PDA

View Full Version : பூகம்ப பலி 50000 ஆக உயர்வு



பிரியன்
08-10-2005, 06:56 AM
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாகிஸ்தானும் ஆப்கானிதானிலும் இன்று காலை மிகப் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோளில் 7.4 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 9.20க்கு ஏற்பட்ட இந்த அதிக சக்தி வாய்ந்த பூகம்பத்தால் நாட்டின் வட பகுதி குலுங்கியது.
இதில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
வீடுகள் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பாகிஸ்தானிலும் ஆப்கானில்தானிலும் 9.00 மணியளவில் இந்த பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இந்த பூகம்பம் பாகிஸ்தான் முழுவதுமே உணரப்பட்டுள்ளது.
பூகம்பத்தின் மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத் நகரில் இருந்தது.
பல இடங்களில் பூகம்பம் 1 நிமிடம் முதல் பல நிமிடங்கள் வரை நீடித்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானை இரண்டு முறை இந்த பூகம்பம் அடுத்தடுத்து குலுக்கியது. பாகிஸ்தான் நாடு முழுவதுமே இந்த நிலநடுக்கத்தால் குலுங்கியுள்ளது.
ஜம்மூவில் பல கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீரில் தொலைத் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இன்று காலையில் தாக்கிய மிக பயங்கரமான பூகம்பத்தால் ஜம்மூகாஷ்மீரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு உயிர்ச் சேதம் மிக அதிகமான அளவில் இருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதம்பூர் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் ஒருவர் பலியாகியுள்ளது உறுதியாகியுள்ளது. மற்ற உயிர்ச் சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை. காஷ்மீரில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டவண்ணம் உள்ளது.
இந்த மிக சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் இமாயமலைத் தொடரே அதிர்ந்துள்ளது. காஷ்மீரின் ஊரி மாவட்டம் தான் மிகப் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு பெரும்பாலான வீடுகள் இடிந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனாலும் உயிர்ச் சேதம் மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இங்கு பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இங்கு மீட்புப் பணியில் ராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
பல மலைக் குன்றுகளில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் காஷ்மீரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முஸாபராத்தில் தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டிய இந்திய எல்லைப் பகுதியில் தான் மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எல்லையை ஒட்டிய 3 மாவட்டங்களுக்கும் ராணுவ மீட்புப் படைகள் விரைந்துள்ளன.

xxxxxxxxxxxxxxxxxxx

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நாடே ஒட்டு மொத்தமாக அதிர்ந்துள்ளது. அதே போல ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளும் நில நடுக்கத்தால் குலுங்கின.
இஸ்லாமாபாத்தில் 19 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தின் அளவு 7.4 முதல் 7.6 வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ராவல்பிண்டியில் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்து குழந்தைகள் காயமடைந்தனர்.
பாகிஸ்தானால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் பெரும் உயிர்த் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குவெட்டா, காபூல் உள்ளிட்ட நகர்கள் இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பங்க்ராமில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உயிரிழப்பு ஏதும் இல்லை.

நன்றி - thatstamil.com

thempavani
08-10-2005, 07:06 AM
செய்திகளுக்கு நன்றி பிரியன்..நானும் படித்தேன் ...நம்ம கரிகாலன் அண்ணா எப்படி இருக்கிறார் என்று விசாரியுங்கள்...

பிரியன்
08-10-2005, 07:14 AM
தில்லியில் எதுவும் உயிர்ச் சேதம் இல்லை என்றே இதுவரை வந்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

பரஞ்சோதி
08-10-2005, 07:24 AM
பிரியன், தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா?

இந்தியாவில் இருப்பவர்கள் சொல்லலாமே.

மன்மதன்
08-10-2005, 10:41 AM
தி ஹிந்து செய்திக்கு சுட்டியை தட்டுங்க..

http://www.hindu.com/thehindu/holnus/000200510081101.htm

அறிஞர்
08-10-2005, 07:27 PM
செய்திகளுக்கு நன்றி... சுட்டிக்கு நன்றி அன்பரே

பிரியன்
09-10-2005, 07:48 AM
நேற்று ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்துக்கு பாகிஸ்தானில் மட்டும் 18,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 17,000 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.


இறந்தவர்களில் 200 பேர் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆவர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவர்கள் பலியாகியுள்ளனர். இங்கு பெரும்பாலான கிராமங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.
இந்த நில நடுக்கத்தால் 41,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே மீட்புப் பணியில் பாகிஸ்தான் ராணுவமும் போலீசாரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் இடிந்து விழுந்த 19 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 82 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் பாகிஸ்தானுக்கு உதவ ஐ.நா. தனது குழுவையும் அனுப்பி வைத்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மன்மதன்
09-10-2005, 09:12 AM
நானும் படித்தேன்.. கடந்த வாரத்தில் நிகழ்ந்த மூன்றாவது இயற்கை சீற்றம் இது எனவும் கேள்விப்பட்டேன்.. வாரத்துக்கு மூன்று என்று கணக்கு வைத்தால் .....

பரஞ்சோதி
09-10-2005, 09:26 AM
பலியான அப்பாவி மக்களுக்கு என்னுடைய அனுதாபவங்கள்.

இன்னமும் உயிரோடு புதையுண்டு இருப்பவர்கள் பத்திரமாக மீட்க இறைவன் அருள்புரிவாராக.

thempavani
09-10-2005, 12:04 PM
பாகிஸ்தானில் இன்னமும் பூமி குலுங்கிக் கொண்டிருப்பதாகவே அங்கிருக்கும் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்..நேற்று இரவு பாகிஸ்தானியர் பலர் வீடுகளுக்கு வெளியேதான் தூங்கியிருக்கிறார்கள்..இன்னமும் 48மணிநேரத்திறகு இப்படித்தான் பூமி குலுங்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது..

பூகம்ப மையம் முசாராபாத்தில் ஒரு மருத்துவமனை அப்படியே நொறுங்கி அதில் இருந்தவர்கள் நோயாளிகள், மருத்துவர்கள் எல்லாரும் மரணமடைந்துள்ளார்கள்..காஷ்மீரப்பகுதிகளில் தற்போது குளிர் துவங்கியிருக்கிறது..எனவே மக்கள் வெளியில் தங்குவதும் இயலாத காரியம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன...

பூகம்பத்தை அனுபவித்த பாகிஸ்தானியர்களின் அனுபவங்கள் அச்சமூட்டுபவையாய் உள்ளன..நான் என்னுடன் பணியிரியும் பாகிஸ்தானியர்களின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடினேன்...

Nanban
09-10-2005, 05:23 PM
சாவு எண்ணிக்கை 30,000த்தையும் தாண்டி விட்டது.

இந்த வருடம் இயற்கையின் பேரழிவுகளால் ஆன வருடம் என்றே நினைக்கிறேன். சுனாமி - காத்ரீனா - இப்போழுது நிலநடுக்கம்,

இயற்கை தன்னாலான பாடங்களை மனிதனுக்கு முயன்று சொல்லி வருகிறது. ஆனாலும் அவன் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

விடாது கருப்பு மாதிரி விடாது இயற்கை....

எச்சரிக்கை....

Narathar
09-10-2005, 10:47 PM
தமிழ்மன்றம் சார்பில் எமது ஆழ்ந்தானுதாபங்களை இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தெரிவிப்பதைத்தவிற வேறென்ன செய்ய முடியும் இயற்கையின் சீற்றத்தின் முன்னே?

பரஞ்சோதி
10-10-2005, 06:17 AM
நேற்று ஒரு பக்கம் பூகம்பம் என்றால் மற்றொரு பக்கம் சூறாவளி காற்றினால் பல ஆயிரம் மக்கள் பலி.

நோயை, போர்களை வென்ற மனிதனால் இயற்கையை வெல்ல முடிவதில்லை. அதனையும் வெல்ல முடியும் என்றால் நானே கடவுள் என்ற மதப்பு வந்து விடும்.

thempavani
10-10-2005, 12:25 PM
இந்தியா பாகிஸஸதான் ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளைத் நேற்று முன்தினம் தாக்கிய நிலநடுக்கம் குறித்த வேதனைநிறை தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன

பாகிஸ்தானிலும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலும் மையம கொண்டிருந்த இந்த பூகம்பத்தில் ஒரு தலைமுறையே அழிந்ததுபோனதாக கூறப்படுகிறது.. பெரும்பாலான வர்கள் பள்ளிக் குழந்தைகள் என்றும் பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் ஷெளகத் சுல்தான் வேதனையோடு தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தலைநகரான முசாஃபரா பாத்தில் மீட்கப்படும் குழந்தைகளின் சடலங்களில் பெரும்பாலானவை உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும் இதனால் அக்குழந்தைகளின் பெற்றோரும் பூகம்பத்திற்கு பலியாகி விட்டதாக கருத வேண்டியுள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தில் இதுவரை பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவலகள் தெரிவிக்கின்றன.. இந்த பூகம்பத்தில் தரைமட்டமான கட்டிடங்களை தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றது.

இதனிடையே பூகம்பம் பாதித்த இடங்களில் குடிநீருக்கும் உணவு பொருட்களுக்கும் மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். மூடப்பட்டுள்ள கடைகளுக்குச் சென்று பூட்டுகளை உடைத்து தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை கைப்பற்று கிறார்கள். இதனால் அவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்படுவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன

thempavani
10-10-2005, 12:27 PM
பாதிக்கப்பட்ட பகுதி களில் மழை பெய்வதால் இடிபாடுகளை அகற்றும் பணி மெதுவாக நடந்து வருகிறது. பாகிஸ்தானில் இன்னும் பல ஊர்களில் மீட்பு பணிகம் தொடங்கப் படவில்லை. பூகம்பத்தில் பலியானவர்கம் எண்ணிக்கை மேலும் சில ஆயிரம் உயரக்கூடும் என்று நிபுணர்கம் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட பிண குவியல்கம் கண்டெடுக்கப்படுகின்றன. மரண ஓலம் இன்னும் மறையவில்லை
மீட்பு பணியில் உதவ இஸ்லாமாபாத்துக்கு ஐ.நா. ஜப்பான் சீனா பிரிட்டனில் இருந்து உதவிக்குழுக்கம் வந்தும்ளனர்.

பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணமாக ஐ.நா. சபை ரூ.45 லட்சம் உதவித்தொகை வழங்கியும்ளது.
மேலும் நிவாரணஇ மீட்பு பணிகளில் உதவ 8 பேர் கொண்ட ஐ.நா. உதவிக்குழு இஸ்லாமாபாத் வந்தும்ளது.
கராச்சியில் உம்ள தனது சேமிப்பு கிடங்கிலிருந்து உணவு பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ïனிசெப் விநியோகித்தது.

உறவினர்களையும் உடமைகளையும் இழந்து அத்தியாவசிய பொரும் எதுவும் இல்லாமல் தவிக்கும் மக்களை நில அதிர்வுகளும் வதந்திகளும் பாடாய் படுத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்துக்கு பிறகு இதுவரை 141 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. இன்னொரு பெரிய பூகம்பம் வரும் என்று நிபுணர்கம் எச்சரித்து இருப்பதால் அவர்கம் பயத்துடன் உம்ளனர்

pradeepkt
10-10-2005, 12:29 PM
பூகம்பத்தில் பெரும்பாலான குழந்தைகள் இறந்தனர் என்பது மிக மோசமான செய்தி.
அரசாங்கங்கள் ஆவன செய்யட்டும், நம்மாலான உதவிகளையும் பிரார்த்தனைகளையும் செய்வோம்.

சுவேதா
10-10-2005, 01:46 PM
அட கடவுளே இதென்ன கொடுமை
ஒன்றா இரண்டா.........:mad: :mad: :mad:

pradeepkt
11-10-2005, 06:04 AM
இதை ஏன் நாரதரே இந்தத் திரியில் போட்டிருக்கீங்க.
எப்படியாயினும் ஆண்டவந்தான் இயற்கைச் சீற்றங்களில் இருந்து மனித குலத்தைக் காக்க வேண்டும்.

பிரியன்
12-10-2005, 03:35 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பூகம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நேற்று வரை மீட்பு குழுவினர் செல்ல முடியாததால் மக்கள் கோபமடைந்துள்ளனர். ஏராளமானவர்கள் மலையில் இருந்து இறங்கி கீழே வர தொடங்கி விட்டனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்பகுதியும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளன. இங்கு நுற்றுக்கணக்கான கிராமங்கள், நகரங்கள் மலைகளின் அடிவாரத்திலும், மலைகளின் மேல் பகுதிகளிலும் அமைந்துள்ளன. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் அருகே மையம் கொண்டு கடந்த 8ம் தேதி காலை மிக கொடூரமான பூகம்பம் ஏற்பட்டது. இதனால் வடமேற்கு எல்லைப்பகுதி மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் மண்ணோடு புதைந்து விட்டன. நகரங்களில் இருந்த அனைத்து கட்டடங்களும் இடிந்து விழுந்தும், விரிசல் ஏற்பட்டும் சேதமடைந்து விட்டன.
பூகம்பம் ஏற்பட்ட போது நிலச்சரிவு ஏற்பட்டு அனைத்து சாலைகளும் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே ஹெலிகாப்டர்கள் மூலமே அந்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். ஏராளமான பகுதிகளில் இன்னும் இடிபாடுகளை அகற்ற மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. அவற்றில் சிக்கியவர்கள் உடல்கள் அப்படியே உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பூகம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முசாபராபாத் அருகே உள்ள நீலம் நதிக்கரையில் கோத்தாலி என்ற இடத்தை சேர்ந்தவர் நசார் அகமது. இவர் காயமடைந்த தனது உறவினரை முதுகில் சுமந்தபடி முசாபராபாத் நகருக்கு வந்து விட்டார். அவர் கூறுகையில்,"" பூகம்பம் ஏற்பட்ட போது உண்டான நிலச்சரிவில் எனது கிராமத்தை சேர்ந்த 200 பேர் மண்மூடி இறந்து விட்டனர்,'' என்றார். இவர் போல் ஏராளமான மக்கள் மலையின் மேலே அமைந்துள்ள தங்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வர தொடங்கி விட்டனர்.
முசாபராபாத் நகரிலிருந்து ஐந்து கி.மீ., துரத்தில் உள்ளது காம்சார் கிராமம். இங்குள்ள மக்கள் முசாபராபாத் நோக்கி வர தொடங்கி விட்டனர். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முசாபராபாத்தில் தங்கியுள்ளார். அவர் கூறுகையில், " எனது குடும்பத்தினருக்கு என்ன ஆனது என்பதே தெரியவில்லை. இந்த அரசு சீர்குலைந்து போன சாலையை சரி செய்ய ஒரு ஆண்டாகும். இருந்தாலும் என் கிராமத்துக்கு சென்று என்ன ஆனது என்பதை பார்க்க வேண்டும்,'' என்றார். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையை ராணுவ புல்டோசர் ஒன்று சீர்படுத்தி வருகிறது.
ஹரியாலா என்ற கிராமத்தை சேர்ந்த அப்துல் மஜித் கூறுகையில்,"" எங்கள் கிராமத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையே இல்லை. உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் சீர்குலைந்து போய்விட்டன. நாங்கள் அணிந்து இருக்கும் உடைகளை தவிர வேறு எதுவும் கிடையாது. மீட்பு குழுவினர் யாரும் இதுவரை வரவில்லை,'' என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. மிக தொலைவில் உள்ள கிராமங்களுக்கு மட்டும் மீட்பு குழுவினர் செல்ல இன்னும் சில நாட்களாகலாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகளில் தாமதம், நிவாரண பொருட்களை அனுப்பாதது ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

Iniyan
12-10-2005, 01:16 PM
நேற்று ஒரு பக்கம் பூகம்பம் என்றால் மற்றொரு பக்கம் சூறாவளி காற்றினால் பல ஆயிரம் மக்கள் பலி.

நோயை, போர்களை வென்ற மனிதனால் இயற்கையை வெல்ல முடிவதில்லை. அதனையும் வெல்ல முடியும் என்றால் நானே கடவுள் என்ற மதப்பு வந்து விடும்.

சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல ஒரு பக்கம் அறிவியல் வளர்ந்து கொண்டே போக பதிலடி போல ஒரு பக்கம் எய்ட்ஸ், அடுத்து பறவைக் காய்ச்சல், சீர் கெட்டு வரும் சீதோஷ்ணம், கடும் மழை, கொடும் புயல்கள், சுழற்றி அடிக்கும் சூறாவளிகள், பிளந்து நடுங்கும் பூமி, சுருட்டி வாரிய சுனாமி என நாஸ்ட்ராடமஸ் கணித்த உலகின் முடிவு நெருங்குகிறதோ என அச்சமாய் உள்ளது.

மன்மதன்
13-10-2005, 04:36 AM
பறவைக்காய்ச்சல் இப்பொழுது காணப்படுகிறதா? எங்கே?

pradeepkt
13-10-2005, 05:22 AM
அவர் ஏற்கனவே வந்ததைச் சொல்றாருப்பா.. நீ வேற?
மலைப் பகுதிகளில் சரிவுகளில் வீடு கட்டி இருந்தவர்கள் பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டனர். பல இடங்களில் கல், மண் சரிவே அழிவுக்குக் காரணம் ஆகியது. நாஸ்ட்ரடாமஸ் என்னத்தைக் கணித்தாரோ, எல்லாம் காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வோரும் உண்டு.

உதயா
13-10-2005, 06:40 AM
இன்னொரு செய்தி இந்த பூகம்பம் நடந்த இடத்தைபற்றி. இங்கே அதிகம் குடியிருந்தவர்கள் தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவல் அதிகம் நடக்கும் இடமும் அதுதான். இந்தியாவும், பாக்கிஸ்தானும் காஷ்மீர் எங்களுக்கு என்று போராடுகிறார்கள். ஆனால் இப்போ பூகம்பம் நடந்த இடத்தில் உள்ளவர்களோ இந்தியாவிற்கும், பாகிஸ்தானிர்க்கும் காஷ்மீரை கொடுக்காமல் நாம் எடுத்துவிடவேண்டும் என்றிருந்தார்களாம். (இதெல்லாம் பேசி கொண்டபோது கேட்ட செய்தி மட்டுமே)

மன்மதன்
13-10-2005, 06:44 AM
அவர் ஏற்கனவே வந்ததைச் சொல்றாருப்பா.. நீ வேற?
மலைப் பகுதிகளில் சரிவுகளில் வீடு கட்டி இருந்தவர்கள் பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டனர். பல இடங்களில் கல், மண் சரிவே அழிவுக்குக் காரணம் ஆகியது. நாஸ்ட்ரடாமஸ் என்னத்தைக் கணித்தாரோ, எல்லாம் காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வோரும் உண்டு.

அதுதான் இல்லை.. நேற்று உலக செய்திகள் உள்ளூர் பேப்பரில் (http://www.gulfnews.com/Articles/NationNF.asp?ArticleID=186353)படித்த போது இதை பற்றி போட்டிருந்தனர்.. அதான் கேட்டேன்..

மன்மதன்
13-10-2005, 06:44 AM
காஷ்மீர் பூகம்பத்திற்கு அமெரிக்க உதவி தேவையில்லை என இந்தியா அறிவித்து விட்டதாமே???

உதயா
13-10-2005, 08:50 AM
அப்படி அறிவித்திருந்தால் வரவேர்க்கதக்கதுதான். நாம் எதில் குறைந்து விட்டோம். அமெரிக்காவிடம் கையேந்த. (நம்ம அரசியல் வாதிகள் கை நீட்டாமல் இருந்தால் இந்தியன் யாரிடமும் கைஏந்த வேண்டிய அவசியம் இருக்காது என்று நிணைக்கிறேன்.)

Iniyan
13-10-2005, 10:52 AM
அதுதான் இல்லை.. நேற்று உலக செய்திகள் உள்ளூர் பேப்பரில் (http://www.gulfnews.com/Articles/NationNF.asp?ArticleID=186353)படித்த போது இதை பற்றி போட்டிருந்தனர்.. அதான் கேட்டேன்..

பிரதீப் சொல்வது சரி. நான் நடந்ததை தான் சொன்னேன். சரி யாருக்காவது நாஸ்ட்ராடமஸ் மேட்டர் தெரிஞ்சா கொஞ்சம் அவுத்து உடுங்களேன்