PDA

View Full Version : நான் எழுதும் கடிதம்..



rambal
19-04-2003, 07:55 AM
ஏதேதோ
கண்கள் தேடி
இறுதியில்
எனக்குள் அகப்பட்டு பின்
என்னை இம்சித்து
என் சுவாசமாய் மாறி
என் கனவுகளில்
கூட எனைத்தண்டித்து
அந்த உருண்ட விழி..
கன்னக்குழி..
தெற்றுப்பல் சிரிப்பு..
இப்படியான சிலாகிப்புகளில்
எனைத் திரியவிட்டு..

ஓரவிழியில் தெறித்து ஓடும்
மின்னலைப் பிடிக்கப் போய்
ஐன்ஸ்டீனாய் ஆகி..

அந்தத் திமிரும்
தெனாவட்டும் கலந்த
உன் பார்வை வரத்திற்கு
தினமும் எனை ஏங்கவிட்டு...

படிக்கடிகளில் தொற்றிக் கொண்டு
திரிந்த என்னை
அந்த மந்திரக் குரலுக்கு கட்டுப் பட்டு
உன் உதடு உச்சரிக்கும்
ஓசையைக் கேட்பதற்காக
படிக்கட்டுகளையே
விவாகரத்து செய்துவிட்டு..

உனக்குப் பிடிக்காத
என் நீளக்கூந்தலை
வெட்டப்போய்
முடி திருத்துபவனிடம்
சண்டையிட்டு..

இப்படியாக உனக்கு நான் எழுதும் கடிதம் ஆரம்பிக்கிறது..
அன்பே.....

இளசு
19-04-2003, 08:01 AM
பாராட்டுகள் ராம்
ஆரம்பமே இவ்வளவு அசத்தல் என்றால்
இந்தக் காவியக் காதல் மடல்
இன்னும் போகப் போக......!!!

goki
19-04-2003, 08:31 AM
கவிதை அசத்தல். காதல் வயப்பட்டாலே கவிதை கொட்டுமே !

karikaalan
19-04-2003, 09:09 AM
அதென்னவோ வாஸ்தவம்தான். காதலியின் கடைக்கண் பார்வையே போதுமே, உலகத்தையே காலடியில் சமர்ப்பிப்பதற்கு!

வள்ளுவரே சொன்னவர்தானே -- காதலி சொன்னால் பகல் இரவாகும்; இரவு பகலாகும்!

வாழ்க ராம்பால்ஜி, கவிதை மழை பொழியட்டும்.

===கரிகாலன்

குமரன்
19-04-2003, 02:15 PM
ஏதேதோ
கண்கள் தேடி
இறுதியில்
எனக்குள் அகப்பட்டு பின்
என் சுவாசமாய் மாறி


ராம், இஇப்பொழுது புரிகிறது....
நீங்கள் ஏன் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்று.

பாராட்டுக்கள்.

-குமரன்.

poo
20-04-2003, 02:37 PM
ஆரம்பமே அருமை.. அவளை நேசிப்பது எந்தளவு ஆழமென !!..

பாராடுக்கள் ராம்!!!

rambal
21-04-2003, 05:48 PM
பாராட்டுகள் ராம்
ஆரம்பமே இவ்வளவு அசத்தல் என்றால்
இந்தக் காவியக் காதல் மடல்
இன்னும் போகப் போக......!!!

இல்லை. அதை ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாளாகும். இப்போதைக்கு ஆரம்பிப்பது பற்றி உத்தேசம் இல்லை..

நிலா
21-04-2003, 06:20 PM
காதலி உம்மை காக்க வைக்க நீர் உம் கவிதைக்காக எம்மை
காக்க வைக்கிறீரே!
காத்திருப்பதும் சுகம் தானோ?

Nanban
02-06-2003, 12:10 PM
பின்னர் தொடரவேயில்லையே.......... ஏன்?