PDA

View Full Version : பதில் சொல் காதலா....



lavanya
19-04-2003, 10:47 AM
உன் காரணங்கள்
சரியானதாகவே இருக்கலாம்...
என்னைவிட அவள் உனக்கு
எல்லாவிதங்களிலும்
பொருத்தமானவளாகவே
இருந்து விட்டு போகட்டும்....
என்னை விட
நெருக்கமாய் பிரியமுடன்
எவள் உன்னை
நேசித்திருக்க முடியும்...?

இளசு
19-04-2003, 10:52 AM
லாவண்யா
அருமை!
இது உங்களது நூறாவது மடல்...
அதற்கு சிறப்பு வாழ்த்துகள்.....!
மேலும் மேலும் உங்கள் தீட்சண்யப் படைப்புகளால்
மன்றத்தை அழகொளியூட்ட விழைகிறேன்....

உங்கள் கவிதை கண்ட
உடனே ஒரு எசப்பாட்டு
நம்ம தம்பி பூ பாணியில...

நான்
பிறக்கும் போதே பிறந்தவள்
நிச்சயமாய்
என்னை அடைபவள்
நிம்மதியைத் தருபவள்
மர்மமாய்.. ஆனால் மௌனமாய்
காலம் வரும்வரை.......... காத்திருப்பவள்
நீ இல்லை என்று ஆனபின்
எனக்குப் பொருத்தமானவள்
எனக்காகப் பொறுத்திருப்பவள்
அவள்தான்...

மரண தேவதை!

rambal
19-04-2003, 10:59 AM
முதல் காதலில்
அவதிப்பட்டவர்கள் எல்லோருமே
இப்படிக் கேல்விகள் கேட்பதுண்டு..
என்ன செய்ய?
அது ஒரு நெருஞ்சி முள் குத்திய வலி
இப்படித்தான் வெளிப்படும்..
பாராட்டுக்கள் லாவண்யாவிற்கு..

Dinesh
19-04-2003, 11:08 AM
உருக்கமான கவிதை..
உடனுக்குடன் பதிலளித்த இளசு அவர்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது..
வாழ்த்துக்கள் லாவண்யா மற்றும் இளசு அவர்களே!

தினேஷ்.

karikaalan
19-04-2003, 12:56 PM
லாவண்யாஜி! வாழ்த்துக்கள். தோல்வியுற்றவளின் ஆதங்கத்தை அழகாக(?) வெளிப்படுத்தியமைக்கு!

இளவல்ஜி!

தோல்வியுற்றால் ஏன் மரணதேவதையையே அனைவரும் தேடவேண்டும்? உதறிவிட்டுவிட்டு மேலே ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டாமா?

===கரிகாலன்

குமரன்
19-04-2003, 01:26 PM
நேசித்த நெஞ்சத்தின் வலி
புரிகிறது...

நேசிப்பதைஇ விட
நேசிக்கப்பட வேண்டும்...
(மரண தேவதையால் அல்ல)
என்பதை அழகாய் உணர்த்தும் கவிதை...

பாராட்டுக்கள்...லாவண்யா


-குமரன்.

poo
20-04-2003, 02:41 PM
மரண தேவதையை
தழுவிட ஆழமாய்
முடிவெடுத்தபின்
மறுப்பேதுமில்லை..
சற்றே பொறு...
நான் இன்னொரு ஜென்மம்
எடுக்கிறேன்...உனக்கு முன்னே
மரணித்து மரண தேவதையாய்!!!......

-அண்ணன் இளசு என் சார்பாய் எழுதிவிட்டமைக்கு நன்றி!.

அக்காவிற்கு பாராட்டுக்கள்... அந்த வரிகள் கொஞ்சமே என்றாலும் மனம் துக்கப்பட்டது அதிகமோ அதிகம்!!

lingam
20-04-2003, 07:10 PM
இப்படி ஒரு காதலி
கிடைக்க அவன் கொடுத்து
வைக்கவில்லை போலும்!

Hayath
21-04-2003, 04:50 AM
உன்னை நானும் நேசித்தது
உண்மைத்தான்
இல்லையென்று சொல்லவில்லை
ஆனால் நீ உன் காதலை
சொன்னால்தானே
எனக்கு தெரியும்

நானும் உன்னிடம்
சொல்லாமல்
நீயும் என்னிடம்
சொல்லாமல்
காதல் யாரிடம் போய்
சொல்லும்
பதில் சொல் காதலி ?!

இது காதலன் காதலியிடம் கேட்க்கும் எதிர் கேள்வி

-------------------------------------------------------
உங்கள் கவிதை அருமை.பாராட்டுக்கள் லாவண்யா .
-------------------------------------------------------

Narathar
21-04-2003, 11:22 AM
லாவண்யாவின் கேள்விக்கு கிடைத்த பதில்களும் எதிர்கேள்விகளும் பாராட்டப்படவேண்டியவை!!

gans5001
22-04-2003, 02:15 AM
முதல் காதலில்
அவதிப்பட்டவர்கள் எல்லோருமே
இப்படிக் கேல்விகள் கேட்பதுண்டு..

அப்பட்டமான உண்மை.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு?

gankrish
22-04-2003, 06:39 AM
லாவண்யா யார் உங்களுக்கு போட்டி. கவிதை அருமை. எசக்கவிதை எழுதிய இளசு மற்றும் பூ அழகு.

Emperor
22-04-2003, 02:28 PM
கவிதைகள் அருமை, லாவண்யா, இளசு, பூ அவர்களுக்கு பாராட்டுகள்

puppy
08-01-2004, 07:32 PM
இயல்பான நல்ல அர்த்தமுள்ள கவிதை........நன்றி லாவ்

kavitha
09-01-2004, 05:04 AM
சில விசயங்களை உணர்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டும் ஹமாயுன்!

வலிகள் தெரியட்டும் லாவ், இன்னும் கொடுங்கள்!