PDA

View Full Version : டாக்டர் நகைச்சுவை!



karikaalan
22-09-2005, 03:20 PM
என்ன டாக்டர் சார், இவ்வளவு வேகமா எங்கே போறீங்க?

நேத்தைக்கு ஒரு டெத் சர்டிஃபிகேட் கொடுத்திருந்தேன்.....

அதனால என்ன... எப்பவும் தர்றது தானே?

அட நீ வேறே... அதுல, "சாவுக்குக் காரணம்"-கிற இடத்துல என் பேரை எழுதிட்டேன்.. அதைத் திருத்தத்தான் ஓடிக்கிட்டிருக்கேன்...


===கரிகாலன்

சுவேதா
22-09-2005, 04:24 PM
:D:D:D:D:D:D:D:D சூப்பர்

அறிஞர்
22-09-2005, 05:52 PM
உண்மையை தானே எழுதியிருக்கிறார்.....

நல்ல சிரிப்பு.. அன்பரே

paarthiban
22-09-2005, 10:29 PM
''அந்த டாகடர் சினிமா எடுக்கப் போறாராமே''
''எப்படியும் மக்களோட உயிரை எடுக்கிறதுல குறியா இருக்காரு பாருங்க''

அறிஞர்
22-09-2005, 10:45 PM
''அந்த டாகடர் சினிமா எடுக்கப் போறாராமே''
''எப்படியும் மக்களோட உயிரை எடுக்கிறதுல குறியா இருக்காரு பாருங்க'' அப்ப டாக்டரும், சினிமா எடுக்கிறவர்கள் ஒன்று என்கிறீர்களா....

இன்னும் கொடுங்கள் பார்த்திபன்

Mano.G.
23-09-2005, 01:45 AM
இதுதான் மனித தவறோ?

நல்ல ஜோக்


மனோ.ஜி

rajasi13
25-09-2005, 06:56 AM
பாவம் கேட்டவர் இனிமே டாக்டர்கிடே போவார்னு நினைக்கரீங்க

aren
25-09-2005, 07:23 AM
தப்பித்தவறி டாக்டர் உண்மையை எழுதிட்டார் போலிருக்கு. நல்ல சிரிப்பு கரிகாலன் அவர்களே. இன்னும் கொடுங்கள்.

raj144
30-09-2005, 08:36 AM
டாக்டர் என்றால் லசென்ஸ் டு கில்(ஒரு ஜோக்தான்)போலி டாக்டர்தான் பயப்படனும் நல்ல ஜோக் நன்றி வாழ்த்துக்கள்.

Narathar
02-10-2005, 03:24 AM
சூப்பரான டாக்டர்.

நம்மவர்களில் சிலரை அவரிடம் மருத்துவம் பார்க்க அனுப்ப வேண்டும்..........

பட்டியலிடப்போவது யார்?

gankrish
06-10-2005, 11:49 AM
சூப்பர் கரிகாலரே

விகடன்
14-04-2009, 11:29 AM
உண்மையை தானே எழுதியிருக்கிறார்.....

நல்ல சிரிப்பு.. அன்பரே

சூப்பர் அண்ணா.
சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்துவிட்டது இந்தப் பதிவு.

அந்தக்காலங்களில் கலக்கியதுபோல ஏன் இக்காலங்களிலும் கலக்க முனைவதில்லை???

anna
16-04-2009, 08:58 AM
அருமையான நகைச்சுவை. அதெல்லாம் சரி டாக்டர் உண்மையைத்தானே எழுதியுள்ளர். அப்புறம் என்ன அவருக்குத்தான் அந்த உரிமை உள்ளதே. அது தான் ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியன் என்ற பழமொழி உள்ளதே.

xavier_raja
17-04-2009, 08:27 AM
ஐயோ, அம்மா, என்னை ஏன் இந்த கழியடை பசங்களுடன் கூட்டு சேரவைகிறேங்க.. என்னால முடியல.. அப்படின்னு அந்த டாக்டர பாது கேட்கணும் போல இருக்கு..