PDA

View Full Version : ஓர் இறைவனின் சோகம்.Nanban
20-09-2005, 05:02 PM
ஓர் இறைவனின் சோகம்.


இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு

இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை

இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்

வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.

புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.

குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு

மன்மதன்
21-09-2005, 04:22 AM
இயேசுநாதர் பற்றி அர்த்தம் பொதிந்த கவிதை.. நன்றாக இருக்கிறது நண்பன்.

Nanban
21-09-2005, 04:57 PM
இயேசுநாதர் பற்றி அர்த்தம் பொதிந்த கவிதை.. நன்றாக இருக்கிறது நண்பன்.அட அட சரியா சொல்லிட்டீயே இயேசு என்று....

ஆனால் கவிதையைக் கொஞ்சம் விரிவாக விமர்சனம் செய்யணும். தன்னோட பார்வையில் எது எப்படி பாதித்தது இல்லை பாதிக்கவில்லை. இன்னும் நன்றாக சொல்லியிருக்க முடியுமா என்றெல்லாம் சொன்னால் தான் விமர்சனம் என்றாகும்.

இந்த ஒற்றை வரியைப் பார்க்கும் போது சாலையில் போகும் இளம்பெண்ணைப் பார்த்து சீட்டி அடிப்பதை போலிருக்கிறது. எழுதறதே விரிவா எழுதுப்பா....

மன்மதன்
21-09-2005, 05:40 PM
அட அட சரியா சொல்லிட்டீயே இயேசு என்று....

ஆனால் கவிதையைக் கொஞ்சம் விரிவாக விமர்சனம் செய்யணும். தன்னோட பார்வையில் எது எப்படி பாதித்தது இல்லை பாதிக்கவில்லை. இன்னும் நன்றாக சொல்லியிருக்க முடியுமா என்றெல்லாம் சொன்னால் தான் விமர்சனம் என்றாகும்.

இந்த ஒற்றை வரியைப் பார்க்கும் போது சாலையில் போகும் இளம்பெண்ணைப் பார்த்து சீட்டி அடிப்பதை போலிருக்கிறது. எழுதறதே விரிவா எழுதுப்பா....

அது சரி... நான் கவிதைப்படித்ததுமே சட்டென மிக எளிமையாக புரிந்து கொண்டதே பெரிய விசயம்.. பாதித்த / பாதிக்காத விசயத்தை சொல்வதற்கு முன் கவிதை சொல்ல வந்த பொருளை பற்றி முழுதும் அறிந்திருக்க வேண்டும்.. இங்கே 'இயேசுநாதர் - (ஈசா நபி) ' பற்றி நான் அதிகம் படித்திருக்கவில்லை. பொதுவாக சாமானியனுக்கு தெரிந்ததுதான் எனக்கு தெரியும்..

இந்த கவிதையை நீங்கள் 'டாவின்சி கோடு' படித்ததும் எழுதியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. அந்த பதிவில் குறிப்பிட்ட சமாச்சாரங்கள் இங்கே அழகிய நடையில்.. கவிதை பாதித்ததை விட தெரிந்த படித்த விசயங்களை எப்படி கவிதையாக வடிக்கலாம், எப்படி எழுத்துக்களை கையாளலாம் என்று இந்த கவிதை மூலம் தெரிந்து கொண்டேன்..

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என கேள்விப்பட்டேன்.. அலுவலகத்தில் சில மாதங்கள் முன்பு ஒருவர் இதை பற்றியே விவாதித்து/சொல்லி கொண்டிருந்தார். அதை பற்றி கவிதையில் சொல்லி இருக்கலாமே.. ஒருவரியில்..

மற்றபடி ஒரு வரி விமர்சனம் எழுத எனக்கும் பிடிக்கவில்லை.. நிறைய எழுதலாம்னா கவிதை அறிவு (குறியீடு மற்ற இதர சமாச்சாரங்கள் ) நிறைய இருக்கவேண்டும்.. தெரிந்துகொண்டு பின்னர் நிறைய வரிகள் எழுதலாம்..அதுவரை சீட்டிதான்..;) ;)

Nanban
21-09-2005, 06:04 PM
இந்தியாவில் இயேசு வாழ்ந்ததைப் பற்றி ''நான் படித்த புத்தகங்கள்'' என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். படியுங்கள். இந்தக் கவிதை DaVinci Code படித்ததும் தான் எழுதினேன் என்பது மற்றுமொரு சரியான ஊகம்.

மற்றபடிக்கு இதில் குறியீடுகள் இல்லை. என்பதே உணமை. இயேசு சிலுவையில் வடிந்த பொழுது அதை ஒரு மனிதன் கோப்பையில் ஏந்தினான் என்று பிற்காலத்தில் ஒரு ஓவியர் வரைந்து வைத்தார். அந்த கோப்பை தான் Holy Grailஏன்று சொல்கிறார்கள். அந்த ஓவியத்தில் இருப்பது உண்மையானால் அந்த கோப்பை என்னவாயிற்று இன்று குழந்தைகளின் உற்சாக்த்தோடு புதையல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது ஒரு குழு.

மற்றவர்களுக்கு இயேசுவின் ரகசியத்தைக் காப்பாற்றும் பொருட்டு - அவரது காதலி - மனைவி - வாரிசு இவர்களையெல்லாம் காக்கும் பொருட்டு வைக்கப்பட்ட குறியீடு தான் புனித கோப்பை. இங்கு நான் குறிப்பிடும் எல்லா புத்தகங்களுமே கிறித்துவர்களால் தான் எழுதப்பட்டது.

மாற்று மதத்தினர் ஏதும் சொல்லவேயில்லையா? மனிதர்கள் எழுதியவற்றை விட்டுவிடலாம். ஆனால் கிட்டத்தட்ட பைபிளில் வரும் கதைகளை பிரதிபலிக்கும் குரான் என்ன சொல்லுகிறது.?

இயேசுவை குரான் ஈஸா நபி என்றழைக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் பொழுது Jesus என்று எழுதிகிறார்கள். இந்த J இருக்கிறேதே இதற்கு தமிழில் எழுதும் பொழுது ''ஜ்'' என்ற உச்சரிப்பில் நாம் பொதுவாக சொல்லுகிறோம். ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு மற்றுமொரு உச்சரிப்பும் உண்டு அது "Y"' என்ற உச்சரிப்பு. குறிப்பாக Jana என்ற பெயரை ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டுமென்றால் - அதை யானா என்று தான் உச்சரிக்க வேண்டும். இப்பொழுது நாம் Jesus என்ற பெயரை உச்சரிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் - ஈஸஸ் என்று தான் சொல்ல வேண்டும் அதைத் தான் குரானில் ஈஸா என்று சொல்லப்பட்டது. மேலும் இயேசு பிறப்பால் ஒரு யூதர். யூதர்கள் பயன்படுத்தும் மொழியில் எழுத்துகளும் உச்சரிப்புகளும் அரபியில் வருவது மாதிரியே தான்.

சரி குரானில் சொல்ல வருவது என்ன?

அல்லாஹ்வின் மீதும் முஹமது நபியின் மீதும் எத்தனை நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு ஈஸா நபியின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது நீங்கள் இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. ஆனால் இன்றைய உலகில் பலர் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை. இந்த விசுவாசத்திற்கு அடுத்தது - அவருடைய மரணத்தைப் பற்றி சொல்லுவதை குறிப்பால் சொல்லலாம் - குரான் குறிப்பிடுகிறது. இயேசு சிலுவையில் மரணமடையவில்லை. மீண்டும் உயிர்த்தெழவுமில்லை. இதைப் படித்ததும் தான் பிரமிப்படைந்தேன். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றின் மீது ஒரு ஈடுபாடு - அதாவது அவர் எப்படி மரணமடைந்தார், இல்லையென்றால் எங்கே சென்றார் என்ன செய்தார் என்றெல்லாம் புத்தகங்கள் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். குரானின் வார்த்தைகளை இன்று கிறித்துவர்களாலே ஆராய்ச்சி செய்து வெளியிடப்படும் ஆய்வுப் புத்தகங்கள் நிரூபிக்கின்றன.

ஆனால் அவருடைய பிறப்பு, இறப்பு, வாழ்க்கை இவற்றையெல்லாம் இன்று கோடிக்கணக்கான் கிறித்துவர்கள் ஏற்றுக் கொண்ட விதத்தை மாற்றி அமைக்கத் தேவையா?

இல்லை. இங்கு தான் குரான் மீண்டும் வலியுறுத்துகிறது. ''மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்'' அவற்றை ஆராய வேண்டாம். ஆக உங்கள் நம்பிக்கை எப்படியோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். மனதை குழப்பிக் கொண்டு வருத்தமடைய வேண்டாம். நம்பிக்கைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது குரானால் ஏற்கப்படவில்லை.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். நம்பிக்கை இல்லாத பட்சத்தில் ஆராய்ந்து பாருங்கள். ஆனால் ஆய்ந்து அறிந்தவற்றை நம்பிக்கையாளர்களின் மீது திணிக்காதீர்கள். இது என்னோட கொள்கை. நான் குறிப்பிட்ட அந்த நாவலும் கடைசியில் இப்படித் தான் முடியும். ஆமாம் - இயேசுவைப் பற்றிய ரகசியங்கள் புதைந்து கிடக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுவான் - ஆனால் யாரிடமும் சொல்லாமல் விட்டு விடுவான். ஆகையால் மனம் உழல வேண்டாம் - நீங்கள் நம்பிக்கையாளராக இருந்தால். ஆராய்ச்சியாளானாக இருந்தால், உங்கள் நம்பிக்கைகளை மதவழிபாட்டுத் தடங்களின் சுற்றுச் சுவர்களுக்குள் விட்டுவிட்டு வாருங்கள் - இதுவரையிலும் அறியப்படாத உண்மைகள் - துவேஷங்கள் அல்ல - உண்மைகள் காத்திருக்கின்றன.

பிரசன்னா
22-09-2005, 11:30 AM
இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்
நெஞ்சைத் தொடுகிறது
இல்லை இல்லை
கீறுகறது............

Nanban
22-09-2005, 02:33 PM
நன்றி பிரசன்னா....

இது அநீதிக்குட்படுத்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும்....

மன்மதன்
24-09-2005, 04:18 AM
வேறு எங்கு சென்றும் தேடி படிக்க வேண்டாம்.. நண்பனின் மூலம் தமிழ்மன்றத்திலேயே அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.. நன்றி..

Nanban
26-09-2005, 05:57 PM
அது சரி, அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன புகைப்படங்கள் எங்கே?

மன்மதன்
27-09-2005, 05:58 AM
அது சரி, அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன புகைப்படங்கள் எங்கே?

அனுப்பிட்டேன்.. கிடைத்திருக்கும்..:)

ஆதவா
09-08-2007, 11:11 AM
மன்மதன் சொன்னபிறகு அந்த டாவின்ஸி கோடு பற்றீய கவிதை என்று புலனாகிறது.. மன்மிக்கு ஓ!

கவிதை மிக அருமை. டாவின்ஸி கோடு புத்தகம் படித்ததில்லை. படம் பார்த்திருக்கிறேன். அந்த காட்சிகள் அனைத்தையும் ஒரு கவிதையில் சுருக்கியவாறு எழுதியிருப்பது உண்மையில் ஆச்சரியம்...

கவிதைக்கு பலர் விமர்சனம் இடாமல் இருப்பது ஏனோ?