PDA

View Full Version : ஊமை கண்ட கனவாய்...



rambal
19-04-2003, 06:12 PM
ஜாதிகள் பெயர் சொல்லி
வேற்றுமை வேண்டாம்
என்று ஜாதித்தாளைக்
கிழித்ததில்தான்
பிறிதொரு நாள்
இட ஒதுக்கீட்டுப் பேரத்தில்
பொசுங்கிப் போனது எனது
பொறியியல் கனவு...

சரிகமபதநி யை விட
அம்மா தாயே குரல்
அடிவயிற்றைப் போட்டு
பிசைந்ததில்தான்
சங்கீதம் என்னை விட்டு
விலகிப் போய்
பிறிதொருநாள்
கச்சேரிகளில் ஆட்டு மந்தையாய்
உட்கார வேண்டியவனாகிவிட்டேன்..

தெலுங்குக் கீர்த்தனைகளை விட
செகுவேரா, பாப்லோ நெருடா
படிக்கப் போய்..
வீட்டிற்குள்ளேயே தனித்தீவாக்கப்பட்டு
பிறிதொரு நாள்
தனித்தட்டு போடப்பட்டு
நான் தொட்டது தீட்டானது...

சமுதாய ஏற்றத்தாழ்வு
சரி செய்யக் கிளம்பியதால்தான்
பிறிதொரு நாள்
என் எதிர்காலத்தில்
பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பது
தெரியாமல்
அதில் விழுந்தேன்..

பிறிதொரு நாள்
இந்த முற்பகல்
செயல்களுக்கு எல்லாம்
பிற்பகலாய்
தலை ஆட்டிக் கொண்டே
சில விசும்பல்களுடன்
ஆட்டு மந்தைக் கூட்டத்தில்
சேர்ந்து விட்டேன்..

இன்னும் எனக்குள்
கோபம் பல உண்டு..
கற்பனையும் உண்டு..
எல்லாம்
ஊமை கண்ட கனவாய்...

இளசு
19-04-2003, 07:04 PM
கொழுந்து இட்டு எரியும் கோபமும்
கனவு காணும் நெஞ்சமும்
இருக்கும்வரை .. இருக்கும்
நடக்கும் என்ற நம்பிக்கை....

அருமைக் கவிதை தந்த இளவலுக்கு அண்ணனின் நேசப் பாராட்டு.வாழ்த்து!

lavanya
20-04-2003, 12:03 AM
நல்ல பார்வை... தீர்க்கமான வரிகள்
மெலிதான சோக கோடுகள்
நிதர்சனக் கவிதை ..... பாராட்டுகள்

Hayath
20-04-2003, 04:53 AM
ஊமைக் கண்ட கனவை வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு நாள் அந்த கனவுகள் அத்தனையும் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது...கடைசி வரிகள் மனதை வலிக்கும் படி அமைந்துள்ளது.பாராட்டுக்கள்.

poo
20-04-2003, 02:20 PM
நல்ல கவி... ராம்... அள்ளி வழங்கிய உனக்கு அன்பு நன்றி.. (நான் என்னப்பா எழுதி நாளாச்சுன்னு ஒரு வரி கேட்டதுக்கே!!)

karikaalan
20-04-2003, 05:22 PM
ராம்பால்ஜி!

என்ன சொல்வது? அடிக்கும் உண்மைகள்; அவற்றை அப்படியே தந்துவிட்டீர். இதுபோன்ற கனவுகளை மூட்டைகட்டிப் போட்டு பல வருடங்கள் ஆகின்றன. தங்களது கவித்தொண்டு தொடரட்டும்.]

===கரிகாலன்

குமரன்
20-04-2003, 06:01 PM
ஊமை கண்ட கனவு...
கவிதையாய் ஊரறிந்தது
இங்கே... ஆதலால்
எதற்கும் ஒரு
முடிவும் உண்டு
விடிவும் உண்டு.

கவிதை அருமை, ராம்.
பாராட்டுகள்.

-குமரன்.

lingam
20-04-2003, 07:16 PM
அருமையாக எழுதிய கவிதை. பாராட்டுக்கள்

Narathar
21-04-2003, 11:29 AM
நான் என்னப்பா எழுதி நாளாச்சுன்னு ஒரு வரி கேட்டதுக்கே!!

அப்படி கேட்டுக்கிட்டே இருங்கப்பா.............
இவரு எழுதுறதை குறைச்சுக்கிட்டாரு!!

rambal
21-04-2003, 05:37 PM
அப்படியெல்லாம் இல்லை. என் வீட்டு கணிணி இன்னும் வைரஸ்களில் இருந்தௌ மீளவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் சரிசெய்துவிடுவென். அதனால்தான் எழுதுவது குறைந்ததுவிட்டது. மற்றபடி வேறொரு காரணமும் இல்லை.

நிலா
21-04-2003, 06:38 PM
ஊமை கண்ட கனவு
பிறிதொரு நாள்
கண்டிப்பாய் நனவாகும்!
வாழ்த்துக்கள்!

kaathalan
21-04-2003, 10:03 PM
நெஞ்சில் வலியை ஏற்ப்படுத்தியது இந்த

Nanban
02-06-2003, 12:02 PM
கனவுகள் காணும் உரிமை
எல்லோருக்கும் உண்டு.
கனவுகளின் நம்பிக்கை ஒருநாள்
நனவாகும் பொழுது
ஊமைக்கும் மொழி கிடைக்கும்....