PDA

View Full Version : பாகிஸ்தானிய பரிதாபம்!



poo
01-10-2005, 06:23 AM
கத்தியேந்திய கரங்களில்
கற்களிருந்திருந்தால்...
இத்தனை கலக்கமில்லை...
நீயொரு
ஆதிவாசியென ஆசுவாசப்பட்டிருப்பேன்..


உன் கரங்களில்
கட்டுண்ட துப்பாக்கிக் கருவியும்கூட
களங்கம்பட்டதாய் கலங்கியிருக்கும்..
இத்துணை ஈனச்செயலுக்கு
என்னை துணையாக்கிவிட்டாயே யென..


என் மூக்கறுத்ததால்
கிழிந்தது உன் முகமூடி...


உதடுகள் ஊனமானதால்
ஊமையாகிவிடாது
உள்ளெறியும் எரிமலைகள்....


தலையெடுக்கத் துணிந்தபின்னும்
தளையறுக்கத் தயக்கமேன்..


திரை போட்டிருக்கும்
சிறைக் கைதிகளே..
விலங்குடைக்க
வினையூக்கியாக்கிக் கொள்ளுங்களேன்...
என் விகார முகத்தினை!

பிரியன்
04-10-2005, 05:21 AM
பூ இந்தக் கவிதை பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட டேனியல் பேர்ல்க்காகவா

உதடுகள் ஊனமானதால்
ஊமையாகிவிடாது
உள்ளெறியும் எரிமலைகள்....

அப்படி இருந்தால் இந்த வரிகள் பொருந்ததது போல் இருக்கிறது..

அல்லது

முக்தரன்மாயி பிரச்சனையை சொல்ல வருகிறீர்களா..

வேறு எந்த வகையிலும் யோசிக்க முடியவில்லையே

poo
04-10-2005, 06:44 AM
பூ இந்தக் கவிதை பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட டேனியல் பேர்ல்க்காகவா


அப்படி இருந்தால் இந்த வரிகள் பொருந்ததது போல் இருக்கிறது..

அல்லது

முக்தரன்மாயி பிரச்சனையை சொல்ல வருகிறீர்களா..

வேறு எந்த வகையிலும் யோசிக்க முடியவில்லையே

சமீபத்தில் விவாகரத்து கோரிய 20 வயது பாகிஸ்தான் பெண்(4 குழந்தைகளுக்கு தாய்!) ஒருத்தியை அவளது கணவனின் தம்பி பஞ்சாயத்திற்கு அழைத்து கௌரவக் குறைச்சலை ஏற்படுத்திவிட்டதாக கொடூரமான முறையில் மூக்கை அறுத்து, உதட்டை கிழித்து.. மச்சினனின் காலில் சுட்டு அட்டூழியம் செய்ததை செய்தியில் கண்டேன்.. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர்(முக்தரன் மாயி?!) ஞாபகமில்லை!

பிரியன்
04-10-2005, 06:56 AM
நன்றி பூ. ஏனென்றால் எனக்கு இந்த செய்தி தெரியாது. அதனால் வந்த குழப்பமே... இது போன்ற சமுதாய பார்வை நிரம்பிய கவிதைகளை தொடர்ந்து கொடுங்கள்....

gragavan
05-10-2005, 05:20 AM
சமீபத்தில் விவாகரத்து கோரிய 20 வயது பாகிஸ்தான் பெண்(4 குழந்தைகளுக்கு தாய்!) ஒருத்தியை அவளது கணவனின் தம்பி பஞ்சாயத்திற்கு அழைத்து கௌரவக் குறைச்சலை ஏற்படுத்திவிட்டதாக கொடூரமான முறையில் மூக்கை அறுத்து, உதட்டை கிழித்து.. மச்சினனின் காலில் சுட்டு அட்டூழியம் செய்ததை செய்தியில் கண்டேன்.. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர்(முக்தரன் மாயி?!) ஞாபகமில்லை!அடக்கடவுளே. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா........என்று ஒழியும் இந்த பெண்ணடிமைச் சமுதாயம். சீச்சீ.

pradeepkt
05-10-2005, 05:30 AM
கேவலம், மனித சமுதாயத்திற்கே அவமானம்.

அறிஞர்
06-10-2005, 12:10 AM
அருமையான கவிதை பூ....

அவல நிலையை படம் பிடித்து காட்டும்..... தங்கள் வரிகள் அருமை

பிரசன்னா
06-10-2005, 07:53 PM
அருமையான கவிதை பூ....

என்று ஒழியும் இந்த பெண்ணடிமை?........


கத்தியேந்திய கரங்களில்
கற்களிருந்திருந்தால்...
இத்தனை கலக்கமில்லை...
நீயொரு
ஆதிவாசியென ஆசுவாசப்பட்டிருப்பேன்
அருமையான கவிதை
கவிதைகளை தொடர்ந்து கொடுங்கள்