PDA

View Full Version : இருதயத்தை பாதுகாக்கும் சாக்லேட்..*



Narathar
05-10-2005, 07:53 PM
தம் அடிப்பவர்களின் இருதயத்தை பாதுகாக்கும் சாக்லேட்..*

http://www.dinakaran.com/health/daily/2005/oct/01/choco.jpg

புகைப்பிடிப்பதால் ரத்தக் குழாய்களின் சுருங்கி விhpயும் தன்மை பாதிக்கப்படுகிறது. இதற்கு எண்டோத்தீலியல் டிஸ்பங்ஷன் (endothelial dysfunction) என்று பெயர். இதனால் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்துக்கு தகுந்தாற் போல செயல்படு;ம் தன்மையை ரத்தக் குழாய்கள் இழந்து விடுகின்றன. விளைவு, ரத்த நாளங்கள் கடினமாகி (atherosclerosis) மாரடைப்பு அல்லது பக்கவாதம் உண்டாகும்.

இந்நிலையில் தம் அடிப்பவர்களின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதை சாக்லேட் தடுத்து நிறுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதற்காக சாக்லேட் சாப்பிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.

சாக்லேட்டில் உள்ள பிளேவ்னால் (flavonol) என்ற நோய் எதிர்ப்பு பொருள், எண்டோத்தீலியல் டிஸ்பங்ஷனை தற்காலிகமாக சாp செய்கிறது.

வழக்கமாக கடைகளில் விற்கப்படும் கோகோ பானங்களில் பிளேவ்னால் குறைவாகவே காணப்படும். ஆனால் மேற்படி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பிளேவ்னால் கூடுதலான கோகோ பானம் பயன்படுத்தப்பட்டது. அதே சமயம் சூடான கோகோ பானத்தால் எந்த நன்மையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்லேட் மூலம் புகைப்பிடிப்பவர்களுக்கு நீண்ட கால நன்மைகள் ஏதாவது உண்டா? என்பதை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Thanks to Dinakaran.com

pradeepkt
06-10-2005, 05:08 AM
போற போக்குல நான் சாக்லெட் திங்கவாச்சும் தம்மடிக்கணும் போல?

aren
06-10-2005, 05:14 AM
இனிமேல் தைரியமாக சாக்லேட் சாப்பிடலாம் என்று சொல்லுங்கள்.

ஆனால் சூடான சாக்லேட் பால் உதவாது என்று சொல்லுகிறீர்களே. கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

பிரியன்
06-10-2005, 07:43 AM
தம் அடிப்பவர்களின் இருதயத்தை பாதுகாக்கும் சாக்லேட்..*


உபயோகமான தகவலுக்கு நன்றி நாரதரே. அப்படியே மாதிரியா இரண்டு அனுப்பி வையுங்களேன்:) :) :) :)

Narathar
06-10-2005, 03:42 PM
அப்படியே மாதிரியா இரண்டு அனுப்பி வையுங்களேன்:) :) :) :)

என்ன? சொக்லட்டை சொல்கிறீர்களா இல்லை நோயை சொல்கிறீர்களா

பிரியன்
06-10-2005, 05:58 PM
என்ன? சொக்லட்டை சொல்கிறீர்களா இல்லை நோயை சொல்கிறீர்களா
நோய் தன்னாலே வரும் நீங்க சாக்லேட்டை அனுப்பி வைங்க:p :p

இளசு
10-10-2005, 10:31 PM
சிவப்பு ஒயின், தேநீர்..இப்போ சாக்லெட்..
இதயத்தைப் பாதுகாக்க அவதரித்ததாய் அவ்வப்போது ஒரு பொருளுக்கு சிம்மாசனம்..
இது சாக்லெட்டின் காலம்..
இந்த ஆராய்ச்சிக்கு சாக்லெட் கம்பெனி பணம் குடுத்தாங்களான்னு விசாரிங்கப்பா முதல்ல..
-----
பதிவைத் தந்த நாரதருக்கு நன்றி..

Narathar
11-10-2005, 03:28 PM
நோய் தன்னாலே வரும் நீங்க சாக்லேட்டை அனுப்பி வைங்க:p :p

துபாய்க்கு வரும் போது கையோடு கொண்டுவருகிறேன்..........