PDA

View Full Version : தமிழகம் மற்றும் இலங்கையில் புயல் சின்னம்



Narathar
10-10-2005, 02:46 PM
வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை
அக்டோபர் 10, 2005
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மேகமூட்டமாக இருக்கும் என்றும் வானிலை இலாகா அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்திற்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி தட்ஸ்டமில் இணையம்

இலங்கையில் சூறாவளி ஏற்படும் அபாயம் சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடிக்கும்

இலங்கையில் சூறாவளி ஏற்படும் அபாயம் தென்படுவதாகவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி காரியவசம் எச்சரித்துள்ளார்.

இடியுடன் கூடிய பலத்த மழையும் அதனைத் தொடர்ந்து மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்றும் வீசும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெய்து வரும் மழை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்றும் கடலுக்கு செல்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் கரையோர பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழையின் காரணமாக பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரங்களும் வீழ்ந்துள்ளன.

இதனால் சில இடங்களில் போக்குவரத்துத் தடைகள், மின் துண்டிப்பு ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, பொலநறுவை, மொனராகலை, சிலாபம், மாதம்பை ஆகிய இடங்களில் மழை, காற்று காரணமாக வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துமுள்ளனர்

நன்றி தினக்குரல்

மன்மதன்
11-10-2005, 04:47 AM
நேற்று சென்னையில் நல்ல மழை.. நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு வந்த நண்பர் ஒருவர், 'விமானம் டேக் ஆஃப் ஆக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டனர்' என்று சொன்னார்.. மழை பெய்தாலும் குற்றம் என ஆகிவிட்டதே..:D

rajasi13
11-10-2005, 06:04 AM
என்னுடைய கல்லூரி விரிவுரையாளர் irrigation Engineering பாடத்தின் போது ஒரு கருத்தை சொன்னார். மழையை சேமிக்கும் திட்டத்தை பற்றி பேசும் நாம் சேமிப்புத்தலங்களை வீடுகளாக்கி விட்டோம் அதனால்தான் வெள்ளப்பெருக்கின் போது சேமிக்கவும் முடிவதில்லை. சேதமும் அதிகமாகிறது என்றார். . பாலம் மற்றும் அணை கட்டும் பிரிவில் நான் பணிபுரிந்த போது எக்ஸ்ட்ராடினரி ஃப்ளட் லெவெல் என்று ஒரு அளவை குறிப்பிடுவோம். அதாவது 16 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அதிகமான அளவை கணக்கில் எடுத்துக்கொள்வோம். இப்போதைய நிலையில் எல்லாவருடமும் EFL அளவை எட்டி விடுகிறது. அவர் சொன்னதன் அர்த்தம் அன்று பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை. ஆனால் ஒரு பாலம் மற்றும் ஒரு பைபாஸ் சாலைக்கான சர்வே செய்தபோது அனுபவபூர்வமாக புரிந்து கொண்டேன். இப்போது சொல்லுங்கள். மழை பெய்யும்போது யாரை குற்றம் சொல்வது.