PDA

View Full Version : குறள் தமிழ் செயலி



அழகன்
20-09-2005, 03:33 PM
அன்பு தமிழ் மன்ற நண்பர்களுக்கு கதை கவிதை கட்டுரை எழுத மிக அருமையான ஒரு மென்பொருள் கிடைத்துள்ளது நமக்கு இலவசமாக, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இங்கே சென்று இறக்கிKural 3.2 Pro (http://www.kuralsoft.com/download_t.htm) தங்களின் கருத்துகளையும் சொல்லவும்.


குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் வேர்ட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புலோரர், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளில் தமிழை உள்ளீடு செய்யலாம். இத்துடன் குறள் தமிழ்ச்செயலி மூலம் Yahoo MSN மற்றும் AIM ஆகிய சாட் செயலிகளில் தமிழில் சாட் செய்யலாம்.

இக்குறள் தமிழ்ச் செயலியுடன் கவிதை சொற்செயலி, சொற்பிழை திருத்தி, பறவை மின்னஞ்சல் செயலி, குறியீட்டுமுறை மற்றும் எழுத்துருவகை மாற்றிகள், ஓசை - தமிழ் உரை ஒலி போன்ற கருவிகளுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அறிஞர்
20-09-2005, 06:44 PM
நல்ல தகவல் நண்பரே... இதற்கும் ஈகலப்பைக்கும் என்ன வித்தியாசம். தெரிந்தால் சொல்லுங்களேன்

prasanna
29-09-2005, 11:03 AM
நல்ல தகவல் நண்பரே

கதை கவிதை கட்டுரை எழுத மிக அருமையான ஒரு மென்பொருள் கிடைத்துள்ளது

pradeepkt
29-09-2005, 11:51 AM
வணக்கம் பிரசன்னா,
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் கொடுங்களேன்.
ஈ கலப்பையை விட இது எந்த வகையில் சிறந்தது என்று சொல்லுங்கள்.
முக்கியமாக தட்டச்சுப் பலகை இகலப்பை போல் இருக்குமா? என்னைப் போல் இன்னும் பலருக்கு இகலப்பையின் ஆங்கிலத் தட்டச்சுப் பலகை வடிவம் பழகிப் போயிருக்கும்.

உதயா
30-09-2005, 11:28 AM
ஈ கலப்பபையை போல் தான் உள்ளது. அதிகம் நான் அதன் உள்ளே போகவில்லை. கிடைத்த சமயம் கொண்டு பார்த்தேன் நன்றாக உள்ளது. எழுத்து பிழைகள் சரி செய்யும் வசதியும் உள்ளது இப்படி பல.

Iniyan
12-10-2005, 02:02 AM
எல்லாம் சரி தான் இது இலவச மென்பொருளாகத் தெரியவில்லையே? 3 மாதங்களுக்கப்புறம் செயலிழக்கும் என சொல்கிறதே?

அழகன்
14-10-2005, 11:59 AM
எல்லாம் சரி தான் இது இலவச மென்பொருளாகத் தெரியவில்லையே? 3 மாதங்களுக்கப்புறம் செயலிழக்கும் என சொல்கிறதே?

இனியன் அவர்களே இது இலவச மென்பொருள்தான், குறள் செயலியை ஓப்பன் செய்து அதில் குறள் அமைப்பு என்பதை சொடுக்கி அதில் வலதுபக்கத்தில் இருக்கிறது இலவச பதிவு செய்ய, மின்னஞ்சல் மூலம் ரிஜிஸ்டரேடன் கோட் நம்பர் அனுப்பப்படும் முயற்ச்சி செய்து பாருங்கள்.

நன்றி
வணக்கம்

அறிஞர்
15-10-2005, 05:25 AM
ஈகலப்பை எனக்கு வசதியாக உள்ளது.. அதை விட இது சிறப்பாக இருந்தால் தெரிவியுங்கள் அனபர்களே...
------
என்ன அழகன் இப்பொழுது அதிகமாக தங்களை காண இயலுவது இல்லை....

அழகன்
04-01-2006, 08:27 AM
------
என்ன அழகன் இப்பொழுது அதிகமாக தங்களை காண இயலுவது இல்லை....

எல்லாம் வேலை பழு காரணம்தான், இனிமேல் நான் அதிகமாக வர முயற்சிக்கிறேன் அறிஞர் அவர்களே.
நன்றி

விகடன்
05-08-2007, 06:21 PM
அறிமுகத்திற்கு நன்றி. பயன்படுத்தி பார்த்து விட்டு வருகிறேன்.