PDA

View Full Version : கல்லறை...



rambal
19-04-2003, 08:41 AM
அந்த துருப் பிடித்த
ஜன்னல் வழி காணுப்படும்
இன்று மலர்ந்த ரோஜாவானது
அழகானது...
அதன் முள்ளில்
வழிகிறது பாவப்பட்ட
வண்டின் ரத்தம்..

அருகே ஓர் அமைதியான
கல்லறை...
அமைதி நிலவும் இடம்
என்ற
பொறிக்கப்பட்ட வாசகங்களோடு...

அதன் நேர்த்தி
வடிவமைப்பில்
ஏதோ ஓர் வித்யாசம்
இருக்கிறது..

சிலுவைகளுக்குப் பதிலாக
பொருத்தி வைக்கப்பட்ட
சூலமா?
கறுப்பிற்குப் பதிலாக
அடிக்கப்பட்ட சிகப்பு வண்ணமா?
ஏதோ ஒன்று...
இருந்த போதிலும் ஈர்ப்பு...

சில பூக்கள்..
கொஞ்சம் ரத்தம்..
காய்ந்த சருகுகள்..
காய்ந்த பறவை எச்சங்கள்..
இப்படி அபிஷேகிக்கப்பட்டு
அந்தக் கல்லறை இன்னும்
அழகாய்த்தான் இருக்கிறது..

இன்னும் சொல்லப் போனால்
அந்தத் தோட்டத்திலேயே
அந்தக் கல்லறைதான் அழகு..
என்ற கர்வம் கூட
எனக்குண்டு..

ஓடி முடித்துக் களைத்தவன்
அமைதியாக யாருக்கும் தெரியாமல்
இளைப்பாறுகிறான் போலும்..
இல்லையென்றால்
விட்ட பணியைத் தொடர
வேண்டுமென்று
எஜமானர்கள் கட்டளையிடுவார்கள்...

இப்படிக் கூட கவிதை
நினைக்கத்தோன்றுகிறதா எனக்கு
என எண்ணும் வகையில்
அந்த ரோஜாச் செடி அருகே
இருக்கும்
என் கல்லறையை
அணு அணுவாய்
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றோ இறந்து போன நான்..

karikaalan
19-04-2003, 09:05 AM
கல்லறையில் பூத்த மலரோ!

===கரிகாலன்

குமரன்
19-04-2003, 02:26 PM
ராம்,

இந்த கவிதை...

இந்த இரண்டுங்கெட்டானுக்கு
புரிந்து புரியாமலும்...
புரியாமல் புரிந்தும்...


-குமரன்.

poo
20-04-2003, 02:43 PM
அபாரமாய் எழுதிக் குவிக்கும் உன் திறமைக்கு வணக்கம்!!

குமரன்
20-04-2003, 06:06 PM
சஞ்சய் கவிதை விளக்கம் தந்தது...
எனக்கும் புரிந்தது.

நன்றி..ராம்.

-குமரன்.

Narathar
21-04-2003, 11:40 AM
நானும் இறந்து விட்டேன்............... நாராயனா!!!

தாசன்
21-04-2003, 12:42 PM
கனவுலகத்திலிருந்து...
தமிழே சுவாசமாய்...
வாழும் நீர்.....

கல்லறையில் இருந்து
தன் கல்லறையை இரசிக்கும் விதம்
இரசிக்கத் தக்கதே.....

subavaanan
22-04-2003, 04:17 AM
உன் கவி ரசித்தேன்,
ருசித்தேன்.....வந்தனம்..
உங்கள் கவிக்கு.....