PDA

View Full Version : மீண்டும் உங்கள் இளசுஇளசு
05-10-2005, 11:17 PM
மீண்டும் உங்கள் இளசு

தலைவருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
சொந்த வாழ்வின் சில சிக்கல்களால், பல இடமாற்றங்கள்... பயணங்கள்.... இழப்புகள்...
அதனால் விளைந்த இடைவெளி..
அனைவரின் மன்னிப்பைக் கோருகிறேன்.
மீண்டும் மன்றத்தில் உங்கள் அனைவருடனும் அளவளாவ...
காலம் கனிந்து வந்தது இப்போது.
யூனிகோடில் கொஞ்சம் தடுமாற்றம்... நீண்ட இடைவெளியாலும்தான்...
பொறுப்பிடத்தை அப்படியே வைத்திருக்கும் தலைவரின் அன்புக்கு நன்றி.
மீண்டு(ம்) மன்றம் வர கிரியாஊக்கியாய் விளங்கிய அன்புத்தம்பி பாரதிக்கு என் அன்பு..

--உங்கள் இளசு

அறிஞர்
05-10-2005, 11:27 PM
வாருங்கள் இளசு...

எப்படி இருக்கிறீர்கள்.....

மன்றத்திற்கு பொலிவு வந்தது போல் உள்ளது தங்கள் வருகை........

இளசு
05-10-2005, 11:36 PM
நண்பர் அறிஞரே
நலமா? நான் (இப்போது) முழு நலம்.
முழு வீச்சோடு உறவுகளை மீண்டும் கொண்டாட சங்கமித்து விட்டேன்.
சேர்ந்து கலா(ய்)க்கலாம்.
உங்கள் பொறுப்பு உயர்வுக்கு வாழ்த்துகள்.

அறிஞர்
05-10-2005, 11:40 PM
தங்களின் வாழ்த்துக்கு நன்றி.... ஏதோ ஒரு சிலராய் இணைந்து மன்றத்தில் தொடர்ந்து பங்கு கொள்கிறோம். பெரிய அளவுக்கு வளர்க்க ஆசையுண்டு. தங்களோடு இணைந்து முயற்சிக்கிறோம்.

பாரதி
06-10-2005, 01:45 AM
வாருங்கள் அண்ணா... உங்களை காண்பதில் உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. இனி மன்றத்தில் என்றும் தீபாவளிதான்..!

அறிஞர்
06-10-2005, 01:48 AM
வாருங்கள் அண்ணா... உங்களை காண்பதில் உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. இனி மன்றத்தில் என்றும் தீபாவளிதான்..! பாரதி அண்ணா சொல்வது போல்... என்றும் தீபாவளிதான்....

பிரியன்
06-10-2005, 03:35 AM
இளசு அண்ணா - நீங்கள் மீண்டும் வந்த மகிழ்ச்சியை வெறும் வார்த்தைளில் சொல்ல முடியாதென்றாலும் எனது மனம் நிறைந்த இனிமையான வரவேற்புகள்...........
ஒரு கட்டத்தில் உங்கள் வருகைக்காக தனிப்பட்ட முறையில் மிகவும் காத்துக் கொண்டிருந்தேன்.....

உங்கள் உற்சாகம் இனி எங்களையும் உற்சாகப்படுத்தும்.......

வருக வருக வருக....

மன்மதன்
06-10-2005, 04:26 AM
வாருங்கள் இளசு அண்ணா.. கடந்த டிசம்பரிலிருந்து எப்பவும் உங்களை பற்றி பேச்சுத்தான்.. இனி எங்களுடன் எப்பவும் இருக்க கேட்டுக்கொள்கிறேன்..

gragavan
06-10-2005, 04:58 AM
வாங்க வாங்க இளசு வாங்கா....என்றைக்கு பழசு ஆகாத இளசு வாங்க.
வரவெச்ச பாரதியண்ணுக்கு ஒரு நன்றிங்கோய்...............

aren
06-10-2005, 05:13 AM
வந்துட்டாரய்யா, வந்துட்டாரய்யா. நம்ம இளசு வந்துட்டாரய்யா.

இனிமே நம்ம இளசு அவர்கள் மன்றத்தை ஒரு கலக்கு கலக்கி அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

வாருங்கள் இளசு அவர்களே.

pradeepkt
06-10-2005, 05:26 AM
இளசு அண்ணா அவர்களுக்கு மீண்டும் வரவேற்புகள்.
நான் தங்களுடன் அளவளாவியது இல்லையெனினும் உங்கள் பதிவுகள் படித்து மகிழ்ந்தவன். உங்கள் வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பரஞ்சோதி
06-10-2005, 05:44 AM
என்ன இது இன்று காலை விழித்தது முதல் ஆச்சரியங்களாக நடக்கின்றனவே.

என்னையே கிள்ளிப் பார்க்கிறேன், இங்கே வந்திருப்பது நம்ம இளசு அண்ணாவா என்று, அய்யோ சந்தோசத்தத அளக்கும் கருவிக்கு என்ன பெயரப்பா, எவ்வளவு சந்தோசம் என்பதை சொல்ல வேண்டுமே.

இளசு அண்ணா, ஒவ்வொரு நாளும் தமிழ்மன்றம் வரும் போது உங்க பெயரில் ஏதாவது பதிவு இருக்காதா என்று நினைக்காத நாள் இல்லை.

என்னை தமிழ்மன்றத்திற்கு வழிகாட்டி வரவேற்றவர் நீங்க, காலத்தின் கொடுமை, இப்போ நான் உங்களை வரவேற்க வேண்டியிருக்குது.

தம்பிகள் இப்போ ஆயிரம், எங்கள் அண்ணனாக வெற்றி நடை போடுங்க.

ஜீவா
06-10-2005, 05:49 AM
இளசு அண்ணாவை நானும் வரவேற்கிறேன்.. நம் மன்ற நண்பர்கள் மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்..

thempavani
06-10-2005, 08:31 AM
எப்பா இது நம்ம இளசு அண்ணாவா...மருத்துவத்திற்கான நோபல் பரிசு பதிவில் இளசு அண்ணா பெயரைப் பார்த்தவுடன் இது யாரு..புதிதாக இந்தப் பெயர் எடுத்துவிட்டார்களோ..இந்தப்பெயர் அண்ணா இளசு அவர்களுக்கு உரியதே..இவரைப் பெயரை மாற்றச் சொல்லவேண்டுமே என்று நினைத்தால்...இது எங்க இளசு அண்ணாவேதான்..அண்ணா வாருங்கள்..வணக்கங்கள்...தங்கள் உறவு இனி என்றும் எங்களோடு இருக்கவேண்டும்..சரியா...

gankrish
06-10-2005, 08:39 AM
நண்பா இளசு வருக வருக.இப்போது நலம் தானே.
நானும் வெகு நாள் கழித்து வந்துள்ளேன். இடையில் எப்போதவது வந்த போது உங்களது படைப்புகளை காணாது இருந்தேன். அறிந்தேன் இன்று அதன் காரணத்தை. நானும் இனிமேல் ஒழுங்காக மன்றம் வர பார்க்கிறேன்.

kavitha
06-10-2005, 08:54 AM
எனது நம்பிக்கை வீண் போகவில்லை. இறைவனுக்கு எனது நன்றிகள்!இனி விடுப்பு எடுக்கவேண்டி இருந்தாலும் யாரிடமாவது தெரிவித்துவிட்டு செல்லுங்கள் அண்ணா. எத்தனை எத்தனை நாட்கள், எத்தனை எத்தனை இதயங்கள் இங்கே வாடின தெரியுமா?

aren
06-10-2005, 09:09 AM
எனது நம்பிக்கை வீண் போகவில்லை. இறைவனுக்கு எனது நன்றிகள்!இனி விடுப்பு எடுக்கவேண்டி இருந்தாலும் யாரிடமாவது தெரிவித்துவிட்டு செல்லுங்கள் அண்ணா. எத்தனை எத்தனை நாட்கள், எத்தனை எத்தனை இதயங்கள் இங்கே வாடின தெரியுமா?

இனிமேல் இளசு அவர்கள் விடுப்பு எடுத்தாலும், விடுப்பிலும் நேரம் கிடைக்கும்பொழுது இங்கே வந்துவிட்டு செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை.

பரஞ்சோதி
06-10-2005, 11:16 AM
அண்ணா, உங்க தனிமடல் பெட்டியை கவனியுங்க. மடல் அனுப்ப முடியவில்லை.

Narathar
06-10-2005, 12:10 PM
நண்பர் இளசுவை மீண்டும் இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி.................

இனி முழு வீச்சோடு மன்றப்பணிகளில் இறங்குங்கள்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

இக்பால்
06-10-2005, 12:11 PM
மிக்க மகிழ்ச்சி. :) :) :)

திரு. இளசு அவர்கள் எப்பொழுதும் இருக்கும் உற்சாகத்துடன் இப்பொழுதும் வரக் காண சந்தோசம்.

இன்று உங்கள் பதிவு வந்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இன்றுடன், இத்துடன் முடிவு பெறும் என நம்புகிறேன்.

எங்கிருந்தாலும், எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு கணம் தமிழ்மன்றம் வந்து செல்ல எனது வேண்டுகோள்.(ஆணை. :) )

இருந்தாலும் மனதில் உங்கள் பதில் நாடி ஒரு கேள்வி:

எப்படித்தான் உங்களால் இப்படி இருக்க முடிந்தது?

-இக்பால்.

Iniyan
06-10-2005, 12:21 PM
ஆகா.... வனவாசம் முடிந்து திரும்பிய ராமர் போல இளசு இந்த தமிழ் மன்ற அயோத்திக்கு வருகை.

Nanban
06-10-2005, 01:32 PM
வணக்கம் நண்பரே

நீண்ட நாளைக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்சி. மீண்டும் உங்கள் பதிவுகள் மன்றம் எங்கும் பரந்து பரவி மணம் வீச வாழ்த்துகள்.

அன்புடன்

சுவேதா
06-10-2005, 06:22 PM
இளசு அண்ணாவா வருக வருகா
அண்ணாவுக்கு இந்த தங்கையின் ஒரு வேண்டுகோள் இனிமேலாவது அடிக்கடி வருமாறு கேட்டுக் கொள்கின்றேன் அண்ணா!!!!!!!!!!!!!!!!

mania
07-10-2005, 05:52 AM
:D வணக்கம் இளசு....:D . என்னுடைய மகிழ்சிக்கு அளவே இல்லை.....மிக்க சந்தோஷம். :D :D :D :D :D :D :D :D :D
அன்புடன்
உன் மணியா....:D :D :D :D

mania
07-10-2005, 06:01 AM
வாருங்கள் அண்ணா... உங்களை காண்பதில் உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. இனி மன்றத்தில் என்றும் தீபாவளிதான்..!
:D பாரதி உன் விடாமுயற்சிக்கு என் பாராட்டுகள்....உன்னுடைய பங்கு சாதாரணமானது இல்லை என்பதை நான் அறிவேன்....வாழ்த்துகள்....:D
அன்புடன்
மணியா..:D

poo
07-10-2005, 10:57 AM
வாங்க அண்ணா...

உள்ளம் அடையும் பூரிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை!

இனி மன்றமெங்கும் கொண்டாட்டம்தான்!!

இளம் படைப்பாளிகளுக்கு பூஸ்ட் கிடைத்துவிட்டது!!

baranee
07-10-2005, 08:28 PM
இளசு அண்ணா , வாங்க வாங்க !!!

மகிழ்சியுடன்
பரணீ

அறிஞர்
07-10-2005, 09:53 PM
இளசு அண்ணா , வாங்க வாங்க !!!

மகிழ்சியுடன்
பரணீபரணியையும் சேர்த்து வாங்க வாங்க என்று சொல்லலாம் போல. இப்ப எங்கு இருக்கிறீர்கள்? மன்றத்தில் தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

Mano.G.
08-10-2005, 06:13 AM
அன்பு நண்பர் இளசுக்கு,
உங்களை நமது மன்றத்தில் திடீரென காணாமல்
போனதில் , கலங்கியவர்களில் நானும் ஒருவன்
நீங்கள் மீண்டும் மன்றம் வந்தது கண்டு மிக்க
மகிழ்ச்சி .
உங்களால் மன்றம் மேலும் சிறப்படையும்
என வாழ்த்தி வரவேற்கிறேன்.

மனோ.ஜி

suma
10-10-2005, 07:25 PM
இளசு அண்ணாவை முரசு கொட்ட வரவேற்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்.
அண்ணா எல்லா நல்லாதாக முடிந்ததா?

Mathu
12-10-2005, 10:30 PM
இளையவரின் வருகை மிக்க சந்தோசம்,
மன்றத்தில் இனி நாளும் கொண்டாட்டம் தான்.

இளந்தமிழ்ச்செல்வன்
13-10-2005, 05:07 PM
ஆஹா எத்துணை மகிழ்ச்சியான செய்தி ...... இவ்வளவு தாமதமாக வந்ததற்க்காக வருந்துகிறேன். உங்களை உங்கள் பதிவை பார்த்தபிறகு ஏற்பட்ட மகிழ்சிக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

வெளியூரிலுள்ள குழந்தைகள் வீட்டிற்க்கு வரும்போது தாயை காணாமல் இருந்த உணர்வுதான் தோன்றும்.

இன்று வீட்டிற்க்குள் நுழையும் போது தாயை கண்டதுபோல் அவ்வளவு மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் இனி ஒரு புது தெம்போடுதான் உலாவருவார்கள். நானும் தொடர்ந்து வர முயல்கிறேன்.

நண்பர் பாரதிக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள்.

பாரதி
14-10-2005, 01:07 AM
அன்பு இ.த.செ.
அண்ணன் மன்றம் வர இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது. அவர் மன்றம் திரும்பியதற்கு முழுக்க முழுக்க அவரேதான் காரணம். காரணமின்றி என்னை பாராட்டுவது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. அண்ணனின் நிழல் ஒன்றே போதும் நமக்கு. இல்லையா..?

அழகன்
14-10-2005, 01:06 PM
வாருங்கள் இளசு அவர்களே நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இளசு
16-10-2005, 11:47 PM
நன்றிகள்...ஒன்பதாயிரம் முறை...

அன்பு நண்பர்களுக்கு,
திரும்பிப்பார்த்தால் மலைப்பாய் இருக்கிறது....
இத்தனை பதிவுகளா என்று...
எட்டாயிரம் தாண்டி மன்மதன் போன்றவர்கள் பின்னாலேயே வந்துகொண்டிருப்பதை
நினைத்தால், அப்படி ஒன்றும் அதிகம் செய்துவிடவில்லை என்ற நிதானமும் வருகிறது.

பார்வையில் இருந்து மறைந்தால்
எண்ணத்தில் இருந்தும் மறையும் என்ற
பழமொழியைத் தோற்கடித்த
மன்ற சொந்தங்களுக்கு
இந்தப் பதிவு அர்ப்பணம்...

அயராமல் என்னைத் தொடர்பு கொள்ளத் துடித்த
பேரிதயப் பாரதி..

அயல்தேசம் இருந்தவனை அழைத்து
அனைவரின் அன்பான காத்திருப்பைச் சொன்ன அன்பின் ஆரென்

கண்காணிப்பாளனாய் இருந்து காணாமல் போனவனை
பொறுப்பைக் கூட்டித் தந்து காத்திருந்த மன்றத் தலைவர்

மடையன் என்று அழைத்தாலாவது மறுபடி வருவான் என்று
பாசம் காட்டிய பப்பி

அடிவைத்தவுடனே அன்புடன் வரவேற்ற அறிஞர்

பிரத்தியேகமாய் எனக்காய்க் காத்திருந்த பிரியன்

மடல் விடுத்து , வழி பார்த்திருந்த மன்மதன்

கொஞ்சுதமிழால் கொள்ளைகொண்ட கோ.இராகவன்

கேள்விப்பட்டே நேசக்கோட்டை கட்டிய பிரதீப், ஜீவா

என் அன்புக்குரிய பன்முக ஆளுமை பரஞ்சோதி

சேரன் அழைத்து வந்த மன்றச்சொத்து தேம்பா

என்னை ஒருமையில் அழைக்கும் உரிமைகொண்ட நண்பன் கான்கிரீஷ்

நம்பிக்கைக் கயிறாலும், அழைப்பாலும் கட்டி இழுத்த கவிதா

நீண்ட நாள் என்னை நன்கறிந்த நண்பர் நாரதர்

என்மேல் அன்பும் அக்கறையும் கொண்ட இக்பால் அவர்கள்

பொறுப்புகளை இனிமையாய்ச் செய்யும் இனியன்

என் மதிப்புக்குரிய நண்பன்

என் அன்புத்தங்கைகள் சுவேதா, சுமா

நாயகன் தலை மணியா

பாசத்தம்பி பூ

உலகம் சுற்றும் அன்பு இளவல் பரணி

மதிப்புக்குரிய முன்னோடி மனோஜி

அன்பு மது, அழகன்

இனிய இ.த.செ.

அனைவருக்கும் என் மனம் சொல்லும் நன்றிகள்
..
வந்து சேர்ந்த தஞ்சைத் தமிழன், வரப்போகும் இளவல் முத்து,
கண்ணில் படாத தங்கை நிலா
என் அண்ணல் கரிகாலன்
அறிவார்ந்த இளவல் ராம்பால்
கலாரசிக குருகுரு ராஜேஷ் கே ஆர் வி
இன்னும் பலரைக் காண நெஞ்சம் ஏங்குகிறது...

பத்து மாதம் காக்க வைத்தவன்...
நானும் காத்திருப்பதில் தவறில்லை..

கவீ கொண்ட அதே நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..
மனதுக்கினிய மன்றச் சொந்தங்களை மறுபடி ஒவ்வொருவராய்க் காணுவோம் என்று..
நம்பிக்கைதானே வாழ்க்கை!

அறிஞர்
17-10-2005, 04:30 AM
மன்றத்தின் புதல்வர், புதல்விகளை.....
பாசத்தால் இனங்கண்டு......
அன்பு வரிகளால் அனைவரையும் மகிழ்வுறச்செய்து.....
அனைவருக்கும் வழிகாட்டியாய் உள்ள
தங்களின் வழிகளை.....
தொடர ஆசையுடன் காத்திருக்கிறோம்...
தங்கள் பணி இன்னும் சிறக்கட்டும்......

இளசு
17-10-2005, 08:56 PM
சேர்ந்து நடைபோடவே ஆசை அறிஞரே...

இணையும் கரங்கள் அனைத்துமே சமம்...இணைய மன்றத்தில்..!

வரப்போகும் முத்து - என்றேன்.. வந்தாச்சு இன்று!
மற்றவர்களும் வருவார்கள்...
கண்ஸ், வந்தியத்தேவன்,நட்சத்ரன் இன்னும் நிறைய நண்பர்கள் என் எதிர்பார்ப்பு பட்டியலில்...

அறிஞர்
17-10-2005, 11:34 PM
வரட்டும் அனைவரும்... ... மன்றம் பொழிவு பெறட்டும்......

rambal
28-10-2005, 02:04 PM
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
நலம்தானே?
நான் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருந்தாலும் பெரிதாகப் பங்கெடுக்கவில்லை. நேரமின்மை மற்றும் படித்தல். நல்ல படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தும் பார்த்தும் கொண்டிருக்கிறேன். சில பகுதிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். விரைவில்.. உங்கள் ஆசியுடன்..

பாரதி
28-10-2005, 02:28 PM
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
நலம்தானே?
நான் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருந்தாலும் பெரிதாகப் பங்கெடுக்கவில்லை. நேரமின்மை மற்றும் படித்தல். நல்ல படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தும் பார்த்தும் கொண்டிருக்கிறேன். சில பகுதிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். விரைவில்.. உங்கள் ஆசியுடன்..

ஆஹா... வாருங்கள் ராம். நீங்கள் நலமா..? உங்களைக் கண்டும் பல மாதங்களாகி விட்டது. உங்கள் செய்தி அனைவருக்கும் புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

இளசு
28-10-2005, 09:38 PM
வருக வருக ராம்..
உன் பதிவால் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்சமல்ல.
நான் நலமே ராம். உன் நலம் எப்படி?

நிச்சயம் உன் எண்ணங்களுக்கு பதிவு வடிவம் கொடுத்து
உலவ விடு. படித்து ரசித்து விமர்சிக்க பலரும் ஆவலுடன்..
(உன் பதிவால் என் மனசுக்குள் இன்றைக்கே தீபாவளி..)

வேலைப்பளு , பிற காரணங்களால் வரமுடியாமல் போனவர்கள்
மறுசங்கமக் காலம் இது.
நண்பர் பிஜிகே புதிர் பக்கம் களைகட்ட வைத்துவிட்டார்.
இன்னும் பலரும் வரவேண்டும், வருவார்கள்..

Narathar
28-10-2005, 10:11 PM
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
நலம்தானே?
நான் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருந்தாலும் பெரிதாகப் பங்கெடுக்கவில்லை. நேரமின்மை மற்றும் படித்தல். நல்ல படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தும் பார்த்தும் கொண்டிருக்கிறேன். சில பகுதிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். விரைவில்.. உங்கள் ஆசியுடன்..

முன்புபோள் உங்கள் பலமான
பலனுள்ள பதிவுகளை எதிர் பார்க்கின்றோம் ராம்.............
வாழ்த்துக்கள்!!!

பழையவர்கள் எல்லாம் திரும்பும் நேரத்தில் என் தலையில் ''பணி''ச்சுமை!
அதை ''பனி''ச்சுமையாக்க வேண்டியது இறைவன் பொறுப்பு!!!

இளசு
29-10-2005, 10:12 PM
உங்கள் பணிச்சுமை
உழைப்பெனும் ஆதவ்ன் கண்ட
பனியாக கரைய..
கதையாசிரியர் அவதாரம் தொடர
வாழ்த்துகள் நாரதரே..

உங்கள் மன டைரியிலிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

இளசு
17-03-2007, 11:07 PM
இன்று கொஞ்சம் பழைய நினைவுகள்..

ஏப்ரல் 1 2003- அன்று
நம் மன்றம் பிறந்த முதல் நாளில்
என் முதல் - அறிமுகப் பதிவு..!

----------------

இனிது இனிது தமிழ் இனிது

அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!

அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி!

நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி!

வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி!

அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.!

------------------

aren
18-03-2007, 01:16 AM
இளசு அவர்களே,

உங்கள் முதல் பதிவை மறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி. அப்படி பின்னோட்டம் விடும்பொழுது கடந்துவந்து பாதையும், மன்றம் வளர்ந்த விதமும், சந்தித்த மனிதர்களும், உரையாடிய நண்பர்களும் நம் கண்முன்னே வலம் வருவார்கள்.

உங்கள் பதிவு என்னையும் கொஞ்சம் திரும்பிபார்க்க வைத்தது.

நம் மன்ற செல்வங்களான ராம்பால், பப்பி, நண்பன், இக்பால், இனியன், சுவேதா ஆகியோர் (இன்னும் பலர்) திரும்பவும் மன்றம்வந்து உலாவினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். இது நடக்குமா?

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
18-03-2007, 08:58 PM
அன்பின் ஆரென்

ஐந்தாம் ஆண்டு தொடங்கப்போகும் இந்தக்கட்டத்தில்
பழைய நினைவுகள், பாச இணைப்புகள்..
இப்போது இங்கே இல்லா இதயங்கள்
என பலவீனமாய் உணர்கிறேன்...

மன்றம் உருவாக முக்கிய காரணகர்த்தர் அன்பு இளவல் ராம்பால்..
மன்றம் மீண்டும் விரைவில் வருவார் என உள்மனம் சொல்கிறது..

அனைவருக்காகவும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...


ஆரம்பகால நண்பர்களின் மீள்பார்வைப் பதிவுகளை
ஐந்தாம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக
நம் மன்றம் எதிர்பார்க்கிறது..

ஓவியா
18-03-2007, 10:12 PM
தங்களின் முதல் அறிமுக கவிதை பலே.


நன்றி

அறிஞர்
18-03-2007, 11:47 PM
ஆரம்ப கால நண்பர்கள் வரட்டும், மன்றம் இன்னும் அதிகமாக பொழிவு பெறட்டும்....

5ஆம் ஆண்டு இன்னும் சிறப்பு பெறட்டும்.

பென்ஸ்
19-03-2007, 09:36 AM
இளசு...

நீங்கள் மீண்டும் மன்றம் வந்த போதுதான், நான் மன்றம் நுழைந்தேன்...

நான் வந்த போது வாசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று....
வேறும் யூனிகோட் மாற்றிகாக இந்த மன்றம் வந்து பதிவுசெய்தவனை கட்டி இழுத்து வைத்திருக்கும் சக்தி எது என்று இன்னும் புரியவில்லை இளசு...!!!
புரியவும் வேண்டாம்...

யூனிகோடுக்காக வந்து 2004 அக்டோபரிலையே மன்றத்தில் பதிவு செய்தாலும்,
2005 அக்டோபரில் தான் என் முதல் வாசிப்பும், பதிவுகளும்....

இந்த குறுகிய சமயத்தில் எத்தனை உறவுகள்... !!!!

என்னை கூட விமர்சிக்க, எழுத வைத்த இடம்....

பூவோடும் சேர்ந்த நாராய் நானும்....

இளசு
19-03-2007, 09:45 PM
ஆரம்ப கால நண்பர்கள் வரட்டும், மன்றம் இன்னும் அதிகமாக பொழிவு பெறட்டும்....

5ஆம் ஆண்டு இன்னும் சிறப்பு பெறட்டும்.

ஆம் அறிஞரே..

என் பேராசைப் பட்டியலில் பல பேர்...

ராம்பால்
நண்பன்
பப்பி
எம்ப்பரர்
முத்து
நிலா
கண்ஸ்
வந்தியத்தேவன்
சுமா
மதுரைக்குமரன்
பொன்னியின் செல்வன்
பரணீ
பிரபா நண்பன்
பிரபா(கர்)
லாவண்யா
சுவேதா
தமிழ்க்குமரன்
அஞ்ஞானி
அழகன்

இப்படி பல பேர் உண்டு..

காத்திருப்போம்...

இளசு
19-03-2007, 09:47 PM
இளசு...

....

இந்த குறுகிய சமயத்தில் எத்தனை உறவுகள்... !!!!

என்னைக் கூட விமர்சிக்க, எழுத வைத்த இடம்....

பூவோடும் சேர்ந்த நாராய் நானும்....

இனிய பென்ஸ்..

உங்களின் இந்தப் பண்புதான்
இன்னும் உயர்வாய் உங்களை எண்ண வைக்கிறது..

விகடன்
22-03-2007, 08:23 PM
நீங்கள் இளசாக இருப்பதில்லை. அதற்காக எங்களை பழசாக குத்திக்காண்பிப்பது சரியாகப் படவில்லை.

என்ன செய்வது. சின்னதுகள் பிழைசெய்தால் பொறுத்துத்தானே ஆகவேண்டும்...

உங்கள் குறும்புகளையும் ரசிக்கிறோம். குறம்புகளை குறைவின்றி தொடர வாழ்த்டுக்கள்..

leomohan
22-03-2007, 08:35 PM
மலரும் நினைவுகள் பலே.

இளசு
04-02-2008, 06:40 PM
இன்று கொஞ்சம் பழைய நினைவுகள்..

ஏப்ரல் 1 2003- அன்று
நம் மன்றம் பிறந்த முதல் நாளில்
என் முதல் - அறிமுகப் பதிவு..!

----------------

இனிது இனிது தமிழ் இனிது

அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!

அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி!

நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி!

வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி!

அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.!

------------------


அண்மைக்கால சலனங்களால்
சஞ்சலமும் மனவருத்தமும் எனக்குள்..

என் உள்ளம் கவர்ந்த அன்புமன்றச் சொந்தங்கள் அனைவருக்கும்
இம்மன்றத்தில் முதல் முதலாய் நான் எழுதியதை
மறு அர்ப்பணிப்பு செய்கிறேன்...

சிவா.ஜி
04-02-2008, 06:54 PM
உணர்ந்து உள்வாங்கிக்கொண்டேன் இளசு.

வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி!

அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.!

தெளிவான சிந்தனையைத்தரும் இவ்வரிகள் இனி மனம் விட்டு அகலாது.மிக்க நன்றி இளசு.

இளசு
04-02-2008, 07:32 PM
நன்றி விராடன். நன்றி மோகன்..

நன்றி சிவா..

இன்று ஒரு பதிவால் நான் கொஞ்சம் உஷ்ணமானால்
இருபத்து நான்கு மணிநேரம் ஆறவிட்டு அடுத்தநாள்
பதிலளிப்பது என் வழக்கம்... -
அப்போதும் அது அவசியம் என்றால் மட்டும்..

அடுத்தநாள் வரை காத்திருப்பதால்
கொதித்த கோபநுரை அடங்கி
கருத்துத் திரட்டுப் பால் மட்டுமே இருக்கும்...

நாகரா
05-02-2008, 03:29 AM
இளசு மீண்டும் வருக! எங்களோடு அளவளாவுங்கள்!

இளசு
05-02-2008, 06:30 AM
உங்கள் வரவேற்புக்கு நன்றி அன்பு நண்பர் நாகரா அவர்களே..


தாய்த்தமிழில் நாளும் கற்க நல்ல இடம் நம் மன்றம்..
நாம், நமக்குள் என்ற அந்நியோன்ய உணர்வு கூடுதல் சுகம்..
அதனால் பணி, சூழலால் சிலகாலம் வர இயலாமல் போனாலும்
மழைவந்தால் தழைக்கும் ஆம்பலாய்
சூழல் மாற மன்றம் வந்து குலவும் நம் மனம்..

பூமகள்
05-02-2008, 08:17 AM
கண்டேன் அண்ணலின்
பதிவை..!

வியந்து அசைவற்று
சிலிர்த்து நின்றேன்..!

தேனமுது வடியும்
தெள்ளிய வரிகள்..!

துவண்ட மனத்துக்கு
மயிலிறகு சொற்கள்..!

கண்கள் கலங்கி
பெரியண்ணாவின் பாதம் பணிந்து
தாழ் போற்றி வணங்குகிறேன்..!

kavitha
05-02-2008, 09:48 AM
அண்மைக்கால சலனங்களால்
சஞ்சலமும் மனவருத்தமும் எனக்குள்..
என் உள்ளம் கவர்ந்த அன்புமன்றச் சொந்தங்கள் அனைவருக்கும்
இம்மன்றத்தில் முதல் முதலாய் நான் எழுதியதை
மறு அர்ப்பணிப்பு செய்கிறேன்...

எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணா....
வெகுநாள் கழித்து நான் வந்த இதே நாளில் உங்களின் வருகையும் மீள் கவிதையும்... படித்து நெகிழ்ந்தேன்... பண்பு கண்டு தெளிந்தேன்..

kavitha
05-02-2008, 09:48 AM
இன்று ஒரு பதிவால் நான் கொஞ்சம் உஷ்ணமானால்
இருபத்து நான்கு மணிநேரம் ஆறவிட்டு அடுத்தநாள்
பதிலளிப்பது என் வழக்கம்... -
அப்போதும் அது அவசியம் என்றால் மட்டும்..

அடுத்தநாள் வரை காத்திருப்பதால்
கொதித்த கோபநுரை அடங்கி
கருத்துத் திரட்டுப் பால் மட்டுமே இருக்கும்...

திரட்டுப்பால் தித்திக்கும்
நீங்கள் திரட்டிய கருத்தும் அப்படியே..
எங்களுக்கும் இது ஒரு பாடம். நன்றி

இளசு
07-02-2008, 05:56 PM
நன்றி பாமகளே...

அன்புத்தங்கை கவீயின் வரவு கண்டு மனம் துள்ளுகிறது..
நலமாம்மா கவீ? சூழல் சாதகமாயின் தொடர்ந்து வந்து
ஆக்கங்கள் தர அண்ணனின் அன்பான வேண்டுகோள்..
(ஜாவா பாடங்கள் பாதியில் நிற்க்..........)

அக்னி
09-02-2008, 12:01 AM
உங்கள் அறிமுகத் திரி பார்க்கையில் ஏதோ ஒரு ஏக்கம் என் மனதினுள்ளும்...
உங்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்த்து காத்திருப்பேன்;
மன்றம் வந்து எம்மை மகிழ்விக்கப்போகும், வழிநடத்தப்போகும் மூத்த உறவுகளுக்காக...
எமது ஏக்கக் காத்திருப்பு, கைப்பிடித்துக் கூட்டி வரும் அனைவரையும் என்ற நம்பிக்கையுடன்...

நேசம்
09-02-2008, 03:47 AM
இன்று ஒரு பதிவால் நான் கொஞ்சம் உஷ்ணமானால்
இருபத்து நான்கு மணிநேரம் ஆறவிட்டு அடுத்தநாள்
பதிலளிப்பது என் வழக்கம்... -
அப்போதும் அது அவசியம் என்றால் மட்டும்..

அடுத்தநாள் வரை காத்திருப்பதால்
கொதித்த கோபநுரை அடங்கி
கருத்துத் திரட்டுப் பால் மட்டுமே இருக்கும்...


இள*சு அண்ணா அருமையான* க*ருத்தை சொல்லி இருக்காரு.இதை ம*ன்ற* உறவுக*ளும் க*வ*ன*த்தில் எடுத்து கொண்டால் உறவும் மேம்ப*டும்.