PDA

View Full Version : சென்னை நண்பனின் அறிமுகம்



gunasekaravarma
02-10-2005, 12:39 PM
அருமை நண்பர்களே
புதிதாக தமிழ் மன்றத்தில் விரல் பதித்து இருக்கும் குணசேகரவர்மனின் வணக்கங்கள். மன்றத்தின் செய்லபாடுகள் மிக அருமையாக .இருக்கின்றன. இவ்வளவு காலமாக தமிழில் உள்ளீடு செய்ய பல முயற்சிகள் செய்தும் பலனில்லாது தற்போதுதான் கைகூடி இருக்கிறது.

நம் தமிழர்களின் பல வலைப்பக்கங்களை அலசி வலைவீசிப்பார்ததேன். தமிழில் உள்ளீடு செய்வது குறித்து எனக்கு பிடபடவில்லை.

எடுத்துக்காட்டாக
blogger.com ல் என்னால் தமிழ் உள்ளீடு செய்ய இயலவில்லை.
தமிழ்மன்றத்தில் கூட குறலி (kstar soft) யை ஆன் செய்த பிறகு அதில் தட்டச்சு செய்து அதை வெட்டி தமிழ்மன்ற unicode converter ல் ஓட்டி இக்கடித்ததை அனுப்பியுள்ளேன். (ஆனாலும் அதில் சில font கள் (ர் வி) சரியாக பதியவில்லை.
geocity .இலவச வலைதளத்திலும் இப்பிரச்சனையை நான் சந்திக்கிறேன்.
நான் IE மற்றும் அன்மை பதிப்பான firefox உபயோகிக்கிறேன்.
எனக்கு மிக தெளிவாக புரியும் வகையில் (மற்றவர்களும் நன்றாக தகவல்களை தந்திருந்தாலும் எனது தாய்மொழியில் எனது கருத்துகளை பகிர்ந்திடும் ஆர்வகோளாறு காரணமாக இந்த அவசரம்)நல்ல வழி காட்டுதல்கள் கிடைக்குமாயின் மிகவும் மகிழ்சி அடைவேன்.
நன்றிகள்
அன்புடன்
குணசேகரவர்மா
பின் குறிப்புகள்

நான் unicode converter ல் நரிடையாக தட்டசசு செய்தால் font கள் சரியாக பதிவதில்லை. எகா( தண்ணிர் என்று அடித்தால் தணண்ணணிரர் என வருகிறது.

மேலும் எனக்கு தெரிந்த வரையில் குறிலி செயலி அழகிய font ஆக பதிவாகதாக அறிகிறேன். மற்ற font கள் தமிழின் எழத்து வடிவமைப்பை, அழகை குறைப்பதாக கருதுகிறேன்

மேலும் நான் kwp மற்றும் ponmozhi lite version softwar களை உபயோகிக்கிறேன்.அவைகள் முலமாக தமிழை தட்டச்சு செய்ய இயலுமா?

பிரியன்
02-10-2005, 12:47 PM
அன்பு நண்பருக்கு வரவேற்புகள்.

நீங்கள் எ-கலப்பை உபயோகித்தால் மிக எளிமையாக இருக்கும். அதற்கான சுட்டியை இணைத்துள்ளேன்,,,,

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 eKalappai 2.0b (Anjal) http://thamizha.com/modules/mydownloads/images/pop.gif என்பதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்பு தமிழில் எழுதுவது மிக எளிமையாகி விடும்.

Narathar
02-10-2005, 01:16 PM
எப்படியாவது கஷ்டப்பட்டு தமிழில் பதித்தீர்களே...............
அதுவே உங்கள் வெற்றியின் முதல் படி.....

தடைகளை கடந்து தமிழ் மன்றத்தில் கொடி நாட்டுங்கள்

pradeepkt
03-10-2005, 07:42 AM
வணக்கம் நண்பரே,
உங்கள் தமிழார்வம் வாழ்க.

gunasekaravarma
03-10-2005, 04:31 PM
நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
e kalappai க்கு அவர்கள் கேட்டீருந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி இருந்தேன். ஆனால் எனக்கு அவர்களுடைய authendication code கிடைக்க வில்லை. மறுபடி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முயற்சித்து பார்கிறேன்.

மேலும் தமிழ் மன்றத்தில் நான் ஒரு பிரிவை {group} ஆரம்பிக்க முடியுமா இது குறித்து faq ல் எதுவும் உதவி காணக்கிடைக்கவில்லை.

நன்றி

gunasekaravarma
03-10-2005, 04:36 PM
avatar ஐ எப்படி எனது posting ல் கொண்டு வருவது
நான் flash ல் வடிவமைத்ததை எனது avatar பகுதியில் பதிக்க முடியுமா
நன்றி

Iniyan
03-10-2005, 06:44 PM
நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
e kalappai க்கு அவர்கள் கேட்டீருந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி இருந்தேன். ஆனால் எனக்கு அவர்களுடைய authendication code கிடைக்க வில்லை. மறுபடி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முயற்சித்து பார்கிறேன்.

மேலும் தமிழ் மன்றத்தில் நான் ஒரு பிரிவை {group} ஆரம்பிக்க முடியுமா இது குறித்து faq ல் எதுவும் உதவி காணக்கிடைக்கவில்லை.

நன்றி

பிரியன் அவர்கள் கொடுத்துள்ள லிங்கில் நேரடியாக பதிவிறக்கம் செய்ய இயலுமே. authentication codeஏதும் தேவை இல்லையே?