PDA

View Full Version : தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கூறினர்



இளையவன்
16-09-2005, 02:10 PM
இந்திய அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு தன்னிடம் நேரடியாகவே கூறினர் என்று சௌரவ் கங்கூலி அதிர்ச்சித் தரும் தகவலை தெரிவித்துள்ளார்!

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்த கங்கூலியிடம், இப்போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வரும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்னாள், அதாவது திங்கட் கிழமை, தன்னிடம் நேரடியாக அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கூறியதாகவும், அதற்கு தாம் சம்மதிக்கவில்லை என்றும் கங்கூலி கூறினார்.

கங்குலியின் தனிப்பட்ட ஆட்டத்திறன் கேள்விக்குறியாகி இருக்கும் இந்நிலையில், அவரது அணித் தலைமையில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவரே விருப்பம் தெரிவித்தால் தவிர, அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அணித் தலைவர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

எனினும், இவ்வாறு கூறியது யார் என்று கங்கூலி நேரடியாக கூறாவிட்டாலும், அணியின் பயிற்சியாளர் கிரெக் சாப்பல்தான் இவ்வாறு கூறியிருப்பார் என்று அவரது பேச்சில் தெரிகிறது.

ஆனாலும், இது குறித்து இந்திய அணி வீரர்களுக்கும், கங்கூலிக்குமே உண்மை தெரியும்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும் (http://www.cricmania.com/cricket/afpNews/index/user/us03/ref/050916072451.rbkzqond.html)

pradeepkt
16-09-2005, 02:15 PM
இதையும் ஒரு பெரிய செய்தி ஆக்கினர் இங்கே.
பதவி விலகச் சொல்ல பயிற்சியாளருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா?
அப்படி இல்லையென்றால் கங்குலிதான் மறுத்து விட்டாரே? பின் என்ன?
இந்தக் கிரிக்கெட் உலகில் பல விஷயங்கள் எனக்குப் புரிபடுவதே இல்லை

அறிஞர்
16-09-2005, 03:04 PM
கங்குலி தலைவரா இருப்பதே.. நாட்டிற்கு அவமானம்.....

aren
17-09-2005, 04:36 AM
இந்தியக்குழுவின் தேர்வாளர்கள் ஒரு நாள் போட்டிக்கும், டெஸ்ட் தொடருக்கும் கங்குலியே தலைவராக இருப்பார் என்று அறிவித்திருக்கும் பொழுது கோச் இவ்வாறு கூறியது மிகவும் தவறு. ஒரு போட்டி முடித்தவுடன் அடுத்த போட்டிக்கு முன் கூறியிருந்தால் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். இப்பொழுது கூறியது தவறுதான்.

இளையவன்
17-09-2005, 04:59 AM
கங்குலி தலைவரா இருப்பதே.. நாட்டிற்கு அவமானம்.....

பிறகு யாரைத்தான் தலைவராய் போட வேண்டுமென்கறீர்கள். தனிப்பட்ட முறையில் அவர் நன்றாக விளையாடவில்லையென்றாலும் நல்ல கப்டனாகவே செயற்பட்டுவருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இலங்கைப்போட்டிக்கு ராகுல் கப்டனாகச் செயற்பட்டார்தானே என்ன நடந்தது? இந்திய அணி தோல்வியைத்தானே தழுவியது. கப்டனை மாற்றுவது சம்பந்தமாக பேசுவதைத் தவிர்த்து தனிப்பட்ட ஒவ்வொரு வீரர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதுதான் பயிற்சியாளர் முதல்வேலையாக இருக்கவேண்டும்.

மன்மதன்
17-09-2005, 05:07 AM
கப்டனை மாற்றுவது சம்பந்தமாக பேசுவதைத் தவிர்த்து தனிப்பட்ட ஒவ்வொரு வீரர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதுதான் பயிற்சியாளர் முதல்வேலையாக இருக்கவேண்டும்.

நன்றாக விளையாடுபவர்களை மட்டும் தேர்வு கமிட்டி செய்தால் போதும்.. அதாவது அவரவர் கடமையை அவரவர் செய்தால் போதும்..