PDA

View Full Version : திரிந்த தேடல்

pradeepkt
16-09-2005, 02:38 PM
சில காலங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட நிகழ்வை உரைநடைக் கவிதையாக வடிக்க முயன்றிருக்கிறேன்.
நண்பர்களின் விமர்சனங்களை எதிர் நோக்குகிறேன்.

திரிந்த தேடல்

ரயில் வேகமாகச் செல்கிறது!

நீண்ட நாள் கழித்து
நட்புகள் நோக்கியதில்
தீப்பற்றியது உற்சாகம்!

பல்வேறு கிளைகளாய்ப் பேச்சு
"வருமானம்" வரும் வரைச் சிரித்தபடி,
சட்டென்று சூழ்ந்தது இறுக்கம்

வரிகள் கடன் என
செலவுகள் வரிசை நீள்வது பற்றி
சினிமாக்கள் பார்ப்பது சிறுத்தது பற்றி
ஊருக்குச் செல்வதும் உறுத்துவது பற்றி
இணைய இணைப்பு இல்லாதது பற்றி
ஒவ்வொரு சோகம் ஒவ்வொரு விதம்!

வாதங்களை மீறித் தன்னை அறிவித்தது வயிறு!

பொட்டலங்கள் பிரிக்கப்பட
கல்லூரி நாட்களின் மறுபதிப்பு
மறுபடியும் உற்சாகக் கொந்தளிப்பு!

சந்தோஷம் சரிபாதி நிறைத்ததில்
சீக்கிரமே நிறைந்தது வயிறு
மறுபாதி உணவு மிஞ்சியது!

கொண்டு செல்ல கௌரவம் தடுத்ததில்
கொட்டிவிட முடிவு செய்யப்பட்டது

கைகழுவச் சென்ற நண்பன்
திரும்பி வந்து சொன்னான்:
"பிச்சைக்காரி ஒருத்தி அங்கிருக்கிறாள்
கொட்டுவதை அவள் வயிற்றில் கொட்டு"

நாடிச் சென்று நோக்கியதில்
செவியும் வாயும் செல்லாது
என்று தெரிய வந்தது!

சைகையில் கேட்கையில்
வேகமாய் வந்தது பதில்
"கொண்டு வா! கொண்டு வா!"

கொடுத்து முடிக்குமுன்
பரபரவென்று பிரித்து
வாயில் அடக்கியதில் கவளம் சிக்க
கண்ணீர் நன்றியோடு ஒரு பார்வை!

வருமானம் குறித்து
வரிந்து கட்டி
வருந்திய நொடி
நெருஞ்சியாய் நெருடியது!

ரயில் வேகமாய்ச் செல்கிறது!

பிரதீப்

Nanban
16-09-2005, 06:10 PM
மனித நேயத்தை மீறிய ஒரு நற்செயல் என்று எதுவுமில்லை.

எந்த இடத்திலும் எந்த நிலையிலும் மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கவே செய்கின்றன. அத்தகைய ஒரு கணத்தை உங்கள் கவிதையில் வாசிக்க நேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

கவிதை - என்பது நீரூற்று போல பொங்க வேண்டும். விதிகள் எல்லாம் அந்த நீரூற்று ஓடும் பொழுது இருபுறமும் எழும்பும் கரை போல தன்னால் வந்து விடும். கரைக்காக நதிகள் ஓடுவதில்லை. நதிகளின் ஓரத்தில் அமைந்ததினால் அவைகள் கரைகளாகின.

கவிதையின் இலக்கணமும் அது தான். வசனமா கவிதையா என்றெல்லாம் கவலையுற வேண்டாம்.

பாராட்டுகள்.

mukilan
17-09-2005, 03:40 AM
அய்யா! பிரதீப்பு! சூப்பருப்பு! ச்சும்மா! இருப்பதை வைத்து சந்தோசப் படும் மனம் ஒரு வரம்தான். மிக அழகான கவிதை.

mukilan
17-09-2005, 03:40 AM
அய்யா! பிரதீப்பு! சூப்பருப்பு! ச்சும்மா! இருப்பதை வைத்து சந்தோசப் படும் மனம் ஒரு வரம்தான். மிக அழகான கவிதை.

pradeepkt
17-09-2005, 03:59 AM
மனித நேயத்தை மீறிய ஒரு நற்செயல் என்று எதுவுமில்லை.

எந்த இடத்திலும் எந்த நிலையிலும் மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கவே செய்கின்றன. அத்தகைய ஒரு கணத்தை உங்கள் கவிதையில் வாசிக்க நேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

கவிதை - என்பது நீரூற்று போல பொங்க வேண்டும். விதிகள் எல்லாம் அந்த நீரூற்று ஓடும் பொழுது இருபுறமும் எழும்பும் கரை போல தன்னால் வந்து விடும். கரைக்காக நதிகள் ஓடுவதில்லை. நதிகளின் ஓரத்தில் அமைந்ததினால் அவைகள் கரைகளாகின.

கவிதையின் இலக்கணமும் அது தான். வசனமா கவிதையா என்றெல்லாம் கவலையுற வேண்டாம்.

பாராட்டுகள்.
உங்கள் விமர்சனத்தை மிக்க ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தேன் நண்பன்.
மிக்க நன்றி.
எனக்கு வெகு நாட்களாக மரபுக் கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டு. அதற்குப் படிக்கத்தான் நேரம் இல்லை.
எண்ண ஓட்டங்களை விட நிகழ்வுகளைக் கவிதை ஆக்குவதில் எனக்கு மிகச் சிரமம்.

pradeepkt
17-09-2005, 04:00 AM
அய்யா! பிரதீப்பு! சூப்பருப்பு! ச்சும்மா! இருப்பதை வைத்து சந்தோசப் படும் மனம் ஒரு வரம்தான். மிக அழகான கவிதை.
ரொம்ப நன்றி ஐயா.
அந்த நிகழ்வில் இருந்து குறைந்த பட்சம் என் சம்பளம் குறித்து நொந்து கொள்வதை விட்டு விட்டேன்.

மன்மதன்
17-09-2005, 04:33 AM
கவிதை நன்றாக இருக்கிறது.. பாராட்டுக்கள் பிரதீப்..இது மாதிரி நீ முன்பு ஒரு கவிதை பதித்தாய்... ஏன் இந்த பெரிய இடைவெளி.. ??

pradeepkt
17-09-2005, 04:39 AM
மிக்க நன்றி மன்மதன்
இது மாதிரி கவிதை அல்ல அது. அது என் எண்ணம், இது நிகழ்வு.
இருக்கும் வேலையில் என்னால் நிஜமாகவே உட்கார்ந்து கவிதை எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை, இனிமேல் மாதத்திற்கு ஒரு கவிதை எழுதலாம் என்று இருக்கிறேன்.

ஓவியா
01-12-2006, 03:41 PM
பிரதீப்,
தங்களின் புலம்பல்
எனக்கும் சரியான குல்லாய் தான்
நானும் பல முறை அணிந்துல்லேன்

இல்லாத விசயதிற்க்கு எங்கும் குரங்கு மனதை எப்படி கையாழ்வது என்று யோசிக்கும் தருனத்தில்
இருளில் கடந்துள்ளவனோ இப்படி சில சம்பவங்களை நிகழ்த்தி நமக்கு கண் திறப்பது சிறப்பான விசயமே

உரைநடைக்கவிதைக்கு பாராட்டுக்கள்

இளசு
01-12-2006, 07:11 PM
பிரதீப்,

சட்டென உதவ முடிந்தால்
பசித்த வயிறை நிரப்பு!
நின்று உதவ முடிந்தால்
கல்வி, தொழில் கற்க உதவு!!

- என் அப்பா எனக்கு சொன்னது.

பசியை விட பெரிய நெருப்பு இல்லை!

என் இளவயது ஏக்கம் -
ஆபுத்திரன் ஆவது!
அட்சய பாத்திரம் அடைவது!!

-------------------------------------------

படித்தவுடன் .... அதையொட்டிய எண்ண அலைகள் எழும்புவது..
கவிதை சொன்ன கருத்து கண்ணில் நெகிழ்ச்சி தருவது..
நல்லுணர்வு அதிர்வுகளை நெஞ்சில் மீட்டுவது...
அட என எழுதியவரைப் பாராட்ட வைப்பது ..

ஆதலால் இக்கவிதை வெற்றிக்கவிதை!
நண்பனின் விமர்சனம் - தங்கத்திலே வைரம்!

அண்ணனின் நெகிழ்ச்சியான பாராட்டுகள்!

-----------------------------------------------

திரியை மேலெழுப்பிய ஓவியாவுக்கு நன்றி.!

pradeepkt
02-12-2006, 01:49 PM
பிரதீப்,
தங்களின் புலம்பல்
எனக்கும் சரியான குல்லாய் தான்
நானும் பல முறை அணிந்துல்லேன்

இல்லாத விசயதிற்க்கு எங்கும் குரங்கு மனதை எப்படி கையாழ்வது என்று யோசிக்கும் தருனத்தில்
இருளில் கடந்துள்ளவனோ இப்படி சில சம்பவங்களை நிகழ்த்தி நமக்கு கண் திறப்பது சிறப்பான விசயமே

உரைநடைக்கவிதைக்கு பாராட்டுக்கள்
மிக்க நன்றி ஓவியா!
மனம் எப்போதுமே இல்லாத ஒன்றுக்குத்தான் ஏங்கும். பத்து வருடங்களுக்கு முன் நமக்கு மிகவும் தேவையான ஒன்று இன்று அவ்வளவு தேவைப் படுவதில்லை. பத்து வருடத்திற்கு முன் நாம் வாங்க மாட்டோமா என்று ஏங்கிய பொருள், வாங்கினால் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்று நாம் நினைத்த பொருள், இன்று நினைத்தாலே வாங்கிவிட முடியும் என்ற நிலையில் அந்த மகிழ்ச்சியைத் தருவதில்லை!

meera
02-12-2006, 02:01 PM
பிரதீப்,வரிகள் ஒவ்வொன்றும் வைரங்கள்.

கவிதை சூப்பர்.இவ்வளவு அழகா எழுத தெரிந்த நீங்கள் ஏன் அதிகம் எழுதுவது இல்லை.தயவு செய்து எழுதுங்க.

உங்க கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகை
மீரா.

pradeepkt
02-12-2006, 02:03 PM
பிரதீப்,

சட்டென உதவ முடிந்தால்
பசித்த வயிறை நிரப்பு!
நின்று உதவ முடிந்தால்
கல்வி, தொழில் கற்க உதவு!!

- என் அப்பா எனக்கு சொன்னது.

பசியை விட பெரிய நெருப்பு இல்லை!

என் இளவயது ஏக்கம் -
ஆபுத்திரன் ஆவது!
அட்சய பாத்திரம் அடைவது!!

-------------------------------------------

படித்தவுடன் .... அதையொட்டிய எண்ண அலைகள் எழும்புவது..
கவிதை சொன்ன கருத்து கண்ணில் நெகிழ்ச்சி தருவது..
நல்லுணர்வு அதிர்வுகளை நெஞ்சில் மீட்டுவது...
அட என எழுதியவரைப் பாராட்ட வைப்பது ..

ஆதலால் இக்கவிதை வெற்றிக்கவிதை!
நண்பனின் விமர்சனம் - தங்கத்திலே வைரம்!

அண்ணனின் நெகிழ்ச்சியான பாராட்டுகள்!

-----------------------------------------------

திரியை மேலெழுப்பிய ஓவியாவுக்கு நன்றி.!
அண்ணா,
நீங்கள் விடுமுறையில் இருந்த போது எழுதியது என்று நினைக்கிறேன். உங்கள் விமர்சனம் பெற்றதாலே கவிதை ஆனது இது!

இங்கே இந்தக் கவிதையில் முக்கியமானது ஒரு தேடல்தான். பல சமயம் நம் விருப்பத்திற்கும் தேவைக்கும் நடுவில் இருக்கும் சிறு கோடுதான் புரிபடாதது, இன்று வரைக்கும்.

நாம் நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காகவே தேவை இல்லை என்று ஒதுக்கும் பல விஷயங்கள் பலருக்கு உயிர்த்தேவையாக இருக்கிறதே. அதை எத்தனை தடவை உணர்ந்திருக்கிறோம்? அதற்கான வடிகால்தான் இது!

sriram
02-12-2006, 02:35 PM
பிரதீப் மென்மையான உணர்வு அதிர்வுகள்....! சப்தம் இல்லாமல் சங்கீதம் ..! இயல்பாக விழிஓரம் ஒரு திவலை கண்ணீர் சுரக்கும் உணர்வு ஏற்படுத்தி இருக்கிறது கவிதை.!
ஆற்றில் செல்லும் இலை போல மிதந்தேன் உங்கள் கவிதையில்..!

இளசு
02-12-2006, 05:49 PM
மனித நேயத்தை மீறிய ஒரு நற்செயல் என்று எதுவுமில்லை.

எந்த இடத்திலும் எந்த நிலையிலும் மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கவே செய்கின்றன. அத்தகைய ஒரு கணத்தை உங்கள் கவிதையில் வாசிக்க நேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

கவிதை - என்பது நீரூற்று போல பொங்க வேண்டும். விதிகள் எல்லாம் அந்த நீரூற்று ஓடும் பொழுது இருபுறமும் எழும்பும் கரை போல தன்னால் வந்து விடும். கரைக்காக நதிகள் ஓடுவதில்லை. நதிகளின் ஓரத்தில் அமைந்ததினால் அவைகள் கரைகளாகின.

கவிதையின் இலக்கணமும் அது தான். வசனமா கவிதையா என்றெல்லாம் கவலையுற வேண்டாம்.

பாராட்டுகள்.

இன்று நண்பனை மீண்டும் மன்றத்தில் காண்கிறேன்.

வாருங்கள் நண்பன். ப்ரியன் மற்றும் நண்பர்கள் நலமா?

பென்ஸ்
02-12-2006, 06:16 PM
வாழ்க்கையின் வேகமான ஓட்டத்தில் தினம் தினம் கண்டும் சிறு கணம் கூட அதை மனதில் எடுத்து செல்லாமல் போகும் கூட்டத்தில் நானும் ஒருவன். இதை போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் வாசிக்கையில் முகத்த்ல் சம்மட்டியால் அடித்தது போல் வலிக்கும். இருந்தாலும் மீண்டும் மறுநாள் வழக்கம் போல் குருடனாய்....

தினமும் இதே போல் ஆயிரம் சம்பவங்கள் ஒன்று கூட என் மனதை பாதிக்கவில்லையா, இல்லை அதை கவிதையாய் எழுதும் திறம் இல்லையோ.... நானும் முயற்ச்சிகிறென் என்று கூறினாலும் ..இங்கு அற்புதமான ஒரு கவிதையை கொடுத்த பிரதிப்பு பாராட்டுகள்....

அந்த கவிதைக்கு ஒரு நல்ல கவிஜனிடம் இருந்து பாரட்டு கிடைப்பது... இளசு சொல்லுவது போல் "தங்கத்தில் வைரம்".... அதுவும் நண்பணிடம் இருத்து இந்த பாராட்டு....

நன்றி ஓவியா... ஒரு நல்ல கவிதையை மேலேளுப்பி வாசிக்க கொடுத்தமைக்கு...

kavitha
18-12-2006, 06:31 AM
வருமானம் குறித்து
வரிந்து கட்டி
வருந்திய நொடி
நெருஞ்சியாய் நெருடியது!
எல்லோருக்குமே நல்லபாடம் பிரதீப். நல்ல கவிதை.
'உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' - கண்ணதாசன்

ஆதவா
18-12-2006, 06:38 AM
வாழ்க்கையில் நடந்ததே கவிதையாக... மிக அருமை.. அதிலும் அந்த பிச்சைக்காரி... தொடர்ந்து நினைவுகள் எழுதுங்கள் ப்ரதீப். ஒவ்வொரு செயலுமே கவிதையாக...

pradeepkt
18-12-2006, 08:54 AM
எல்லோருக்குமே நல்லபாடம் பிரதீப். நல்ல கவிதை.
'உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' - கண்ணதாசன்
அவரு சொல்லிட்டுப் போயிட்டாரு... அந்த நிம்மதி திருப்தி அப்படிங்கற விஷயம் எல்லாம் கிடைச்சுப் போயிட்டா அப்புறம் வேற என்னங்க வேணும்? அப்பப்ப வந்து போங்க கவிதா!

pradeepkt
18-12-2006, 08:55 AM
வாழ்க்கையில் நடந்ததே கவிதையாக... மிக அருமை.. அதிலும் அந்த பிச்சைக்காரி... தொடர்ந்து நினைவுகள் எழுதுங்கள் ப்ரதீப். ஒவ்வொரு செயலுமே கவிதையாக...
நன்றி ஐயா!
இப்போது நிகழ்வுகள் வருவதில்லையா? அல்லது கவிதைப் படுத்த முடிவதில்லையா? என்று தெரியாத அளவு வாழ்க்கை இயந்திரத்தனமாகிவிட்டது! அவ்வப்போது விழித்துக் கொள்கிறேன். ஆயினும் உங்கள் ஊக்கத்தில் எழுத முயல்கிறேன்!

அமரன்
15-06-2007, 08:23 PM
எவ்வளவு பெரிய விசயத்தை சொல்லியுள்ளார் பிரதீப் அண்ணா. நிஜத்தின் பதிவுகள் இவை. கல்வியில் நமக்கு மேலுள்ளவர்களைப்பார். வசதியில் நமக்கு கீழுள்ளவர்களைப்பார். முன்னேற்றத்திற்கு இது உதவும். என் அம்மா அடிக்கடி சொல்வது. அதை உணர்த்தியுள்ளார். நண்பன் அவர்களின் கவிதைக்கான இலக்கணம் கவர்ந்தது. அவர் அனுமதியின்றி திருடிவிட்டேன்.

ஓவியன்
17-06-2007, 06:30 AM
இப்போது தானே கண்ணில் பட்டது பிரதீப் அண்ணா!

அருமையான கருவைக் கையாண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

உணவில்லாதவர்களுக்கு உணவு இடுவது ஒன்றுமே பெரிய வேலையில்லை, ஆனால் அதனை செய்யவேண்டுமென்று முனைந்து செயற்படுத்தும் மனது தான் பெரிது.

அது உங்களிடம் இருக்கிறது வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
24-02-2013, 04:42 PM
ஒரு நிகழ்வு... ஒவ்வொரு மனித மனத்திலும் வாழ்விலும் எத்தனை நிகழ்தகவுகளை ஏற்படுத்தமுடியும் என்பதற்க்கு எடுத்துகாட்டாய் அமைந்த கவிதை..!!

கவிதை - என்பது நீரூற்று போல பொங்க வேண்டும். விதிகள் எல்லாம் அந்த நீரூற்று ஓடும் பொழுது இருபுறமும் எழும்பும் கரை போல தன்னால் வந்து விடும். கரைக்காக நதிகள் ஓடுவதில்லை. நதிகளின் ஓரத்தில் அமைந்ததினால் அவைகள் கரைகளாகின.

சட்டென உதவ முடிந்தால்
பசித்த வயிறை நிரப்பு!
நின்று உதவ முடிந்தால்
கல்வி, தொழில் கற்க உதவு!!
- என் அப்பா எனக்கு சொன்னது.

கல்வியில் நமக்கு மேலுள்ளவர்களைப்பார். வசதியில் நமக்கு கீழுள்ளவர்களைப்பார். முன்னேற்றத்திற்கு இது உதவும். என் அம்மா அடிக்கடி சொல்வது.

நாம் நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காகவே தேவை இல்லை என்று ஒதுக்கும் பல விஷயங்கள் பலருக்கு உயிர்த்தேவையாக இருக்கிறதே. அதை எத்தனை தடவை உணர்ந்திருக்கிறோம்? அதற்கான வடிகால்தான் இது!
மேற்கண்ட அனைத்தையும் தமது தேடலின்மூலம் திரட்டிதந்த ப்ரதீப் அண்ணாவிற்க்கு என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!!