PDA

View Full Version : இயற்கை



பாரதி
26-09-2005, 06:30 PM
லட்சம் நட்சத்திரங்களுக்கு
மத்தியில் ஆனாலும்
அநாதையாய் நிலா.

அறிஞர்
26-09-2005, 07:30 PM
லட்சம் நட்சத்திரங்களுக்கு
மத்தியில் ஆனாலும்
அநாதையாய் நிலா.
நிலவுக்கு
துணையாய் வர
சூரியனுக்கு ஆசை..
ஆனால்
நிலவுக்கோ பயம்...
ஓடி ஒளிகிறது.

அருமை பாரதி... தொடருங்கள்

பரஞ்சோதி
26-09-2005, 07:37 PM
ஆகா, அருமையான கவிதைகள்.

அறிஞர் நீங்க இப்போ சூரியனாக இருக்கீங்க தானே.

பாரதி
27-09-2005, 04:06 PM
வானத்தரையில் வைத்த
புள்ளிகள் கோலம் போடப்
போவது யார்?

நன்றி அறிஞர், பரஞ்சோதி.

Nanban
27-09-2005, 05:31 PM
என்ன - மூன்று வரிகளில் எல்லோர் மனதையும் கொள்ளை அடிக்கத் திட்டமா?

வானம் பார்க்க
வசதிகள் நிறைந்த
உன்னைப் பார்க்கும்
பொழுதெல்லாம்
பொறாமையாக இருக்கிறது
எனக்கு -
சாத்தப்பட்ட கதவுகளின் பின்னே
குளிர்மி இயக்கத்தில்
மனதிற்குள் நிலவைக்
கொண்டு வர போராடும்
பொழுதெல்லாம்

poo
28-09-2005, 08:44 AM
அசத்தல் பாரதி..

இயற்கையை கவிதையில் அள்ளி வீசுங்கள்..
பொறுக்கியெடுத்துக் கொள்கிறோம்.. அந்த விண்மீன்களைப்போலவே கண்களால்..

பாரதி
28-09-2005, 05:42 PM
நன்றி நண்பன், பூ.
மன்றத்தில் மனதை கொள்ளையடித்த நண்பர்கள் பல பேர்கள் இருக்கிறார்கள் நண்பன். திடீரென்று ஒரு சமயம் இயற்கையைப் பற்றி சிந்தனை வந்தது. அடுத்தடுத்து சில வரிகள் தோன்றின. நினைவில் இருந்து மீண்ட சில வரிகள் இங்கே.

பாரதி
28-09-2005, 05:43 PM
யார் நிலவைக்
குளிப்பாட்டியது
பூமியெங்கும் மழை.

Nanban
28-09-2005, 05:59 PM
ஐய்யோ பிரமாதம் போங்கள் -

சும்மா அவையடக்கத்திற்காக சொல்லாதீர்கள் கவிதை போல எழுதுகிறேன் என்று.

நீங்கள் எழுதுவது அட்சரசுத்தமான கவிதையே தான்...

சந்தேகமில்லை....

மனம் நிறைந்த பாராட்டுகள்...

அன்புடன்

Iniyan
28-09-2005, 08:35 PM
என்ன - மூன்று வரிகளில் எல்லோர் மனதையும் கொள்ளை அடிக்கத் திட்டமா?

வானம் பார்க்க
வசதிகள் நிறைந்த
உன்னைப் பார்க்கும்
பொழுதெல்லாம்
பொறாமையாக இருக்கிறது
எனக்கு -
சாத்தப்பட்ட கதவுகளின் பின்னே
குளிர்மி இயக்கத்தில்
மனதிற்குள் நிலவைக்
கொண்டு வர போராடும்
பொழுதெல்லாம்


இயல்பான பொறாமை

Iniyan
28-09-2005, 08:35 PM
யார் நிலவைக்
குளிப்பாட்டியது
பூமியெங்கும் மழை.


அந்த மழையில் பூத்த உங்கள் கவிதைப்பூ அருமைப்பு.

அறிஞர்
29-09-2005, 12:18 AM
பாரதி, நண்பனின் கவிதைகள்..... இன்பத்தில் ஆழ்த்துகின்றன...

வாழ்த்துக்கள்.. அன்பர்களே.

kavitha
29-09-2005, 10:58 AM
இயற்கையை ரசிக்கும்போது நாம் குளிர்கிறோம். வார்த்தையில் வடித்தால் வாசிப்பவர்களும். குறும்பாக்கள் அருமை பாரதி

பாரதி
29-09-2005, 04:52 PM
நன்றி நண்பன், இனியன், அறிஞர், கவிதா.

பாரதி
29-09-2005, 04:53 PM
நிலவுத்தட்டிலிருந்து
சிதறிய பருக்கைகள்
நட்சத்திரங்கள்.

poo
30-09-2005, 07:05 AM
நட்சத்திர பருக்கைகளை
பொறுக்கியெடுக்க
முயன்று முயன்று தோற்கும்
குழந்தையாய் நான்..

-- கவிதை படித்துக் கொண்டிருக்கிறேன்..

பாராட்டுக்கள் பாரதி!

பாரதி
30-09-2005, 04:23 PM
மிக்க நன்றி பூ.

பாரதி
30-09-2005, 04:25 PM
மழையில் துவைத்த புடவை
மடித்து வைக்க காத்திருக்கிறது
வானவில்.

பரஞ்சோதி
30-09-2005, 07:02 PM
கவிஞர்கள் அனைவரும் கலக்குறீங்க, பொறாமையாக இருக்கிறது.

மன்மதன்
01-10-2005, 04:29 AM
கவிதைகள் (ஹைக்கூ..) பிரமாதம்..



மழையில் துவைத்த புடவை
மடித்து வைக்க காத்திருக்கிறது
வானவில்.


வானவில் - ஒரு வித்தியாச பார்வை.. அருமை.. அருமை..

அறிஞர்
06-10-2005, 12:12 AM
மழையில் துவைத்த புடவை
மடித்து வைக்க காத்திருக்கிறது
வானவில்.
கலர் கலரான
நீளமான புடவை.....
நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்

இளசு
09-10-2005, 10:37 PM
நிலா, தாரகை, மழை, வானவில் என்று
வான்வெளியில் வார்த்தைக்கோலம் போடும்
உனக்கு
கவிதை வடிவில் பதிலும் பாராட்டும் தர யோசித்ததில்..
காலம் கடந்தபடியே...
இப்போது வான் அளவு பாராட்டுகள் மட்டும் பாரதி..
விரைவில் உன் மழையில் ஒரு சரமாய் சேர்வேன்..

kavithai_malar
10-10-2005, 05:55 AM
தோழரே!
உங்களின் இயற்கை வர்ணனையில் நனைந்த நான் புது சிந்த்னையுடன்
இயற்கையின் பாடம் என்ற புதிய திரியில் சுடர் ஏற்றுகிறேன்.
வாழ்த்துக்களும் நன்றியும்.

மலர்.

பாரதி
10-10-2005, 01:50 PM
நிலா, தாரகை, மழை, வானவில் என்று
வான்வெளியில் வார்த்தைக்கோலம் போடும்
உனக்கு
கவிதை வடிவில் பதிலும் பாராட்டும் தர யோசித்ததில்..
காலம் கடந்தபடியே...
இப்போது வான் அளவு பாராட்டுகள் மட்டும் பாரதி..
விரைவில் உன் மழையில் ஒரு சரமாய் சேர்வேன்..

மிக்க மகிழ்ச்சி அண்ணா...
உங்கள் மழையில் நனைய தமிழ்மன்றமே காத்துக்கிடக்கிறது. நானும்தான்....



தோழரே!
உங்களின் இயற்கை வர்ணனையில் நனைந்த நான் புது சிந்த்னையுடன்
இயற்கையின் பாடம் என்ற புதிய திரியில் சுடர் ஏற்றுகிறேன்.
வாழ்த்துக்களும் நன்றியும்.

நன்றி தோழர் மலர். உங்கள் பாடமும் நன்றாகத்தான் இருக்கிறது. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அறிஞர்
10-10-2005, 10:27 PM
என்ன பாரதி... எண்ணங்களின் கிறுக்கல்களை தொடரவில்லையா....

இளசு
20-10-2005, 08:36 PM
எங்கோ படித்தது -

புருவ மலைகளுக்கு இடையே
குங்குமப் பொட்டு -
உதய சூரியன்!

அறிஞர்
20-10-2005, 08:52 PM
எங்கோ படித்தது -

புருவ மலைகளுக்கு இடையே
குங்குமப் பொட்டு -
உதய சூரியன்! அது என்ன சரியாக கருப்பு, சிவப்பு கலரில்...

அருமையான கவிதை....

poo
21-10-2005, 10:24 AM
அண்ணனின் தனிச்சிறப்பு வண்ணங்கள்தானே அறிஞரே..
அந்த இரு வண்ணங்கள்தானே கவிதைக்கு அழகு!!

பாரதி
21-10-2005, 01:57 PM
எங்கோ படித்தது -

புருவ மலைகளுக்கு இடையே
குங்குமப் பொட்டு -
உதய சூரியன்!

எங்கோ எடுத்த குங்குமப் பொட்டை "இயற்கை" க்கு வைத்து அழகு பார்க்கும் அண்ணனுக்கு ஜே!

முப்பது நாட்களும் இரவுப்பணி
முழு ஓய்வோ இன்றைக்கு?
அமாவாசை.

இளசு
21-10-2005, 10:20 PM
நன்றிகள் தம்பிகளுக்கு..

புருவம் கருப்பு
குங்குமம் சிவப்பு -
என எதேச்சையாய் வந்த வண்ணம் அது.

பாரதி,
உன் அமாவாசை காட்சிச்சிந்தனைக்கு எசப்பாட்டாய்-

இராப்பிச்சைக்காரி
பகலிலே பாதை மறித்தாள்
சூரியகிரகணம்!

இளசு
05-11-2005, 06:42 AM
ஆகாய வரைபடம்
கணநேர தங்கநதி
மின்னல்...

இளசு
08-11-2005, 07:11 PM
தென்றல்

குளத்தில் குளித்த தென்றலுக்கு
துவட்டிக்கொள்ள துண்டாய்
குளக்கரையில் நான்..

அறிஞர்
11-11-2005, 01:28 AM
ஆகாய வரைபடம்
கணநேர தங்கநதி
மின்னல்...

ஆகாயத்தில் ஏற்படும்
நடுக்கத்தின் கோடு
மின்னல்....

அருமை இளசு தொடருங்கள்

அறிஞர்
11-11-2005, 01:30 AM
தென்றல்
குளத்தில் குளித்த தென்றலுக்கு
துவட்டிக்கொள்ள துண்டாய்
குளக்கரையில் நான்..துண்டாய்
உடுத்திக்கொள்ள
முயன்றால் இன்பமே...

நல்ல சிந்தனை... இளசு.. வாழ்த்துக்கள்

அறிஞர்
11-11-2005, 01:32 AM
முப்பது நாட்களும் இரவுப்பணி
முழு ஓய்வோ இன்றைக்கு?
அமாவாசை.

சந்திரனுக்கு ஓய்வு
அம்மாவாசை...
சூரியனுக்கு ஒய்வு
சூரியகிரகணமோ...

அருமை பாரதி.. தொடருங்கள்

அறிஞர்
11-11-2005, 01:35 AM
இராப்பிச்சைக்காரி
பகலிலே பாதை மறித்தாள்
சூரியகிரகணம்!
அம்மாவசை அன்று
ஓய்வெடுக்கும்
இராப்பிச்சைக்காரி
கனப்பொழுது
பகலவனுக்கு
ஓய்வு கொடுக்கிறாளோ

பாரதி
15-11-2005, 12:41 AM
தென்றல்

குளத்தில் குளித்த தென்றலுக்கு
துவட்டிக்கொள்ள துண்டாய்
குளக்கரையில் நான்..

நான் நாணலாக இருக்குமோ என்று நினைத்தேன். நான் என்பதும் சரியாகத்தான் இருக்கிறது!!

பாரதி
15-11-2005, 12:50 AM
பனித்துளி

அதிகாலைக் குளிரிலும் அதிசயம்
உழைத்த புற்களுக்கு வியர்வை
பனித்துளி.

அறிஞர்
15-11-2005, 03:56 AM
பனித்துளி

அதிகாலைக் குளிரிலும் அதிசயம்
உழைத்த புற்களுக்கு வியர்வை
பனித்துளி.
இரவில் கண்விழித்து
உழைத்ததோ...

அருமை பாரதி....

பென்ஸ்
08-02-2006, 04:36 PM
மன்றத்தில் எனக்கு பிடித்த திரிகளில் இதுவும் ஒன்று...
பாரதி அவர்கள் ஹைக்கூகள்.... பலமுறை படித்துவிட்டேன், இன்னும் படிப்பேன்...

பாரதி அவர்களுக்கு பதில் பாட்டு பாடும், இளசு அவர்கள்.... எப்படிதான் இவரால எல்லா விஷயமும் கலக்கலா செய்யமுடியுதோ....

அறிஞர் விட்டாரா... கலக்கிட்டார்...

யப்பா தமிழ்மன்ற கவிஞர்களே.... இந்த திரிக்கு உயிர் தாங்கபா....

பாரதி இன்னும் தருவீங்கதானே???

காலைநேர கண்ணாடி காதல்
பெருமூச்சில் கலைகிறது
பனித்துளி...

.

kavitha
10-02-2006, 09:37 AM
காலைநேர கண்ணாடி காதல்
பெருமூச்சில் கலைகிறது
பனித்துளி...

ஏதோ 'சுடுற' வாசனை எனக்கு வீசுதே பென்ஸ்..
உங்களுக்கு 'தீயற' வாசனை வருதா?

kavitha
10-02-2006, 09:39 AM
தென்றல்

குளத்தில் குளித்த தென்றலுக்கு
துவட்டிக்கொள்ள துண்டாய்
குளக்கரையில் நான்..
__________________
சொல்லெல்லாம் தூய தமிழ்ச்சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ்சிந்தும் சுவையாகுமா?
- இளசு
துண்டாய் உடுத்திக்கொண்ட தென்றல். அழகான கற்பனை!

kavitha
10-02-2006, 09:41 AM
மேகங்கள்

வெடித்துக்கிடக்கிறது
ஆகாயப்பருத்தி
எப்போது நெய்யும்
மழைச்சாரல்?

பென்ஸ்
10-02-2006, 09:42 AM
இதுதான்... என்னோட பிரச்சினையே....
வாசித்ததா இல்லை சிந்தித்ததா என்று கூட தெரியாது.... உன்மையிலையே தெரிந்து சுடுவது கிடையாது.... :-)

kavitha
10-02-2006, 09:48 AM
இதுதான்... என்னோட பிரச்சினையே....
வாசித்ததா இல்லை சிந்தித்ததா என்று கூட தெரியாது.... உன்மையிலையே தெரிந்து சுடுவது கிடையாது.... :-)
சரி சரி. நம்பிட்டேன்.
ஏற்கனவே எழுதிய வார்த்தைகளை நாம் மீண்டும் எழுதக்கூடாது என்று நினைத்தால், பிறகு எழுத்தே வராது.
உங்கள் சிந்தனைக்கு (மட்டும்)பாராட்டுகள்.

பென்ஸ்
10-02-2006, 09:57 AM
உங்கள் எழுத்துக்கள் என் மனதில் பதியும் படி எழுதியதால் உங்களுக்கும் பாராட்டுகள்...:) :)
இதையாவது நியாபகம் வைத்ததால், மீண்டும் தேடி கண்டு பிடித்து வாசித்தேன்...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6084

நீங்கள் நம்பியது குறித்து கருத்து இல்லை, ஆனால் நான் கவனமாக பதிக்க வேண்டும்...:mad: :mad:

kavitha
10-02-2006, 10:00 AM
நீங்கள் நம்பியது குறித்து கருத்து இல்லை, ஆனால் நான் கவனமாக பதிக்க வேண்டும்
அதனால் தான் உங்கள் சிந்தனையை பாராட்டினேன். தொடருங்கள். :)

அறிஞர்
10-02-2006, 02:42 PM
மேகங்கள்

வெடித்துக்கிடக்கிறது
ஆகாயப்பருத்தி
எப்போது நெய்யும்
மழைச்சாரல்? அழகான வரிகள்...

மேகங்களுக்கு மேல் உங்களை பறக்க விட்டால்.. பக்கம், பக்கமா கவி சொல்லத்தோன்றும்.....

மேகங்களின் மேல் விமான பயணம்
வெண் கம்பள தரையில் தேர் பவணி போன்றது

அறிஞர்
10-02-2006, 02:44 PM
உங்கள் எழுத்துக்கள் என் மனதில் பதியும் படி எழுதியதால் உங்களுக்கும் பாராட்டுகள்...:) :)
இதையாவது நியாபகம் வைத்ததால், மீண்டும் தேடி கண்டு பிடித்து வாசித்தேன்...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6084

நீங்கள் நம்பியது குறித்து கருத்து இல்லை, ஆனால் நான் கவனமாக பதிக்க வேண்டும்...:mad: :mad: :D :D என்னப்பா சுட்டவுடனே... தீயா பொறிராங்க.....

கொஞ்சம் மாற்றி உங்கள் பாணியில் கலக்குங்கள் பெண்ஸு...

kavitha
13-02-2006, 07:43 AM
அழகான வரிகள்...

மேகங்களுக்கு மேல் உங்களை பறக்க விட்டால்.. பக்கம், பக்கமா கவி சொல்லத்தோன்றும்.....

மேகங்களின் மேல் விமான பயணம்
வெண் கம்பள தரையில் தேர் பவணி போன்றது

அடிக்கடி பயணித்தவர் நீங்கள். கொடுத்துவைத்தவர்.
நானும் ஒரு நாள் போவேன். ஜன்னல் எல்லாம் திறந்து வைப்பார்களா?

பென்ஸ்
13-02-2006, 08:02 AM
அடிக்கடி பயணித்தவர் நீங்கள். கொடுத்துவைத்தவர்.
நானும் ஒரு நாள் போவேன். ஜன்னல் எல்லாம் திறந்து வைப்பார்களா?

அதேல்லாம் திறந்து வைப்பார்கள்... ஆனால் தலையை வேளியே போடக்கூடாது.. சரியா????:rolleyes: :rolleyes: :D :D :D

பாரதி
22-02-2007, 03:40 PM
காலமெல்லாம் உதறித்தான் பார்க்கிறது கடல்
காணாமல் போவதில்லை
நுரைத்தூசுகள்!

அறிஞர்
22-02-2007, 03:41 PM
காலமெல்லாம் உதறித்தான் பார்க்கிறது கடல்
காணாமல் போவதில்லை
நுறைத்தூசுகள்!
கடல் இருக்கும் வரை.. நுறைகள் அழிவதில்லை...

இயற்கை இரசணைகள் தொடரட்டும்.

அமரன்
22-02-2007, 03:45 PM
காலமெல்லாம் உதறித்தான் பார்க்கிறது கடல்
காணாமல் போவதில்லை
நுறைத்தூசுகள்!

நல்ல ஹைக்கூ. இயற்கையுடன் இணைந்த ஹைக்கூ. வாழ்த்துக்கள் பாரதி.

ஆதவா
22-02-2007, 03:46 PM
காலமெல்லாம் உதறித்தான் பார்க்கிறது கடல்
காணாமல் போவதில்லை
நுறைத்தூசுகள்!

அருமை நண்பரே!! ஹைக்கூ........... ஆனால் இங்கே நுறை என்று தமிழில் அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது.... நுரை தான் சரி என்று நினைக்கிறேன்.

பாரதி
22-02-2007, 03:50 PM
அருமை நண்பரே!! ஹைக்கூ........... ஆனால் இங்கே நுறை என்று தமிழில் அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது.... நுரை தான் சரி என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னது மிகவும் சரி நண்பரே. மிக்க நன்றி.
பிழைக்கு வருந்துகிறேன்.

ஆதவா
22-02-2007, 03:55 PM
நீங்கள் சொன்னது மிகவும் சரி நண்பரே. மிக்க நன்றி.
பிழைக்கு வருந்துகிறேன்.

அட வருத்தம் எதற்குங்க... பிழை வருவது சகஜம்தான்.. நான் மட்டுமென்ன ஒழுக்கமாகவா டைப் அடிக்கிறேன்..?:)

ஷீ-நிசி
22-02-2007, 05:06 PM
அட வருத்தம் எதற்குங்க... பிழை வருவது சகஜம்தான்.. நான் மட்டுமென்ன ஒழுக்கமாகவா டைப் அடிக்கிறேன்..?:)

உதாரணம்... நான் மட்டுமென்ன ஒழுக்கமாகவா டைப் அடிக்கிறேன்

ஒழுங்காகவா டைப் அடிக்கிறேன் என்று வரவேண்டும்..

ஆதவா
22-02-2007, 05:43 PM
நண்பரே இரண்டும் சரிதான்.. அர்த்தம் மாறிவிடும்..... நீங்கள் சொன்னதே இந்த இடத்திற்கு பொருத்தம்

இளசு
24-02-2007, 09:29 PM
காலமெல்லாம் உதறித்தான் பார்க்கிறது கடல்
காணாமல் போவதில்லை
நுரைத்தூசுகள்!


மீண்டும் பாரதியின் இயற்கை உபாசனை..!
பாராட்டுகள்.. தொடரட்டும் கவிதார்ச்சனை..!

---------------------------------------------


பூமிச்சேலையின்
ஓரம் மட்டும் அலசும்
நீலச் சலவைக்காரி...!

pradeepkt
26-02-2007, 05:32 AM
உதாரணம்... நான் மட்டுமென்ன ஒழுக்கமாகவா டைப் அடிக்கிறேன்

ஒழுங்காகவா டைப் அடிக்கிறேன் என்று வரவேண்டும்..
இது கோயமுத்தூருப் பக்கச் சொலவடைங்க... :) ஒண்ணுந் தப்பில்ல!

pradeepkt
26-02-2007, 05:36 AM
காலமெல்லாம் உதறித்தான் பார்க்கிறது கடல்
காணாமல் போவதில்லை
நுரைத்தூசுகள்!
அண்ணா தப்பா நினைக்காதீங்க... உங்க ஹைக்கூ கலக்கல். இதில தூசு-கள் வருமான்னு தெரியலை. பல பொருட்கள் கலந்த தூசை வேணும்னா தூசுகள்னு சொல்லலாம்.

ஆனா இன்னும் கொஞ்சம் அந்த முதல் வரியை என் ரசனைக்கு மாத்தினேன்.பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

எப்போதும் உதறும் கடல்
காணாமல் போவதில்லை
நுரைத்தூசு!

அமரன்
27-02-2007, 02:10 PM
இது எனது ஹைக்கூ.
தன்னைதாங்கும் தண்ணீரை
தாங்க மறுக்கின்றது
தாமரை

இளசு
27-02-2007, 08:00 PM
அன்பு பாரதி

விதைகள் கவிதை அருமை..

தடையை மீறிக் கிழித்துக் கிளம்பும் வீரியத்தில்தான்
விதையின் வாழ்வும் வெற்றியும்..
மீறாதவை மக்கிப்போகும்..

ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்று இங்கே -

பத்தாவது முறை தடுக்கி விழுந்தவனை
முத்தமிட்டபடி பூமித்தாய் சொன்னாள்:
ஒன்பது முறை எழுந்தவன்தானே நீ..?!

-------------------------------

நக்கீரனின் தாமரை ஹைக்கூ அற்புதம்.. தொடருங்கள்!

பாரதி
16-07-2007, 06:47 PM
அருமை... அருமை அண்ணா....
பிரதீப்பின் பார்வையும் நன்றாகவே இருக்கிறது.
அமரனின் தாமரையும் எப்போதும் மலர்ந்தே இருக்கும்.

தமிழன்பனின் கவிதையை தந்த அண்ணாவிற்கு என் அன்பு.

பாரதி
16-07-2007, 06:50 PM
கருப்புப்பஞ்சில் நெய்த
அறுந்த நூல்
மழை!

இதுவே முரணாகவும் கூடத்தோன்றுகிறது....
கருப்புப்பஞ்சில் நெய்த
அறுந்த நூலுக்கு நிறமில்லை
மழை!

அமரன்
16-07-2007, 06:53 PM
ஆமாம். அண்ணா..ஒரு கரு இருவடிவத்தில்...

இனியவள்
16-07-2007, 07:03 PM
நாம் சுவசிக்கும்
காற்றை வெளிவிட்டு
நாம் வெளிவிடும்
காற்றை சுவாசிக்கின்றது
மரம்

இது சரியோ தெரிய*வில்லை
இந்த* த*லைப்புக்கு

எல்லாம் அருமையான* க*விதைக*ள் இன்று தான்
பார்த்தேன் மேலே எடுத்து விட்ட* பார*தி அண்ணாவுக்கு
ந*ன்றியோடு க*லந்த* பாராட்டுக்க*ள்

aren
18-07-2007, 04:33 AM
அருமையான கவிதை பாரதி அவர்களே.

நிலா அநாதையாக வானில்
சுற்றமும் சூழலும்
நெருப்பாக அனல்கக்கும் நட்சத்திரங்கள்

ஓவியன்
18-07-2007, 04:46 AM
நிலா அனாதையா?, ஏற்றுக் கொள்ள முடியாது என்னால் இந்தக் கருவை....
பூமிக் காதலனின் ஒரு காதலியல்லவா - நிலா......?

ஓவியா
02-09-2007, 10:13 PM
லட்சம் நட்சத்திரங்களுக்கு
மத்தியில் ஆனாலும்
அநாதையாய் நிலா.

மிகவும் ஆழமான கரு. பாராட்டுக்க*ள் அண்ணா.

உங்க*ள் க*விதையும் நானும் என்று நன்கு அலசி யோசித்தால் இது எனக்கு அப்படியே பொருந்தும். :icon_08:

அக்னி
06-09-2007, 10:35 AM
பாரதி, நண்பன், பூ, இளசு, அறிஞர், கவிதா, அமரன், இனியவள், ஆரென்...
அனைவரின் கவிதைகளும் இனிய தமிழ்துளிகள்...
பாராட்டுக்கள்...

வானத்தில் வேலைநிறுத்தம்...
நிலாவின் தலைமையில்,
ஆர்ப்பாட்டமிட்டன,
நட்சத்திரங்கள்...
தீர்த்து வைத்தான் சூரியன்...
முடிந்தது, வானத்தில் முற்றுகை...

அக்னி
06-09-2007, 10:37 AM
ஒளிர்ந்து மறைந்ததது.., மின்னல்...
தேடி அழைத்தது.., இடி...
அழுதது... வானம்...

பாரதி
12-03-2008, 01:28 PM
புள்ளி வைத்தும்
கோலம் போடத்தெரியாமல்
அழிக்கிறதே.... மழை.

சிவா.ஜி
12-03-2008, 01:46 PM
பூமகளும் வான்மகளும்
நெருப்புப்பெட்டி தொலைபேசி பேச
இணைப்பு நூலாய் மழை...!

செந்தமிழரசி
12-03-2008, 02:16 PM
நார்நாராய் கிழிந்து
தாறுமாறாய் விழந்த மேகத்தை
அடுக்கியது ஞாயிறு
வானவில்லாய்

செல்வா
12-03-2008, 06:09 PM
பாரதி அண்ணாவின்
இன்னொரு முகம்
இன்றுதான் பார்த்தேன்
ஒரு முகத்தைத் தொடர்ந்து திருமுகம் வரையும் மறுமுகங்கள்.....
இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும்..... பங்கேற்ற முகங்களுக்கு....
தொடரும் முகமாகும் ஆசையில்
செல்வா...... :)

அமரன்
12-03-2008, 06:21 PM
சூல் கொண்டாளோ
பூமிப் பெண்ணாள்.
எரிமலை.

அமரன்
12-03-2008, 06:26 PM
பூமிப் பெண்ணின் முகத்தில்
அழகுப் பருக்கள்.
மலைகள்.

நாகரா
13-03-2008, 10:25 AM
சூரியன் இலைகளில் எழுதும் கவிதையால்
மர மண்டையில் உதிக்கும் ஞானமோ
மலர்கள்!

அமரன்
13-03-2008, 11:56 AM
ஆகாயத்தை
காயம் செய்தவர் யார்.
கண்ணைக் கசக்கிறதே!

பாரதி
18-08-2008, 10:41 AM
நிலா

ஆகாயத்தரையில்
நீர் தேடி வெட்டிய
ஆழ்துளைக் கிணறு.

இளசு
23-08-2008, 09:38 PM
சூல் கொண்டாளோ
பூமிப் பெண்ணாள்.
எரிமலை.

குழவியா பிரசவம்?
குழம்பல்லவா?


பூமிப் பெண்ணின் முகத்தில்
அழகுப் பருக்கள்.
மலைகள்.

அவை பரு-வக் கலைகள்!
எனது - பருகும் விழிகள்!


ஆகாயத்தை
காயம் செய்தவர் யார்.
கண்ணைக் கசக்கிறதே!

காலத்தே சிந்தப்பட்ட கண்ணீர்
நன்மை செய்யும் நல்ல கண்ணீர்!
அவள் அளவோடு அழட்டும்!
ஆண்டுதோறும்.. பருவந்தோறும்!!


நிலா

ஆகாயத்தரையில்
நீர் தேடி வெட்டிய
ஆழ்துளைக் கிணறு.

பாற்கடல் கேட்டதுண்டு..
இது பாற்கிணறா பா-ரதி?

பிச்சி
01-09-2008, 09:57 AM
நிலமகளின் கோப நடனம்
வலியில் தெறித்தது மேனி
சுனாமி

பிச்சி
01-09-2008, 09:59 AM
அடிமன ரெளத்திரம் எகிறி
வாயால் துப்பிய எச்சில்
எரிமலை

பிச்சி
01-09-2008, 10:01 AM
புல்லசைவின் கீதத்தில்
நர்த்தனமிடுகின்றன
ஒய்யாரப் பூச்சிகள்

பிச்சி
01-09-2008, 10:04 AM
மெளனக் கலைப்பாய்
தூணோரப் பல்லி இசைக்கிறது
பிலஹரி ராகம்

பிச்சி
01-09-2008, 10:06 AM
எங்கோ ஓர் மூலையில்
பிரபஞ்ச எல்லை
மத்தியில் பசியாவலுடன்
நான்

பிச்சி
01-09-2008, 10:08 AM
சூரியனும் சந்திரனும்

நீ
படலம் கிழித்த கதிர்
நான்
உன்னைப் பொற்றும் இதயம்

பாரதி
06-02-2009, 04:55 PM
நல்ல குறும்பாக்களுக்கு பாராட்டு பிச்சி.
------------------------------------------------------
நிலா

மாதத்திற்கொரு முறை
வான்குளத்தில் மலர்ந்திருக்கும்
வட்ட மலர்.

பாரதி
31-07-2009, 01:50 PM
கிரகணம்

சூரியனுக்கும் நிழ(லா)லாடை
போர்த்திப் பார்க்கும்
நூற்றாண்டு வைபவம்.

பாரதி
31-07-2009, 01:59 PM
சூரியன்

அதிகாலையில் கடலில் குளியல்
ஆனாலும் ஈரம் சொட்டாமலே
தினசரிப் பயணம்!

ஆதவா
31-07-2009, 02:07 PM
கிரகணம்

சூரியனுக்கும் நிழ(லா)லாடை
போர்த்திப் பார்க்கும்
நூற்றாண்டு வைபவம்.

அபாரம் பாரதி அண்ணா..

இது
ஒருவருக்கொருவர்
ஒளிந்து விளையாடும்
இயற்கையின் விளையாட்டு!!!

(இந்த பிஸியிலும் நாங்க ரிப்ளை பண்ணுவோம்ல!!)

ஆதவா
31-07-2009, 02:12 PM
சூரியன்

அதிகாலையில் கடலில் குளியல்
ஆனாலும் ஈரம் சொட்டாமலே
தினசரிப் பயணம்!

கடலில் குளித்தவனைத்
துவட்டியதோ
வானாடை

பாரதி
01-08-2009, 03:10 PM
அபாரம் பாரதி அண்ணா..

இது
ஒருவருக்கொருவர்
ஒளிந்து விளையாடும்
இயற்கையின் விளையாட்டு!!!

(இந்த பிஸியிலும் நாங்க ரிப்ளை பண்ணுவோம்ல!!)


கடலில் குளித்தவனைத்
துவட்டியதோ
வானாடை

உடனே எழுதிய குறும்புப்பாக்களுக்கு நன்றி ஆதவா.

ஒருவருக்கொருவர் ஒளிந்து விளையாடுவது சரி... பார்ப்பவர் கண்களில் ஒளியை பாய்ச்சி பார்வையில் பந்து விளையாடுவது சரியா.... ஆதவா...?

துவட்டிய வானாடை அழுக்கோ...? மீண்டும் கடலில் மூழ்க என்ன அவசரம் ஆதவா...?

ஆதவா
01-08-2009, 04:23 PM
துவட்டிய வானாடை அழுக்கோ...? மீண்டும் கடலில் மூழ்க என்ன அவசரம் ஆதவா...?

நிதம் நீராடு
நமக்கு மட்டுமா?



ஒருவருக்கொருவர் ஒளிந்து விளையாடுவது சரி... பார்ப்பவர் கண்களில் ஒளியை பாய்ச்சி பார்வையில் பந்து விளையாடுவது சரியா.... ஆதவா...?



ஆடியில்லாமல்
ஆடினால்?

பாரதி
01-08-2009, 04:34 PM
நிதம் நீராடு
நமக்கு மட்டுமா?

ஆடியில்லாமல்
ஆடினால்?

நாம் நீராடி விட்டு ஆதவனால் காய்வோம். ஆதவன் காய்ந்தது யாரால்?

ஆடியில் ஆடி...!
ஆடியில்லாமல் ஆடி...!!
ஆடாமல் ஆடி...!!
நிழற்படக் கருவிமூலம் கண்டு ஆடி...!!!
அடுத்தது காண ஆடி நமக்கு தேவையில்லை.

(ஆடியில்லாமல் ஆடினால் கண்பார்வை நன்று என்று பொருள்..!:lachen001:)

ஆதவா
02-08-2009, 02:33 AM
நாம் நீராடி விட்டு ஆதவனால் காய்வோம். ஆதவன் காய்ந்தது யாரால்?



கடலில் குளித்தவனைத்
துவட்டியதோ
வானாடை

:):):redface:

பாரதி
02-08-2009, 04:12 AM
:fragend005::eek::sauer028::D:):icon_b:

ஷீ-நிசி
02-08-2009, 05:42 AM
குறும்பாய் சில குறும்பாக்களா?!!

அனைத்தும் அழகு!!

நடத்துங்கள் ஆதவா & பாரதி

இளசு
03-08-2009, 09:22 PM
கிரகணம்

சூரியனுக்கும் நிழ(லா)லாடை
போர்த்திப் பார்க்கும்
நூற்றாண்டு வைபவம்.


அசந்தேன் பாரதி..

இயற்பியல் + கவியியல் கலந்து சுவைத்-தேன்!


ஆதவன் புகுந்து ஆடி-ய குறும்பாட்டம் குதூகலம்..

ஆதி
05-08-2009, 08:20 AM
சூரியன்

அதிகாலையில் கடலில் குளியல்
ஆனாலும் ஈரம் சொட்டாமலே
தினசரிப் பயணம்!

நிலா சூரியனுக்கிட்ட பர்தா..

சூரியனின் கண் (நிலா)பாவை..

பிரிவு தாகத்தை
ஆற்ற துடித்து
நிலவின் உதட்டில்
நீர்தேடும் சூரியன்..

ஊரே கூடி வேடிக்கை பார்த்தும்
உதடு பிரிக்காத காதலர்கள்..

சுடும் வெளிச்சமும்
சுடாத வெளிச்சமும்
கட்டில் கொள்ளும்
காம நாடகம்

பாரதி
14-09-2009, 04:02 AM
நன்றி ஷீ, அண்ணா.
உங்கள் கவிதை மிக நன்று ஆதி.
-------------------------------------------------
ஆகாய வீதியில்....

நிழலும் தொடாத வண்ணம்
நித்தமும் நடக்கிறான் - ஒப்புக்கும்
காண முடிவதில்லை நடந்த சுவடுகளை.