PDA

View Full Version : சில நண்ப(கல்)ர்கள் ... நினைவுகள்....



lavanya
19-04-2003, 11:33 PM
சில நண்ப(கல்)ர்கள் நினைவுகள்...........

காலம் கடந்து
பழைய பாதைகளில்
பயணிக்கிற போது
பழைய ஞாபகங்கள்..........!

அந்த அறைகள்தான்
எங்களின் சொர்க்கங்கள்......

அந்த மைதானங்கள்தான்
எங்கள் நட்பை வளர்த்த
ஊடகங்கள்.........

அந்த அடுமணைகள் தான்
அன்பு வேரோட
தேனீர் ஊற்றிய
அட்ஷய பாத்திரங்கள்

காக்கைகளாய்த் தான்
இல்லை இல்லை
காக்கைகளாய் மட்டுமே
வாழ்ந்தோம்........

காரணமில்லாமல்
இறுகிப் போனோம்........

உயிரோடு உயிராய்
உருகிப் போனோம் ..............

பகலை இரவாக்கி
இரவைப் பகலாக்கி
காலத்தை வென்றிருக்கிறோம்.......

எங்கள் குரல் கேட்காத
திரையரங்குகள் இல்லை ........

நாங்கள் பயணிக்காத
பேரூந்துகள் மிக குறைவு .........

பணம் எங்களைப்
பாகுபடுத்தவில்லை .............

குணம் பார்த்து நாங்கள்
பழகியதில்லை.........

எதன் பொருட்டும்
எங்கள் நட்பில்லை .........

எல்லாமே அமைந்து
போனது அப்படித்தான்......

பிரியும் நேரம் வந்தது
பிரிவு உபச்சாரங்கள்
அழுகைகள்
அரவணைப்புகள்
ஆட்டோகிராப்புக்கள் .............

வேறு வழியில்லாமல்
பிரிய மனமில்லாமல்
பிரிந்து போனோம்..........

காலம் கடந்தது
வயது கரைந்தது
நண்பர்கள் உயர்ந்தார்கள்
உருமாறிப் போனார்கள்
இறுகி உயிராய் கிடந்த
ஓரிரு நண்பர்கள்
சந்தித்துக் கொண்டோம்
வாழ்க்கைப் பயணத்தில்...........

அழுது அரற்றிய அதே நண்பர்கள்
கண்ணீர் சிந்திய அதே கண்கள்
இரும்பாய் கனத்த அதே மனது

இவையெல்லாம் இப்போது
இரண்டு நிமிடத்துக்கு மேல்
என்னோடு நேரம் செலவிட
தயாராய் இல்லை......!

அடுத்த முறை அவசியம்
வீட்டுக்கு வா........
வீட்டருகே சொன்னார்கள்.....

நேரத்தின் முக்கியத்துவம்
அவர்களுக்கு.....

இப்போதெல்லாம்
மரியாதைக்குரிய
மனிதர்களை
எதிரிலேப் பார்த்தால்
விலகியேப் போகிறேன்......

காலத்தின் பிணைக் கைதிகள்
அவர்கள் மீது தவறில்லை....

ஆனால்
நிகழ்கால மாற்றம் பார்த்து
பழைய கல்வெட்டுகளை
அழித்தெழுத
நான் தயாராய் இல்லை .......!!!

இளசு
19-04-2003, 11:50 PM
பசுமை கு(ம)றைந்த நினைவுகள்....
பாலையாய் மாறிய சோலைகள்....

அடுத்தவர் வாழ்வில் மாற்றங்கள்...
மாறா நம் நெஞ்சில் ஏக்கங்கள்....

அழகாய் ஒரு காலப்பதிவு --
மெலிதாய் யதார்த்தம் உணர்ந்த சோகம்..

அருமை லாவண்யா... பாராட்டுகள்.

aren
20-04-2003, 12:47 AM
கவிதை அருமை லாவண்யா அவர்களே. என்னுடைய மலரும் நினைவுகளை அப்படியே பிரதிபலிப்பது போலுள்ளது இந்தக் கவிதை. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். எழுதி எங்களை மகிழ்வியுங்கள்.

Hayath
20-04-2003, 04:44 AM
காலத்தின் பிணைக் கைதிகள்
அவர்கள் மீது தவறில்லை....

ஆனால்
நிகழ்கால மாற்றம் பார்த்து
பழைய கல்வெட்டுகளை
அழித்தெழுத
நான் தயாராய் இல்லை .......!!!

உங்கள் கவிதையை படித்தவுடன் என்னுடைய கல்லூரி நினைவுகள் வந்து சென்றது.உண்மையை நிகழ்கால எதார்த்தங்களை அழகாக ,துல்லியமாக எடுத்துச் சொல்கிறது உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும்.இது போல பல கவிதைகள் படைக்க எனது பாராட்டுக்கள்.

rambal
20-04-2003, 05:07 AM
பழைய வைன்
முதல் மீசை
முதல் முத்தம்
எல்லாமே மறக்க முடியாதவை..

காலத்தின் பிணைக்கைதிகள்

இந்த வாசகத்தில் ஒரு தத்துவம் தெரிகிறது..
உங்கள் மன முதிர்ச்சி அழகாய் வெளியாகியுள்ளது..
பாராட்டுக்கள்.. தொடருங்கள்..

Emperor
20-04-2003, 06:00 AM
லாவன்யாவின் மற்றொரு சிறந்த படைப்பு,
படித்த கண்களில் நீர்வீழ்ச்சி
நன்றிகள் பல.

poo
20-04-2003, 02:17 PM
உங்கள் நினைவுகளில் நீந்த வைத்து நெஞ்சை நெகிழச் செய்துவிட்டீர்கள்...

-பாராட்டுக்களுடன் நன்றி அக்கா!!

மன்மதன்
23-11-2004, 03:16 PM
கவிஞர் லாவண்யாவின் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
அன்புடன்
மன்மதன்

அக்னி
31-05-2007, 11:41 PM
கண்ணில் நீர் வரும் கணங்கள்...
ஆனால்,
மற்றோர் முன் அலட்சியமாய்,
மறைத்திட்டோம்...

உதட்டில் சிரித்து,
உள்ளத்தில் அழுதிட்டோம்...

நாளை அலட்சியமாய்
போகப்போகும்,
இன்றைய நண்பர்களுக்காக...

ஆனாலும் உடலால் பிரிந்தாலும், உணர்வால் இணைந்து வாழும் நண்பர்களும் உள்ளனர்...
அவர்கள் நட்புக்குத் தலைவணங்குகின்றேன்...

விகடன்
07-06-2007, 08:39 PM
இன்றுவரை எனது நண்பர்கள் என்னுடனேயே இருக்கிறார்கள். வெவ்வேறு நாட்டிலிருந்தாலும் தொடர்பு இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் கூறியது நடந்துவிட்டால் என்ற ஒரு பீதியையும் கிழப்பிவிட்டீர்கள்.

இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது....... இந்தக்கவிதையின் பின்பாதியை பொய்யாக்குவோம் என்று.

காலந்தால் பதில் சொல்ல வேண்டும்!!!