PDA

View Full Version : உதவி - அழகு தமிழில் கிரிக்கற் சொற்கள்



இளையவன்
16-09-2005, 10:11 AM
நண்பர்களே கீழ்க்காணும் கிரிக்கற் சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ச் சொற்களைக் கண்டுகிடிக்க உதவுங்கள்.

1. கிரிக்கட்
2 டெஸ்ட்
3. இன்னிங்ஸ்
4. ஓவர்
5. விக்கட்

karikaalan
16-09-2005, 10:35 AM
1. மட்டையடி;
2. மட்டையடி மஹோத்ஸவம்;
3, 4, 5: கண்டு பிடிக்கணும்!

இளையவன்
16-09-2005, 10:37 AM
மஹோத்ஸவம்;


இது தமிழ்ச் சொல் இல்லையே.

thempavani
16-09-2005, 10:40 AM
கிரிக்கெட் - மட்டைப்பந்தாட்டம்.
டெஸ்ட் - தொடர் ஆட்டம்..
விக்கெட் - ஆட்டமிழத்தல், வீழ்ச்சி


(ஊடகத்துறையில் வழக்கில் உள்ள தமிழ்..)

thempavani
16-09-2005, 10:41 AM
இன்னிங்ஸ் - சுற்று

இளையவன்
16-09-2005, 10:44 AM
கிரிக்கெட் - மட்டைப்பந்தாட்டம்.
டெஸ்ட் - தொடர் ஆட்டம்..
விக்கெட் - ஆட்டமிழத்தல், வீழ்ச்சி


(ஊடகத்துறையில் வழக்கில் உள்ள தமிழ்..)

நன்றி உங்கள் உதவிக்கு . விக்கட்டுக்கு 'ஆட்டமிழத்தல்' சரியான தமிழாகத் தெரியவில்லை. விக்கற் என்பது பொருட்பெயர் அல்லவா?

thempavani
16-09-2005, 10:57 AM
அதனால்தான் வீழ்ச்சி என்ற வினைச்சொல்லையும் தந்தேன் இனியவன்

இளையவன்
16-09-2005, 11:02 AM
விக்கற் loss என்பதற்குப்பதிலாகத்தான் விக்கற் வீழ்ச்சி என பாவனையில் உள்ளதென நினைக்கிறேன்.

pradeepkt
16-09-2005, 11:09 AM
நல்ல நேரத்திலேயே எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வைத்தாலும் எட்டாது.
நான் இன்று அகராதியைப் பார்த்து ஏதேனும் சொல் கண்டு பிடிக்கிறேன்

இளையவன்
16-09-2005, 11:19 AM
கிரிக்கற் என்பதற்கு தமிழ், மரப்பந்தாட்டம் என E-Pals எனும் அகராதியில் பாவித்துள்ளார்கள். இந்தச் சொல் நல்ல சொல்லாகத் தெரியவில்லை. இந்தச் சொல்லில்விட தேம்பா குறிப்பிட்ட மட்டைப்பந்தாட்டம் என்பது நல்ல சொல்லாக இருக்கும் என்பது எனது கருத்து. இது தொடர்பான உங்களின் கருத்து என்ன என்பதைக் கூறுங்களேன்.

அறிஞர்
16-09-2005, 03:01 PM
நல்ல நேரத்திலேயே எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வைத்தாலும் எட்டாது.
நான் இன்று அகராதியைப் பார்த்து ஏதேனும் சொல் கண்டு பிடிக்கிறேன்ரொம்ப தெளிவா இருக்கிங்க...

பாரதி
16-09-2005, 05:18 PM
1.கிரிக்கெட் - துடுப்பாட்டம், மட்டை ஆட்டம்
2. டெஸ்ட் - பந்தயம் அல்லது போட்டி (ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி)

அறிஞர்
23-09-2005, 05:10 AM
நல்ல விளக்கங்கள் பாரதி...

எங்க மேற்கொண்டு ஒன்றையும் தொடர காணோம்