PDA

View Full Version : இயற்கையின் பாடம்



kavithai_malar
10-10-2005, 05:56 AM
இருட்டாய் கிடந்து கோடாய் தோன்றி
பிறையாய் வளர்ந்து முழுநிலவாய் ஜொலிக்கும்-பின்
பிறையாய் தேய்ந்து கோடாய் மெலிந்து
இல்லாமலே போகும் நிலவு
சொல்லி தரும் பாடம்
மாற்றம்!

மழலையாய் பிறந்து இளந்தளிராய் நடந்து
விடலையாய் வளர்ந்து மனிதனாய் பரிணமித்து-பின்
மூப்பால் தளர்ந்து மரணத்தில் வீழ்ந்து
மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையை
புரிந்து கொள்ளும் பக்குவமே
மாற்றம்!



மன்றத்தில் கன்னி முயற்சி இது
இயற்கையின் பாடம் இன்னும்
தொடரும்...

பரஞ்சோதி
10-10-2005, 05:58 AM
கவி மலர் உங்க பெயரை சொல்லும் அளவிற்கு கவிதை இருக்கிறது.

ஒவ்வொரு செயலையும் இயற்கையோடு இணைத்து நீங்க கொடுத்த கவிதைகள் அருமை.

மலரின் தன்மையை ஒப்பிட்டு ஒரு கவிதை சொல்லுங்களேன்.

gragavan
10-10-2005, 10:40 AM
நல்ல ஒப்பீட்டுக் கவி கவிமலர். இன்னும் நிறைய கவிதைகள் மன்றத்தில் வடித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும்.

பாரதி
10-10-2005, 01:36 PM
அண்ணா அடிக்கடி சொல்லி இருப்பது போல மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம் என்பதை ஒப்பிட்டு பார்த்து கவிதையில் சொல்லி இருப்பது நன்றாகவே இருக்கிறது. கவிதைச்சோலையில் பாடிக்கொண்டிருக்கும் பறவைகளுக்கு நடுவில் ஒரு மலர்! பாராட்டுக்கள்.

Nanban
10-10-2005, 02:51 PM
வளர்வதிலும் தேய்வதிலும்

இயற்கை...
வாழ்க்கை
காலத்தின் பலன்

ஒரு உற்சாகமொழி ஒன்று -

The only constant in life is CHANGE

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களெல்லாம் மேற்கூறிய கருத்தை வாழ்க்கைத் தத்துவமாக வைத்திருப்பார்கள்.

- மாற்றம் என்று நீங்கள் ஒரு ஒற்றைச் சொல்லை ஒரு வாக்கியமாக வைத்த நயத்தைப் பார்த்த போது என் மனதில் மின்வெட்டென தோன்றிய வாசகம்.

உயர்ந்த சிந்தனைகளில் விளைவது தான் கவிதை.
சிக்கன மொழி நடையில் சொல்வது தான் கவிதை.

வாழ்த்துகள்

வளருங்கள்

அன்புடன்

அறிஞர்
10-10-2005, 10:10 PM
மன்றத்தில் கன்னி முயற்சி இது
இயற்கையின் பாடம் இன்னும்
தொடரும்...
கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

தங்களை ஊக்குவிக்க அநேக நண்பர்கள் இருக்கிறார்கள். தொடருங்கள் தங்கள் முயற்சிகளை

இளசு
10-10-2005, 10:19 PM
வாருங்கள் கவிதை மலர்..
உங்கள் மாற்றம் பற்றிய கவிதை -
கன்னி முயற்சியாயினும்
கனிந்த முயற்சியே..
நிலவு உண்மையில் வளர்வதில்லை..தேய்வதில்லை..
பூமியின் பார்வை விசாலம்தான் மாறிக்கொண்டே..
அணுக்கள் அழிவதில்லை.. தேய்வதில்லை..
ஆனால் அணுத் தொகுப்புகள் கணந்தோறும் மாறிக்கொண்டே...

இன்னும் இன்னும் எழுதுங்கள்...
மன்றம் நம் சிலேட்டுப்பலகை..
எழுதிப்பழக... இன்னும் சிறக்க..

வாழ்த்துகள்..

kavithai_malar
11-10-2005, 08:57 AM
ஊக்குவித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி!

kavithai_malar
11-10-2005, 09:30 AM
கிழக்கில் உதித்தால் காலை
மேற்கில் மறைந்தால் மாலை
உதிப்பது மறையத்தான் என்றாலும்
மறுநாளே தோன்றும் கதிரவன்
சொல்லி தரும் பாடம்
இயல்பு!

உலகத்திற்கு வந்தால் ஜனனம்
உலகத்தைவிட்டு சென்றால் மரணம்
பிறப்பது இறப்பதற்க்கான பயணம்
மரணமோ அடுத்த தலைமுறைக்கு
வழிவிடும் பாதை என்பதே
இயல்பு!

மன்மதன்
11-10-2005, 09:41 AM
வாழ்க்கை தத்துவத்துடன் நல்ல நடை போடும் உங்கள் கவிதை நன்று...... தொடர்ந்து எழுதுங்க..

kavithai_malar
14-10-2005, 09:53 AM
நன்றி மன்மதன்.

தனிமரமாய் நிற்கும் போதே
மலர் காய் கனியெனக் கொடுக்கும்.
தோப்பானால் பலன்களை
அள்ளிக் கொடுக்கும் காடு
சொல்லி தரும் பாடம்
உபகாரம்!

தனிமனிதனாய் நின்றாலும்
உதவிகள் செய்வதே உயர்வு
குடும்பம் எனும் கூட்டுக்குள்
அன்பாய் சிக்கி கொண்டாலும்
ஈரம் வற்றாத இதயமே
உபகாரம்!

kavitha
14-10-2005, 11:00 AM
மாற்றம், இயல்பு, உபகாரம்.... எளிமையான வார்த்தைகள், ஆழமான பொருள்கள். நெற்றியடியாய் இருக்கிறது உங்களது கவிதை. தொடர்ந்து எழுத வேண்டுகோள்.

பின்வாசகம் மிக அருமை மலர். உங்களைப்பற்றிய அறிமுகம் தந்திருக்கிறீர்களா?

kavithai_malar
15-10-2005, 06:12 AM
நன்றி கவிதா.
அறிமுகம் உள்ளது, அறி(யா)முகம் என்று.

அறிஞர்
15-10-2005, 06:14 AM
தனிமனிதனாய் நின்றாலும்
உதவிகள் செய்வதே உயர்வு
குடும்பம் எனும் கூட்டுக்குள்
அன்பாய் சிக்கி கொண்டாலும்
ஈரம் வற்றாத இதயமே
உபகாரம்! அருமையான கவிதை.. அன்பரே....

படிப்படியாக கவிதை நயத்தை கூட்டுங்கள்...