PDA

View Full Version : ஏன் இன்னும் சம உரிமை கேட்கின்றார்கள்?



Narathar
06-10-2005, 06:56 PM
நாங்கள் பிறக்கும் போது
நமக்கு மலர்கள் கிடைப்பதில்லை
பரிசுகள் கிடைப்பதில்லை - எல்லாம் கிடைப்பது தாய்க்கு

நாங்கள் திருமணம் செய்யும் போது
நமக்கு பரிசுகளோ அன்றி
பாராட்டுகளோ கிடைப்பதில்லை - எல்லாம் கிடைப்பது மனைவிக்குத்தான்.

நாம் இறக்கும் போதும்
அனுதாபங்களும், ஏன் நம் இன்ஸுரன்ஸ்
பொலிசியும் கிடைப்பது நமக்கல்ல - எல்லாம் கிடைப்பது மனைவிக்குத்தான்.

பின்னர் இவர்கள் ஏன் இன்னும் சம உரிமை கேட்கின்றார்கள்?

அறிஞர்
06-10-2005, 11:04 PM
என்ன நாரதரே....

அதையே மாத்தி சொன்னால் எப்படி இருக்கும்......

மனைவி முதலில் இறந்தால் கிடைப்பது யாருக்கு....

திருமணம் இருவருக்கும் வாழ்த்துக்கள் வருமே... வீட்டோடு மாப்பிள்ளைகளுக்கு மரியாதையை எதிர்பார்ப்பது.... தவறு

gragavan
07-10-2005, 06:11 AM
சரியாகச் சொன்னீர்கள் அறிஞரே.

நாரதரே......திருமணத்திற்கு உங்கள் வீட்டை விட்டுப் போவீர்களா? பிள்ளைப் பேற்றில் இறந்த தந்தை என்று உண்டா? இன்னும் நிறைய இருக்கிறது.

ஆனால் கவிதை வடிவம் உங்களுக்குக் கை வந்திருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் கவிதை வடிவத்தைப் பற்றி நமது நண்பனும் சகோதரி கவிதாவும் சரியாகச் சொல்லத் தக்கவர் என்பது எனது கருத்து.

இன்னும் சிறப்பாக நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

thempavani
07-10-2005, 06:20 AM
நாரதரே நாங்கள் கேட்டு கேட்டுப் பார்த்தும் பகுதி கூட கிடைப்பதில்லையே..ஆண்மக்களுக்குத்தானே தாய் முதல் மனைவி வரை அனைவரும் முதலில் கொடுக்கிறார்கள்..அதனால்தான் கேட்டாலாவது கிடைக்கும் என்று முயற்சி செய்கிறோம்...

இன்றும் நமது சமூகத்தில் ஆண்பிள்ளை என்றால் ஒருபடி உசத்தி என்ற எண்ணம் உள்ளதுதானே...அப்படியிருக்கும்போது நாங்கள் கேட்பதைக் குறை சொல்லாதீர்கள்..

Narathar
07-10-2005, 09:14 AM
நாராயணா! நான் சிரிப்புக்கு சொன்னால் இங்கு சீரியசாக அல்லவா பதில் தருகின்றார்கள்.

இது என் தனிப்பட்ட கருத்தாக இருந்தால் விவாதங்கள் ஆலோசணைப்பகுதியில் அல்லவா பதித்திருப்பேன்......

எனக்கு வந்த ஆங்கில ஈ - மெயிலை தமிழாக்கம் செய்து தந்தேன் அவ்வளவே...

aren
07-10-2005, 09:47 AM
நாரதரே, வெறுமனே நாராயணா என்று சொல்வதை விட்டுவிட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வாதம். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. ஆகையால் எதற்காக பெண்களை எதிர்த்து வாங்கிகட்டிகொள்கிறீர்களோ தெரியவில்லை.

gragavan
07-10-2005, 11:08 AM
நாராயணா! நான் சிரிப்புக்கு சொன்னால் இங்கு சீரியசாக அல்லவா பதில் தருகின்றார்கள்.

இது என் தனிப்பட்ட கருத்தாக இருந்தால் விவாதங்கள் ஆலோசணைப்பகுதியில் அல்லவா பதித்திருப்பேன்......

எனக்கு வந்த ஆங்கில ஈ - மெயிலை தமிழாக்கம் செய்து தந்தேன் அவ்வளவே...அடக் கொடுமையே..........இது காப்பியா.....:D :D :D அதுல வேற கவிதை வடிவம் கைவந்திருக்குன்னு பாராட்டிட்டேனே......:D :D :D

Narathar
07-10-2005, 11:20 AM
நாரதரே, வெறுமனே நாராயணா என்று சொல்வதை விட்டுவிட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வாதம். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. ஆகையால் எதற்காக பெண்களை எதிர்த்து வாங்கிகட்டிகொள்கிறீர்களோ தெரியவில்லை.

அரேன்...............

நெடு நாட்களாகவே ஒருவரும் என்னோடு வம்புக்கு வரக்காணோம், அதுதான் சிம்பு ஸ்டைலில் ஒரு ரீலை அள்ளி விட்டுப்பார்த்தேன்
பாருங்கள் கொதித்தெழுந்து விட்டார்கள்.

இன்னும் நண்பனைத்தான் காணோம்.... நாராயண!!!!

Narathar
07-10-2005, 11:33 AM
நமது சமூகத்தில் ஆண்பிள்ளை என்றால் ஒருபடி உசத்தி என்ற எண்ணம் உள்ளதுதானே...அப்படியிருக்கும்போது நாங்கள் கேட்பதைக் குறை சொல்லாதீர்கள்..

நீங்கள் கேட்பதை யார் குறை சொல்கிறார்கள்?

நீங்கள் கேட்கும் விதம்தான் தப்பு என்று சிலர் சொல்கிறார்கள்!!!

நான் சொல்ல வில்லை நாராயணா எனக்கேன் வம்பு

பரஞ்சோதி
07-10-2005, 11:41 AM
நாரதரின் கலகம் நன்மையில் தானே முடியும்.

மகளிர் அணிக்கு போட்டி போட்டு, நம்ம மக்கள் சப்போர்ட் செய்றாங்க.

ஆணாதிக்கவாதிகள் யாருமே இல்லை என்பதை சொல்லிட்டாங்க. இதை படித்து சந்தோசப்பட்டு, இன்று எங்க வீட்டில் வெஜிட்டபிள் பிரியாணி.

gragavan
07-10-2005, 11:44 AM
அரேன்...............

நெடு நாட்களாகவே ஒருவரும் என்னோடு வம்புக்கு வரக்காணோம், அதுதான் சிம்பு ஸ்டைலில் ஒரு ரீலை அள்ளி விட்டுப்பார்த்தேன்
பாருங்கள் கொதித்தெழுந்து விட்டார்கள்.

இன்னும் நண்பனைத்தான் காணோம்.... நாராயண!!!!ஏன் அவரை வம்புக்கிழுக்கின்றீர்கள்? அவர் இதைப் பார்த்திருந்தார் கவிதை வடிவத்தைக் கண்டிப்பாக பாராட்டியிருப்பார் என்றே நம்புகிறேன். அவர் நல்ல கவிதை என்று அவருக்குப் பட்டதைப் பாராட்டத் தவறியே இல்லை. அவருடைய கவிதை வடிவங்களில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இப்படி எழுதுகின்றவர்களைப் பார்த்துதான் நான் கவிதை எழுதுவதை விட்டு விட்டேன். அப்படியே மரபுக் கவிதை பக்கம் கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்பொழுது அதுவும் குறைவு.

சுவேதா
09-10-2005, 09:20 PM
:D:D:D:D

pradeepkt
10-10-2005, 05:14 AM
ஏம்மா எது எடுத்தாலும் சிரிக்கிறே..
ஒரு மனிதன் தனியாக அழலாம். இந்த உலகம் ஆறுதல் சொல்லும். ஆனால் தனியாகச் சிரிக்கவே கூடாது - இதை நடிகர் திலகம் பாணியில் படித்துக் கொள்ளவும் :D :D :D

gragavan
10-10-2005, 05:33 AM
ஏம்மா எது எடுத்தாலும் சிரிக்கிறே..
ஒரு மனிதன் தனியாக அழலாம். இந்த உலகம் ஆறுதல் சொல்லும். ஆனால் தனியாகச் சிரிக்கவே கூடாது - இதை நடிகர் திலகம் பாணியில் படித்துக் கொள்ளவும் :D :D :Dஅதென்ன நடிகர் திலகம் பாணியில் :mad: :mad: :mad: அவர் சிரித்துக் கொண்டே அழுதவராக்கும்.........

பிரியன்
10-10-2005, 05:35 AM
அதாவது இப்படி:D :mad: :) :confused: :p :eek: :rolleyes: :angry:

gragavan
10-10-2005, 05:38 AM
அதாவது இப்படி:D :mad: :) :confused: :p :eek: :rolleyes: :angry:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..............கான மயிலாட கண்டிருந்த வான்கோழி......:D :D :D

பிரியன்
10-10-2005, 05:39 AM
பிரியாணிதான். தீபாவளியை ஞாபகபடுத்தாதீர்...

pradeepkt
10-10-2005, 05:41 AM
ஆமாய்யா, திருச்சி மார்க்கெட்டுப் பக்கத்தில் கொளத்தூரு பிரியாணி கடையில வான்கோழி பிரியாணி தீபாவளி சமயத்தில் பேமசு.
சரி, மயிலையுமா பிரியாணி பண்றீங்க?

பிரியன்
10-10-2005, 05:44 AM
அதை ராகவனிடம் கேளுங்க... நான் பிரியாணி போட்டது கண்டிருந்த வான்கோழியைத்தான்

gragavan
10-10-2005, 06:03 AM
அதை ராகவனிடம் கேளுங்க... நான் பிரியாணி போட்டது கண்டிருந்த வான்கோழியைத்தான்விட்டா எல்லாத்தையும் பிரியாணி போட்டுருவீக போல....ஏய்யா...இதெல்லாஞ் சரியா.........முறையா.......நீங்களே சொல்லுங்க..........

Narathar
10-10-2005, 10:10 AM
மயில் வாங்கோழி இன்னும் என்னென்னத்தையா பிரியாணியாக்குவீங்க?

பென்ஸ்
03-11-2005, 11:41 AM
நாரதா... இதோ இன்னும் கொஞ்சம்....
எண்ணம் 2:
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் முதல் 25 வருடங்கள் "எங்கே போகிறாய்?" என்று அம்மாவும், அடுத்த 25 வருடங்கள் மனைவியும் கேட்க , கடைசியாக ஓப்பாரி வைப்பவர்களும் அதையே தன் நினைத்து அதிசயிக்கிறர்கள்....

எண்ணம் 3:
வீதியில் நடந்து கொண்டிருந்த அவனுக்கு அவன் பின்னால் இருந்து அந்த அசீரி கேட்டது.. "நீ ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலும் , செங்கல் தலையில் விழுந்து இறந்து போவாய்..." அதிர்ந்து நின்ற அவன் முன்னால் ஒரு செங்கல் விழுத்தது... அதிசயித்து போனான்... மேலும் நடந்து சாலையை கடக்கயில் "நில் , இன்னும் ஒரு அடி யெடுத்து வைத்தால், அந்த வாகனம் உன்னை மோதி கொன்று விடும்.." என்று திரும்பவும் கேட்டு நின்ற அவனை ஒரு, கட்டுபாடற்று வந்த அந்த வாகனம் உரசி சென்றது...
"யார் அது???" ... "எங்கே இருக்கிறய்??" என்ற அவனது கேள்விக்கு அந்த அசீரி " நான் உனது பாதுகாவலன் தேவதை" என்று பதில் கூறியது....
ஓ... அப்படியா!!!!....
அப்படியானால்.. இப்போ வர்ற நீ... எனக்கு கல்யானமானப்போ மட்டும் எங்கேயா போனே.....?????