PDA

View Full Version : நெல்லையில் கடல் கொந்தளிப்பு: அக்டோபர் 07, 2005



Narathar
07-10-2005, 10:37 AM
நெல்லையில் கடல் கொந்தளிப்பு: வீடுகளில் நீர் புகுந்தது
அக்டோபர் 07, 2005

நெல்லை:

நெல்லை மாட்டத்தில் கூட்டப்புளி பகுதியில் இன்று அதிகாலை கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

கூடங்குளம் அருகே இச் சம்பவம் நடந்தது. திடீரென கொந்தளித்த கடலில் மிக உயரமான அலைகள் எழும்பின. இதில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன. அதிகாலை 3 மணியளவில் இச் சம்பவம் நடந்தது. அப்போது கடலோரத்தில் யாரும் இல்லை.

உயரமாக எழும்பிய அலைகள் சிறிது நேரத்தில் கிராமத்துக்குள் புகுந்தது. சுனாமி ஏற்பட்டுவிட்டதாக அச்சம் பரவியதால் மக்கள் அலறிக் கொண்டு ஓடினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சீற்றம் நீடித்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப் பகுதி மக்கள் பாதுகாப்பாக ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

தமிழகத்தின் கடல் பகுதிகளில் சுனாமிக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிக்கடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது

Thanks to : Thatstamil.com

பரஞ்சோதி
07-10-2005, 11:33 AM
நாரதர் அவர்களே!

கொஞ்ச காலமாகவே அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் வந்து விடுகிறது. அரசாங்கம் மக்களுக்கு பாதுக்காப்பான இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

gragavan
07-10-2005, 11:37 AM
இதில் இன்னொரு விசயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள். அவர்கள் இப்பொழுது வசிக்கும் வீடுகள் அவர்கள் கட்டிக் கொண்டதுதான். பின்னே அரசாங்கத்தை நம்பியா வீடு கட்டாமல் இருக்க முடியும். ஆனால் கடற்கரையிலேயே கட்டியிருக்கிறார்கள். ஆனால் பொதுப்பணித்துறை அவர்களை ஒன்றிரண்டு கிலோமீட்டர்கள் தள்ளிக் கட்டுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களும் கேட்கவில்லை. தூத்துக்குடி வட்டாரத்தில் அப்படியில்லை. ஓரளவு தள்ளியே கட்டியிருக்கிறார்கள். ஆகையால்தான் சுனாமி சமயத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் சேத அளவு மற்ற மாவட்டங்களை விடக் குறைவாகவே இருந்தது.

அறிஞர்
07-10-2005, 01:56 PM
இது சுனாமிக்கு அப்புறம் தொடரும் விளைவுகளில் ஒன்று....இதுக்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

Narathar
07-10-2005, 03:19 PM
இலங்கையில் அரசாங்கம் புதிய வீடுகளை அமைக்கும் போது நூறு மீட்டர்கள் தள்ளி கட்டச்சொல்கிறார்கள். ஆனால் மீனவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தங்களுக்கு தங்கள் பழைய இடங்களிலேயே வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என்று அடம் பிடிக்கின்றார்கள்.

இதை அரசியலாக்கி சிலர் அதில் குளிர் காய்கின்றார்கள்