PDA

View Full Version : அக்னிச்சிறகுகள்... ஒரு சிறப்புப் பார்வை..rambal
19-04-2003, 03:41 PM
அக்னிச்சிறகுகள் (சுயசரிதம்)

பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம்.
எழுதியவர்: அருண் திவாரி
தமிழாக்கம்: கவிஞர் புவியரசு
வெளியான ஆண்டு: 1999
விலை: ருபாய் 100

இந்த நூல் டாக்டர்.அப்துல் கலாமின் சுயசரிதம்..
எவ்வளவோ சுயசரிதங்கள் இருக்க இதற்கு மட்டும் தனிச்சிறப்பு..
ஏனெனிலோ,
இது இந்த தேசத்தின் கடை மட்ட குடிமகன் இடத்திலிருந்து இந்தியாவின் தலை மகனான கதை..

இது சுயசரிதம் போல் தோற்றமளிக்கும் ஒரு தன் நம்பிக்கை கொண்டவரின் பற்றிய கதை.
இந்தியவின் பிண்ணனி பற்றி..
இந்தியாவின் எதிர்காலம் பற்றி..
மாணவர்களுக்கு நம்பிக்கை வளர்க்கும் வேராய்..
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாய்..
இப்படி பல சிறப்பு அம்சங்கள்.

இந்தியாவையும் கலாமையும் தனித்துப் பிரிக்க முடியாததாய் இருக்கிறது இந்தப் புத்தகம்.
முன்னுரை அறிமுகம் இதற்கு அடுத்தபடியாக நான்கு தளங்களாக விரிவடைகிறது இந்த நூல்.

1.முனைதல் (1931-1963)
2.படைத்தல் (1963-1980)
3.அமைதிப்படுத்துதல் (1981-1991)
4.தியானம் (1991-)


இந்தப் பூமி அவனுடையது;
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை,
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன,
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
- அதர்வன வேதம் 4வது பாகம், 16வது பாடல்

இப்படியாக ஆரம்பிக்கிறது இந்த நூல்..

வாழ்க்கத்தத்துவங்கள் எல்லாவற்றிலிருந்தும் விளக்கப்படுகின்றன.
பைபிள், குர் ஆன், கீதை ஆகியவைகளில் இருந்தும் மற்றும் இவருடைய குறியீட்டுக் கவிதைகளாலும் விளக்கப் படுகின்றன.

வாழ்க்கையை தத்துவார்த்தமாகப் பார்க்க கற்றுக் கொடுக்கிறது இந்த நூல்.


நமது தாயகத்தின் பெருமையைத் தலை நிமிரச்செய்த மேதை...
..............................
.............................
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை...
சோதனைகளின் சாதனைக் கதை..
............................
தீர்க்க தரிசனத்தின் கதை...

ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை..
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை...
---அருண் திவாரி..

இப்படி சிலாகிக்கப் பட்டு இந்த நூல் இன்னும் பொலிவு பெறுகிறது..

இறுதியில்

இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்.
இதன் கோடிக் கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்,
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி

இப்படியாக கலாமின் வார்த்தைகளில் முடிக்கிறார்.

இந்த நூல் ஒரு பயனுள்ள நூல் என்பதை விட...
ஒரு கடலோரப் படகுக் காரர் மகன்
எப்படி இந்த நாட்டின் குடிமகன் ஆனார் என்பதை மட்டும் பார்த்தால்
இது ஒரு தன்னம்பிக்கை நூல்..
ஆகவே,
வழி தேடுபவர்களுக்கு விடை இந்த நூல்...

இளசு
19-04-2003, 04:00 PM
பாராட்டுகள் ராம்.....

குழந்தைகள், சிறுவர்கள் மேல் பாசம்
இளைஞர்கள் மேல் நம்பிக்கை
கற்பதில், கற்பிப்பதில் காதல்
எம்மதத்திலும் இருந்து நல்லதை சேகரிக்கும் பொருண்மை
தாளா நாட்டுப்பற்று
அயரா உழைப்பு
எளிமை
தூய்மை
வாய்மை
இப்படி பன்முக பண்புகளைக் கொண்ட
நம் தலைமகனுக்கு தக்க புகழ்மாலை சூட்டிவிட்டாய்.

(சுய சரிதம் என்றால்...கலாம் தானே எழுதி இருக்க வேண்டும்..
அவர் சொல்லக் கேட்டு திவாரி இணை ஆசிரியராய்ப் படைத்தாரா..?)

இது நல்ல முன்னோடி.
பல நல்ல நூல்களின் அலசல்கள் தளத்தில் தொடரப்போவதின் கட்டியம்.
மீண்டும் பாராட்டுகள்.

kaathalan
19-04-2003, 05:04 PM
எனக்குள் இருக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிய அண்ணல்களுக்கு நன்றிகள். இன்னும் கொஞ்சம் நல்ல சின்ன பகுதிகளை இங்கே தாருங்களேன் என்று வெட்கமின்றி கேட்க தூண்டுகிறது உங்களின் பதிவுகள் அந்த சுயசரிதைப்பற்றி...........

இளசு
19-04-2003, 05:14 PM
ராம் , தம்பி காதலனின் ஆசையை நான் வழிமொழிகிறேன்...

lavanya
20-04-2003, 12:07 AM
அந்த நூல் நானும் படித்தேன்... ஒரு சாதாரண்யன் சரித்திரமான சரிதம் அது...
இங்கு எல்லோர் பார்வைக்கும் கொணர்ந்த நண்பருக்கு பாராட்டுகள்

தாசன்
21-04-2003, 12:32 PM
அவர் பிறப்பால் இசுலாமியராக இருந்தும்.....
இந்து மதத்தத்துவத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார்.....
அப்புத்தகத்திலே பல இடங்களில் அவரே குறிப்பிட்டுள்ளார்....

அது அவர் வளர்ந்த இராமேசுவரத்தின் மகிமை.....

poo
21-04-2003, 04:28 PM
அந்த விஞ்ஞான மேதை பற்றி இன்னும் சொல்லேன் ராம்...