PDA

View Full Version : சஞ்சய் வழங்கியவை (1)



இளசு
19-04-2003, 10:30 AM
சஞ்சய் வழங்கியவை (1)

என் நண்பர் வேறொரு தளத்தில் பதித்தது அவர் அனுமதியோடு இங்கே...
பிடித்திருந்தால் சொல்லுங்கள்....
இன்னும் தருவேன்..

பிறத் தளத்துக் கலைச்செல்வங்கள்
(அனுமதியோடு)
கொணர்ந்திங்கு சேர்ப்போம்....!!!!

ஜனநாயக மன்னர்கள்
------------------------------------

இவர்களுக்கும்
கோட்டை உண்டு
கொடியும் உண்டு
குதிரை மட்டும் இல்லை!
அதனால் தான்
சனங்களின் மீதே
சவாரி செய்கிறார்கள்!

lavanya
19-04-2003, 10:38 AM
நல்ல கவிதை .... உண்மையான நிலைப்பாடு

Dinesh
19-04-2003, 10:58 AM
அரசியல்வாதிகளை தோலுரிக்கும்விதம் அருமை...
எழுதிய சஞ்சய் அவர்களுக்கும் மன்றத்தில் பிரசுரித்த
இளசு அவர்களுக்கும் நன்றிகள்.

தினேஷ்.

குமரன்
19-04-2003, 02:06 PM
உண்மைக் கவிதை...
சஞ்சய்க்கு பாராட்டுக்கள்...
நன்றிகள் இளசுவிற்கு.

மேலும் தொடருங்கள்.

-குமரன்.

poo
20-04-2003, 02:36 PM
நன்றி அண்ணா... சஞ்சய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்!!

aren
20-04-2003, 02:51 PM
நல்ல கவிதை வரிகள். அரசியல்வாதிகளை அப்படியே தோலுரிக்கின்றன. தொடருங்கள்.

மன்மதன்
23-11-2004, 03:14 PM
நல்ல கவிதை.. கவிஞருக்கு, சொன்னவருக்கும் பாராட்டுக்கள்
அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
23-11-2004, 04:12 PM
மன்மதனுக்கு முதல் நன்றி.

இளசு அவர்களே வேண்டுகோளுடன் நன்றி. தொடருங்கள்.

சஞ்சய் அவர்களுக்கு சபாஷ் சொல்லுங்கள்

manitha
13-12-2004, 11:33 PM
சஞ்சய் பெற்றெடுத்த குழந்தைக்கு
இளசு அண்ணாரின் மூலம் பட்டாபிஷேகம்
ஈன்ற அன்னைக்கும்,
சான்றோனாக்கிய செவிலிக்கும் எமது வாழ்த்துக்கள்.

உங்களது சேவையை தொடருங்கள்...........
காத்திருக்கிறேன்,
நீங்கள் தோலுரிக்கப்போகும்
ஜனரன்ஜக உண்மைக்காக............

விகடன்
14-06-2008, 06:03 AM
ஜனநாயக அரசியல் என்ற பெயரில் தற்போது நடக்கும் சர்வாதிகாரத்தின் போக்கை இரத்தினச் சுருக்கமாக சில இலகு வரிகளில் கவிதையாக .....

பிரமாதம்.