PDA

View Full Version : டில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் ħ



Narathar
10-10-2005, 08:20 PM
டில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

புதுடில்லி: பூகம்பம் ஏற்படக் கூடிய மிக அபாய கட்டத்தில் தான் தலைநகர் டில்லி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 6.5 ரிக்டர் அளவில் ஏற்படும் பூகம்பத்தால் டில்லியில் உள்ள பெரிய பெரிய கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் நொறுங்கி விழும். கடும் சேதங்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் நிலநடுக்க பேரிடர் மதிப்பீடு மைய இயக்குனர் ஏ.கே.சுக்லா கூறியதாவது:

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ள பகுதிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான நிலநடுக்கம் ஏற்படும் பகுதி மண்டலம் ஐந்து பிரிவில் வருகிறது. இதற்கு அடுத்ததாக மோசமான நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ள மண்டலம் நான்கு பிரிவில் டில்லி நகரம் அமைந்துள்ளது.

டில்லியில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படக் கூடும். இது கடுமையான சேதங்களை ஏற்படுத்தும். டில்லியில் உள்ள பெரிய பெரிய கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழும். உயிர்பலி அதிக அளவில் ஏற்படும்.
இமாச்சல பிரதேசம், காஷ்மீர், அந்தமான்நிகோபார் தீவுப்பகுதிகள், மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் யாவும் மோசமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய மண்டலம் ஐந்து பிரிவில் உள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் 8 ரிக்டர் அளவு வரை இருக்கும்.

டில்லியில் 1720ம் ஆண்டில் இருந்து 1996ம் ஆண்டு வரை ஆறு முறை பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
டில்லியில் எந்தெந்த பகுதிகள் நிலநடுக்கத்தின் போது மோசமாக பாதிக்கப்பட கூடியவை என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது பூகம்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய புவி அடுக்கு நகர்ந்து யுரேஷியன் தட்டுடன் மோதுவதால் இந்நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு சுக்லா தெரிவித்தார்

நன்றி : தினமலர் 17 அக்டோபர் 2005



இன்னும் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்

இப்போது ஏற்பட்டது மிக சிறியது
இன்னும் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்
விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி, அக்.10-

இப்போதுஏற்பட்டது சிறிய பூமி அதிர்ச்சி தான். விரை வில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என்று விஞ் ஞானிகள் எச்சரித்துள்ள னர்.
பூகம்பம்

பாகிஸ்தானை மையமாககொண்டு நேற்று முன் தினம் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதில் பாகிஸ்தானில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பூகம்பத்துக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

30 ஆயித்துக்கும் மேற்பட்டவர்களை காவு கொண்ட இந்த பூமி அதிர்ச்சி சிறியது தான் என்றும் இதைவிட மிகப்பெரிய பூமி அதிர்ச்சி விரைவில் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் கொலரடோ பல்கலைக்கழக பூகம்ப நிபுணர்கள் ரோஜர் பில்காம், பீட்டர் முல்னார் ஆகியோர் இது குறித்து கூறியதாவது;-

விரிசல்

பூமியின் நிலப்பகுதி 13 பாறை படிவங்கள் மீது அமர்ந்து இருக்கிறது. இதில் ஒன்று இந்தியன் பிளேட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிளேட் அருகே ரேசியன் பிளேட் இருக்கிறது. இதில் இந்தியன் பிளேட், ரேசியன் பிளேட்டை நோக்கி ஆண்டுக்கு 4 செ.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

ரேசியன் பிளேட் மீது இந்தியன் பிளேட் மோதுவதால், இந்தியன் பிளேட் எனப்படும் பாறையில் விரிசலும் அழுத்தமும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் பூகம்பம் நிகழ்கிறது.
இந்தியன் பிளேட்டில் உள்ள விரிசல், மற்றும் இரண்டு பிளேட்டுகள் மோதிய இடத்தில் உருவான அழுத்தம் விடுபடும் போது பூமியில் அதிர்ச்சி ஏற்படுகிறது.

அதிக அழுத்தம்

இந்திய பிளேட்டும் ரேசிய பிளேட்டும் மோதியதால் ஏற்பட்ட அழுத்தம் இன்னும் பூரணமாக விடுபடவில்லை. மாறாக அழுத்தம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.

கடந்த முறை இந்திய பிளேட்டில் ஓரளவு அழுத்தம் வெளிப்பட்டதால் தான் அந்தமான் தீவு அருகே பூகம்பம் நிகழ்ந்து அதன் காரணமாக சுனாமி உருவானது.

இந்திய பிளேட்டில் இன்னும் அழுத்தம் அதிகமாக உள்ளது. அது விரைவில் வெளிப்படலாம். அப்போது இன்னும் அதிக அளவிலான பூமி அதிர்ச்சியை சந்திக்க வேண்டி இருக்கும்.

எச்சரிக்கை

காஷ்மீரில் இருந்து வடகிழக்கு பகுதி வரை இந்த அழுத்தம் காணப்படுகிறது.இந்த பகுதிகள் தான் மிகப் பெரிய பூகம்பத்தை எதிர் நோக்கி இருக்கும் இடங்கள் ஆகும்.

நாங்கள் எதிர்பார்க்கும் இந்த பூகம்பம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் பலியாகக்கூடும். ஆனால் இந்த கொடிய பூமி அதிர்ச்சி எப்போது ஏற்படும் என்று உறுதியாகக்கூறமுடியாது.

நேற்று முன்தினம் இந்திய பிளேட்டில் 4 இடங்களில் உருவான விரிசலால் முஷாபராபாத்தை மையமாககொண்டு பூகம்பம் ஏற்பட்டது. நல்லவேளையாக பூமிக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டு இருந்ததால் சேதம் அதிக அளவில் இல்லாமல் போய்விட்டது.

இப்போது ஏற்பட்ட பூமி அதிர்ச்சியை ஒரு எச்சரிக்கையாகவே நாம் கருத வேண்டும். அடுத்து ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பூகம்பத்தை சமாளிக்க இப்போதே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

செய்தி :தினத்தந்தி Oct 10

மன்மதன்
11-10-2005, 04:41 AM
பூமி அதிர்ச்சியை விட இந்த மாதிரி செய்திகள்தான் அதிக கவலையுற செய்கின்றன.. கடவுளே.. காப்பாத்து............

பரஞ்சோதி
11-10-2005, 06:02 AM
என்ன நாரதரே!

அதிர்ச்சி தரும் செய்தியை கொடுத்திருக்கீங்க.

உடனடியாக அரசாங்கம் இதைப் பற்றி கூடி பேச வேண்டும், மக்களை பாதுகாப்பதில் தீவிரவாக இருக்க வேண்டும்.

இராணுவம், மருத்துவக்குழு அனைத்தும் தயார் நிலையில் வைக்க வேண்டும், பூகம்பம் பற்றிய விபரங்களை மக்களுக்கு தெரியப் படுத்தவேண்டும்.

ஜப்பான் போல் அனைவருக்கும் பூகம்பம் ஏற்பட்டால் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

எப்போதும் சின்ன ரேடியோ, டார்ச், தண்ணீர் பாட்டில் மொபைல் போன்றவை அருகிலேயே இருக்க வேண்டும்.

pradeepkt
11-10-2005, 06:20 AM
நேற்று கூட டிவியில் பூகம்பம் வந்தால் தாங்கக் கூடிய கட்டடங்களைப் பற்றிப் பேசினார்கள். ஒரு நிபுணர் ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடிகளில் அரசாங்கம் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.
அரசுகள் ஆவன செய்யுமா?

gragavan
11-10-2005, 06:39 AM
இயற்கை மிகப் பெரியது. மிக வலியது. தண்டனை கொடுப்பதில் மிகக் கொடியது. இன்னும் என்னவெல்லாம் ஆகப் போகின்றதோ..............ஆண்டவா........

அறிஞர்
11-10-2005, 01:48 PM
பயமுறுத்துகின்றன..... எங்கு சென்றாலும் இயற்கைக்கு மீறிய சக்தி ஒன்றும் இல்லை என சவால் விடுகின்றன...