PDA

View Full Version : சானியாவுக்கு விளம்பரச் சந்தையில் "மெகா' ī



Narathar
02-10-2005, 01:45 AM
http://www.dinamalar.com/2005oct01sportsmalar/Sports%20Malar%20-%2002.jpg

"மினி ஸ்கர்ட்' சானியாவுக்கு இந்திய விளம்பரச் சந்தையில் "மெகா' மதிப்பு. பெட்டி நிறைய கரன்சிகளை அள்ளி அடுக்கியவாறு, ஒரு கூட்டம் அவர் வீட்டு வாசலில் "க்யூ' வகுக்கிறது. கிரிக்கெட் காரர்கள் எல்லாம், இந்த 18 வயது குட்டியூண்டுப் பொண்ணை கொஞ்சம் பயத்துடன் கவனிக்கிறார்கள். தங்களை துக்கிச் சாப்பிட்டு விடுவார் இந்த "மினி' என்ற பயம் அவர்களுக்கு!

லேட்டஸ்ட்டாய், சானியா வீட்டுக் கதவை "டொக்.. டொக்...' செய்தவர்கள்... ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தார். அவர்களின் "கெட்ஸ்' ரக கார்களுக்கு, விளம்பரத் துதராக சானியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மாருதி "ஸ்விப்ட்' கார்களுடன் போட்டியைச் சமாளிப்பதற்கு, சானியாவின் துணை தேடுகிறது "கெட்ஸ்' கார். சீக்கிரமே, "டிவி'யில் தோன்றி, "இந்தக் காரையே வாங்குங்க...' என்று உங்களுக்கு பரிந்துரை செய்வார் சானியா.

மொத்தம் மூன்றாண்டுகளுக்கான இந்த விளம்பர ஒப்பந்தத்துக்கு சானியா வாங்கியிருக்கும் தொகை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? லட்சம்...? பத்து லட்சம்...? ஐம்பது லட்சம்...? ம்ஹும்! ஒன்றரைக் கோடி சார்... ஒன்றரை கோடி! ஆனால், இந்த "பேமெண்ட்' மேட்டர் பற்றிக் கேட்டால், வாய் திறக்க மறுக்கிறார் சானியா (ஒருவேளை, இதைவிடவும் கூடுதலாக இருக்குமோ!).

சும்மா அரை மணிநேரம், கேமிரா முன் கார் ஓட்டினால் முடிந்தது. ஒன்றரை கோடிக்கு ஒரே செக். நம்மூர் பொண்ணுங்க... பல்லாங்குழி, கண்ணாமூச்சி ரே ரே எல்லாம் மறந்து விட்டு டென்னிஸ் பழகினால்... தேவலை!

Thanks to Dinamalar.com

மன்மதன்
02-10-2005, 12:16 PM
திறமை இருக்கும் இடத்தில் புகழ் கிடைக்கும்.. பணமும் கூடவே சேரத்தான் செய்யும்.. தினமலரின் பெருமூச்சு கேட்கிறது.. ஆண்டவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாதே.....................!!! எத்தனை நாட்களுக்குத்தான் கிரிக்கெட் வீரர்களையும், நடிகைகளின் இரண்டு இஞ்ச் மேக்கப் முகத்தையும் பார்ப்பது.. சானியா இளமையின் ட்ரேட் மார்க்.

Narathar
05-10-2005, 07:31 PM
சானியா இளமையின் ட்ரேட் மார்க்.

இளமையின் மட்டுமல்ல திறமையினதும் கூட