PDA

View Full Version : மருத்துவ நோபல் பரிசு



இளசு
06-10-2005, 12:39 AM
மருத்துவ நோபல் பரிசு...

ஆண்டாண்டு காலமாய் அமிலம், மன அழுத்தம், கண்டபடி உண்ணும் உணவு ஆகியவைதான் வயிற்றுப்புண்ணுக்குக் காரணம் என்று ஆழப்பதிந்திருந்த மருத்துவ சித்தாந்தத்தை அடியோடு புரட்டிப்போட்டு,
அல்சரின் காரணி கெலிகொபேக்டர் என்னும் பாக்டீரியா வகை நுண்ணுயிரிதான் என்று 1980களில் நிரூபித்து,
இந்தவகை நோய்களின் சிகிச்சையை மிகப்பெரிய அளவில் முன்னேற்றிய சாதனையாளர்கள் மார்ஷல், வாரன் என்ற இரு ஆஸ்திரேலிய மருத்துவர்களுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு ....

மார்ஷல் இந்தக்கிருமிதான் காரணம் என்று நிரூபிக்க சோதனைச்சாலையில் வளர்க்கப்பட்ட கிருமிகளைத் தாமே குடித்து, தம் வயிற்றில் வளர்த்துக்காட்டியவர்.
ஒரு வார கூட்டுச் சிகிச்சையில் அல்சரைக் குணமாக்கும் வழி காண உதவிய மேதைகளுக்கு புண் ஆறியா கோடானுகோடி மாந்தர்கள் தம் வயிறாற வாழ்த்துச் சொல்வார்கள்தானே..

aren
06-10-2005, 01:36 AM
உங்களுடன்சேர்ந்து நானும் அவர்களை பாராட்டுகிறேன். இந்த பரிசு அவர்களை இன்னும் பல கண்டுபிடிப்புகளை காண ஊந்துதலாக இருக்கும் என்பது நிச்சயம்.

அறிஞர்
06-10-2005, 01:54 AM
வாழ்த்துக்கள்.. அனைவருக்கும்....
-----------
வேதியியல் துறையில் அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும் (ராபர்ட் கிரப்ஸ், ரிச்சர்டு சராக்) பிரான்ஸை சேர்ந்த யுவெஸ் சாவினுக்கும் கிடைத்துள்ளது. நான் சார்ந்த கரிம வேதியியல் இவர்கள் பங்கு முக்கியமானது.

ராபர்ட் கிரப்ஸை 2002 ஆம் ஆண்டு தைவானில் சந்தித்து பேசியுள்ளேன். அப்போது புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன். இப்போது அவர் நோபல் பரிசு வென்றவராக வலம் வருகிறார்.

மன்மதன்
06-10-2005, 04:36 AM
நோபல் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
அவர்களின் புகைப்படம் இருந்தால் இங்கே கொடுங்களேன்..

பிரியன்
06-10-2005, 08:20 AM
தேவையான தகவல்களைத் தந்த இளசு அண்ணாவிற்கும் , அறிஞருக்கும் நன்றிகள். மன்மதன் சொல்லுவது போல் புகைப்படம் இருந்தால் இணைக்கலாமே..

அறிஞர்
06-10-2005, 02:50 PM
இன்னும் நிறைய தகவல்களுடன் போட்டோவுடன் பதிப்பு தருகிறேன் காத்திருங்கள் அன்பர்களே

Narathar
11-10-2005, 03:35 PM
புண் ஆறியா கோடானுகோடி மாந்தர்கள் தம் வயிறாற வாழ்த்துச் சொல்வார்கள்தானே..

புண் ஆறிய எனது மாமா சார்பில் நானும் நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்........

kavitha
14-10-2005, 10:49 AM
இன்னும் நிறைய தகவல்களுடன் போட்டோவுடன் பதிப்பு தருகிறேன் காத்திருங்கள் அன்பர்களே
நல்லது அறிஞரே.
நோபெல் பரிசு பெற்றவர்கள் எத்தனை எத்தனை சோதனைகளை மேற்கொள்கிறார்கள்?! ஆச்சரியமாக இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாகாவின் தொடரில் எய்ட்ஸ் க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக தானே அந்த இரத்தத்தை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட பெண் ஆராய்ச்சியாளரின் கதாபாத்திரத்தைக்காணும்போதே ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். இதே போல் நேரிலுமா? கண்டிப்பாக அவர்களைக்காணவேண்டும்.

புகைப்படம் இருந்தால் பிரசுரியுங்கள் அண்ணா.

raj144
14-10-2005, 05:20 PM
அல்சரின் காரணி கெலிகொபேக்டர் என்னும் பாக்டீரியா வகை நுண்ணுயிரிதான் என்று 1980களில் நிரூபித்து,
இந்தவகை நோய்களின் சிகிச்சையை மிகப்பெரிய அளவில் முன்னேற்றிய சாதனையாளர்கள் மார்ஷல், வாரன் என்ற இரு ஆஸ்திரேலிய மருத்துவர்களுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு ....
நல்ல பயனுள்ள தகவல் அளித்த இளசு அவைகளுக்கு மிக்க நன்றி வணக்கம்.