எந்த பிரச்னையுமின்றி நல்ல குடிமகனாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த திட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, போபாலில் இருந்து 100 கிலோமீட்டர் துரத்தில் உள்ள ஹோஷனாபாத் பகுதியில் பிரமாண்ட சிறை வளாகம் கட்டப்படுகிறது. இந்த வளாகத்தில், சிறைக்கைதிகளுக்கு சிறை அறைகள் உட்பட தனிக் கட்டடம் கட்டப்படுவதுடன், வளாகத்தில், சிறிய குடும்பம் தங்கும் அளவுக்கு தனித்தனி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 25 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல, நன்னடத்தை ஆயுள் சிறைக் கைதிகளை அடையாளம் காணும் பணியும் ஆரம்பமாகி விட்டது. அடுத்தாண்டு முதலில் அவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு, புது "திறந்தவெளி ஜெயில்' திட்டப்படி, குடும்பத்துடன் தங்க அனுமதிக்கப்படுவர்.

"இப்படி ஒரு புதுமையான திட்டத்தை தீட்டியிருப்பது புரட்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், கைதிகள் ஓடிவிட்டால், என்ன செய்வீர்கள்?' என்று சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சின்காவிடம் கேட்டதற்கு, "நாங்கள் தொடர்ந்து கண்காணித்த பின் தான் கைதிகளை தேர்வு செய்கிறோம். அவர்களுக்கு குடும்ப பாசம், சமூக பொறுப்பு எல்லாம் வர வேண்டும் என்று தான் இத்தகைய திட்டத்தின் நோக்கம். அதற்கு, நன்னடத்தை கைதிகள் நிச்சயம் ஒத்துழைப்பர். அவர்கள் ஓடிவிட்டால், மீண்டும் சிக்கினால், கடும் சிறை தண்டனை தரப்படும் என்பதும் அவர்களுக்கு அறிவுறுத்தப்படும். அதனால், அவர்கள் தப்புவர் என்பதற்கான சாத்தியம் குறைவு தான்' என்றார்.

rajasi13
12-10-2005, 12:22 PM
இன்னிக்கு பேப்பர்ல பாத்த மாதிரி இருக்குதே!

Narathar
12-10-2005, 12:54 PM
இன்னிக்கு பேப்பர்ல பாத்த மாதிரி இருக்குதே!

பேப்பரில் உள்ளதைத்தானய்யா இங்கு பதித்துள்ளேன்.............
நன்றி தினமலர் என்று போட மறந்து விட்டேன்
இப்போது சந்தோஷமா?

rajasi13
13-10-2005, 06:42 AM
பேப்பரில் உள்ளதைத்தானய்யா இங்கு பதித்துள்ளேன்.............
நன்றி தினமலர் என்று போட மறந்து விட்டேன்
இப்போது சந்தோஷமா?
அது ...ஹா ஹா ஹா

aren
13-10-2005, 07:58 AM
இதெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தால் அவ்வளவுதான், ஜெயிலேயே இனவிருத்திக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

Narathar
13-10-2005, 09:30 AM
இதெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தால் அவ்வளவுதான், ஜெயிலேயே இனவிருத்திக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

சொல்லிட்டாரய்யா............
சொல்லிட்டாரு!!!