PDA

View Full Version : ....!



poo
26-09-2005, 10:45 AM
காற்றடைக்கத் தயாராய்
ஒரு பை..

சீரான வேகத்தில்
மண் விலக்கும் விதையாக
அல்ல...
விண் பிளக்கும் விண்கலமாக
அல்ல..
சீரான வேகத்தில்....

காற்றும் காலமும்...
உள்செல்ல.. செல்ல..
உப்பியது பை..

முனையில் முடிச்சிட்டாயிற்று..
இனி இச்சைக்கேற்ப..

அலைந்து திரிந்து
அலுத்துப்போன பை..
அமைதியாக நினைக்கையில்
வெடித்துச் சிதறியது..

முடிச்சை மிக மெல்லிதாய்..
இதழ் விரிக்கும் பூப்போல..
பனிவிலக்கும் புல்போல
மிக மிக மெல்லிதாய்
தளர்ச்சியாக்க
அனுமதியில்லையாகையால்..

பிரியன்
27-09-2005, 03:35 AM
கருமுட்டை வெடித்துதான்
உலகம் வருகிறது உயிர்க்குஞ்சு
கல்லில் இருந்துதான்
நதி சுரக்கிறது
பூமியை பிளந்துதான்
விதை வளர்கிறது
அணுப்பிளவில் கூட
ஆற்றல் இருக்கிறது
வெடித்தல்கள் எப்போதும்
மென்மையாக இருப்பதில்லை
ஏனென்றால் அவை இறுதி அல்ல
பாதை மாற்றிய பயணம்

poo
28-09-2005, 08:32 AM
ஒரு மூதாட்டியை பார்த்தேன்.. பிள்ளைகளால்
கைவிடப்பட்டதை கண்ணீர்விட்டு சொன்னார்.. .

முதுமையில் குணத்தால் குழந்தையென்கிறார்கள்..
உணர்பவர் எவர்?!

படிப்படியாய் வளர வழிசெய்த ஆண்டவன்.. குறிப்பிட்ட
அதாவது உழைக்கும் காலம் வரை அனுமதித்து ... உடல்
கொஞ்சம் கொஞ்சமாக இயலாமையை மற்றவர்க்கோ தனக்கோ உணர்த்தும் தருணத்தில் வளர்ச்சியை மீண்டும் படிப்படியாக குறைத்து குழந்தையாக்கிவிட்டால்..ஏறக்குறைய பலராலும்
வெறுக்கும் முதுமை உணரப்படாமல் போகுமே..

உள்ளத்தால் குழந்தைதான்.. சுருங்கிய தோலும்.. சுணங்கிய
கண்களும் முகமூடிகளாக தெரிகையில்?!..

கண்ணிருந்தும் குருடராக அலையும் இளைய
ஜென்மங்கள் உணர்ந்துகொள்ள இறைவன்
அப்படி ஒரு வரம் அளித்திருக்கக்கூடாதா?!!

இளசு
12-10-2005, 10:24 PM
முதியோர் பிரச்னைகள் தனி..
அவர்களைப் பேண வேண்டிய பக்குவமும் தனி..

சென்னைக்கு அடுத்து உன் ஊரில்தான் பூ..- முதியோர் நலத்துக்கென தனித்துறை - பொது மருத்துவமனையில்..

ஆயுள் காலம் நீண்டு கொண்டே..
சிறு குடும்பங்களும் பெருகிக் கொண்டே..
இன்று பரவலான சோகம்..
எதிர்காலம் இன்னும் பூதாகாரம்..

மற்றொரு சோக நிகழ்வுப்பதிவு...
பாராட்டுகள் பூ..

பென்ஸ்
27-04-2006, 11:14 AM
வேகமாக பயணிக்கும் இந்த உலகில், ஒரு நிமிடம் நின்று தன்னை
சுற்றி பார்க்கும் எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படும் ஒரு
வேதனைதான் இது பூ... மனிதத்தை உணர்த்தும் வேதனை...

கவிதை சரியாய் புரிய மறுத்தாலும்... உங்கள் விளக்கம் வலியை கொடுக்கிறது....

உங்கள் மனிததிற்கு தலை வணக்குகிறேன் பூ...