PDA

View Full Version : மெளனம்



jawahar
13-10-2003, 03:10 PM
நீ..
விட்டுச்சென்ற மெளனம்
இன்னும், என்னுடன்..
பேசிக்கொண்டுதான் இருக்கிறது

இக்பால்
13-10-2003, 03:12 PM
மௌனம் பேசியதே....

வாழ்த்துக்கள். முதன்முறை அல்லவா? வணக்கமும் கூட.

-அன்புடன் அண்ணா.

இளசு
13-10-2003, 03:24 PM
புதிய உறுப்பினர் ஜவஹர் அவர்களை
வரவேற்கிறேன்..

சிறுவரிகளில் ஒரு கதையே கவிதையாய்...
வாழ்த்துகள் நண்பரே..

இதையே 3 இடங்களில் பதித்திருக்கிறீர்கள்.

புதிதாய் நிறைய எழுதி
மற்ற பதிவுகளுக்கு கருத்துகள் எழுதி
மகிழ்ச்சி உலா வர என் வாழ்த்துகள் ஜவஹர்!

Nanban
13-10-2003, 03:33 PM
மௌனம் என்பது ஒரு இனிமையான அனுபவம். எனக்கு மிகவும் பிடித்தது. அதைப் பற்றி அழகாக சொல்லி விட்டார். மௌனத்துடன் பேசுவது சிலரால் முடியும்.......

நண்பருக்கு வாழ்த்துகள்..........

இளசு
13-10-2003, 03:35 PM
மௌனத்துடன் பேசுவது சிலரால் முடியும்.......
..........
நண்பனே
மௌனமே பேசினால் இன்னும் சுகாபனுவம்!

karavai paranee
13-10-2003, 03:39 PM
வாழ்த்துக்கள் நண்பரே
நான் தினமும் நிலவுடன் மெளனத்தால்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
அது ஒரு சொல்லமுடியாத இன்பம்

karavai paranee
13-10-2003, 03:40 PM
மெளனத்திற்கு அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அதிசயங்கள்தான் எச்சம்

Nanban
13-10-2003, 03:40 PM
ஆமாம், இளசு அவர்களே........

நிறைய சமயங்களில் நான் அதை அனுபவித்தும் இருக்கிறேன்.....

யாருடன் பேசினீர்கள் - என்று என் மனைவி நிறைய முறை கேட்டிருக்கிறாள். பேசினேனா? என்று நான் வியப்புடன் பதில் சொன்னால், ஆம் பேசினீர்கள் என்பாள். அசடு வழிய சிரித்து விட்டுப் போக வேண்டியது தான்.......

தமிழ் மன்றம் வந்த பின்பு. அந்தப் பழக்கம் குறைந்திருக்கிறது. பேசாமலே பேசிக் கொண்டிருக்கிறோமே, நிறைய நண்பர்களுடன்.......

இளசு
13-10-2003, 03:54 PM
ஆமாம், இளசு அவர்களே........

நிறைய சமயங்களில் நான் அதை அனுபவித்தும் இருக்கிறேன்.....

யாருடன் பேசினீர்கள் - என்று என் மனைவி நிறைய முறை கேட்டிருக்கிறாள். பேசினேனா? என்று நான் வியப்புடன் பதில் சொன்னால், ஆம் பேனீர்கள் என்பாள். அசடு வழிய சிரித்து விட்டுப் போக வேண்டியது தான்.......

தமிழ் மன்றம் வந்த பின்பு. அந்தப் பழக்கம் குறைந்திருக்கிறது. பேசாமலே பேசிக் கொண்டிருக்கிறோமே, நிறைய நண்பர்களுடன்.......

நான் சொல்ல எண்ணி
சொல் சிக்காமல்
திக்கி நின்ற கருத்துகளை
நீங்கள் அழகாய் சொல்லிவிடுவது
இது முதல் முறை அல்ல.....

இக்பால்
13-10-2003, 04:02 PM
நண்பர் நண்பன் அவர்களே... பார்க்காமல் பார்த்துக் கொண்டும்

இருக்கிறோம் அல்லவா? எல்லோரைப் பற்றியும் மனதில் ஒரு

கற்பனைப் பிம்பம் தோன்றி விடுகிறது அல்லவா!!-அன்புடன் அண்ணா.

Nanban
13-10-2003, 04:12 PM
நண்பர் நண்பன் அவர்களே... பார்க்காமல் பார்த்துக் கொண்டும்

இருக்கிறோம் அல்லவா? எல்லோரைப் பற்றியும் மனதில் ஒரு

கற்பனைப் பிம்பம் தோன்றி விடுகிறது அல்லவா!!-அன்புடன் அண்ணா.

ஆமாம், சில சமயங்களில் தோற்றத்தைக் கூட கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இதைப் பற்றி ஒரு கவிதை கூட இந்த தளத்தில் எழுதியிருக்கிறேன்.

தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்........

gankrish
14-10-2003, 07:10 AM
மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே...

jawahar
14-10-2003, 01:21 PM
இந்த புதியவனை வரவேற்று வாழ்த்திய இக்பால் அவர்கள்,இளசு அவர்கள்,நண்பன் அவர்கள்,கரவை பரணீ அவர்கள்,கான்க்ரீஷ் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், வணக்கத்தையும்
தெரிவித்துக்கொள்கிறேன்..நன்றிகள் பல..

இக்பால்
14-10-2003, 01:26 PM
:) :) :) - அன்புடன் அண்ணா

nalayiny
14-10-2003, 10:42 PM
மெளனத்தை கலைப்பது கவிதையாச்சே இன்னும் பேசுங்கள்.

jawahar
19-10-2003, 10:27 AM
தோழி நளாயினி அவர்களுக்கும் நன்றி..தொடர்ந்து எழுதுவேன் ..