PDA

View Full Version : கனவின் முகங்கள் - 3



பிரியன்
08-10-2005, 04:05 AM
என் கனவில் வந்த ஒரு நிகழ்வை கவிதையாக்கும் முயற்சி. கவிதையாகமலும் போய் விடலாம் என்றாலும் சிறு முயற்சி...


கனவின் முகங்கள்

நெல்லைக்குள் புகுந்த தண்ணீர்
நாம் சொந்த ஊருக்குப் போன போதும் வந்துவிட்டது.
கரை தேடி நானொதுங்க நீ வேகமாக செல்கிறாய்.
எதிர்கரையில் நிற்கிறான் எனது நண்பனொருவன்
நம் பழைய வீட்டிற்கு சென்ற பின்
நீ என்னை அணைத்துக் கொண்ட அந்த நேரத்தில்.
உன் உயிர் பிரியத் துவங்குவதாய் உணர்கிறேன்
ஒருவித வாசம் என்னை குலையச் செய்ய
நகர்ந்த என்னை ஓரக்கண்ணால் அழைத்தபோது
மடி தந்தேன் நீ அடங்க...
சட்டெனன்று ஒரு மாற்றம் -
நீ
ஒற்றைப்பல் இருக்கும் பச்சிளங்குழந்தையாகிவிட
என் மகளாய் பிறந்துவிடு என்றானது
எனது பிராத்தனைகள்..
உறவுகள் கூடி நிற்க
நான் உன் மரணத்தைச் சொன்ன நேரத்தில்
அப்பா உன் நெஞ்சில் கைவைத்தழுத்த
மறுபடியும் சுருங்கிய தேகத்தோடு எழுகிறாய்
என் கனவை முடித்து....

புரியாதவர்களுக்கு கனவில் வந்தவர் என் அப்பத்தா. இது போல அடிக்கடி வரும். காட்சிகளில் மட்டும் மாற்றம் ஆனால் கரு ஒன்றே. ஏனிந்த உளவியல் தடுமாற்றம் என்று யாராவது விளக்குவீர்களா. குறிப்பாக மருத்துவர்கள் - அண்ணன் இளசுவைப் போன்றவர்கள்

மன்மதன்
08-10-2005, 11:57 AM
வார்த்தை பிரயோகங்கள் நன்றாக இருக்கிறது... கவிதைதான் இது.. பின்னே என்ன?

இளசு
08-10-2005, 10:39 PM
பிரியன்
கவிதை அமைப்பும், கனவைச் சொல்ல வந்ததிலும்
முழு வெற்றியே... முதலில் பாராட்டுகள்..

ஒரே மையக்கருத்து உள்ள கனவுகள் ஒருவருக்கே மீண்டும் மீண்டும் வருவதை என் அனுபவமும், நண்பர்கள், உங்கள் அனுபவமும் ... இது பரவலான ஒன்று என்று எண்ண வைக்கின்றன.
மருத்துவப்படிப்பில் அதிகம் சொல்லித்தரப்படாத பகுதிகளில் இதுவும் ஒன்று..
என் கனவுகளின் மையக்கருத்து வேறு..
காலை 10 மணிக்கு சென்னையில் பல்கலைத் தேர்வு இருக்கும்.
9 மணிக்கு திண்டிவனத்தில் பஸ்ஸில் நான்... லுங்கியுடன் இருப்பேன். பஸ் பழுது ஆகும். சாலையில் தடங்கல் வரும்... பயணம் நீண்டு கொண்டே போகும். 10 மணி ஆச்சு -பரீட்சை இனி எழுத வழியில்லை என்றும் இந்தக் கனவு முடியாது.. மெகாசீரியலாய் செங்கல்பட்டு, தாம்பரம் என இழுத்துக்கொண்டே போய்.. இருதயத்துடிப்பு பல மடங்கு எகிறி.... ஒரு வழியாய் மார்வலியுடன் விழிப்பு வந்து...
ஒவ்வொரு முறையும் இது கனவுதான் என்று உறைக்கும்போது சரேலென அட்ரீனலின் வடிந்து பரவும் அசௌகரிய நிம்மதியில் நனைந்து.....

பல வருட மறு ஒளிபரப்பு இது எனக்கு.. கே டி வியில் வரும் படம் மாதிரி...

பிரியன்
09-10-2005, 12:15 AM
நன்றி அண்ணா

நானும் பலமுறை தேர்வெழுதாமல் வந்திருக்கிறேன். அல்லது தேர்வில் பாதியில் வெளிவந்து பின்பு குறித்த நேரத்தில் போகாமல் என்று. கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த நாட்களில்.. அப்பொழுதெல்லாம் விழித்தவுடன் வருமே அதற்கு பெயர்தான் பரம திருப்தியோ. இது போல பலமுறை கடந்திருக்கிறேன். நேற்று எழுத தோன்றியது. உடனே எழுதி விட்டேன்

பரஞ்சோதி
09-10-2005, 06:42 AM
பிரியன், அருமையான கவிதை.

கனவின் கருத்தை கவிதையாக்கிய விதம் அருமை.

எனக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும், குறிப்பாக நான் +2 எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்காமல் என் வாழ்க்கையின் பயணம் திசை மாறியது. எத்தனையோ நாட்கள் கனவுகளில் அருமையாக பரீட்சை எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவது போலவும், சில நேரங்களில் என்னால் பரீட்சை எழுத போக முடியாமல் போய் தோற்று துவண்டு போனதாகவும் கண்டிருக்கிறேன்.

இது வெறும் கனவு தானா என்று கவலைப்பட்ட நாட்களுமுண்டு, நல்ல வேளை இது கனவு தான் என்று மகிழ்ந்த தினங்களும் உண்டு.

பிரியன்
09-10-2005, 06:49 AM
நீண்ட நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த இந்த கனவுகளை நேற்று கவிதையில் இறக்கி வைத்த பின்பு ஏதோ ஒரு வகை நிம்மதி....

தங்கள் கருத்துக்கு நன்றி பரஞ்சோதி...

மன்மதன்
09-10-2005, 09:24 AM
தேர்வு பற்றிய கனவு எல்லோர்க்கும் பொதுவானது போல இருக்கிறது. எனக்கும் வந்திருக்கிறது... காலில் செருப்பு போடாமல் நடப்பது மாதிர் சில்லியான கனவு கூட வருவதுண்டு..

பிரசன்னா
09-10-2005, 03:43 PM
பிரியன்,
அருமையான கவிதை.
பாராட்டுகள்..

Nanban
09-10-2005, 07:14 PM
கனவுகள் ஒரு விநோத போதகன். என்றோ நிகழ்ந்தவைகளை என்றோ ஒரு நாள் வெளிப்படுத்தும் - உரு மாற்றி - அடையாளம் தெரியாத வடிவத்தில். பாட்டியை நேசித்த மனம் அந்தப் பிரிவினால் பாதிக்கப்பட்டு கனவு காணுகிறது - மீண்டும் அந்தப் பாட்டியின் வடிவமே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று. அதுவரையிலும் சரிதான்.

ஆனால் கரையேறிய பின்னும் எதிர்திசையில் ஒரு நண்பன் (நானல்ல) நிற்கின்றானே - அது எதனால்? மற்றும் கவிதையினுள் - மற்றொரு பாத்திரமாக வந்து நிற்கிறார் தந்தை. அதன் பொருள்? அதுவும் அவர் தன் தாயின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி தன் தாயை எழுப்பிக் கொண்டு போய்விடுகிறார். உங்கள் நேசத்திற்குரிய பாட்டி எழுந்து போனதும் தான் உங்களின் கனவு ஒரு முடிவுக்கு வருகிறது.

எதிர்திசை நண்பன் அருமைத் தந்தையார் பாசமிகு பாட்டி இவர்களுக்குள் பொதுவாக உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. தேடிப் பாருங்கள் - வேறு ஏதாவது புலப்படும்.

பாட்டி மகளாக பிறப்பெடுப்பதல்ல கனவு. இன்னும் ஆழத்தில் வேறு பொருள்களும் காணக் கிடைக்கும். இல்லையா

பிரியன்
09-10-2005, 07:22 PM
.

ஆனால் கரையேறிய பின்னும் எதிர்திசையில் ஒரு நண்பன் (நானல்ல) நிற்கின்றானே - அது எதனால்? மற்றும் கவிதையினுள் - மற்றொரு பாத்திரமாக வந்து நிற்கிறார் தந்தை. அதன் பொருள்? அதுவும் அவர் தன் தாயின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி தன் தாயை எழுப்பிக் கொண்டு போய்விடுகிறார். உங்கள் நேசத்திற்குரிய பாட்டி எழுந்து போனதும் தான் உங்களின் கனவு ஒரு முடிவுக்கு வருகிறது.

எதிர்திசை நண்பன் அருமைத் தந்தையார் பாசமிகு பாட்டி இவர்களுக்குள் பொதுவாக உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. தேடிப் பாருங்கள் - வேறு ஏதாவது புலப்படும்.

பாட்டி மகளாக பிறப்பெடுப்பதல்ல கனவு. இன்னும் ஆழத்தில் வேறு பொருள்களும் காணக் கிடைக்கும். இல்லையா

எல்லோரிடமும் எனக்கிருப்பது நேசம் என்றுதான் என்னால் எண்ண முடிகிறது.

பாட்டியின் மரணத்தை விரும்பாத மனது தந்தையை நாடுகிறது அவரை மீட்டுவர. என் துன்பங்களை போக்க வல்லவர் தந்தையார் என்ற எனது நம்பிக்கை ஒரு பாத்திரமாக வடிவெடுத்திருக்கலாம். கருத்து முரண்களினால் - இங்கு இருவரும் எதிர் எதிர் கரையில் இருந்தோம் என்பது இருவருமே எதிரெதிர் கருத்துகளை கொண்டதை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம்- இன்னும் வேறு எந்த சூழல்கள் காரணமாகவும் யாரையுமே இழக்க விரும்பாத மனதின் தவிப்பின் அடையாளமாகவும் இந்த மூவரும் வந்திருக்கலாம்.. இன்னும் இன்னும் யோசிக்கிறேன். சரியான பதில் மட்டும் உறுதியாக தெரியவில்லை.

கனவில் வந்த அந்த நண்பர் நம் மன்றத்தவர்.........

பிரியன்
09-10-2005, 07:24 PM
பிரியன்,
அருமையான கவிதை.
பாராட்டுகள்..

நன்றி பிரசன்னா. ஆனால் மற்றவர்களைப் போல நீங்களும் ஒரு வரிப் பதிவாக பதிலளிப்பது மனதிற்கு சற்று ஏமாற்றத்தையே தருகிறது

மன்மதன்
10-10-2005, 04:49 AM
கனவில் வந்த அந்த நண்பர் நம் மன்றத்தவர்.........

:rolleyes: :rolleyes: :rolleyes: ?????

பிரியன்
10-10-2005, 05:37 AM
:rolleyes: :rolleyes: :rolleyes: ?????

யாரென்றுதான் சொல்லுங்களேன் பார்க்கலாம்

பரஞ்சோதி
10-10-2005, 05:56 AM
யாரென்றுதான் சொல்லுங்களேன் பார்க்கலாம்

பிரியன், வழக்கம் போல் 5 கேள்விகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்று போட்டி வைக்கலாமா ? :D :D

பிரியன்
10-10-2005, 06:43 AM
பிரியன், வழக்கம் போல் 5 கேள்விகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்று போட்டி வைக்கலாமா ? :D :D

அதெல்லாம் தேவையில்லை. புரிய வேண்டியவருக்கு புரிந்தாலே போதுமானது.......

gragavan
10-10-2005, 09:36 AM
பிரியன் உங்களது உளவியல் கனவியல் பிரச்சனை பெரிய விஷயம் போல. என்னால் எந்தக் கருத்தும் சொல்ல முடியவில்லை.

ஆனால் எனக்கும் கனவுகளுக்கும் உள்ள ஒருவித தொடர்பை இங்கே சொல்கிறேன்.

1. கனவுகளில் கதைகள் எனக்கு வரும். பாத்திரங்கள் வந்து பேசுவார்கள். நடிப்பார்கள். பலகனவுகள் நினைவில் இருக்கும். பல மறந்து போகும்.

2. இன்னும் சில கனவுகள். நமக்குத் தெரிந்தவர்கள் வருவார்கள். வேண்டியவர்கள் வருவார்கள். ஆனாலும் எனக்கு அந்தத் தூக்கலில் காண்பது கனவு என்பது தெரியும். காலையில் அலுவலகம் வந்ததும் மின்னஞ்சலில் அந்தக் கனவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அப்பொழுதே தோன்றும். காலையில் இவையனைத்தையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வேன்.

3. சிறுவயதில் எப்பொழுதோ யாரோ கனவில் பாம்பு வரக்கூடாது என்றும் அப்படி வந்தாலும் கொத்தி விட்டால் நல்லது என்றும் சொல்லி விட்டிருக்கின்றார்கள். அது எப்படியோ ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதற்குப் பிறகு கனவில் எப்பொழுது பாம்பு வந்தாலும் என்னுடைய மூளை (அல்லது கனவுக் கட்டுப்பாட்டு மையம்) வந்த பாம்பை என்னை கொத்த வைக்கும். பிறகு நிம்மதியாக கனவின்றித் தூங்குவேன்.

இவைகள் எல்லாம் சொல்லும் செய்தி என்னவென்று எனக்குத் தெரியாது. உளவியலாளர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அறிஞர்
10-10-2005, 10:35 PM
கனவுகளை கவிதையாக்கி உள்ளத்தை உருக்குகிறீர்கள் அன்பரே....

பிரியன்
13-10-2005, 04:58 AM
உறவினர் வந்த போதெல்லாம்
நெரிசலான என் இருப்பிடத்தை சுற்றி
எரிந்து கொண்டேதான் இருக்கிறது.
காரணங்கள் மட்டும் வெவ்வேறாக..
உயிர் காப்பதிலே கவனிமிருப்பதால்
அன்பைக் காட்ட இயலுவதில்லை.
நேற்றும் கூட
பக்கத்து விடுதியில் கண்டேன்
கல்லூரி தோழர் தோழிகளை.
பேச அழைத்த போது ஏனோ
மெளனம் என்னை சூழ்ந்து கொண்டது.
திருமனத்திற்கும் அழைக்கமறந்த
என்னுயிர்த் தோழி
சிரித்துக்கொண்டே காத்திருக்கச் சொன்னாள்
என்னோடு பேசுவதற்கு,

kavitha
13-10-2005, 06:57 AM
கனவின் முகங்கள் - 1
பிரியன், ஏற்கனவே முதல் ஆளாக படித்து பதித்த எனது பதிவைக்காணவில்லை. கணினிக்கோளாறினால் இருக்கலாம்.


கனவில் வாசனைகளையும் அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். மன ரீதியாக இதை நானும் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். மற்றபடி கனவுகள் பற்றி என்னுடைய சந்தேகங்களும் நிறைய உள்ளன. ஒருமுறை எனது சகோதரி கார்விபத்தில் இறந்துவிட்டதாக கனவு கண்டு அன்று இரவு முழுவதும் அழுகையோடு உறங்காமல் மறுநாள் விடிந்ததும் சென்று அவளிடம் தொலைபேசியில் பேசிய பிறகே நிம்மதி அடைந்தேன். எனது அன்னை "அப்படி கனவு கண்டால் அவளுக்கு ஆயுசு கெட்டி" என்றார்கள். அதே போல் ஆழமாக நேசிப்பவர்களின் கஷ்டங்களை நேரில் பார்க்கமாலேயே வேறு படிமானங்களாகக் காணக்கண்டிருக்கிறேன். சில சமயங்களில் படித்த புத்தகங்களின் வரிகள், சாப்ட்வேர் கோட் என்று தூக்கத்தில் உளறி மறு நாள் காலை வீட்டிலிருப்பவர்களின் நகைப்புக்கு ஆளானதும் உண்டு.
"என் இருப்பிடத்தைச் சுற்றி எரிந்துக்கொண்டேதான் இருக்கிறது" ஒரு மௌன வலையைப்பின்னியிருப்பதை இது காட்டுகிறது.
"உயிர் காப்பதிலேயே கவனம் இருப்பதால்"யார் உயிரைக்காக்க?உங்கள் உயிர் உங்களிடம் இருக்கட்டும். இனி அதைப்பற்றி மட்டும் கவலைப்படுங்கள்.

"அன்பைக்காட்ட இயலுவதில்லை"- இணரூழ்த்தும் நாறாமலர் என்பார் வள்ளுவர். சில சமயங்களில் அப்படி நேர்வதுண்டு. அது சூழல் மற்றும் நபரைப்பொறுத்து மாறுபடும். எனினும் அன்பை நாகரிகமாய் வெளிப்படுத்துவதில் தவறொன்றுமில்லை. நண்பர்களிடம் கூட காட்டும் இந்த மௌனம் உங்களை இன்னும் தனிமைப்படுத்திவிடக்கூடும்.

பிரியன்
13-10-2005, 07:08 AM
நன்றி கவிதா.

மிகத் துல்லியமாக எனது உணர்வுகளை அடையாளம் கண்டிருக்கிறீர்கள். என் கலகலப்புகளை மீறி எனக்குள் ஒருவித தனிமை இருக்கிறது. அதை உறங்கச் செல்லும் சமயங்களில் மட்டுமே உணர்வதுண்டு. கனவில் கூட அன்பைக் காட்ட இயலுவதில்லை என்பது அவர்களுக்கு ஆபத்து நேரும் போது அதிலிருந்து அவர்களை காக்க வேண்டும் என்பதில் கவனமாகி நான் விரும்பும் அன்பை பாசத்தை அவர்களிடம் செலுத்த முடியாமல் போவாதாக காண்பதை குறித்திருந்தேன்...
கல்லூரியில் மிகவும் நட்பாக இருந்த தோழி அவள் திருமணத்திற்கு கூட என்னை அழைக்காமல் இருந்தது எனக்குள் எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தது அதைத்தான் பதிவு செய்திருந்தேன்...

உங்கள் வாசிப்பு மறுபடியும் கவிதை எழுதும் ஊக்கத்தை எனக்கு தந்திருக்கிறது.

மிக்க நன்றி கவிதா

இளசு
13-10-2005, 09:04 PM
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

உடல் உறங்கியும்
மனம் உறங்கா நிலை..
அதன் கொலாஜ் ஓவியங்களை
பிரியன் வடிப்பது தனிக் கலை..
குழப்பமான கனவுகளையும்
தெளிவாய் வார்த்தைகளில் வார்த்தெடுக்கும்
பிரியனுக்குப் பாராட்டுகள்..

கனவுகள் தொடரட்டும்..

பிரியன்
14-10-2005, 02:43 PM
தொடர்வது என்பது என் கையில் இல்லை. கனவு தரும் அனுபவங்களில்தான் இருக்கிறது... ஏனென்றால் கவிதைகளுக்காக நான் கனவு காண்பதில்லை.

தங்கள் பாராட்டுக்கு நன்றி இளசு அண்ணா.....

மன்மதன்
15-10-2005, 04:55 AM
நன்றி கவிதா.



உங்கள் வாசிப்பு மறுபடியும் கவிதை எழுதும் ஊக்கத்தை எனக்கு தந்திருக்கிறது.

மிக்க நன்றி கவிதா


எனது நன்றியும் கூட கவிதா.....

அறிஞர்
15-10-2005, 04:58 AM
கவிதைகளுக்காக நான் கனவு காண்பதில்லை. வாழ்த்துக்கள்.... கனவுகள் வரட்டும்.. கவிதைகள் பிறக்கட்டும்...

பிரியன்
15-10-2005, 10:54 AM
நன்றி அறிஞர்....

பரஞ்சோதி
15-10-2005, 11:20 AM
பிரியன்,

உங்களின் இரண்டாவது கனவை கவிதா சகோதரியின் பதிவினால் விளக்கம் பெற்றேன்.

நட்புகள் பலவிதம், அதிலும் மௌனம் காட்டினாலும் நட்புகள் காலத்தாலும் அழியாது.

பிரியன்
25-10-2005, 01:12 AM
மழை ஓய்ந்த அதிகாலைப்பொழுதில்
மிகப்பிரமாண்டமாகவே
இருக்கிறதென் வீடு.
செம்மண் தோட்டத்தில்
என் உயர வாழைகளுக்கு நடுவே
மருதாணிச் செடி சாமரம்வீச
அரசனைப்போல கம்பீரமாய் நடக்கிறேன்.

நேர்த்தியாய் தோகை விரித்திருக்கும்
கீரைப்பாத்தியை கைகளால் தழுவ
தன் பனிக்கீரிடங்களை முத்துகளாய்
என் கைகளில் சூட்டுகிறது

புழக்கடை கிணற்று நீரிறைத்தென்மேல்
ஊற்றி ஊற்றி
நனைகிறேன்
சுகமாய்