PDA

View Full Version : விடுப்பில் நான், சில பதவி உயர்வுகள்



இராசகுமாரன்
25-09-2005, 02:53 PM
நண்பர்களே..

உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியவில்லை ஆனால், என்னைப் பொருத்தவரை, முதலில் செய்யும் தொழில்/வேலை, பிறகு குடும்பம், மூன்றாவது நமது தளம் அப்படி வரிசைப் படுத்தி தான் பங்கேற்று வருகிறேன்.

தற்போது முதல் இரண்டிலும் தீவிர பணிகள் உள்ள படியால் நான் அடுத்த 2-3 மாதங்களுக்கு தொடர்ந்து வர முடியாது, அதனால் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன்.

பப்பி, இளசு போன்றவர்கள் இல்லாத இந்த சமயத்தில், நமது நண்பர் "இனியன்" அவர்களை "உதவி நிர்வாகி" என்ற பொறுப்பில் அமர்த்திச் செல்லுகிறேன். இதன் மூலம் பெயர் மாற்றம், அனுமதி வழங்குதல், மற்றும் நிர்வாக தீர்மானங்களை அவர் கவனித்துக் கொள்வார்.

அவருக்கு துணையாக, அறிஞர், மன்மதன் இருவரையும் இளம் உதவியாளர்கள் குழுவில் இருந்து மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு செய்யப் படுகிறார்கள்.

இளம் உதவியாளர்கள் குழுவில் புதிய இளம் உதவியாளராக "பிரியன்" சேர்க்கப் படுகிறார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு இவர்கள் அனைவரும் நம் மன்றத்தை திறம் பட வழி நடத்த நீங்கள் அனைவரும் உதவுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி..


இராசகுமாரன்

பிரியன்
25-09-2005, 03:13 PM
நன்றி ராசகுமாரன்...

நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய பணியையும் சிறப்பாக செய்திட முயர்சிக்கிறேன்......

இளசு அண்ணாவிற்கு இந்த விசயம் தெரிந்தால் மிகவும் மகிழ்வார். விரைவில் வருவார் என்ற எதிர்பார்ப்பில் நானும் காத்திருக்கிறேன்...

மன்மதன்
25-09-2005, 03:20 PM
வாழ்த்துகள் பிரியன்.. நண்பர் இராசகுமாரன் அவர்களுக்கு நன்றி.

ஜீவா
25-09-2005, 03:29 PM
வாழ்த்துக்கள் பிரியன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்..

சுவேதா
25-09-2005, 05:36 PM
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

பாரதி
25-09-2005, 06:33 PM
அன்பு நண்பர்கள் பிரியன், மன்மதன் மற்றும் அறிஞருக்கு வாழ்த்துக்கள். நண்பர் இராசகுமாரன் தினம் வரவில்லையென்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போது வந்து செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இளையவன்
25-09-2005, 08:28 PM
பதவியுயர்வு பெற்ற மன்மதன் அறிஞர் மற்றும் பிரியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Narathar
25-09-2005, 09:51 PM
மன்மதன் அறிஞர் மற்றும் பிரியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஒத்துளைப்பையும் இங்கு தெரிவிப்பதில் மகிழ்கிறேன்................

தலைவரே நம்மவர்கள் ஒரு குறையுமில்லாமல் மன்றத்தை பார்த்துக்கொள்வார்கள்.

கவலைப்படாமல் ஊர் சென்று வாருஙள்
வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள்

mania
26-09-2005, 05:18 AM
:D இனியன், அறிஞர் , மன்மதன், பிரியன் இவர்களுக்கு என் வாழ்த்துகள்...:D
அன்புடன்
மணியா...

pradeepkt
26-09-2005, 05:51 AM
புதுப் பணி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு.

அன்புடன்,
பிரதீப்

பரஞ்சோதி
26-09-2005, 06:07 AM
இளமையான கூட்டணி அமைத்த இனியன், அறிஞர் , மன்மதன், பிரியன் ஆகியோருக்கு என் பாராட்டுகள்.

பிரியன்
26-09-2005, 07:38 AM
வாழ்த்து தெரிவித்த மன்மதன் ஜீவா இளையவன் நாரதர் மணியா அண்ணா பிரதீப் பரஞ்சோதி ஆகியோருக்கு எனது நன்றி....

உங்களது அன்போடு இப்பணியை எளிமையாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

Mano.G.
26-09-2005, 12:28 PM
புதிய நிர்வாகிகள், இனியன், அறிஞர், மற்றும் பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மன்றம் மேலும் செழித்தோங்க
எனது ஆதரவு என்றும் உண்டு.

மனோ.ஜி

Iniyan
26-09-2005, 01:51 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி.

அறிஞர்
26-09-2005, 03:48 PM
அனைவரின் சந்தோசமே எங்களின் சந்தோசம்.

தமிழ் மன்றம்.. தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகமான தளம்.

அதை எப்படியாவது வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டு. உறுப்பினர்களின் தேவைகளை உடனே நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது உண்டு.

இன்றைய செய்தி... சந்தோசமாக உள்ளது.

இனி மன்றத்தில் எல்லாரின் தேவைகளை உடனே பூர்த்தி செய்ய நாங்கள் குழுவாக முயலுகிறோம். தங்களின் ஆதரவு எப்பொழுதும் தேவை.

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி...

இளசு
06-10-2005, 12:55 AM
விடுப்பில் பொறுப்புகளை நிறைவேற்றி, நிறைவான மனதுடன் மன்றம் திரும்ப தலைவருக்கு வாழ்த்துகள்.
பொறுப்புயர்வு பெற்ற நண்பர்கள் இனியன், மன்மதன், அறிஞர், பிரியன் அனைவருக்கும் பாராட்டுகள்..ஊக்கங்கள்..