PDA

View Full Version : I've got mail!



Narathar
12-10-2005, 12:33 PM
நல்ல மாலை வேளை.............

என் வீட்டின் முன் உள்ள இருக்கையில் அமர்ந்து பராக்குப்பார்த்துக்கொண்டிருந்தேன்......

அடுத்த வீட்டில் வசிக்கும் வெள்ளைக்காரப்பெண் மணி அவசரமாக வந்து அவள் வீட்டு மெயில் பொக்ஸை திறந்து பார்த்து விட்டு ஏமாற்றத்தோடு என்னைப்பார்த்து ஒரு வெற்றுப்புன்னகை வீசி விட்டு சென்றாள்.............

சிறிது நேரத்தில் மீண்டும் அவள் வந்து மெயில் பொக்ஸை திறந்து பார்த்தாள்.... ஒன்றுமில்லை , மீண்டும் உள்ளே சென்றால்

இப்போது மீண்டும் வந்தாள்........ இப்படியாக இரண்டு மூன்றுமுறை அவள் செய்ததும் பொருமை இழந்த நான்

''ஏன் என்ன விடயம்?'' என்றேன்

'"my computer keeps telling me that I've got mail! "
(''எனது கம்பியூட்டர் சொல்லிக்கொண்டே இருக்கிறது எனக்கு ஒரு மெயில் இருப்பதாக'' )

என்று சொன்னாளே பார்க்கலாம்.................

பரஞ்சோதி
12-10-2005, 12:36 PM
நல்ல வேளை.

உங்க மெயில் பாக்ஸ் வைரஸால் தாக்கப்பட்டது என்று சொல்லியிருந்தால் அவர் எங்கே போயிருப்பார்.

மருத்துவரிடமா அல்லது கொல்லப் பட்டறைக்கா?

சுவேதா
12-10-2005, 12:53 PM
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

gragavan
12-10-2005, 01:11 PM
நல்ல வேளை.

உங்க மெயில் பாக்ஸ் வைரஸால் தாக்கப்பட்டது என்று சொல்லியிருந்தால் அவர் எங்கே போயிருப்பார்.

மருத்துவரிடமா அல்லது கொல்லப் பட்டறைக்கா?சபாஷ் சரியான கேள்வி.

அறிஞர்
15-10-2005, 05:46 AM
பதில் கேள்வி அருமை...

என்ன நாரதரே... நான் 7 வருடத்துக்கு முன் கேட்ட சிரிப்பை உம்மால் கேட்பது இன்பமே...

Narathar
16-10-2005, 06:30 AM
பதில் கேள்வி அருமை...

என்ன நாரதரே... நான் 7 வருடத்துக்கு முன் கேட்ட சிரிப்பை உம்மால் கேட்பது இன்பமே...

ஓ அப்பவே நான் இதை உங்களிடம் சொல்லிட்டேனா??

Iniyan
18-10-2005, 10:13 AM
உலகப் பிரசித்தி பெற்ற Blonde ஜோக்கை உட்டாலக்கடி தில்லாலங்கடி செய்து வழங்கிய நாரத மகா முனியே... தமிழில் படிக்க இன்பமாயே இருந்தது. நன்றி,

Narathar
18-10-2005, 10:57 AM
உலகப் பிரசித்தி பெற்ற Blonde ஜோக்கை உட்டாலக்கடி தில்லாலங்கடி செய்து வழங்கிய நாரத மகா முனியே... தமிழில் படிக்க இன்பமாயே இருந்தது. நன்றி,

பெண்கள் சம்பந்தமான ஏராளமான விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றீர்கள் போல் தெரிகிறது......... நன்று நன்று
அதுவும் Blonde களைப்பற்றி.............. நன்று நன்று

aren
20-10-2005, 12:01 PM
நல்ல சிரிப்பு நாரதர் அவர்களே. ஆனால் இப்படி ஒன்னும் தெரியாதவர் இன்னுமா இருக்கிறார்கள்.