PDA

View Full Version : தலைப்பு (இரண்டாம் பதிவில்!??)



poo
30-09-2005, 07:00 AM
வற்றிய நினைவுகளோடு
வந்தமர்ந்தேன் குளக்கரையில்..

நிசப்த நீரில்
ஒற்றைக்கல்லை
வீசியெறிந்தேன்.... வெறுப்பு மிகுதியில்..

ஒரு புள்ளியில்
உருவாகி பரந்து
விரிந்தன அதிர்வலைகள்..

காதலும்கூட இப்படித்தானே..

காதலின் கருப்புள்ளியை
நினைவூட்டிய நீரலைமேல்
நினைவிழந்தேன்...
மீண்டும் மீண்டும்
வீசினேன்.. வேண்டும் வேண்டுமென....

குறிதவறாமல்
ஒரே புள்ளியில் விழவில்லை....
அவையாவும்..

அடுத்தடுத்து
உருவான அலைகள்
ஒன்றையொன்று
கொன்று கொண்டிருக்க..

குற்றம் உணந்தேன்...

poo
30-09-2005, 07:01 AM
காதலொன்றும் தேனல்ல... - நீ மலர்த் தாவும் வண்டெனில்!!

kavitha
05-10-2005, 11:03 AM
குறிதவறாமல்
ஒரே புள்ளியில் விழவில்லை....
அவையாவும்..
இரு பதிவுகளும், இரு கண்ணோட்டமும் நன்றாக இருக்கின்றன.

Nanban
07-10-2005, 01:06 AM
காதலும் பன்முகத் தன்மையுடையது தான். அதுவே வாழ்க்கை நெடுக வந்து கொண்டேயிருக்கும் - நாம் தான் அதை உணர்வதில்லை. ஏனென்றால் எப்பவோ ஒருநாள் நம்மிடையே தோன்றிய அந்த அதிர்வலைகள் மற்ற பிற அதிர்வலைகளைக் கொன்றுவிடுகிறது. அதனாலயே வாழ்வில் வேறு காதலே இல்லை என்று எண்ணி கண் மூடிப் பயணிக்கிறோம்.

இளசு
09-10-2005, 09:54 PM
வாழ்க்கைக் கடலில் இயல்பாய் இருக்கும் அலைகள்..
இருதயக் குளத்தில் வலிந்து வரவழைக்கும் அலைகள்..
இரண்டுமே வாழ்வில் ஓய்வதில்லை..
அலையில்லாமல் வாழ்க்கையில்லை..
பூவின் கவிதை - நண்பன் சொன்ன பன்முகத்தன்மை..
உண்மை!
பாராட்டுகள் பூ!