PDA

View Full Version : கூகுள் டாக்



aren
12-10-2005, 08:31 AM
கூகுள் டாக் நம்ம யாஹூ மெஸ்ஞ்சர் போல் இருக்கிறதாமே. யாராவது உபயோகித்திருக்கிறீர்களா?

நான் இறக்குமதி செய்து வைத்திருக்கிறேன். இன்னும் யாரிடமும் சாட்டோ அல்லது பேசவோயில்லை.

http://www.google.com/talk/

உபயோகித்தவர்கள் அவர்களுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.

மன்மதன்
12-10-2005, 09:56 AM
பிரதீப்தான் அதிகம் உபயோகிக்கும் பயனாளி.. நண்பா வந்து சொல்லட்டும்..

Narathar
12-10-2005, 10:02 AM
நானும் இறக்கிக்கொள்ள வேண்டும்..........
பல இலங்கை நண்பர்கள் வைத்திருக்கின்றார்கள்.

பரஞ்சோதி
12-10-2005, 10:39 AM
நான் இறக்கி லாகின் செய்ய பார்க்கிறேன், ஆக மாட்டேன் என்று அடம் பிடிக்குது. சரி தான் போ என்று விட்டு விட்டேன்.

pradeepkt
12-10-2005, 03:31 PM
நான் இதைக் கொஞ்ச காலமாக உபயோகித்து வருகிறேன்.
யாஹு மெசெஞ்சர் தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் சில நண்பர்கள் என்னுடன் இதில் பேசுவார்கள்.
குரல் வழிப் பேச்சு மிக மோசம்.
யாஹுவை இது நெருங்கக் கொஞ்ச நாள் பிடிக்கும். ரொம்ப சுமார்தான்.
நான் பரம்ஸ் அண்ணாவுக்கு ஒரு அழைப்பு கொடுத்தேன். அவர் கண்டு கொள்ளவில்லை :)

மன்மதன்
13-10-2005, 04:38 AM
அதான் இறக்க முடியவில்லை என்று பரஸ்ம் சொல்லியிருக்கான்ல.. அப்புறம் என்னல பிரதீப்பு...:D :D

pradeepkt
13-10-2005, 05:23 AM
அவரு எறக்கீட்டாரு... லாகின் தான் பண்ண முடியலையாம்.
நீ ஏம்ப்பு துடிக்கிற... அவருக்குக் கொஞ்சம் ஹெல்ப்பு பண்ணா நாங்க பேசிக்கிருவமில்ல?

aren
13-10-2005, 05:56 AM
நான் இப்பொழுது அதிகமாக உபயோகிப்பது "ஸ்கைப்". அதில் குரல்வழிப்பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் பட்டாளம் அனைத்தும் இதையே உபயோகிக்கிறோம்.

அறிஞர்
15-10-2005, 06:08 AM
நானும் ஸ்கைப் உபயோகித்தேன் நன்றாக உள்ளது... கூகுளின் தரம் எப்படி என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்

puppy
21-11-2005, 03:16 PM
கூகுள் ரொம்ப எளிதானது.......எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது

pradeepkt
22-11-2005, 07:00 AM
இப்போது கூகிளின் குரல் வழிப் பேச்சுத் தரம் அருமையாக இருக்கிறது.

aren
22-11-2005, 07:34 AM
இப்போது கூகிளின் குரல் வழிப் பேச்சுத் தரம் அருமையாக இருக்கிறது.

முயற்சி செய்து பார்க்கலாமா?

pradeepkt
22-11-2005, 11:18 AM
கண்டிப்பாக.
அருமையாக இருக்கிறது. முயன்று பார்த்துச் சொல்லுங்கள்.

அரசன்
02-04-2007, 07:01 PM
நான் இறக்கி பயன்படுத்துகிறேன். மிகவும் எலிமையானது.

vijayan_t
08-04-2007, 11:51 AM
ஆமாம் நன்பர்களே, கூகிள்டாக் பேச்சு-உரையாடலுக்கு மிக நன்றாக இருக்கின்றது. நான் இதைத்தான் உபயோகிக்கின்றேன்.

கூகிள்-எர்த் பார்த்திருக்கின்றீர்களா? மிக அருமையாக இருக்கின்றது. அதில் இன்னும் எங்கள் மதுரையை படமெடுத்து போடவில்லை.

கூகிளிடமிருந்து சேவைபெற்று விக்கிமேப்பியா அதை இன்னும் மேன்மை படுத்தியிருக்கின்றார்கள், இடங்களைப்பறிய குறிப்பினை, உபயோகிப்பாளர்களே பதிக்கலாம்.

http://www.wikimapia.org/#y=13041059&x=80233219&z=18&l=0&m=a

இது, சென்னை T.Nagar, பனகல் பார்க் ஆகும்.

மயூ
08-04-2007, 01:30 PM
ஜிடாக் இப்போது ஜிமெயிலில் உள்ளமைந்து உள்ளதே!!!
யாகூவும் விரைவில் தொடங்கப்போவதாகக் கேள்வி

ஓவியன்
08-04-2007, 01:34 PM
ஜிடாக் இப்போது ஜிமெயிலில் உள்ளமைந்து உள்ளதே!!!
யாகூவும் விரைவில் தொடங்கப்போவதாகக் கேள்வி

நம் நண்பர்கள் பழைய ஒரு திரியினை மீட்டுக் கொண்டு வந்து விட்டனர். இப்போதெல்லாம், யி-டோக் எங்களுடன் பின்னிப் பிணைந்து விட்டது என்பதே உண்மை.

மயூ
08-04-2007, 01:37 PM
நம் நண்பர்கள் பழைய ஒரு திரியினை மீட்டுக் கொண்டு வந்து விட்டனர். இப்போதெல்லாம், யி-டோக் எங்களுடன் பின்னிப் பிணைந்து விட்டது என்பதே உண்மை.
அப்புறம் நான் உமக்கு ஒரு அழைப்பு அனுப்பினேன் வந்ததா?

வெற்றி
16-04-2007, 01:38 PM
கூகுள் டாக் பிச்சி உதருது,,,
அட்டகாசம்
தூள்.
தெளிவான சப்தம்.
துண்டிக்கப்படாத இணைப்பு..
இதற்காகவே பலர் யாகுவில் இருந்து ஜி.மெயிலுக்கு மாறிகிட்டு இருக்காங்க..
அப்போ நீங்க????!!!!!

பையன்
21-04-2007, 05:37 PM
நாங்க எப்பவும் G தான்

மலர்
09-05-2007, 06:36 AM
கூகுள் மிகவும் எளிதானது

சூரியன்
20-05-2007, 08:41 AM
இந்த மென்பொருள் சற்று மோசமாகதான் வேலை செய்கிறது,யாகூவில் இருக்கும் அளவிக்கு இதில் வசதிகள் இல்லை என்பது குறிப்பிடதக்கது..

அன்புரசிகன்
20-05-2007, 08:46 AM
பல நாடுகளில் யாஹு ஐ தடை செய்திருக்கிறார்கள். ஆனால் ஜிமெயில் நன்றாக வேலைசெய்கிறது. எழுத்து அரட்டையடிக்க அவ்வளவாக வசதியில்லாவிடினும் கதைப்பதற்கு மிக துல்லியமாக ஓலி கிடைப்பதால் ஜி-மெயில் நலமே.

மனோஜ்
20-05-2007, 09:19 AM
உபயோகித்து கூறுகிறோன்