PDA

View Full Version : புத்தகங்களை டிஜிடைஸ் செய்யலாமா?

Iniyan
27-09-2005, 12:20 PM
என்னிடல் சாண்டில்யனின் கதைகள் மற்றும் கிராவின் கிராமத்துக் கதைகள் சில என்னிடம் புத்தக வடிவில் உள்ளன. அதை யுனிகோடில் தட்டச்சி பதியலாமா இல்லை வேறு ஏதேனும் எளிதான வழி உள்ளதா? இதனால் சட்ட சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் வரக் கூடுமா?

pradeepkt
27-09-2005, 12:33 PM
சட்ட சம்பந்தமான பிரச்சினைகள் வரக் கூடும்.
அதுவும் இப்ப நம்ம மன்றம் ஒரு விரிந்த தளத்தில் இயங்குகிறது. நிறைய பப்ளிசிட்டி இருக்கு.
எதுக்கும் நிர்வாகிகளை ஒரு வார்த்தை கேட்டுக்கிருங்க.

ஜீவா
27-09-2005, 01:35 PM
நமது தளத்தில் upload செய்திருந்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.. ஆனால் வேறு எதாவது தளத்தில் upload செய்து, இங்கு வெறும் சுட்டியை கொடுத்தால் எதுவும் பிரச்சனை வராது.. இதைப்போல்தான், நிறைய EBook மன்றங்கள் உள்ளன..

Iniyan
27-09-2005, 02:21 PM
நமது தளத்தில் upload செய்திருந்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.. ஆனால் வேறு எதாவது தளத்தில் upload செய்து, இங்கு வெறும் சுட்டியை கொடுத்தால் எதுவும் பிரச்சனை வராது.. இதைப்போல்தான், நிறைய EBook மன்றங்கள் உள்ளன..

upload செய்யாமல் நேரடியாக ஒவ்வொரு அத்தியாயமாக தட்டச்சி பதிக்கலாமா???

ஜீவா
27-09-2005, 02:32 PM
எனக்கு தெரிந்தவரை, அவர்கள் காபிரைட் உரிமை வாங்கியிருந்தால், அதை அப்படியே பதிப்பது தவறுதான்.. அது அத்தியாம் அத்தியாமாய் இருந்தாலும்.. ஆனால், வெறும் அச்சிடப்பட்ட உரிமை மட்டுமே இருந்தால், நாம் கண்டிப்பாக பதிக்கலாம்..

மற்றபடி, எந்த குற்ற்மானாலும், அவர்கள் ஒருமுறை எச்சரிக்கை கொடுப்பார்கள்.. அப்படி எச்சரிக்கை செய்தி வந்தால், நாம் நீக்கி விடலாம்.. (திருவாசகம் சுட்டி கொடுத்து நீக்கியது போல)..

ஆகவே, நீங்கள் தாராளமாக தட்டச்சு செய்யலாம் என்பது என் கருத்து.. மற்ற நண்பர்கள் கருத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்கள்..

பரஞ்சோதி
27-09-2005, 07:04 PM
இனியன், தற்போது உலகமெங்கும் புத்தகங்களை பிடிஎப் கோப்பாகவோ, அல்லது ஜெபிஜி படமாகவே ஸ்கேன் செய்து போடுகிறார்கள். தட்டச்சு என்பது அதிக நேரம் பிடிக்கும், மேலும் ஓசிஆர் என்ற சாப்ட்வேர் இருந்தால் புத்தகத்தை ஸ்கேன் செய்தால் அது டெக்ஸ் பார்மேட்டில் மாறிவிடும். சில எழுத்துப்பிழைகளை நாம் சரி செய்ய வேண்டும்.

ஆனால் தமிழ் மொழிக்கு என்று சரியான ஓசிஆர் மென்பொருள் இதுவரை கிடைக்கவில்லை.

மற்றப்படி பிடிஎப் கோப்பாக ஸ்கேன் செய்யுங்க, தளத்தில் போடுவதற்கு பதில் நண்பர்களுக்கு மட்டும் அனுப்புங்க. இவ்வாறு செய்தால் நம் நண்பர் வட்டம் பயனடையும், விரைவில் அனைத்து புத்தகங்களும் உலகமயமாக்குதல் என்ற நிலைக்கு வந்தப் பின்பு நீங்க எங்கேயும் அதை கொடுக்கலாம்.

பரஞ்சோதி
27-09-2005, 07:05 PM
நமது தளத்தில் upload செய்திருந்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.. ஆனால் வேறு எதாவது தளத்தில் upload செய்து, இங்கு வெறும் சுட்டியை கொடுத்தால் எதுவும் பிரச்சனை வராது.. இதைப்போல்தான், நிறைய EBook மன்றங்கள் உள்ளன..

ஜீவா அத்தளங்களின் பெயரை சொல்ல முடியுமா?

ஜீவா
28-09-2005, 03:55 AM
http://rapidshare.de
http://megaupload.com
http://zupload.com

இதைப்போல இன்னும் நிறைய..

பரஞ்சோதி
28-09-2005, 04:14 AM
http://rapidshare.de
http://megaupload.com
http://zupload.com

இதைப்போல இன்னும் நிறைய..

இவை நம்மிடம் இருப்பவற்றை ஏற்றி சேமித்து, மற்றவங்களுக்கு கொடுக்கத் தானே, நான் நினைத்தேன், மொழி வாரியாக, கதாசிரியவர்வாரியாக பட்டியலிட்டு இருப்பாங்க என்று.

மன்மதன்
28-09-2005, 04:23 AM
இவை நம்மிடம் இருப்பவற்றை ஏற்றி சேமித்து, மற்றவங்களுக்கு கொடுக்கத் தானே, நான் நினைத்தேன், மொழி வாரியாக, கதாசிரியவர்வாரியாக பட்டியலிட்டு இருப்பாங்க என்று.

ஜுனூன் தமிழில் சொன்னால் எப்படி..:rolleyes: :rolleyes:

இவை நம்மிடம் இருப்பவற்றை ஏற்றி சேமித்து, மற்றவங்களுக்கு கொடுக்கத் தானே.....

மொழி வாரியாக, கதாசிரியவர்வாரியாக பட்டியலிட்டு இருப்பாங்க என்று நான் நினைத்தேன்..

ஜீவா சொல்ல வந்தது, அந்த ஈ-புத்தகத்தை அந்த வலைத்தளத்தில் ஏற்றி விட்டு இங்கே லிங்க் கொடுக்கலாம்.. போட்டோபக்கட் மாதிரி :D :D

ஜீவா
28-09-2005, 04:27 AM
இவை நம்மிடம் இருப்பவற்றை ஏற்றி சேமித்து, மற்றவங்களுக்கு கொடுக்கத் தானே, நான் நினைத்தேன், மொழி வாரியாக, கதாசிரியவர்வாரியாக பட்டியலிட்டு இருப்பாங்க என்று.

அய்யோ.. அப்படியெல்லாம் கொடுக்க மாட்டாங்க அண்ணா.. அந்த மாதிரி வேண்டுமென்றால், நம்முடைய தளத்திலேயே மொழி வாரியாக, கதாசிரியவர்வாரியாக பட்டியலிட்டு இறக்கிமதிக்குரிய சுட்டியை கொடுக்கலாம்..

பரஞ்சோதி
28-09-2005, 04:30 AM
அய்யோ.. அப்படியெல்லாம் கொடுக்க மாட்டாங்க அண்ணா.. அந்த மாதிரி வேண்டுமென்றால், நம்மளே, தளத்திற்குரிய SPACE வாங்கி பண்ணிக்கொள்ளலாம்..

தம்பி, ஆங்கில இபுக் தளங்கள் நிறைய இருக்கின்றன, அதில் சிறுவர் கதை, அறிவியல் கதை, வரலாற்றுக்கதை, துப்பறியும் கதை என்ற தலைப்புகள் நிறைய கதைகள் இருக்கின்றன, அது மாதிரி எழுத்தாளர்கள் பட்டியலிட்டு அவர்கள் எழுதிய கதைகளும் இருக்கின்றன, எல்லாமே இலவசம் தான்.

அது மாதிரி தமிழிலில் இபுக் பட்டியலிட்டு கொடுக்கும் தளங்கள் (புராஜக்ட் மதுரை, சென்னை நெட்வோர்க்/ஆன்லைன் தவிர்த்து) உண்டா என்று கேட்கிறேன்.

ஜீவா
28-09-2005, 05:01 AM
தமிழில் அவ்வளவாக தெரியாது அண்ணா.. தெரிய வந்தால் உங்களுக்கு சொல்கிறேன்..

sreeram
08-06-2007, 04:11 PM
இழையின் திசை மாறுகின்றது...

நீங்கள் எழுதிய கதைத் தொகுப்புக்கள் அல்லது ஏதாவது கட்டுரை தொகுப்புக்க்கள் ஆகியவற்றை எப்படி E-Book ஆக மாற்றுவது....?

இப்ப இதுக்கு தீர்வு சொல்லுங்க....