PDA

View Full Version : சமர்ப்பணம்



pradeepkt
23-09-2005, 09:47 AM
மக்கள் அனைவரும் தங்கள் முத்திரைப் பதிவுகளாகத் தருவதைப் பார்த்து இம்முறை நானும் ஒரு முயற்சி செய்தேன்.

சமர்ப்பணம்

எண்ணியிருந்தேன்
நாலாயிரமாவது பதிவுக்கு
ஆனால்
எண்ணியிருக்கவில்லை
என்ன எழுதுவதென்று

என்ன எழுதுவதென்று
முடிவெடுத்தபின்
எண்ண இயலவில்லை
எதை விடுப்பதென்று

கண்களுக்குள் மட்டுமல்ல
நெஞ்சுக்குள்ளும் நீரூற்றுகள்
கண்டுபிடித்தவை
கதைகள்

பல மனங்களில்
விருட்சங்கள் காட்டிய
விதைகள்
கவிதைகள்

அண்ணன்
தங்கை மாம்ஸ் மம்ஸ் என
நட்புறவுகள் மனச்சங்கமங்களின்
சின்னம்

விமர்சனங்கள்
என்னைப் பக்குவப்படுத்திய
நிதர்சனங்கள்

கூடியிருப்பேன்
இன்னும் பலநாள் உங்கள்
மனங்களில்
ஊடியிருப்பேன் என் நம்பிக்கை

தமிழுக்கும் மன்றத்திற்கும்
அர்ப்பணம் செய்யும்
நண்பர்களுக்கு இப்பதிவு
சமர்ப்பணம்

mania
23-09-2005, 09:57 AM
பாராட்டுகளும் வாழ்த்துகளும் ப்ரதீப்.......:D .(இது உன் 4000 ஆவது பதிவுக்கு).நீ சமர்ப்பித்த கவிதையை விமரசனம் செய்ய கவிதை இலக்கணம் அறிந்த நமது தோழர்கள் வருவார்கள். அது உன் கவிதை எழுதும் திறனை கூர் செய்யும்..:)
அன்புடன்
மணியா...:)

pradeepkt
23-09-2005, 10:35 AM
மிக்க நன்றி தலை.
உங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் எனது எந்தத் திறனையும் கூர் செய்யும் என்பதில் ஐயமில்லை.

gragavan
23-09-2005, 10:43 AM
வாழ்த்துகள் பிரதீப். இன்றைக்கு 3998 என்று பார்த்தேன். நாலாயிரம் தொட்டு விடுவீர்கள் என்பதால் ஒரு வாழ்த்துச் செய்தி எழுதி வைத்து விட்டுக் காத்திருந்தேன். கவிதை எழுதிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா....அதான் மாலையாயிருக்கிறது. உங்கள் பதிப்பும் மாலையாயிருக்கிறது.

உங்கள் கவிதைக்கு இலக்கணங்கள் இல்லை. ஆகையால் பிழை சொல்லவும் தேவையில்லை. ஊக்கமே ஆக்கமாகும். அதுவே நல்ல நோக்கமாகும். திருந்து செயல்வகை வேண்டும் என்பது உமக்கு தெரிந்து செயல்வகை என்பதால் தொடருங்கள் என்று மட்டும் சொல்லி வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

சுவேதா
23-09-2005, 10:44 PM
உங்கள் சமர்ப்பணம் சூப்பர்! வாழ்த்துக்கள் அண்ணா!


அண்ணன்
தங்கை மாம்ஸ் மம்ஸ் என
நட்புறவுகள் மனச்சங்கமங்களின்
சின்னம்

(எல்லோரயும் சொன்னிர்கள் ஆனால் என்னை (மகள்)சொல்லவில்லையே சித்தப்பா ஏன்....................)

<பகுடிக்கு ஒகே!!>

Mano.G.
24-09-2005, 01:07 AM
முகம் அறியா உன்னையும் என்னையும்
பாச உணர்வுகளை காட்டிய மன்ற உறவுகளையும்
ஒன்று சேர்த்த தமிழ்மன்றமென்ற தளத்தையும்
அதை உறுவாக்கிய இராஜகுமரனையும்
4000 பதிப்புக்களை பதித்த எனதருமை தம்பிக்கும்
உனது சமர்ப்பண கவிதைக்கும் நன்றியும்
வாழ்த்துக்களும்.


மனோ.ஜி

மன்மதன்
24-09-2005, 04:34 AM
4000வது பதிவை கவிதையாக வடித்து அதை எங்களுக்கே சமர்ப்பணம் செய்த பிரதீபுக்கு நன்றி.. மாம்ஸ், கலக்கிட்டே.. 4000 பதிவுக்கு பாராட்டுகள்..

பரஞ்சோதி
24-09-2005, 04:42 AM
உள்ளத்தின் கருத்துகளை பிரதிபலித்து கவிதையாக கொட்டிய தம்பிக்கு என் பாராட்டுகள்.

pradeepkt
24-09-2005, 05:20 AM
பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இந்த சுவேதா பகுடி தாங்க முடியலை.
மனோ அண்ணா, மம்ஸ், பரம்ஸ் அண்ணா வாழ்த்துகள் இன்னும் ஊக்கம் தரும்.

thempavani
24-09-2005, 07:35 AM
என் தம்பியா இது..நம் மன்ற உறவுகளின் உள்ளக்கிடக்கைதனை அப்படியே படம் பிடித்துவிட்டாய்..நன்றாக எழுதியிருக்கிறாய் தம்பி...

poo
24-09-2005, 09:42 AM
அருமை பிரதீப்..

நிகழ்வுகளை சொல்ல கவிதையின் இலக்கணம் என்ன வேண்டிக்கிடக்கிறது?! தொடர்ந்து எழுதுங்கள்.. இங்கே!!

(தெரியுமா.. நான் அடிக்கடி செய்திகள் பார்த்துதான் கவிதைகள்(!?) எழுதுவேன்! (இன்னைக்கு காலம்பறக்கூட சன் செய்தியில மன்மோகன் சிங் பெண் சிசுக்களை கொல்லாதீங்கன்னு சொன்னதா சொல்ல.. அதைத்தான் கிறுக்கினேன்.. மன்றத்துல..)

pradeepkt
24-09-2005, 02:06 PM
என் தம்பியா இது..நம் மன்ற உறவுகளின் உள்ளக்கிடக்கைதனை அப்படியே படம் பிடித்துவிட்டாய்..நன்றாக எழுதியிருக்கிறாய் தம்பி...
மிக்க நன்றி அக்கா,
ஏதோ ரொம்ப நாளா எழுதணுமின்னு தோன்றியது. அதுவும் மன்மதன் பிரியன் எல்லாம் அவங்க ஆயிரங்களைக் கடக்கும்போது முத்திரைப் பதிவாகத் தராங்களேன்னு எனக்குள்ள ஒரு ஆசை :D

pradeepkt
24-09-2005, 02:07 PM
அருமை பிரதீப்..

நிகழ்வுகளை சொல்ல கவிதையின் இலக்கணம் என்ன வேண்டிக்கிடக்கிறது?! தொடர்ந்து எழுதுங்கள்.. இங்கே!!

(தெரியுமா.. நான் அடிக்கடி செய்திகள் பார்த்துதான் கவிதைகள்(!?) எழுதுவேன்! (இன்னைக்கு காலம்பறக்கூட சன் செய்தியில மன்மோகன் சிங் பெண் சிசுக்களை கொல்லாதீங்கன்னு சொன்னதா சொல்ல.. அதைத்தான் கிறுக்கினேன்.. மன்றத்துல..)
நன்றி பூ!
எனக்கு உள்ளே ஓடும் விஷயங்களை விட நிகழ்வுகளைக் கவிதையாக்குவது கடினமாகப் படுகிறது. என்னால் இயன்றவரை எழுதி வருகிறேன்.

சுவேதா
24-09-2005, 02:27 PM
பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இந்த சுவேதா பகுடி தாங்க முடியலை.
மனோ அண்ணா, மம்ஸ், பரம்ஸ் அண்ணா வாழ்த்துகள் இன்னும் ஊக்கம் தரும்.

:D:D:D:D

mukilan
24-09-2005, 02:57 PM
தமிழ் மன்றத்தில் நானும் ஒருவனாக இருந்து வருவது 2 மாதங்களாகத் தான். ஆனால் ஒரு நாள் மன்ற வலை தளத்தை பார்வையிடாவிட்டால் எதையோ இழந்து விட்ட உணர்வு. அதை அற்புதமாக வெளியிட்ட பிரதீபரே (தமிழ்ப்படுத்துதல்:confused: :confused: ) உமக்கு பாராட்டுகள். அதுவும் நான்காயிரம் பதிவுகள். மென்மேலும் பதிவுகள் பல இட்டு இனிமேலாவது உள்ளது உள்ள படி ( சென்னைப் பாராயணம் போல் தணிக்கை செய்யாமல்:D :D :D :D ) எழுதுவீராக!!

pradeepkt
24-09-2005, 03:12 PM
தணிக்கை செய்ய வேண்டும் என்பதென்ன எனக்கு வேண்டுதலா?
அதெல்லாம் எதிரணியினர் பார்த்தால் சும்மா கிடந்த வாய்க்கு அவல் போல.
அதனால இந்த மேட்டரெல்லாம் நைஸா நமக்குள்ள தீத்துருவோம். நீங்க இங்க வாங்க, இன்னொரு பாராயணம் எழுதிருவோம்.
மிக்க நன்றி.

சுவேதா
24-09-2005, 04:05 PM
:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
24-09-2005, 04:06 PM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்பிச்சிட்டாய்யா சுவேதா
தினமும் வீட்டில சுவேதாவோட குடும்பத்தினர் நிலையை நினைத்து வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை

mukilan
24-09-2005, 04:08 PM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்பிச்சிட்டாய்யா சுவேதா
தினமும் வீட்டில சுவேதாவோட குடும்பத்தினர் நிலையை நினைத்து வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை
எல்லாம் உங்க அண்ணன் பொண்ணுதானய்யா? உங்களுக்குத்தானே தெரியும். சுவேதா சித்தப்பா பகுடி எப்படி???

pradeepkt
24-09-2005, 04:31 PM
யோவ் நீங்களும் ஆரம்பிக்காதீங்க.
பாதுகாப்பா அவ போட்டோவைப் போடாம கிண்டலடிக்கிறா!!
அப்புறம் அவ ராதிகா மேடம் ஆயிருவா... சித்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

சுவேதா
24-09-2005, 06:38 PM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்பிச்சிட்டாய்யா சுவேதா
தினமும் வீட்டில சுவேதாவோட குடும்பத்தினர் நிலையை நினைத்து வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை

:D:D:D:D:D:D

சுவேதா
24-09-2005, 06:40 PM
எல்லாம் உங்க அண்ணன் பொண்ணுதானய்யா? உங்களுக்குத்தானே தெரியும். சுவேதா சித்தப்பா பகுடி எப்படி???

அப்படிப் போடுங்க!

சுவேதா
24-09-2005, 06:42 PM
யோவ் நீங்களும் ஆரம்பிக்காதீங்க.
பாதுகாப்பா அவ போட்டோவைப் போடாம கிண்டலடிக்கிறா!!
அப்புறம் அவ ராதிகா மேடம் ஆயிருவா... சித்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

சித்தியா....................
ஹா....ஹா.........
இல்லவே இல்ல.....

அறிஞர்
29-03-2007, 08:05 PM
பிரதீப்பின் பதிப்பை தேடும் போது கண்ணில் பட்டது இது...

புதியவர்கள் ரசிப்பார்கள் என எண்ணுகிறேன்
(எப்படியோ மாட்டி விட்டாச்சு)

pradeepkt
30-03-2007, 05:21 AM
வெளங்குன மாதிரிதான்...
ஏற்கனவே மக்கள் வெறும் வாய மென்னுக்கிட்டுக் காத்துக்கிருக்காய்ங்க... இப்ப இது வேறயா....
இப்பப் பாத்தாக் கூட இந்தப் பதிவுல என்னத்தையோ திருத்தணும்னு தோணுது... ஆனா என்னத்தைன்னுதான் புரியலை..

பிரதீப்பு... எஸ்கேப்பு... :D

poo
30-03-2007, 05:39 AM
இரண்டாவது வரியை மட்டும்தான் திருத்தனும் ப்ரதீப்பூ... ஹிஹி!

ஏங்க... சரளமா வந்து கொட்டியிருக்கே வார்த்தைகள் அப்புறமென்ன... எழுதாமல் எஸ்கேப்பாகும் ப்ரதீப்பு அடுத்த கவிதைப் போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறார்!! (சரிதானே...)

ஓவியா
28-04-2007, 08:59 PM
மக்கள் அனைவரும் தங்கள் முத்திரைப் பதிவுகளாகத் தருவதைப் பார்த்து இம்முறை நானும் ஒரு முயற்சி செய்தேன்.

சமர்ப்பணம்

எண்ணியிருந்தேன்
நாலாயிரமாவது பதிவுக்கு
ஆனால்
எண்ணியிருக்கவில்லை
என்ன எழுதுவதென்று

என்ன எழுதுவதென்று
முடிவெடுத்தபின்
எண்ண இயலவில்லை
எதை விடுப்பதென்று


கண்களுக்குள் மட்டுமல்ல
நெஞ்சுக்குள்ளும் நீரூற்றுகள்
கண்டுபிடித்தவை
கதைகள் தூள் வரி


பல மனங்களில்
விருட்சங்கள் காட்டிய
விதைகள்
கவிதைகள்

அண்ணன்
தங்கை மாம்ஸ் மம்ஸ் என
நட்புறவுகள் மனச்சங்கமங்களின்
சின்னம்

விமர்சனங்கள்
என்னைப் பக்குவப்படுத்திய
நிதர்சனங்கள்

கூடியிருப்பேன்
இன்னும் பலநாள் உங்கள்
மனங்களில்
ஊடியிருப்பேன் என் நம்பிக்கை

தமிழுக்கும் மன்றத்திற்கும்
அர்ப்பணம் செய்யும்
நண்பர்களுக்கு இப்பதிவு
சமர்ப்பணம்


அன்பு பிரதிப்,

மன்றதிற்க்கு அர்ப்பணம் செய்த சமர்ப்பணம் அருமை.

தேன் தேன் தேன் தேன் போல் (ரு)ரசித்தேன்.

நன்றி

சக்தி
01-05-2007, 10:21 AM
நெஞ்சதொட்டுட்டப்பா