PDA

View Full Version : நோபல் பரிசுகள்



அறிஞர்
06-10-2005, 11:33 PM
நோபல் பரிசு (http://nobelprize.org/) வென்றோரை இங்கு (http://nobelprize.org/) காணலாம்.
மருத்துவம் (Physiology and Medicine)
http://nobelprize.org/medicine/laureates/2005/marshall.jpg http://nobelprize.org/medicine/laureates/2005/warren.jpg
Barry J. Marshall J. Robin Warren
ஆண்டாண்டு காலமாய் அமிலம், மன அழுத்தம், கண்டபடி உண்ணும் உணவு ஆகியவைதான் வயிற்றுப்புண்ணுக்குக் காரணம் என்று ஆழப்பதிந்திருந்த மருத்துவ சித்தாந்தத்தை அடியோடு புரட்டிப்போட்டு,
அல்சரின் காரணி கெலிகொபேக்டர் என்னும் பாக்டீரியா வகை நுண்ணுயிரிதான் என்று 1980களில் நிரூபித்து,
இந்தவகை நோய்களின் சிகிச்சையை மிகப்பெரிய அளவில் முன்னேற்றிய சாதனையாளர்கள் மார்ஷல், வாரன் என்ற இரு ஆஸ்திரேலிய மருத்துவர்களுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு ....

மார்ஷல் இந்தக்கிருமிதான் காரணம் என்று நிரூபிக்க சோதனைச்சாலையில் வளர்க்கப்பட்ட கிருமிகளைத் தாமே குடித்து, தம் வயிற்றில் வளர்த்துக்காட்டியவர்.
ஒரு வார கூட்டுச் சிகிச்சையில் அல்சரைக் குணமாக்கும் வழி காண உதவிய மேதைகளுக்கு புண் ஆறியா கோடானுகோடி மாந்தர்கள் தம் வயிறாற வாழ்த்துச் சொல்வார்கள்தானே..

(நன்றி இளசு)
---------------
பெளதிக (இயற்பியல்) (Physics)
http://nobelprize.org/physics/laureates/2005/glauber.jpg http://nobelprize.org/physics/laureates/2005/hall.jpg http://nobelprize.org/physics/laureates/2005/hansch.jpg
Roy J. Glauber John L. Hall Theodor W. Hansch
பெளதிக துறையில் 1/2 பரிசை அமெரிக்காவின் Roy J. Glauber, குவாண்டம் தியரி மற்றும் ஆப்டிக்கல் பகுதியில் பங்காற்றியதற்கும். மீதி 1/4 பகுதியை அமெரிக்காவின் John L. Hallம், ஜெர்மனியின் Theodor W. Hanschம் லேசர் அடிப்படையிலான ஸ்பெக்டராகோபி கண்டுபிடிப்புக்காகவும் பெறுகிறார்கள்



வேதியியல் (Chemistry)
http://nobelprize.org/chemistry/laureates/2005/chauvin.jpg http://nobelprize.org/chemistry/laureates/2005/grubbs.jpg http://nobelprize.org/chemistry/laureates/2005/schrock.jpg
Yves Chauvin Robert H. Grubbs Richard R. Schrock

வேதியியல் துறைக்கு பிரான்ஸின் யுவெஸ் சாவினுக்கும், அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும் (ராபர்ட் கிரப்ஸ், ரிச்சர்டு சராக்) கரிம வேதியியலில் மெட்டாதீசஸ் முறையில் கண்ட வளர்ச்சிக்கு கிடைத்துள்ளது.

(ராபர்ட் கிரப்ஸை 2002 ஆம் ஆண்டு தைவானில் சந்தித்து பேசியுள்ளேன். அப்போது புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன். இப்போது அவர் நோபல் பரிசு வென்றவராக வலம் வருகிறார்.)


சமாதானம் (Peace)
http://nobelprize.org/peace/laureates/2005/elbaradei.jpg http://nobelprize.org/peace/laureates/2005/iaea.jpg

Mohamed ElBaradei // International Atomic Energy Agency (IAEA)

எகிப்தின் முகமது எல்பராடேக்கும், ஆஸ்திரியாவின் International Atomic Energy Agency (IAEA)க்கும் அணுசக்தியை தவறான உபயோகத்தை தடுக்கும் முயற்சிக்கும், பாதுகாப்பான் பயனுள்ள முறையில் உபயோகிக்க வலியுறுத்தும் முயற்சிக்கும் சமாதனத்திற்கான பரிசு கிடைத்துள்ளது
பொருளாதாரம் (Economic Sciences)
http://nobelprize.org/economics/laureates/2005/aumann.jpg http://nobelprize.org/economics/laureates/2005/schelling.jpg
Robert J. Aumann // Thomas C. Schelling

இஸ்ரேலின் ராபர்ட் ஜே. ஆயுமனும், அமெரிக்காவின் தாமஸ் சி. ஸெல்லெங்கும் இந்த ஆண்டிற்கான பொருளாதர துறைக்கான பரிசை அவர்களின் "game-theory analysis" ஆராய்ச்சிக்காக பெறுகிறார்கள்

இலக்கியம் (Literature)

http://nobelprize.org/literature/laureates/2005/pinter.jpg
Harold Pinter

இங்கிலாந்தின் 75 வயதான ஹரால்ட் பிண்டருக்கு பரிசு கிடைத்துள்ளது. ("who in his plays uncovers the precipice under everyday prattle and forces entry into oppression's closed rooms").

அறிஞர்
07-10-2005, 02:06 PM
சமாதனத்திற்கான பரிசு ஆச்சரியத்தை அளிக்கிறது......

இளசு
08-10-2005, 12:05 AM
அறிஞருக்கு
மிக பயனுள்ள பதிவு...நன்றியும் பாராட்டுகளும்..

அன்று புகைப்படம் நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் வந்ததற்கு
இன்று உங்களை விட நான் இன்னும் வருத்தத்தில்..

மன்மதன்
08-10-2005, 05:00 AM
நன்றி அறிஞரே.............

அறிஞர்
12-10-2005, 02:48 PM
அறிஞருக்கு
மிக பயனுள்ள பதிவு...நன்றியும் பாராட்டுகளும்..

அன்று புகைப்படம் நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் வந்ததற்கு
இன்று உங்களை விட நான் இன்னும் வருத்தத்தில்..நன்றி இளசு.... மன்மதன்

இளசு
12-10-2005, 09:02 PM
பலே அறிஞரே..
பொருளாதாரத்துக்கான பரிசை அறிவித்ததும் அதையும் சேர்த்துவிட்டீர்களே..
பதிவை கவனித்து மெருகேற்றும் நல்ல பணி.. பாராட்டுகள்..