PDA

View Full Version : என் நினைவலைகள் Ц கிரிக்கெட்



рокро░роЮрпНроЪрпЛродро┐
02-10-2005, 07:12 AM
என் நினைவலைகள் Ц கிரிக்கெட்


கிரிக்கெட் என்னை உயர்த்தியது எவ்வளவோ அதை விட பல மடங்கு கீழே தள்ளியது, ஆனாலும் என்னால் கிரிக்கெட்டை விட முடியவில்லை, அது இரத்தத்தில் ஊறி போயிட்டுது.

http://img.photobucket.com/albums/v452/paransothi/villagecricket.jpg

6ம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என்று தெரியாது. முதன் முதலில் கிரிக்கெட்டைப் பற்றி மற்றவர் பேசக் கேட்டது எப்போ என்றால் நம்ம முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் அவர்கள், தான் அறிமுகம் ஆன முதல் மூன்று டெஸ்ட்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்தது தான்.

அப்போ எங்க பஜார் தெருவில் இருக்கும் மூர்த்தி என்ற ஒரு அண்ணன் (4 வயது மூத்தவர்) தினமலர் படித்து விட்டு Уடேய், நேத்து நம்ம அசாருதீன் சென்சுரி அடித்தாண்டாФ என்பார்Ф எனக்கு சென்சுரி, பிப்டி, ரன், விக்கெட், ரன் அவுட், இப்படி பல ஆங்கில/கிரிக்கெட் வார்த்தைகளை கற்றுக் கொடுத்த குரு அவர். தினமும் அவரை கேள்வி கேட்டு நோண்டுவேன், சில சமயம் மனுசன் வெறுத்து ஓடியே போய்விடுவார், திட்டியும் இருக்கிறார்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/kapilazar.jpg

அப்போ தான் இந்திய அணி இலங்கை சென்றது, எங்க ஊருக்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவையும், இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையும் தெரியத் தொடங்கியது (தொலைக்காட்சி எங்க ஊரில் 3 பேர் வீட்டில் தான் இருந்தது, எங்க குவைத் சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர்/ தாத்தா வி.வி. பெருமாள், எங்க தெரு ராஜா அண்ணன்,

நாங்க கிரிக்கெட் பார்க்க கூடுவது பெருமாள் தாத்தா வீட்டில் தான், ஜெயக்குமார் மாமாவுக்கு கிரிக்கெட் ரொம்பவும் பிடிக்கும், நாங்க எல்லோரும் அங்கே கூடி கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்போம், சில நேரங்களில் புள்ளி புள்ளியாக அடிக்கும், ஆனாலும் நாங்க ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்போம். காற்று அடித்தால் தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகிவிட்டால், உடனே வானொலியைத் தேடி ஓடுவோம், அங்கே சார் ரன் கேலியே என்பதை கேட்டது, என்னப்பா சொல்றான் என்று ஒரு பெரியவர் கேட்க, அது ஒன்னும் இல்லை, சொல்லுபவருடைய சாரங் (லுங்கி) கிழிந்து விட்டதாம் என்று கிண்டல் செய்வோம். அப்போ எல்லாம் ஹிந்தியில் பச்சாஜ், தஸ் ரன், சடுக்கா, ஓகயா என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு ஒன்றுமே புரியாமல் விழித்திருக்கிறோம், எத்தனை ரன் என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் தத்தளித்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும்.

அப்போ தான் ஒரு போட்டியில் இலங்கை அணியினர் நாம் வெற்றி பெற இருந்த நிலையில் வெளிச்சம் இல்லை என்று சொல்லி போட்டியை நிறுத்த, நாங்க மொத்த சிங்களவர்களையும் திட்ட, அதை மறக்க முடியாது.

அது மாதிரி மறக்க முடியாத போட்டி கடைசி பந்தில் சேட்டனின் பந்தில் மியாண்டட் சிக்ஸர் அடிக்க, எளவு வீட்டுக்கு போய் வந்தவங்க மாதிரி நாங்க இருக்க, அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, சோறு தண்ணீ இறங்க வில்லை, இரவு முழுவதும் அழுது இருக்கிறேன். பல நாட்கள் கனவில் நான் பந்து வீசி மியாண்ட் மண்டையை உடைத்து, கடைசி பந்தில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கிறேன்.

இவ்வாறாக தொலைக்காட்சியில் பார்த்து பார்த்து கிரிக்கெட் மேல் வெறி வர, சிறுவர்கள் அனைவரும் மூர்த்தி அண்ணாவின் தலைமையில் ஒரு கிரிக்கெட் அணியை தோற்றுவித்தோம், அதுவே என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.


ஆரம்ப காலத்தில் நாங்க தென்னை மட்டையையும், பனை மட்டையையும் அழகாக செதுக்கி மட்டை உருவாக்குவோம், தென்னை மட்டை உடனே உடைந்து விடும், அதற்காக அகலமான பனை மட்டையை தேடி அதில் அழகாக செதுக்கி, அதற்கு சைக்கிள் டயரை குட்டி குட்டியாக வெட்டி கைப்பிடியில் மாட்டி, அதை பெருமையாக (எமனின் கதை மாதிரி) தோளில் தூக்கி அழைவதில் தனி மகிழ்ச்சி கிடைத்தது.

அப்புறம் வசதி படைத்த பசங்க பைசா கொடுக்க ரப்பர் பந்து வாங்குவோம், சில பந்துகள் பல மாதங்கள் எங்க மரண அடி தாங்கும், சில பந்துகள் ஒரே அடியில் கைலாய மோட்சம் அடையும், அதற்கு துக்கம் தெரிவித்து நாங்க அழுததை நினைத்தால் சிரிப்பு தான் வரும். அந்த பந்தை வாங்கி வந்தவனின் முதுகில் டின் கட்டி விடுவோம். அதன் பின்பு நான் தான் பர்சேசிங் மேனேஜர், எங்க மாமா கடைக்கு போய் கேரண்டி, வாரண்டி எல்லாம் கேட்டு வாங்கி, ஒரு பந்து வாங்க கடையில் இருக்கும் அத்தனை பந்தையும் தரையில் தூக்கிப் போட்டு, நல்ல பந்தை கண்டுபிடித்து வாங்கி வருவேன்.

அப்போ தான் சென்னையில் இருந்து வந்த ஒரு நண்பன் சொன்னான், ரப்பர் பந்து வாங்கியதும் அதில் ஊசி வைத்து ஒரு சின்ன துளை போட்டு விட்டால் பந்து என்ன அடி அடித்தாலும் தாங்கும் என்று சொல்ல, அவனை நாங்க கடவுள் மாதிரி பார்த்தோம்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/villageboy.jpg

பந்து கிடைக்காத நேரத்தில் கொமட்டிக்காய், பனங்கொட்டை, தென்னங்குறும்பல், சைக்கிள் டயர் ரப்பரை வளையம் வளையமாக வெட்டி தயாரித்த பந்து இப்படியாக கையில் கிடைத்ததை எல்லாம் பந்தாக உபயோகிப்போம்.

நாங்க கிரிக்கெட் ஆரம்பித்த சில காலத்தில் எங்க ஊரில் நிறைய தெருக்களில் ஆரம்பித்து விட்டார்கள், தெக்குத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, பள்ளிவாசல் தெரு, இப்படி நிறைய அணிகள்.

அதே நேரத்தில் எங்க அணியிலும் போட்டி, பொறாமைக் காரணமாக பல அணிகள் (குறைந்தப்பட்டம் 2 பேர்) தொடங்கி விட்டார்கள், பைசா இருப்பவன் எல்லாம் தலைவன், அவன் தானே பந்து வாங்கி வருவான் அதான்.,

http://img.photobucket.com/albums/v452/paransothi/villagecricket1.jpg

மூர்த்தி அண்ணா டீம், போஸ் அண்ணா டீம், தெக்குத்தெரு டீம் எல்லாம் புகழ்பெற்றவை. ஆரம்பத்தில் என்னை எல்லோரும் பந்து பொறுக்கத் தான் அழைப்பார்கள். அத்தனை திறமையாக விளையாடத் தெரியாது. எல்லோரும் அவுட் ஆனதும் டவுட்டாகவே என்னை பேட்டிங்க் செய்ய அனுப்புவார்கள். எனக்கு ப்ரண்ட் புட், பேக் புட், ஹீக்சாட், கவர் டிரைவ் என்று ஒன்றும் கிடையாது, கண்ணை மூடிக் கொண்டு ஒரு சுத்து, பந்து மட்டையில் பட்டதா அல்லது கட்டையில் பட்டதா என்பது கண்ணை திறந்தால் தான் தெரியும், சில சமயம் சுத்துத சுத்தில் கட்டையில் விழுந்து அவுட் ஆகி இருக்கிறேன்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/bowled.gif

எங்க ஊரில் கிரிக்கெட் பிரபலம் ஆக ஆக,நிறைய ஆட்டக்காரர்கள், திறமையானவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் (செலக்சன் கமிட்டியில் பைசா உள்ளவனுக்கும், சொந்த மட்டை வைத்தவனுக்கும் இடம்), என்பதால் நான் வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன், எவனுக்காவது அடி பட்டால் எனக்கு மகிழ்ச்சி பொங்கும், இடமும் கிடைக்கும். மட்டை அடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் பீல்டிங்கில் ஓடியாடி பந்தை தடுத்து மகிழ்வேன். சில நேரங்களில் அதற்கு கூட எப்போ அழைப்பார்கள் என்று இளவு காத்த கிளி மாதிரி காத்திருப்பேன்.


அப்புறம் கொஞ்ச நாளிலேயே என்னை விட சின்னப் பையன் எல்லாம் தன் திறமையால் அணியில் இடம் பிடிக்க, எனக்கு பொறாமை பிடிக்கத் தொடங்கியது. எனக்குள் வெறி எப்படியும் நாமும் நன்றாக ஆடி அணியில் இடம் பிடிக்க வேண்டும், அதற்காக எங்க வீட்டு தோட்டத்தில் ஒரு குரும்பலை கையில் எடுத்து தூக்கிப் போட்டு, அதை உடனே தென்னம்மட்டையால் ஓங்கி அடிப்பேன், நான் அடிப்பது எல்லாம் மட்டையில் படும் வரை தொடர்ந்து அடித்து பழகிக் கொண்டேன், சில நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் மேலே பட, அதை அறிந்த என் அம்மா என்னை போட்டு சாத்த, இப்படியாக பேட்டிங்கை நான் கற்றுக் கொண்டேன், கொஞ்ச நாளில் பணம் சேர்த்து வைத்து ஒரு பந்தை வாங்கி, யாருக்கும் தெரியாமல் எங்க வீட்டு சுவற்றில் அடித்து அடித்து பேட்டிங்க் பழகினேன். அப்படி விளையாடும் போது தான் முன்னால், பின்னால் சென்று ஆடும் திறமையை வளர்க்க முடிந்தது (வீட்டில் பல்ப் உடைத்து, உதை வாங்கியது தனிக்கதை).

http://img.photobucket.com/albums/v452/paransothi/kapildev2.jpg

ஒருவழியாக எனக்கும் பேட்டிங்க் தெரியும் என்று நம்பி என்னை அணியில் சேர்த்தார்கள், மேலும் பீல்டிங் நன்றாக செய்வேன். அப்படி அணியில் இடம் பிடித்தும், எனக்கு பேட்டிங்க் என்னவோ கடைசியில் தான் கிடைக்கும், ஊரில் மட்டையை சுத்துபவங்க எல்லாம் பேட்ஸ்மேன் என்பதால் பவுலிங்கில் ஆள் குறைவாக இருக்க நான் பவுலிங்க் போட ஆசைப்பட்டேன். அப்போ தான் பேட்டிங்க், பீல்டிங்க், பவுலிங்க் என்று தொடர்ந்து ஏதாவது செய்ய முடியும் என்ற ஆசை, மேலும் எனக்கு மானசீக குருவாக எல்லாத்தும் மேலாக கிரிக்கெட் இறைவனாக கபில்தேவ் அவர்களை மனதில் நிறுத்திக் கொண்டேன், பெயரில் கூட கபில் என்பதை சேர்த்துக் கொண்டேன், பள்ளி தேர்வில் என் பெயரோடு கபில் பெயரை எழுதி ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. வீடு முழுவதும் கபில்தேவ் படங்களாக மாட்டி வைத்திருப்பேன். இன்றும் கபில்தேவ் என்னோடு இருக்கிறார்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/kapilmohinder.jpg
இனிமேல் சிறப்பான பெயரையும் அணி நம்மைத் தேடி வரவும் ஆல்ரவுண்டர் ஆவது தான் சிறந்தது என்று பவுலிங்க் போடத் தொடங்கினேன் கொண்டேன். அங்கே தான் என் போராட்டம், நம்பிக்கை, வெற்றி எல்லாமே தொடங்கியது.

(நினைவலைகள் ஓய்வதில்லை Е.)

роЬрпАро╡ро╛
02-10-2005, 07:45 AM
ஆகா.. அருமையான நினைவலைகள்.. அப்படியே என்னையும் ஒரு பத்து வருடங்களுக்கு பின்னால் கொண்டு சென்று விட்டது..

அது எப்படின்னா.. நான் பண்ணுனதே நீங்களும் பண்ணியிருக்கிங்க..

எனக்கும் பந்து பொறுக்கி போட ஆரம்பத்திலிருந்து, சமிபத்தில் ப்ராசெக்ட் மேனேஜர் 4 பல்லை உடைத்த வரை வரலாறு இருக்கிறது.. :D :D

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

முடிந்தால், மன்ற நண்பர்கள் எல்லாம் மீட் பண்ணி ஒரு மேட்ச் போடலாம். (ஆனா அதில மட்டும், மன்மதன் எனக்கு எதிரணி :D :D :D) ஏன்னா.. என்னுடைய வரலாறை முறியடிக்க முயற்சி பண்ணனும்.. :D :D :D

thempavani
02-10-2005, 07:55 AM
ஜீவா ஏற்கனவே மன்மதன் உங்க மண்டையை உடைக்க வழி தேடிக்கொண்டிருக்கிறான்..இப்போது என்னடாவானால் நீங்களே எதிரணி கேட்டு வாங்குறீங்க...இதெல்லாம் நல்லயில்ல..ஆமா அப்போ மேட்ச்சுக்கு நடுவர் யாரு தலையா...அதுவும் சரிதான்

thempavani
02-10-2005, 07:56 AM
இந்த விளையாட்டில் இப்புட்டு விசயம் இருக்கா...பரம்ஸ் அண்ணா கலக்குங்க...

рокро┐ро░ро┐ропройрпН
02-10-2005, 08:12 AM
நான் சிறந்த கிரிக்கெட்டர் கிடையாது. ஆனால் கல்லூரி காலத்தில் எங்கள் அணியின் துவக்க ஆட்டக்காரர் நாந்தான். முதல் மூன்று மேட்சுகள் 10வது ஆளாக இறங்கினேன். அடுத்தது ஆஸ்திரேலிய அணியில் செய்வது போல மாற்றங்கள் செய்தோம். சுழற்சி முறை கேப்டன், நான் துவக்க ஆட்டக்காரர் ஆனேன்.
வேகப்பந்து வீசுவேன். பாவம் பேட்ஸ்மென் சுத்தி முடித்த பின்புதான் என் பந்து கடக்கும் . ஏனென்றால் என் சத்து அவ்வளவுதான். சில சமயங்களில் ஆட்டத்தின் இறுதி ஓவர்கள் போட்டதுண்டு. ஒரு ஆட்டத்தில் கடைசி ஓவரில் நான்கு ரன்கள் எதிரணியினர் எடுக்க வேண்டும். இரண்டு விக்கெட்டுகள் நாங்கள் வீழ்த்த வேண்டும். நான் ஒரு விக்கெட் எடுத்து இரண்டு ரன் மட்டும் கொடுத்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத கிரிக்கெட் தருணம் அது...

எங்கள் அணியில் யாரும் பெரிய பேட்ஸ்மேன் கிடையாது பவுலர் கிடையாது. ஆனாலும் ஜெயிப்போம். அதற்கு காரணம் எங்களுக்குள் இருந்த கூட்டு முயற்சி எந்த தருணத்திலும் வெற்றியை விட்டுக் கொடுக்காமல் விளையாடிய மன உறுதியால் தான் சாதித்தோம்.

рокро░роЮрпНроЪрпЛродро┐
02-10-2005, 11:09 AM
ஆகா.. அருமையான நினைவலைகள்.. அப்படியே என்னையும் ஒரு பத்து வருடங்களுக்கு பின்னால் கொண்டு சென்று விட்டது..

அது எப்படின்னா.. நான் பண்ணுனதே நீங்களும் பண்ணியிருக்கிங்க..

எனக்கும் பந்து பொறுக்கி போட ஆரம்பத்திலிருந்து, சமிபத்தில் ப்ராசெக்ட் மேனேஜர் 4 பல்லை உடைத்த வரை வரலாறு இருக்கிறது.. :D :D

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

முடிந்தால், மன்ற நண்பர்கள் எல்லாம் மீட் பண்ணி ஒரு மேட்ச் போடலாம். (ஆனா அதில மட்டும், மன்மதன் எனக்கு எதிரணி :D :D :D) ஏன்னா.. என்னுடைய வரலாறை முறியடிக்க முயற்சி பண்ணனும்.. :D :D :D

நன்றி ஜீவா,

கண்டிப்பாக அடுத்த முறை நாம் எல்லாம் சந்திக்கும் போது கிரிக்கெட், கண்டுபிடிக்கவா, சுவேதாவின் அழகு குறிப்புகள் எல்லாவற்றையும் வைத்து ஒரு கலக்கு கலக்கலாம்.

தம்பி பிரதீப் திருமணம் எப்போ என்று கேளுங்க ?

рооройрпНроородройрпН
02-10-2005, 11:53 AM
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..
சின்னப்பிள்ளையில் பிளாஸ்டிக் பேட்டை வைத்து
பிளாஷ்டிக் பந்தை வைத்து சுட்டிகளுடன் விளையாடிய
கிரிக்கெட் ஞாபகம் வருதே....

அப்புறம் நான் தெருவிற்கு வந்து
மரத்திலான பேட்டை வைத்து கொண்டு
கார்க் பந்தை அடித்து விளையாடி
தெருவினரை பயமுறுத்திய கணங்கள் ஞாபகம் வருதே..

தெருவில் விளையாடிய பிறகு
அடுத்த கட்டம், கிரிக்கெட் மைதானம் சென்று
கிரிக்கெட் பந்தில் விளையாடிய ஆட்டம்
ஞாபகம் வருதே...................

ஃபீல்டிங்கில் வீக்காய் இருந்த
நான் பிறகு, காக்கா மாதிரி
பறந்து சென்று பந்தை கவ்விய
நாட்கள் ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

தோர்ணமெண்ட் விளையாட்டில் வென்று
கோப்பையில் என் பெயர் பொறித்திருந்தது
கண்டு பெருமையடைந்த நாட்கள் இன்று
ஞாபகம் வருதே..


கிரிக்கெட் பைத்தியங்களின் மத்தியில் நான் வாழ்ந்ததால், கல்லூரி செல்லும் வரை நானும் கிரிக்கெட் பைத்தியமாகத்தான் இருந்தேன்.. எந்தளவு பைத்தியம் என்றால், ஒருதடவை மிக அழகான ஒரு பெண், என்னிடம் தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது, (என் வீட்டிற்கு வந்த கெஸ்ட் - நேரம் எல்லோரும் தூங்கும் நேரம் மதியம் 3 மணி) என் அடுத்தாத்து நண்பன், ரொம்ப நேரமா என் பெயரை சொல்லி அழைத்து, நான் கண்டுக்காம விட, அவன் என் வீட்டு கூரை மீது ஏறி என் வீட்டில் எட்டி பார்த்து, கிரிக்கெட் பந்தை எடுத்து என் வீட்டில் எறிந்து அதை எடுக்கிற சாக்கில் என் வீட்டில் நுழைந்து , என்னை தரதரவென்று மைதானம் இழுத்து சென்று, அங்கே வெறும் நான்கு பேர் மட்டுமே, கிரிக்கெட் விளையாட வந்திருந்து, என் பொறுமைகளை சோதித்து பார்த்திருக்கிறது அந்த கிரிக்கெட்.

பல அடிகள், பல காயங்கள்.. நான் அணிந்திருக்கும் கண்ணாடி அடிக்கடி உடையும்.. நானும் நிறைய உடைத்திருக்கிறேன்.. ஒரு தடவை பந்தை ஃபீல்டிங் செய்து, தூக்கி எறியும் போது சைடுவாக்காக தான் தூக்கியெறியணும் என்று என் நண்பன் சொல்ல, எங்கே இப்படியா என்று நான் வீச, அட ஒரே அலைவரிசையில் சென்ற பந்து என் நண்பன் ஒருவனின் பின்மண்டையை பதம் பார்த்தது..

ஒருதடவை தோர்னமெண்ட் ஃபைனல், நான் பவுலிங் போடும் போது , ஓவர் பிட்சாக அடிக்கடி பந்து விழும்.. அடிக்க தோதா.. அப்படியாக ஒரு சிக்ஸர் கொடுத்தேன்..... பவுண்டரில் நின்றிருந்த நண்பனின் கையில் பட்டு ஸ்லிப் ஆகி சிக்ஸர் ஆனது. யாரும் ஒண்ணும் சொல்லவில்லை.. ஆனாலும் நம்ம அம்பயர் என்னிடம் , இப்படித்தான் ஓ.பி போட்டு நல்லா கொடுக்கணும் என்று சிரிக்க, அடுத்த பந்தும் ஓபி..இந்த முறை யார்க்கர். கால் அவுட். எல்பிடபுள்யூ. அடுத்த பந்து ஓபி.. பவுல்ட். அடுத்து பந்தும் ஓபி. கேட்ச்.. நம்பமுடியவில்லை...... ஹாட்ரிக்.. நான் ஆடிய கடைசி ஆட்டம் அதுதான்.. பிறகு கல்லூரியில் ஏனோ கிரிக்கெட் ஆடவில்லை........ ஒரு மாதிரியாக போய்விட்டது..

கிரிக்கெட் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.. நிறைய சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கிறது. . நான் ஸ்போர்ட்ஸ்டார் வாசகன்.. நடுவில் இருக்கும் போஸ்டர் என்னிடம் கலெக்சனாக இருந்தது. இந்த முறை ஊர் சென்ற போதும் என் அம்மா இதை என்ன பண்ணட்டும் என்று கேட்டார்.. அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிட்டு வந்தேன்..என் நினைவுகளை கிண்டிய கபில்தேவாவுக்கு நன்றி

இப்போ நான் நினைத்தாலும் கிரிக்கெட் ஆட முடியாத நிலை.. காரணம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.. சோ, ஜீவா நம்ம ரம்மி ஆடலாம்.. :D :D

рокро░роЮрпНроЪрпЛродро┐
03-10-2005, 05:24 AM
இந்த விளையாட்டில் இப்புட்டு விசயம் இருக்கா...பரம்ஸ் அண்ணா கலக்குங்க...

நன்றி சகோதரி,

நான் சொல்ல இருப்பது எல்லாம் நம்ம ஊரு பக்க கதைகள் தான். கண்டிப்பாக படியுங்க.

pradeepkt
03-10-2005, 08:17 AM
அண்ணா கலக்கிட்டீங்க. நான் இன்னைக்குக் காலையில பாரதி அண்ணாகிட்ட பேசும்போது சொன்னேன், நீங்க துவக்கி வச்சது நம்ம எல்லாரையும் நினைவலைகள் எழுத வைக்கப் போவுதுன்னு. நீங்களும் அப்படியே எங்க சின்ன வயசை எல்லாம் திருப்பிக் கொண்டாந்துட்டீங்க. அப்படியே மன்மதனும் பிரியனும் டென்சன் ஆகிட்டாங்க பாருங்க. பிரியன் வேகப் பந்து வீசுவதை நான் கற்பனை செய்து பார்க்க உங்கள் பதிவு உதவி இருக்கிறது.

என் கிரிக்கெட் வரலாறு மிகச் சிறியது. சின்ன வயதில் கோலி, பம்பரம் (அதில் ஆக்கர் என் ஸ்பெஷல் - அதேபோல் எல்லாரும் என் பம்பரத்தை குறி வைத்துத்தான் தாக்குவார்கள்), கில்லி தாண்டு போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி விளையாட்டுகள் இருந்தமையால் கிரிக்கெட் எங்களை ஈர்க்கவில்லை. பிறகு வானொலி, டிவி எல்லாம் வந்தபின்னர் வடக்குத் தெரு, ஆசாரி தெரு பசங்களுடன் மெதுவாக ஆரம்பித்தது. நான் தாத்தா வீட்டில் தங்கிப் படித்ததால் அப்பா வரும்போது நச்சரித்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். எனவே எனக்குக் கிடைத்த மட்டை, காலில் கட்டும் பேட், ரப்பர் பந்து, கிளவுஸ் போன்றவை அப்போது பெரிய விஷயம். அதை வைத்து நான் என்னுடன் விளையாடுபவர்களைக் கண்ட்ரோல் செய்ய முடிந்தது. நான் போடும் கிறுக்குக் கட்டுப்பாடுகளுடன் விளையாட எதுத்த வீட்டு முத்து, ஆசாரி தெரு கார்த்தி முதலான சிலர் மட்டுமே உண்டு;
1. நிரந்தர கேப்டன் நாந்தான் - அணி என்று எதுவும் கிடையாது பேட்டிங், பௌலிங் போடுபவர் தவிர மிச்ச அனைவரும் பீல்டிங்
2. பீல்டிங் போன்ற சின்னத் தனமான வேலைகளைக் கேப்டன் செய்ய மாட்டார்.
3. கேப்டன் நினைத்தால்தான் அவர் அவுட்.
4. அப்படியே அவுட்டானாலும் போனால் போகிறதென்று அவர் பௌலிங் மட்டுமே போடுவார்.

என்னுடைய இந்த சர்வாதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மக்களிடம் மட்டை, காரக் பால் போன்றவை வந்த போது குறையத் துவங்கியது. இதையும் மீறி ஒரு முறை வடக்குத் தெருவுடனான போட்டியில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். முதல் பந்திலேயே அவுட்டானேன். என் கேப்டன் நெட்டை சுரேஷ் எப்படியோ பேசிச் சரிக்கட்டினான். இரண்டாவது பந்து ஸ்கிப்பரால் நேரடியாக லட்டு மாதிரி பிடிக்கப் பட்டது. அம்பயர் எங்கள் கேப்டனுக்குத் தூரத்துச் சொந்தமானதால் மட்டையில் பந்து படவேயில்லை என்று தல்லாகுளத்து மாரியம்மன் மீது சத்தியம் செய்த பிறகு அவுட் இல்லை என்று அறிவிக்கப் பட்டது. மூன்றாவது பந்தில் எந்த வித ஐயத்திற்கு இடமில்லாமல் ஸ்டம்ப் பைல்ஸோடு எகிறியது. வேறு வழியில்லை. இவ்வாறாக ஹேட்ரிக் அவுட் ஆன உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை நான் பெற்றேன். கின்னஸுக்கு அனுப்பி வைக்கலாம் என்று நெட்டை சுரேஷ் சொன்னதைப் பெருந்தன்மையாக நிராகரித்தேன்.

இதைச் சகித்துக் கொள்ளாத நான் அப்படியே கிரிக்கெட்டுக்கு மூட்டை கட்டிவிட்டு என் ஹோம் கிரவுண்டான கோலிக் குண்டு, கில்லி தாண்டுவிற்குத் தாவினேன்.

வெகு நாள் கழித்து பெங்களூரில் எங்கள் ஆபீசுக்குப் பக்கத்தில் இருந்த சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுடனான மேட்ச் நடந்தது. எங்கள் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் பெவிலியன் மட்டும் தெரியும். டிவியில் மாட்ச் ஓடிக் கொண்டிருந்தது. மொத்தக் கூட்டமும் அமைதியாக ரிக்கி பாண்டிங் அடித்த சிக்ஸர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாக ஏதேனும் ஒரு சிக்ஸர் மைதானத்தைத் தாண்டி எங்கள் ஆபீசிற்கே வரும் என்று காத்திருந்தேன். வரவில்லை. காத்திருந்த நேரத்தில் என் வாழ்வில் கிரிக்கெட் இருந்திருந்தால் என்ன நிலை என்று எண்ணி மகிழ்ந்தேன்.

рооройрпНроородройрпН
03-10-2005, 08:32 AM
:D :D :D வாரே வாஹ்.. மார்க் வாஹ் .. பிரதீப் வாஹ்... :D :D உன் கிரிக்கெட் சிரிக்கெட் ஆன கதை இப்படித்தானா... :rolleyes: :rolleyes: உன் பதிவை கின்னஸ்க்கு பார்வேர்டு பண்ணிட்டேன்.. போன் கால் வரும்.. :D :D ..

рокро░роЮрпНроЪрпЛродро┐
03-10-2005, 11:16 AM
ஆஹா, தம்பி நீங்க கிரிக்கெட்டில் தனி இராஜ்யமே நடத்தியிருக்கீங்க.

கின்னஸ் சாதனையை நானும் படிக்க ஆசை.

கண்டிப்பாக ஒரு போட்டி நடத்த வேண்டியது தான். சுவேதா பந்து வீச நீங்க விளையாடலாம். ஸ்டெம்ப் விழுந்தால் அது காற்றில் விழுந்தது, பூகம்பத்தில் விழுந்தது என்று நடுவர் தலை சமாளித்து விடுவார்.

pradeepkt
03-10-2005, 11:56 AM
நடுவர் தலையா இருந்தாச் சரி,
நீங்க கேப்டனா இருந்திருங்க, நான் எத்தனை மேட்ச்சில வேண்டுமானாலும் செஞ்சுரி அடிப்பேன்.
கிரிக்கெட் மேல் எனக்கு அத்தனை வெறுப்பு வந்ததற்கு இது காரணமா என்று பின்னர் தனிமையில் யோசித்துப் பார்த்தேன் - இல்லை என்றே தோன்றியது :D

рокро░роЮрпНроЪрпЛродро┐
04-10-2005, 06:44 AM
மன்மதா,

உன் பாடலும், உன் கிரிக்கெட் அனுபவங்களும் மிக அருமையாக இருந்தது.

ஹாட்ரிக் எடுத்தது கலக்கல் அனுபவம். நானும் எப்போவும் நல்ல ஆட்டக்காரர்களை அவுட் செய்ய வேகமாகவும், சில நுணுக்கங்களை உபயோகிப்பேன், கடைசி ஆட்டக்காரர்களுக்கு மெதுவாக அடிக்க எளிதாக போட்டாலே அவுட் ஆகிவிடுவாங்க.

கடைசியில் ஏன் விளையாட முடியாது என்பது நினைத்து மனம் கவலையடைகிறது நண்பா.

gragavan
04-10-2005, 07:02 AM
அட பரஞ்சோதி பிரமாதமா வந்திருக்கிறது நினைவலை. இப்படியே எழுது. எழுத்துப் பயிற்சியும் சிறப்பாகும்.

கிரிக்கெட் என்றால் எனக்குப் பிணக்கு. ஆமணக்கு. அதைக் கண்டாலே ஆகாது. ஏனென்று தெரியாது. வீட்டில் அப்பா, தங்கை, அத்தை, மாமா என்று எல்லாருமே கிரிக்கெட் பைத்தியங்களாக இருக்க...........நான் மட்டும் கிரிக்கட் பிடிக்காதவனாக இருந்தேன். இருக்கின்றேன். பள்ளியில் விளையாட்டு வேளையும் உண்டு. தூத்துக்குடி செயிண்ட் சேவியர்ஸ் பள்ளியில் மற்ற நண்பர்கள் எல்லாம் கூடி விளையாடிக் கொண்டிருக்க, நானும் சில நண்பர்களும் நெல்லிக்காய், மாங்காய், சவ்வு மிட்டாய் வாங்கித் தின்று சர்ச் நிழலில் கதை பேசுவோம். ரன், ஃபோர், சிக்சர், அவுட், டக் இவைகளைத் தவிர எனக்கு கிரிக்கெட்டில் ஒன்றுமே தெரியாது என்றாலும் மிகையாகாது. இப்போது இந்த கிரிக்கெட் வீரர்கள் விளப்பரப் படங்களில் நடித்து அதன் மூலம் தங்களை எனக்கு அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். ஹி ஹி.

ஆனாலும் எங்களூர் புதூரில் ஒருமுறை குடும்பத்தார் எல்லாரும் சென்றிருந்த போது, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். எங்கள் தோட்டத்திற்குப் போனோம். இரண்டு அணிகள். ஒன்றிற்கு நான் கேப்டன். இன்னொன்றிகு எனது அத்தை மகன். நான் பந்தையே மட்டையில் தட்டாமல் அவுட் ஆனாலும் பல சகுனித்தனங்கள் செய்து எனது அணியை வெற்றி பெறச் செய்து விட்டேன். ஹி ஹி.

рооройрпНроородройрпН
04-10-2005, 08:03 AM
மன்மதா,

உன் பாடலும், உன் கிரிக்கெட் அனுபவங்களும் மிக அருமையாக இருந்தது.

ஹாட்ரிக் எடுத்தது கலக்கல் அனுபவம். நானும் எப்போவும் நல்ல ஆட்டக்காரர்களை அவுட் செய்ய வேகமாகவும், சில நுணுக்கங்களை உபயோகிப்பேன், கடைசி ஆட்டக்காரர்களுக்கு மெதுவாக அடிக்க எளிதாக போட்டாலே அவுட் ஆகிவிடுவாங்க.

கடைசியில் ஏன் விளையாட முடியாது என்பது நினைத்து மனம் கவலையடைகிறது நண்பா.

கிரிக்கெட் ஆடும் போது ஒரு வெறி இருக்கும்.. இருந்தது.. சிக்ஸர் ஒரே முறைதான் கொடுத்திருக்கிறேன்.. அதுவும் நான் B levelல் நின்று விட்டேன்.. காதரிய்யா ஏ, பி, சி என்ற கிரிக்கெட் கமிட்டியே இருந்தது. சிறுவயதில் தெருவுக்கும் தெருவுக்கும் போட்டி நடக்கும்.. அது C டீம். அப்புறம் பாலிடெக்னிக் படிப்பு வரை B டீம். அப்புறம் வேகப்பந்திற்கு பயந்தே A டீம் போகவில்லை.. நாகையில் மோசஸ் என்றொரு மோசமான பந்துவீச்சாளர் இருந்தார். அவரின் பந்துவீச்சை உள்ளூர் சோயிப் அக்தர் வேகத்திற்கு ஒப்பிடலாம்... தூரத்தில் நின்று பார்க்கும் போது பயமா இருக்கும்..

நான் 7 அல்லது 8 வது டவுனாகத்தான் களம் இறங்குவேன்.. மித வேகம், சுழற்பந்து face பண்ண ரொம்ப பிடிக்கும்.. வேகப்பந்து எனக்கு வீசத்தான் தெரியும்.. ஆனால் face பண்ணும் போது என் கண்ணாடியையும் மீறி ஒரு பயம் தெரியும்.. அதை வெளிக்காட்டாமல், சில நேரம் வேகப்பந்தை எதிர்கொள்ளும் போது, சிலிப்பில் தொட்டு விட்டே ரன்கள் எடுப்பேன்.. இல்லையென்றால் பேட்டை ஓங்கி வீசி, லேசாக டச் கொடுத்து, ஒரு ரன் எடுத்து ஓடி விட்டு, ரன்னர் எண்ட் போய், ஆசுவாசப்படுத்தி கொள்வேன்..

கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத சீசன் நாட்கள்.. ஒவ்வொரு சம்பவங்களும் நினைவில் இருக்கிறது.. அது மாதிரி கல்லூரி நாட்களும்.. நினைவுகளே போதும்.. இனி விளையாடி சாதிக்கபோவதில்லை.. டைம் பாஸ் விளையாட்டுதான் நிறைய இருக்கே... :rolleyes: :rolleyes:

рокро╛ро░родро┐
05-10-2005, 05:21 PM
அருமையாக வந்திருக்கிறது பரஞ்சோதி. தொடர்ந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் தங்கள் நினைவுகளை சுவைபட சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒளிந்திருக்கும் திறமை எல்லாம் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. படிக்கவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நினைவலைகள் ஓயாமல் வீசட்டும்.

Narathar
05-10-2005, 06:50 PM
அட சேரன் ரேஞ்சுக்கு எல்லோரது நினைவலைகளையும் ஒரு பத்து வருடம் பின்னுக்கு தள்ளியுள்ளீர்கள்( எனது நினைவலைகளையும் சேர்த்து..........)

உங்கள் ஆதங்கத்தை பார்க்கும் போது நான் எனக்கு கிடைத்த வாய்ப்பை தவரவிட்ட கதையை சொன்னால் அடிக்க வருவீர்கள்.

நான் படித்த பாடசாலை அரவிந்த டீ சில்வா, ஹசான் திலகரத்னே, கோசல குறுப்பு ஆரச்சி மற்றும் (எனது சக தோழன்) நவீட் நவாஸ் ஆகியோர் படித்த் கல்லூரி.

எங்கள் பாடசாலையிலே கிரிக்கட் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களது திறமையை பொறுத்து பாடசாலை லெவல் கிளப் லெவல், நஷனல் லெவல், சர்வதேச லெவல் என்று ஏற்றி விடுவார்கள்.

நவீட் நவாசுடன் பாடசாலை மட்டத்தில் கிரிக்கட் விளையாட நானும் தகுதி பெற்றேன்.... ஆனால் அப்போது எனது வகுப்பாசிரியர் நான் கிரிக்கட்டுக்கு போனால் பாடத்தை கோட்டை விடுவேன் என்று மிரட்டியதால் ஜகா வாங்கிக்கொண்டேன்................

பின்னர் டென்னிஸ் பந்தில் கிரிக்கட் விளையாடுவதோடு சரி!

рокро░роЮрпНроЪрпЛродро┐
06-10-2005, 05:52 AM
இராகவன் அண்ணா, உங்க கிரிக்கெட் அனுபவம் மிகக் குறைவு என்றாலும் சுவையானதாக இருந்திருக்கிறது.

எங்க அத்தையின் ஊரான தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியில் கிரிக்கெட் விளையாடியவை எல்லாம் சொல்ல இருக்கிறேன்.

рокро░роЮрпНроЪрпЛродро┐
06-10-2005, 05:53 AM
அருமையாக வந்திருக்கிறது பரஞ்சோதி. தொடர்ந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் தங்கள் நினைவுகளை சுவைபட சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒளிந்திருக்கும் திறமை எல்லாம் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. படிக்கவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நினைவலைகள் ஓயாமல் வீசட்டும்.

மிக்க நன்றி அண்ணா.

உங்க எழுத்தே என்னை இவ்வாறு எழுத தூண்டியது என்பதை சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

рокро░роЮрпНроЪрпЛродро┐
06-10-2005, 05:57 AM
அட சேரன் ரேஞ்சுக்கு எல்லோரது நினைவலைகளையும் ஒரு பத்து வருடம் பின்னுக்கு தள்ளியுள்ளீர்கள்( எனது நினைவலைகளையும் சேர்த்து..........)

உங்கள் ஆதங்கத்தை பார்க்கும் போது நான் எனக்கு கிடைத்த வாய்ப்பை தவரவிட்ட கதையை சொன்னால் அடிக்க வருவீர்கள்.

நான் படித்த பாடசாலை அரவிந்த டீ சில்வா, ஹசான் திலகரத்னே, கோசல குறுப்பு ஆரச்சி மற்றும் (எனது சக தோழன்) நவீட் நவாஸ் ஆகியோர் படித்த் கல்லூரி.

எங்கள் பாடசாலையிலே கிரிக்கட் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களது திறமையை பொறுத்து பாடசாலை லெவல் கிளப் லெவல், நஷனல் லெவல், சர்வதேச லெவல் என்று ஏற்றி விடுவார்கள்.

நவீட் நவாசுடன் பாடசாலை மட்டத்தில் கிரிக்கட் விளையாட நானும் தகுதி பெற்றேன்.... ஆனால் அப்போது எனது வகுப்பாசிரியர் நான் கிரிக்கட்டுக்கு போனால் பாடத்தை கோட்டை விடுவேன் என்று மிரட்டியதால் ஜகா வாங்கிக்கொண்டேன்................

பின்னர் டென்னிஸ் பந்தில் கிரிக்கட் விளையாடுவதோடு சரி!

நாரதர் அவர்களே!

இலங்கையை பொறுத்தமட்டும் திறமை இருந்தால் அணியில் இடம் பெறுவது எளிது, நல்ல வாய்ப்பு போய் விட்டது, எங்களுக்கும் உங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் பாக்கியம் போய் விட்டது.

இங்கே எனது நண்பன் ஜெயவர்தனே மிகச்சிறந்த ஆட்டக்காரர், உள்ளூர் அணியில் இடம் பெற்று, கொஞ்ச நாளில் தேசிய அளவில் இடம் பிடிக்க வேண்டியவர், ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எங்க கம்பெனியில் வாட்மேனாக வேலை செய்ய வந்துட்டார், வயது 18 தான் ஆகுது.

அவர் இங்கே பல போட்டிகளில் வெற்றி நாயகனாக திகழ்கிறார்.

рокро░роЮрпНроЪрпЛродро┐
06-10-2005, 06:00 AM
கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத சீசன் நாட்கள்.. ஒவ்வொரு சம்பவங்களும் நினைவில் இருக்கிறது.. அது மாதிரி கல்லூரி நாட்களும்.. நினைவுகளே போதும்.. இனி விளையாடி சாதிக்கபோவதில்லை.. டைம் பாஸ் விளையாட்டுதான் நிறைய இருக்கே... :rolleyes: :rolleyes:

நண்பா, நீயும் என்னை மாதிரியே நிறைய நினைவுகள் வைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி.

இனிமேல் குழந்தை குட்டியோடு விளையாடலாம் தானே, இல்லை என்றால் சக்தி என்னப்பா நீங்க, ஒரு பந்தை கூட விக்கெட் பார்த்து வீசத் தெரியலையே என்று சொல்லி விடுவாளே!

Narathar
06-10-2005, 06:18 PM
நாரதர் அவர்களே!

இலங்கையை பொறுத்தமட்டும் திறமை இருந்தால் அணியில் இடம் பெறுவது எளிது, நல்ல வாய்ப்பு போய் விட்டது, எங்களுக்கும் உங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் பாக்கியம் போய் விட்டது..

தப்பித்தீர்கள்!!!!!


இங்கே எனது நண்பன் ஜெயவர்தனே மிகச்சிறந்த ஆட்டக்காரர், உள்ளூர் அணியில் இடம் பெற்று, கொஞ்ச நாளில் தேசிய அளவில் இடம் பிடிக்க வேண்டியவர், ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எங்க கம்பெனியில் வாட்மேனாக வேலை செய்ய வந்துட்டார், வயது 18 தான் ஆகுது.

அவர் இங்கே பல போட்டிகளில் வெற்றி நாயகனாக திகழ்கிறார்.

அவருக்கு எனது அனுதாபத்தை சொல்லுங்கள்,
ஒரு நாள் அவர் திறமைக்கு இடம் கிடைக்கும் என்று ஆறுதல் சொல்லுங்கள்.

ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவர் நம் மஹேல ஜயவர்தனா போல வர வாழ்த்துக்கள்

mania
14-10-2005, 04:49 AM
பரம்ஸ்.....பாராட்டுகள்....:D மிகவும் அழகான முறையில் பழைய காலத்தை நினைவுக்கு நேர்த்தியாக கண் முன்னே கொண்டு வந்திருக்கிறாய்....:D .படிக்கும்போதே என்னுடைய அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டாய்.:D
கோர்வையாக எழுத தான் நேரமும் திறமையும் பொறுமையும் இல்லை.....???:rolleyes: :eek:
அன்புடன்
மணியா....:D