PDA

View Full Version : கடவுளும் காதலும் (சிலேடை)

gragavan
07-10-2005, 05:38 AM
கடவுளும் காதலும்

நல்லவை தீயவை
நயப்பது உண்டு

இல்லை என்பார்
இகலில் உண்டு

கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு

பாவலர் பன்முறை
பண்ணிற் படைத்தும்

ஆவலெப் பொழுதிலும்
அடங்கிட மறுக்கும்

மடமுடை மானிடர்
மனதில் நின்றும்

வடமிடும் வாழ்க்கையின்
வளத்திற் கென்றும்

தடமது கண்டிலர்
தரணியி லின்றே

கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே

நண்பர்களே, கடவுளுக்கும் காதலுக்கும் நான் எழுதிய சிலேடை இது. புரியும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் சொல்லுங்கள். நானே விளக்குறேன்.

இது ஆசிரியப்பாவின் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியது. எழுதி நாலரை வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது ஆசிரியப்பாவின் இலக்கணமே மறந்து விட்டது.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
07-10-2005, 05:59 AM
ஆசிரியப்பாவின் இலக்கணமா?
நன்று நன்று.
சில வகை மட்டும் புரியவில்லை
தடமது கண்டிலர்
தரணியி லின்றே
-- காதலின் தடம் காண முடியாதா என்ன?

gragavan
07-10-2005, 06:05 AM
ஆசிரியப்பாவின் இலக்கணமா?
நன்று நன்று.
சில வகை மட்டும் புரியவில்லை
தடமது கண்டிலர்
தரணியி லின்றே
-- காதலின் தடம் காண முடியாதா என்ன?இன்னைக்கு வரைக்கும் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் தான். ஏன் வருதுன்னு தெரியாது. எதுக்கு வந்ததுன்னு தெரியாது. அது பாட்டுக்கு வருது. இதெல்லாம் இருந்தால் காதல் வருமுன்னு இலக்கணம் இருக்கா. அப்படியே வந்தாலும் அந்த இலக்கணத்தையும் மீறி காதல் வருதுதானே.

Nanban
07-10-2005, 10:05 PM
கடவுளும் காதலும்

....
.....
இல்லை என்பார்
இகலில் உண்டு

கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு

.....
......

கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே

கடவுளுக்கும் காதலுக்கும் சில அடிப்படை பொருத்தங்கள் உண்டென்றாலும் கடவுளும் காதலும் ஒன்றாகி விடாது.

இல்லை என்பார் இகலில் உண்டு - என்று சொல்கிறீர்கள். அது உண்மையில்லை. கடவுள் இல்லை என்ற தத்தவத்தைத் தான் நான் இதுவரையிலும் கேட்டிருக்கிறேன். ஆனால் காதல் இல்லை இவ்வுலகில் என்று எப்பொழுதும் நான் கேட்டதில்லை. கடைந்தெடுத்த நாத்திகன் கூட காதலை மறுப்பதில்லை. ஆகையினால் இல்லை என்பார் இறைவனுக்குண்டு காதலுக்கில்லை என்பது தான் சரியாக இருக்குமே தவிர - இரண்டிற்கும் பொதுப்பண்பாடு ஆகாது.

அதே போல கவலை கூடிடுங் கை விடக் கண்டு என்பதும் இங்கு சிலேடையாக இடம்பெறுவது தவறென எண்ணுகிறேன். காதலி வேண்டுமானால் கவலை அடையக் கூடும். இறைவன் கவலையடைவதில்லை. அது ஒரு பொருட்டே ஆகாது அவனுக்கு. யார் வணங்கினால் என்ன வணங்காவிட்டால் என்ன வந்து விடப் போகிறது அவனுக்கு? இதற்காக உட்கார்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் அவன் தன் இறைப்பணியிலிருந்து தவறிய குற்றம் செய்தவனாவான்.

உங்கள் கவிதைக்குச் சம்பந்தமில்லாத ஆனால் இங்கே சொல்லிவிட தோன்றிய ஒரு கருத்து -

கடவுளைக் காதலனாக காதலியாக எண்ணி கசிந்துருகி பாடல் செய்வது ஒருவகையாக இருக்கிறதென்றாலும் - அந்தக் கடவுள் மீது கொண்ட பக்தி ஒரு எல்லை மீறுவது அழகாக இருக்காது. கடவுள் மீது காமம் கொள்வது என்பதும் கடவுளுக்காகக் காத்திருப்பேன் என்பதும் பெண்மையை அடிமையாகப் பூட்டி வைக்க உண்டாக்கப் பட்ட வழி வகைகள் தானே தவிர வேறல்ல.

இளசு
09-10-2005, 10:44 PM
இராகவன்,
காளமேகத்தின் தீவிர ரசிகரா நீங்கள்?
தமிழும் இலக்கணமும் உங்களிடம் நயந்து பழகுவதைக் கண்டு வியந்து நிற்கிறேன்.
சிலேடைகள் அருமை. பாராட்டுகள்..

நண்பன்,
கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டார் என்று அரற்றி புலம்புதல் உலகில் உண்டுதானே?

gragavan
10-10-2005, 04:59 AM
கடவுளுக்கும் காதலுக்கும் சில அடிப்படை பொருத்தங்கள் உண்டென்றாலும் கடவுளும் காதலும் ஒன்றாகி விடாது.

இல்லை என்பார் இகலில் உண்டு - என்று சொல்கிறீர்கள். அது உண்மையில்லை. கடவுள் இல்லை என்ற தத்தவத்தைத் தான் நான் இதுவரையிலும் கேட்டிருக்கிறேன். ஆனால் காதல் இல்லை இவ்வுலகில் என்று எப்பொழுதும் நான் கேட்டதில்லை. கடைந்தெடுத்த நாத்திகன் கூட காதலை மறுப்பதில்லை. ஆகையினால் இல்லை என்பார் இறைவனுக்குண்டு காதலுக்கில்லை என்பது தான் சரியாக இருக்குமே தவிர - இரண்டிற்கும் பொதுப்பண்பாடு ஆகாது.

அதே போல கவலை கூடிடுங் கை விடக் கண்டு என்பதும் இங்கு சிலேடையாக இடம்பெறுவது தவறென எண்ணுகிறேன். காதலி வேண்டுமானால் கவலை அடையக் கூடும். இறைவன் கவலையடைவதில்லை. அது ஒரு பொருட்டே ஆகாது அவனுக்கு. யார் வணங்கினால் என்ன வணங்காவிட்டால் என்ன வந்து விடப் போகிறது அவனுக்கு? இதற்காக உட்கார்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் அவன் தன் இறைப்பணியிலிருந்து தவறிய குற்றம் செய்தவனாவான்.

உங்கள் கவிதைக்குச் சம்பந்தமில்லாத ஆனால் இங்கே சொல்லிவிட தோன்றிய ஒரு கருத்து -

கடவுளைக் காதலனாக காதலியாக எண்ணி கசிந்துருகி பாடல் செய்வது ஒருவகையாக இருக்கிறதென்றாலும் - அந்தக் கடவுள் மீது கொண்ட பக்தி ஒரு எல்லை மீறுவது அழகாக இருக்காது. கடவுள் மீது காமம் கொள்வது என்பதும் கடவுளுக்காகக் காத்திருப்பேன் என்பதும் பெண்மையை அடிமையாகப் பூட்டி வைக்க உண்டாக்கப் பட்ட வழி வகைகள் தானே தவிர வேறல்ல.
நன்றி நண்பன். நல்ல கருத்தாய்வு. காதல் இல்லையென்று சிலர் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதைப் போல கடவுள் இல்லையென்று சொல்கின்றவர்களும் காதல் இல்லையென்று சொல்லத் தயங்கத்தான் சொல்வார்கள்.

அப்புறம்...கடவுள் கவலைப் படுவார் என்று நான் சொல்லவில்லை. கடவுள் கைவிட்டால் மக்கள் கவலை கொள்வார்கள். உண்மையைச் சொல்லப் போனால் கடவுள் கைவிடுவதில்லை. ஆனால் அப்படி விட்டதாக நினைத்து புலம்புகின்றதும் உண்டல்லவா.

கடவுளைக் காதலனாக அல்லது காதலியாகப் பார்ப்பது.....இதில் இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன எனக்கு. ஒன்று கடவுளோடு கூட வேண்டும் என்று எண்ணம் கொண்டு காத்திருப்பது.......இதில் எனக்கும் உடன்பாடில்லை. இரண்டாவது வகை. இறைவனை எதிலும் காணும் பக்குவம் கொண்டவர்கள் காமத்திலும் காண்பதில் வியப்பில்லை. பாரதி அந்த வகை. தான் அனுபவித்த இன்பமும் இறைவன். காமமும் இறைவன் என்று நம்பியதாலேயே.......கண்ணம்மா என்னும் பேர் சொல்லும் போழ்திலே எந்தன் வாயினிலே அமுதூறுதே என்று பாட முடிந்தது. இதில் எனக்கு ஏற்புடைமை உண்டு.

gragavan
10-10-2005, 05:01 AM
இராகவன்,
காளமேகத்தின் தீவிர ரசிகரா நீங்கள்?
தமிழும் இலக்கணமும் உங்களிடம் நயந்து பழகுவதைக் கண்டு வியந்து நிற்கிறேன்.
சிலேடைகள் அருமை. பாராட்டுகள்..
நன்றி இளசு. உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது. காளமேகத்தின் பாக்கள் கொஞ்சம் படித்துள்ளேன். தீவிர ரசிகர் என்று சொல்ல முடியாது. ஒன்றிரண்டு தெரியும் அவ்வளவே.

பரஞ்சோதி
10-10-2005, 06:12 AM
இன்று தான் இந்த பாடல்களை படித்தேன், நன்றாக எழுதியிருக்கீங்க.

கடவுளும் காதலும் ஒன்றல்ல என்ற நண்பனின் கருத்தும் அருமை.

மன்மதன்
10-10-2005, 06:19 AM
சிலேடை அருமை... நண்பர்களின் கருத்துக்கள் மிக உபயோகமாக இருந்தது..

Nanban
10-10-2005, 02:37 PM
கடவுள் பற்றிய எனது எண்ணம் தான் கைவிடுபவர் யாரென்பது. கடவுள் தன்னை கைவிட்டதாகப் புலம்பி எனக்குப் பழக்கமில்லையாதலால் - அந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. ஏனென்றால் இறைவன் கைவிட்டு விடுவான் என்பது நம்பிக்கையற்றவரின் செயல், எந்த ஒரு காலத்திலும் இறைவன் என்னை கைவிட மாட்டான் என்பதே ஒரு நம்பிக்கையாளானின் கொள்கை.

இறைவனிடம் பேரம் பேசுபவர்களும், பங்கு போட்டுக் கொள்ள இறைவனை அழைப்பவர்களும் தான் கவலை கொள்ளுவர்.

ஆக வழக்கம்போல் -

என் சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள் மற்றவர் கற்பனைக்கெட்டா தூரத்தில் தான் இன்னமும் இருக்கிறது.

காதல் இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.

நான் முன்னெ எழுதிய காதல் பற்றிய சில சமாச்சாரங்களைக் குறிப்பிடுகிறீர்களா? நல்லது.

காதல் என்றால் என்ன விவாதம் அது.

காதல் உண்டா இல்லையா என்பதல்ல அந்த விவாதம்.

Darwin, Desmond Morris இவர்களெல்லாம் எழுதிய புத்தகங்களை வாசித்ததினால் பெற்ற தெளிவு.

இந்த உலகில் நிறைய தத்துவங்கள் உள்ளன. அந்த தத்துவங்கள் நிரூபிக்கப்படும் பொழுது கணித குறியீடுகளுடன் கூடிய விஞ்ஞானமாகிவிடுகிறது. இல்லையென்றால் அது ஒரு சிந்தனைத் தத்துவமாகவே நின்று விடுகிறது.

உலகில் தோன்றிய முதல் உறவே காதல் தான். அதைப் பற்றி ஆராய்ச்சியாளார்கள் ஆராயாது விடுவார்களா? அப்படி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தாக்கம் தான் எனது எண்ணம் சிந்தனைகள் எல்லாம். அதனால் தான் ஒவ்வொரு வாதத்திற்கும் கருத்தியலாளர்களின் சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

போலி தத்துவங்களையும் வறட்டு தத்துவங்களையும் ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை. விதிவிலக்குகளைக் கொண்டு வாழ்க்கையை வாழ முடியாது.

அறிஞர்
10-10-2005, 10:25 PM
அன்பரே கவிதை அருமை.. நண்பனின் கருத்துக்களுடன்.... வரிகள் புரிகிறது....

இன்னும் பழைய கவிதைகளை தேடி எடுத்துக்கொடுங்கள் அன்பரே

gragavan
11-10-2005, 07:02 AM
கடவுள் பற்றிய எனது எண்ணம் தான் கைவிடுபவர் யாரென்பது. கடவுள் தன்னை கைவிட்டதாகப் புலம்பி எனக்குப் பழக்கமில்லையாதலால் - அந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. ஏனென்றால் இறைவன் கைவிட்டு விடுவான் என்பது நம்பிக்கையற்றவரின் செயல், எந்த ஒரு காலத்திலும் இறைவன் என்னை கைவிட மாட்டான் என்பதே ஒரு நம்பிக்கையாளானின் கொள்கை.

இறைவனிடம் பேரம் பேசுபவர்களும், பங்கு போட்டுக் கொள்ள இறைவனை அழைப்பவர்களும் தான் கவலை கொள்ளுவர்.

ஆக வழக்கம்போல் -

என் சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள் மற்றவர் கற்பனைக்கெட்டா தூரத்தில் தான் இன்னமும் இருக்கிறது.

காதல் இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.

நான் முன்னெ எழுதிய காதல் பற்றிய சில சமாச்சாரங்களைக் குறிப்பிடுகிறீர்களா? நல்லது.

காதல் என்றால் என்ன விவாதம் அது.

காதல் உண்டா இல்லையா என்பதல்ல அந்த விவாதம்.

Darwin, Desmond Morris இவர்களெல்லாம் எழுதிய புத்தகங்களை வாசித்ததினால் பெற்ற தெளிவு.

இந்த உலகில் நிறைய தத்துவங்கள் உள்ளன. அந்த தத்துவங்கள் நிரூபிக்கப்படும் பொழுது கணித குறியீடுகளுடன் கூடிய விஞ்ஞானமாகிவிடுகிறது. இல்லையென்றால் அது ஒரு சிந்தனைத் தத்துவமாகவே நின்று விடுகிறது.

உலகில் தோன்றிய முதல் உறவே காதல் தான். அதைப் பற்றி ஆராய்ச்சியாளார்கள் ஆராயாது விடுவார்களா? அப்படி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தாக்கம் தான் எனது எண்ணம் சிந்தனைகள் எல்லாம். அதனால் தான் ஒவ்வொரு வாதத்திற்கும் கருத்தியலாளர்களின் சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

போலி தத்துவங்களையும் வறட்டு தத்துவங்களையும் ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை. விதிவிலக்குகளைக் கொண்டு வாழ்க்கையை வாழ முடியாது.நண்பன் உங்கள் கருத்து எனக்குப் புரிகின்றது. இங்கு ஏற்றுக் கொள்தல் என்பது பிரச்சனை அல்ல. காதல் இல்லையென்று சொல்கின்றவர்களும் உண்டு என்று சொல்ல வந்ததுதான். காதல் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கே நான் போகவில்லை.

gragavan
11-10-2005, 07:04 AM
அன்பரே கவிதை அருமை.. நண்பனின் கருத்துக்களுடன்.... வரிகள் புரிகிறது....

இன்னும் பழைய கவிதைகளை தேடி எடுத்துக்கொடுங்கள் அன்பரேநன்றி அறிஞரே......பல கவிதைகள் மிகவும் சிறு வயதில் எழுதியவை....அவைகள் ஒரு டைரியில் இருந்தன. இப்பொழுது அந்த டைரியை எங்கே தேடுவது. பல வீடுகள் மாறியாகி விட்டது. எப்படியோ காணாமல் போய் விட்டது.