PDA

View Full Version : நிழலின் குரல்



பாரதி
26-09-2005, 11:45 PM
விரித்துப் போட்ட பாய்
போல் வானம்.
அலங்கரிக்கப்பட்ட
மல்லிகைப்பூக்களாய்
நட்சத்திரங்கள்
வைத்துப்படுக்க
வட்டத்தலையணையாய் நிலா
வியர்ப்பதாய் நினைத்தாலே
விசிறியாய் வீச
வந்து போகும் மேகம்
எல்லாம் இருந்தும்
உன் குரலின் நிழல்
மட்டுமே கூட
இருக்கும்போது
தூக்கமும் தூரமாய்
போய்விடுகிறது.
உன் நிழலின் குரலைக்
கேட்கும் நாளில்
நிம்மதியாய் தூங்குவேன்.

Mano.G.
27-09-2005, 01:03 AM
விரித்துப் போட்ட பாய்
போல் வானம்.
அலங்கரிக்கப்பட்ட
மல்லிகைப்பூக்களாய்
நட்சத்திரங்கள்
வைத்துப்படுக்க
வட்டத்தலையணையாய் நிலா
வியர்ப்பதாய் நினைத்தாலே
விசிறியாய் வீச
வந்து போகும் மேகம்
எல்லாம் இருந்தும்
உன் குரலின் நிழல்
மட்டுமே கூட
இருக்கும்போது
தூக்கமும் தூரமாய்
போய்விடுகிறது.
உன் நிழலின் குரலைக்
கேட்கும் நாளில்
நிம்மதியாய் தூங்குவேன்.

காதல் வயப்பட்டவரின் சங்கடமா

இல்லை

நேசிப்பவர் அதிகதூரத்தில் இருப்பதால் ஆதங்கமா?

கவிதை அருமை வாழ்த்துக்கள்

மனோ.ஜி

பாரதி
27-09-2005, 04:08 PM
நன்றி மனோஜி.
இதை எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாக அன்பின் அருகாமையைத் தேடுகிறது.

Nanban
27-09-2005, 05:26 PM
உன் குரலின் நிழல்
மட்டுமே கூட
இருக்கும்போது
தூக்கமும் தூரமாய்
போய்விடுகிறது.

உன் நிழலின் குரலைக்
கேட்கும் நாளில்
நிம்மதியாய் தூங்குவேன்.


வளைகுடா கணவர்களின் சோகத்தை மிக அருகாக விளக்கியிருக்கிறீர்கள். நான் எப்பொழுதுமே எல்லோரிடமும் சொல்வதுண்டு. நம்மைப் போன்ற ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கு சுய அனுபவம் தான் மிக முக்கியம். அனுபவித்ததை எழுதுவது அத்தனை எளிது.

முதலில் வந்த விவரணைகளைப் பார்த்த பொழுது அது ஏதோ இயற்கையின் வர்ணனை போலத் தான் இருக்கும். ஆனால் அந்த வர்ணிப்புகள் எவ்வாறு வந்தது என்று எனக்குத் தெரியும். அங்கிருந்து அன்பான உறவுகளிடம் பேசும் பொழுது அது தொலைபேசி வழிதான் என்பதையும் நான் அறிவேன். தொலைபேசி வழியாக பேசுவது ''குரலின் நிழல்" எத்தனை அருமையான சொல்லாடல்!!

ஒளியின் நிழலைப் பார்க்கத் தான் முடியும் - வடிவமாக அது தரையில் வீழும்போது. ஒலியின் நிழலைக் கேட்கத் தான் முடியும் - அது அசரீரியாக உருவமற்று நம்மை வந்தடையும் பொழுது.

எத்தனை பெரிய வலியை, பிரிவை, எத்தனை இலகுவாக சொல்லிவிட்டீர்கள் - எல்லோருக்கும் வந்துவிடாது இத்தகைய எளிமையான சொல்லாடல்கள்....

பாராட்டுகள்....

கவிஞனை அறிந்திருப்பது எத்தனை தூரம் கவிதையை அனுபவிக்க உதவுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அறிந்திருப்பது என்பது - கவிஞனை நேருக்குநேராக பார்த்து உணர்வது மட்டுமல்ல - கவிஞனின் சிந்தனை தளம் நகரும் திசை - அது பயணிக்கும் வேகம் - என்ற இவைகளையும் தான் சொல்கிறேன்....

poo
28-09-2005, 10:33 AM
நிழலின் குரல்.. குரலின் நிழல்.

நிஜம் நெஞ்சை நெகிழ்த்துகிறது!

பாரதி
28-09-2005, 05:40 PM
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பன், பூ. மன்றத்தில் கவிதைகளை படிப்பதோடு சரி. சில கவிதைகள் நமக்கு சரியாக புரியாது. அவற்றை பிரதி எடுத்து வைத்துக்கொண்டு சில முறை படித்துப்பார்ப்பேன். பின்னர் விமர்சனம் செய்வோம் என்று நினைத்து மறந்து போன கவிதைகள் ஏராளம். எப்போதாவதுதான் கவிதை போல (?) எழுதத்தோன்றுகிறது.

அறிஞர்
29-09-2005, 12:32 AM
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பன், பூ. மன்றத்தில் கவிதைகளை படிப்பதோடு சரி. சில கவிதைகள் நமக்கு சரியாக புரியாது. அவற்றை பிரதி எடுத்து வைத்துக்கொண்டு சில முறை படித்துப்பார்ப்பேன். பின்னர் விமர்சனம் செய்வோம் என்று நினைத்து மறந்து போன கவிதைகள் ஏராளம். எப்போதாவதுதான் கவிதை போல (?) எழுதத்தோன்றுகிறது.
அருமையாய் அனுபவங்களை வடிக்கிறீர்கள் பாரதி....

இன்னும் கொடுங்கள்....

பிரசன்னா
06-10-2005, 08:05 PM
கவிதை அருமை வாழ்த்துக்கள்

இளசு
06-10-2005, 09:37 PM
தம்பிக்கு
குரலின் நிழல் என்றால் ஒலிப்பேழையா?
நிழலின் குரல் என்றால்..????
இரவின் வர்ணணைகளில் சொக்கியபடி கவிதை உள்ளே வந்தவன்..
இங்கே சரியான பொருள் சிக்காமல் சுத்திக்கொண்டு நிற்கிறேன்.
உன் பரிமாணங்கள் பன்மடங்கு வளர்ந்ததைக் கண்டு
பூரிப்புடன் உன் அண்ணன்

gragavan
07-10-2005, 06:50 AM
அருமை அண்ணா. நல்ல கவிதை.

தொலைபேசி வந்த அன்று ஒரு அமைதியான தூக்கம் அல்லவா. அனுபவத்தை எழுதியிருக்கின்றீர்கள்.

பாரதி
07-10-2005, 10:34 AM
தம்பிக்கு
குரலின் நிழல் என்றால் ஒலிப்பேழையா?
நிழலின் குரல் என்றால்..????
இரவின் வர்ணணைகளில் சொக்கியபடி கவிதை உள்ளே வந்தவன்..
இங்கே சரியான பொருள் சிக்காமல் சுத்திக்கொண்டு நிற்கிறேன்.
உன் பரிமாணங்கள் பன்மடங்கு வளர்ந்ததைக் கண்டு
பூரிப்புடன் உன் அண்ணன்

அண்ணா, இராகவன்... நன்றி.

குரலின் நிழல் - இதை நண்பன் சொன்னது போல நேரடியாக கேட்காமல், தொலைபேசி வழியாக பேசுவது என்றோ, நீங்கள் சொன்னது போல ஒலிப்பேழை என்றோ அல்லது என்றோ பேசிய வார்த்தைகள் மனதில் நிழலாய் பேசுவதாகவோ வைத்துக்கொள்ளலாம். அருகில் இல்லாமல் இருப்பதை உணர்த்துவதற்காக கூறப்பட்டது.

நிழலின் குரல் - நிஜமாய் அருகில் இருக்கும் போது விழும் நிழலே போதும் என்ற எண்ணத்தில், நிழலுக்கு குரல் இல்லை என்றாலும் அருகாமையில் இருந்தாலே போதும் என்று அன்பை உணர்த்துவதற்காக கூறப்பட்டது.

அப்புறம் நீங்கள் வேறு பரிமாணங்கள் என்றெல்லாம் கூறுகிறீர்கள்..!! இது வரை நான் கவிதை என்று நினைத்து எழுதிய கவிதைகள் மிகச்சிலவே. ஆக பன்மடங்கு..!! ஹஹஹா..

பரஞ்சோதி
07-10-2005, 11:44 AM
பாரதி அண்ணா,

மிக அருமையாக சொல்லியிருக்கீங்க, வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க.

பாரதி
22-03-2008, 08:20 AM
கருத்துக்கு மிக்க நன்றி பரஞ்சோதி.

meera
22-03-2008, 10:29 AM
பாரதி அண்ணா,

கவிதை அருமை.மீண்டும் காண கொடுத்தமைக்கு நன்றி.