PDA

View Full Version : மழை பிடிக்கும் பெண்களுக்கு....



rajasi13
22-09-2005, 09:17 AM
மழை பிடிக்கும் பெண்களுக்கு

மழையை பார்க்கும்போதெல்லாம் வருகிறது உன் நினைப்பெனக்கு

அறியாத வயதிலெல்லாம் எனை பிடிக்கும் என்றதையும் ஆசையாக

பேசும்போது மழை பிடிக்கும் என்றதையும் மறக்கதான் நினைக்கிறேன்,

மழை எனையும் விடுவதில்லை.

இதயம் படம் இணைந்து பார்த்து இதையத்தையும்

இணைத்துக் கொண்டு,கனவினையும் இணைத்துக் கொண்டோம்

கண்களையும் இணைத்துக்கொண்டோம், கனவை போல் காலம் நம்மை

இணைக்கவில்லை,

அயல் நாட்டு மாப்பிள்ளை உங்களை வெகுவாக

கவர்ந்து விடும், அதிகமான அன்பெல்லாம்

உள்ளுக்குள் அமர்ந்து விடும்,

மழை பிடிக்கும் என்றுதான் சொல்கிறார்கள்

கையில் குடை வைத்திருக்கும் பெண்கள் எல்லாம்.

பரஞ்சோதி
22-09-2005, 09:22 AM
ராசாசி, கலக்குறீங்க.

என்னமோ போங்க, வீட்டுக்கு மட்டுமெ தெரியாம பார்த்துக்குங்க.

பிரியன்
22-09-2005, 09:29 AM
நண்பரே கவிதையின் வடிவத்தில் தரலாமே...

உரை நடை போல இருக்கிறது.....

பரஞ்சோதி
22-09-2005, 09:35 AM
பிரியன், நிறைய உறுப்பினர்களுக்கு கவிதை எழுத ஆசை, ஆனால் அது உரைநடையாக வருகிறது, அவர்கள் கவிதை எழுத, திருத்த ஆசிரியர் குழுவை அமைக்கலாமே.

நான் எத்தனை நாள் தான் மண்டபத்தில் காத்திருப்பது ...

பிரியன்
22-09-2005, 09:41 AM
ஆசிரியருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி வருமே பின்பு......

pradeepkt
22-09-2005, 09:44 AM
அதெல்லாம் வர விட்டுருவமா?
கவிதையின் அமைப்பைத்தான் ஆசிரியர் சொல்லித் தர வேண்டும். ஆனால் கற்பனை அவரவர் விருப்பத்திற்குட்பட்டது.
ஒருமுறை நண்பன் கூட என் கவிதையை விமர்சித்த போது வார்த்தைகளின் வழி வெளிவரும் உணர்வுகள்தான் முக்கியம் என்றார்.

பிரியன்
22-09-2005, 09:46 AM
கவிதையைப் பொறுத்தவரை வார்த்தைகளை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில் தான் அழகு இருக்கிறது. ஒரு வாக்கியம் அர்த்தம் தந்த பின்பும் அதை தொடருவதை தவிர்க்கலாம். அதே போல் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களில் ஒரு நிறுத்தம் தேவை....

rajasi13
22-09-2005, 10:06 AM
பிரியன், நிறைய உறுப்பினர்களுக்கு கவிதை எழுத ஆசை, ஆனால் அது உரைநடையாக வருகிறது, அவர்கள் கவிதை எழுத, திருத்த ஆசிரியர் குழுவை அமைக்கலாமே.

நான் எத்தனை நாள் தான் மண்டபத்தில் காத்திருப்பது ...

ஐயா கவிதை எழுதி 10 வருஷதுக்கும் மேல் ஆகுது. நேத்து மன்மதன் கிட்டே பேசிட்டு இருந்தபோது நீங்க ஏன் கவிதை எழுத முயற்சி பண்ணக்கூடாதுன்னு கேட்டார், எனக்குள்ள தூங்கிட்டிருந்த வாலி தொபுகடீர்னு குதிச்சு மன்மதன் தான் எழுதினா போதாது எல்லாரையும் எழுத வெக்கணும்னு சொல்ரார் நீ என்னலே குத்தாலத்து குரங்கு கணக்க கவிதையா போடவா உரை நடையா போடவானூ பாய்ஞ்சுகிட்டிருக்கேன்னு சொன்னார் அதான் மூழைய பிசைஞ்சு எழுதினேன் கொஞ்சம் வழுக்கிடுச்சு கி கி .. மீசையில மண்ணு ஒட்டலை..

பிரியன்
22-09-2005, 10:09 AM
ஐயா கவிதை எழுதி 10 வருஷதுக்கும் மேல் ஆகுது. நேத்து மன்மதன் கிட்டே பேசிட்டு இருந்தபோது நீங்க ஏன் கவிதை எழுத முயற்சி பண்ணக்கூடாதுன்னு கேட்டார், எனக்குள்ள தூங்கிட்டிருந்த வாலி தொபுகடீர்னு குதிச்சு மன்மதன் தான் எழுதினா போதாது எல்லாரையும் எழுத வெக்கணும்னு சொல்ரார் நீ என்னலே குத்தாலத்து குரங்கு கணக்க கவிதையா போடவா உரை நடையா போடவானூ பாய்ஞ்சுகிட்டிருக்கேன்னு சொன்னார் அதான் மூழைய பிசைஞ்சு எழுதினேன் கொஞ்சம் வழுக்கிடுச்சு கி கி .. மீசையில மண்ணு ஒட்டலை..

சரி உங்க கைபேசி எண் கொடுங்க. நான் பேசுறேன் - எனது எண் 6253114

gragavan
22-09-2005, 10:40 AM
கடைசி நான்கு வரிகளே அழகான கவிதை வடிவம்தான்.
அது போல மற்ற வரிகளையும் மாற்ற முயலுங்கள். கவிதை வடிவம் கைக்குச் சிக்கும். இன்னும் முயன்று நல்ல கவிதைகளைத் தர வாழ்த்துகள்.

Nanban
22-09-2005, 02:47 PM
வடிவத்த்தைப் பிறகு பார்ப்போம் -

முதலில் சொன்னவற்றில் உள்ள கவித்துவம் என்ன அழகு - ஆஹா...?



அறியாத வயதிலெல்லாம்
எனை பிடிக்கும் என்றதையும்
ஆசையாக பேசும்போது
மழை பிடிக்கும் என்றதையும்
மறக்கதான் நினைக்கிறேன்,
மழை எனையும் விடுவதில்லை.



தான் ஏமாற்றப்பட்டதை இத்தனை நாசுக்காக சொல்ல முடியும் என்பதே ஒரு நல்ல கவிஞனுக்கு உள்ள அடையாளம். முதலில் வாக்கியங்கள் நீளமாக இருந்த பொழுது விரைவில் விளங்கவில்லை தான். ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டுப் படித்தால் அந்த நயம் - பிரமாதம். (மேலும், இப்பொழுதெல்லாம் நவீன கவிதைகளில் வாசகர்களை ஒரு முறைக்கு இருமுறை படிக்க வைக்க - அதாவது ஒவ்வொரு வரியிலும் ஒரு வாசகனைத் தாமதிக்க வைக்க இத்தகைய நீண்ட வாக்கியங்களைக் கையாளுகிறார்கள் அல்லது இரண்டு மூன்று சொற்களை இணைத்து ஒரே சொல்லாக்கி கொஞ்சம் திணற அடிக்கிறார்கள். அது பிறகு...)

ஏமாற்றப்பட்ட கதைக்கு வருவோம் -

அறியாப் பிள்ளை வயதிலே சொன்னதைப் போல - இத்தகைய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. தந்தையார் தப்பித்துக் கொள்ள ஏதோ ஒரு சாக்கு சொல்லிவிட்டுப்போக அது நிஜம்மாகவே நடக்கப் போகிறது என்று தூங்காமல் காத்திருந்து ஏமாந்த அனுபவம் உண்டு. அது போலத் தான் இவரது கதையும் இருக்கிறது. அந்த சிறுவயதில் ஏமாற்றம் தரும் கோபத்தைக் கொண்டு எதுவும் செய்ய இயலாது. ஆனால் ஏமாந்த ஏமாற்றப்பட்ட சோகம் அவமானத்தில் கொண்டு போய்விட அடக்க மாட்டாது அழுகை வருமே - அதை சொல்ல வார்த்தைகள் கிடையாது.

காதலிக்கும் வயதில் தன்னை அறியாத பிள்ளையைப் போல ஏமாற்றிப் போய்விட்டாள் என்னும் பொழுது, அடக்கவியலா சோகம், யாரிடமும் காட்டவியலாத கோபம் பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த வழியில்லாத கழிவிரக்கம்.....

நிச்சயமாக நன்றாகவே இருக்கிறது. அறியாத வயதில் சொன்ன மழை பிடிக்கும் என்ற பொய்க்கு அடையாளம் ஆக்கப்பட்ட மழை இன்றும் தொடர்கிறது என்னும் பொழுது ஒரு சிறு குறும்படம் பார்த்த உணர்வு வரவில்லை.?




அயல் நாட்டு மாப்பிள்ளை
உங்களை
வெகுவாக கவர்ந்து விடும்,
அதிகமான அன்பெல்லாம்
உள்ளுக்குள்
அமர்ந்து விடும்,



தன்னை ஏமாற்றிய காதலி மீது கொஞ்சமேனும் கோபம் வரவேண்டுமே? ம்ஹும். ஆனால் அப்பொழுதும் கூட அந்தப் பெண்ணின் மீது மரியாதை போக வில்லை. பாருங்கள் எத்தனை இதமாக சொல்கிறார், " உங்களை " அடடா! என்ன மரியாதை. அயல்நாட்டு மாப்பிள்ளை உங்களை வெகுவாக கவர்ந்து விடும்!!! ஆனால் அதே மரியாதை தன் போட்டியாளார் - திருவாளார் மாப்பிள்ளை மீது இல்லை. கவர்ந்து விடும்.... ஆமாம் அஃறிணை தான். தன் போட்டியாளார் மீது தான் வெறுப்பு வருகிறது. கோபம் வருகிறது. காதலி மீது இல்லை. ஏனென்றால் இன்னமும் இவர் காதலிக்கிறார். அது தானே காதல்.... காதலால் தன் மீது வைத்திருக்கும் அன்பை விட அதிகமான அன்பை வெளிநாட்டு மாப்பிள்ளை மீது வைக்கிறாய் என்று சொல்லும் பொழுது ஒரு கிண்டல்.... கேலி.... மொத்த கவிதையிலேயே இங்கு தான் சற்று கோபம் வருகிறது போலிருக்கிறது - ஆனாலும் ஒரு அப்பாவியின் கோபமாகத் தான் காட்டப்பட்டிருக்கிறது....



மழை பிடிக்குமென்றுதான்
சொல்கிறார்கள்
கையில்
குடை வைத்திருக்கும் பெண்களெல்லாம்.


மழை பிடிக்கும் என்று ஒரு பொய் - அதாவது உன்னை எனக்குப் பிடிக்கும் என்பதற்கான குறியீடு. அதை கவிதையின் ஆரம்பத்தில் ''அறியாத வயதிலெல்லாம்.." என்று சொல்லும் பொழுதே சொல்லி விட்டார்.

குடை வைத்திருக்கும் பெண்களெல்லாம் - இதுவும் ஒரு குறியீடு தான். கையில் வேறு வாய்ப்புகள் வைத்திருக்கும் பெண்கள் கூட தற்சமயத்திற்கு சொல்வது மழை பிடிக்கும் - அதாவது உன்னைக் காதலிக்கப் பிடிக்கிறது என் கையிலிருக்கும் வேறு வாய்ப்புகளை நான் பயன்படுத்த தீர்மானிக்கும் வரையிலும் என்றே சொல்கின்றனர், முடிவு - சற்றே திருப்பம் தான்.

அதுவரையிலும் காட்டிய நிதானம் - கடைசியில் முழுதாகவே கோபமாக மாறி எல்லாப் பெண்களையும் பொதுவாகச் சொல்லி தன் காதலியைச் சாடுகிறார்.

வாசிப்பதற்கு சுவையாகத் தான் இருந்தது.

இன்னமும் அதிக உற்சாகமாக இருந்திருக்கும் வாக்கிய அமைப்புகளை பொருள் நிறைவைக் கொண்டு வரிகளாகப் பிரித்திருந்தால்.

நண்பரே, உங்கள் வருகைக்கும் இந்த கவிதைக்கும் இனியும் எழுதப்போகும் கவிதைகளுக்கும் வாழ்த்துகளும் வரவேற்பும்

அன்புடன்

mukilan
22-09-2005, 04:50 PM
இந்த கவிதையை படிக்கும் பொழுது எனக்கு புரிந்த அர்த்தம் வேறு. நண்பனின் விளக்கம் பார்த்த பின் நான் புரிந்து கொண்டது வேறு. கவிதையை படிப்பதும் ஒரு கலைதான். வாழ்த்துக்கள் ராஜாசிக்கும் விளக்கமளித்த நண்பண் அவர்கட்கும்.

Nanban
22-09-2005, 05:24 PM
முகிலன்

விமர்சனத்தைப் பாராட்டிக் கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது

நன்றி

babu4780
23-09-2005, 09:29 AM
அருமை, அதிலுமந்த கடைசி வரிகள்..
"மழை பிடிக்கும் என்றுதான் சொல்கிறார்கள்
கையில் குடை வைத்திருக்கும் பெண்கள் எல்லாம்."
சூப்பர் ராஜசீ, வாழ்த்துக்கள்

சுவேதா
23-09-2005, 10:47 PM
கவிதை சூப்பர் தொடர்ந்து எழுதுங்கள்!

மன்மதன்
24-09-2005, 04:26 AM
நன்றி ராஜா.. கவிதை எழுத தெரியாது என்று சொல்லிவிட்டு, செஞ்சுரி போட்டிருக்கிறீர்கள். நண்பன் பாராட்டை பற்றி சொன்னேன். பாராட்டுகள்.. தொடர்ந்து எழுதுங்க..

rajasi13
24-09-2005, 05:23 AM
பாராட்டியும், விமர்சித்தும், திருத்தியும், பதில் தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. விமர்சனம்தான் சிறந்த படைப்புகளை உருவாக்குகிறது என அறியாதவனல்ல நான். படித்து விட்டு நன்றாயிருக்கிறது என்று மட்டும் கூறாமல் கவிதை நடைக்கு மாற்றக் கூறிய திரு பரஞ்சோதிக்கும், புரியாத வடிவில் நான் எழுதியவற்றை அனைவருக்கும் விளங்கும் வகையில் விளக்கமளித்த திரு நண்பனுக்கும் ஊக்குவித்த திரு மன்மதனுக்கும் என் நன்றி. உங்கள் எதிபார்ப்புகளை வீணாக்காமல் மேலும் படைக்க ஆவலாய் உள்ளேன். அதான் திருத்த நீங்க இருக்கீங்களே. தூங்கிட்டிருந்த சிங்கத்த தட்டி எழுப்பீட்டிங்க , இந்த நாள் .....

rajasi13
24-09-2005, 05:30 AM
இந்த கவிதையை படிக்கும் பொழுது எனக்கு புரிந்த அர்த்தம் வேறு. நண்பனின் விளக்கம் பார்த்த பின் நான் புரிந்து கொண்டது வேறு. கவிதையை படிப்பதும் ஒரு கலைதான். வாழ்த்துக்கள் ராஜாசிக்கும் விளக்கமளித்த நண்பண் அவர்கட்கும்.
நீங்கள் புரிந்து கொண்டதையும் தரலாமே