PDA

View Full Version : சில நேரங்கள்...



rambal
19-04-2003, 04:48 PM
தான் ஈன்ற குட்டியை
தானேத் தின்னும்
மிருகம் போல்..

நடக்க முயன்ற
குழந்தை வீழ்ந்து
எழுந்து தவிப்பதைப் போல்..

தொட முயன்று
சூடு தாங்காமல்
கீழ் விழும் பீனிக்ஸ் போல்..

விதையைக் கிழித்து
விஸ்வரூபம் எடுக்கும்
மரம் போல்..

சிறகை விரித்து
காற்றைக் கிழித்து
பறக்கும் பறவையைப் போல்...

சிகரம் ஏறி வெறுமை
கண்டு நொந்து தோல்வி சமதளத்தில்
பயணிக்கும் பயணி போல்..

தனியே அமர்ந்து
கரையும்
காகம் போல்...

ஊர் போகும் பாதைக்கு
எதிர்ப்புறம் பயணிக்கும்
கிறுக்கன் போல்...

இப்படி சில நேரங்களில்
இருந்தாலும்...
எதார்த்த உலகின்
வரைமுறைகளுக்குள்
சம்மதமின்றி
அழுது கொண்டேதான்
பலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...

இளசு
19-04-2003, 05:07 PM
விரும்பியது
கிடைத்தது
இரண்டுக்கும் நடுவில்
எப்போதும் ஊஞ்சல்
அதை அழகாய் சொன்ன இளவல் ராமுக்கு பாராட்டு...

குமரன்
19-04-2003, 05:29 PM
ஒரு மனிதனின் சுயதேடலும்
யதார்த்த உலகமும்.

சிறப்பான கவிதை, பாராட்டுக்கள்...ராம்.

-குமரன்.

poo
20-04-2003, 02:48 PM
உலக உருண்டைக்குள்
உருளும் பந்துகள் நாம்...

-பாராட்டுக்கள் நாம்!!

karikaalan
20-04-2003, 05:10 PM
ராம்பால்ஜி!

முதல் ஏழு எடுத்துக்காட்டுகளும் இயல்பானவையே, இயற்கையானவே. தவறேதும் தென்படவில்லையே!

===கரிகாலன்

rambal
21-04-2003, 05:45 PM
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..

kavitha
31-03-2004, 08:41 AM
அழுது கொண்டேதான்
பலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...
கடைசி வரி நிதர்சனமான உண்மை!
கவிதை அருமை!!

samuthira
01-04-2004, 02:55 AM
அருமையான கவிதை
ராம்பால்.,

உஞ்சல் உள்ளம் உள்ளவரை
உந்துதல் இருந்தாலும்
ஊர் சென்று சேரமுடியாது

பூமகள்
22-06-2008, 06:01 PM
எதார்த்தமும்..
எதிர்பார்ப்பும்..
எதிரெதிர் திசையெனில்..

வாழ்க்கையில் சிலநேரங்கள்..
வாழ்ந்து தான் ஆகவேண்டும்
இப்படியாக...!!

மனம் கனத்துவிட்டது..
பெரியண்ணாவின் வரிகள் அற்புதம்...!!

பாராட்டுகள் ராம்பால் அண்ணா... மற்றும் தட்டிக் கொடுக்கும் தங்கச் செம்மல்.. எம் பெரியண்ணா. :)

செழியன்
22-06-2008, 09:16 PM
எதிர்பாப்புக்கள் ஏமாற்றமாகும் போது
எவர் கிறின்
நெவர் கிறின்
ஆகிவிடும்.

ஆனாலும் எனக்கு என்னவோ
தான் ஈன்ற குட்டியை
தானேத் தின்னும்
மிருகம் போல்
என்ற வரிகள் மட்டும் கவியுடன் பொருந்தாத மாதிரி ஓர் உணர்வு.(?)