PDA

View Full Version : குறும்பாக்கள்..



rambal
19-04-2003, 06:10 PM
குறும்பா!..

* ஊர் கூடித் திருவிழா..
மகிழ்ச்சிக் கடலில் மக்கள்..
பரிதாபமாய் நேந்து விட்ட கடா!

* எல்லோரும் கடலை ரசிக்கையில்
அவனுக்கு மட்டும் இல்லை ரசிப்புத் தன்மை..
சுண்டல் விற்கும் பையன்!

* அட குப்பத்தொட்டி
எப்போது பூ பூத்தது?
குழந்தை...

* என் தேச ஒற்றுமை..
சாதி மத பாகுபாடு இல்லா நதி...
சாக்கடை!

* காவலாளி முதல்.. மந்திரி வரை..
ஒரே ஜனநாயக சட்டம்..
லஞ்சம்!

*டமிலை தமிழ் என்றழைக்க
கூட ஒரு கூட்டம்..
அட தமிழ் மன்றம்!

இளசு
19-04-2003, 06:12 PM
அசத்தல் ஒவ்வொன்றும்...
அதிலும் கடைசிப் பா நச்!
பாராட்டுகள் ராம்...

குமரன்
19-04-2003, 06:38 PM
குறும்பா ஒவ்வொன்றும்
சுடும்பா...
கடைசிப் பா தவிர...
அது மட்டும்
குளி¢ரும்பா...

படைப்பு அருமை, ராம். பாராட்டுகள்.

-குமரன்.

kaathalan
19-04-2003, 06:38 PM
எல்லாமே சிறப்பான குறும்பாக்கள் தான். சாக்கடை, குழந்தை, லஞ்சம் மனதைப்பாதித்தது. பாராட்டுக்கள்.

poo
20-04-2003, 03:45 PM
சாக்கடை... அருமை!!..

இணைப்பென்ற பேச்சில்லை..
அணைகட்டி தடுப்பார் இல்லை!!

-அருமை ராம்!!

rambal
21-04-2003, 06:46 PM
என்னை பாதித்ததால்தான் எழுதுகிறேன். உங்களைப் பாதித்ததால் பாராட்டுகிறீர்கள்.பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..

நிலா
21-04-2003, 07:24 PM
யார் முந்துவது? வார்த்தைகளுக்குள் போட்டி!
உம்மைப் பாராட்ட நினைக்கின்றேன்!

Nanban
02-06-2003, 01:08 PM
குறும்பாக்கள் மிக நளினம்..... அடிக்கடி முயற்சிக்கலாமே???